» » அட இந்தியாவிலும் ஒரு திபெத் இருக்கு!! இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

அட இந்தியாவிலும் ஒரு திபெத் இருக்கு!! இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

Posted By: Bala Karthik

ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் காணப்படும் மாவட்டங்கள் தான் லாஹௌல் - ஸ்பித்தி ஆகும். அடிப்படையில், இந்தியா மற்றும் திபெத்தின் எல்லையில் காணப்படும் இரண்டு பள்ளத்தாக்குகள் தான் இவை. இதனை முன்னால் லாஹௌல் மற்றும் ஸ்பித்தி என பிரித்து வழங்கி வர, இந்த மாவட்டங்கள் 1960ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது. இந்த மாவட்டங்களின் நிர்வாக மையமாக நீண்ட காலமாக லாஹௌல் இருந்தும் வந்தது.

ஸ்பித்தி மற்றும் லாஹௌல் ஆகியவை தோற்றத்தின் அடிப்படையில் மாறுபட்டு காணப்படுபவையாகும். குளிர் மலை பாலைவனமாக ஸ்பித்தி காணப்பட, தரிசாகவும், கடந்து செல்ல கடினமாகவும் இவ்விடம் காணப்படுகிறது. பச்சை வெளியாக லாஹௌல் காணப்பட, ஸ்பித்தியைக்காட்டிலும் சிறுவன் போலவே காணப்படுகிறது. ருட்யார்ட் கிப்லிங்க் இதனை ஸ்பித்தி என அழைக்க, "உலகத்தின் உள்ளே இன்னொரு உலகம்" என்னும் பெருமையுடனும் "கடவுள் வாழும் ஒரு இடமெனவும்" பல ஆண்டுகளாக அழைத்து வர, 'கிம்' என்னும் புத்தகத்திலும் இது காணப்படுகிறது.

லாஹௌல் மற்றும் ஸ்பித்தி அற்புதமான பயண இடமாக அமைந்திட, இங்கே காணப்படும் கொள்ளை அழகால் இயற்கை ஆர்வலர்கள் பெருமளவில் ஈர்க்கப்படுகின்றனர். ஸ்பித்தியை, "சிறிய திபெத்" என்றும் அழைப்பதோடு, காடுகளை ஒத்த அழகும் கொண்டு, நிலப்பரப்பும், ஸ்பித்தி மற்றும் திபெத்தின் கால நிலைகளும் காணப்படுகிறது.

லாஹௌல்-ஸ்பித்தி கொண்டாடப்பட, புத்த மற்றும் இந்து கொள்கைகளை சரி சமமாக பின்பற்றவும்படுகிறது. புத்த பிரார்த்தனை கொடி வண்ணமயமாக காணப்பட, காற்றிற்கு ஏற்று நடனமாடிட, கலாச்சாரத்தின் பெருமையையும் உணர்த்துகிறது. பல கண்காட்சிகளாக பௌரி, லடார்சா, ஷேஷு, பழங்குடியினர், பாக்லி, கோச்சி ஆகியவையும் கொண்டாடப்படுகிறது. லாஹௌல்-ஸ்பித்தி ஆகியவை அழகிய மடாலயங்களுக்கு வீடாக விளங்கிட, தாவரங்கள் மற்றும் விலங்குகளும் சூழ்ந்து, உயரிய மலை வழிகளும், பெரும் நதிகளும் காணப்படுகிறது.

லாஹௌல்-ஸ்பித்தி மாவட்டங்களில் காணப்படும் காண வேண்டிய அழகிய இடங்கள் எவை? வாங்க பார்க்கலாம்...

 ரோட்டங்க் கணவாய்:

ரோட்டங்க் கணவாய்:


கடல் மட்டத்திலிருந்து 3978 மீட்டர் உயரத்தில் அபார உயரத்துடன் காணப்படும், ரோட்டங்க் கணவாய் பல திரைப்படங்களில் நாம் கண்டதும் கூட. ஒரு அனுமதி தரப்படும் வழியானது பயணம் செய்ய ரோட்டங்கிற்கு அப்பால் காணப்படுகிறது.

PC: Kiran Jonnalagadda

 ரோட்டங்க் கணவாய்:

ரோட்டங்க் கணவாய்:

இந்த ரோட்டங்க் கணவாயை நாம் காண ஜூன் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் சிறந்து காணப்படுகிறது, மீத காலங்களில் கால நிலையானது படு பாதாளத்திலும் நம்மை தள்ளுகிறது. இவ்விடம் சிறந்த பயண இடமாக காணப்படுகிறது. பனிப்பாறைகள், நீர்வீழ்ச்சி, சிகரங்கள் என பெருமூச்செறிந்து நம்மை பார்க்க வைத்திட, மிகவும் எளிமையாகவும் இது காணப்படுகிறது. ரோட்டங்க் வழிதான் பனிகளால் சூழ்ந்து வருடம் முழுவதும் காணப்படும் ஒரு வழியாகவும் தென்படுகிறது.

Balaji.B

குன்ஷும் லா:

குன்ஷும் லா:

திபெத்தியர்களால் குன்ஷும் லா என்றழைக்கப்பட, குன்ஷும் தொடர்ச்சியில் காணப்படும் உயர்ந்த கணவாய்களுள் இதுவும் ஒன்று என்பதும் தெரியவருகிறது. கடல் மட்டத்திலிருந்து 4551 மீட்டர் உயரத்தில் இது காணப்படுகிறது. குன்ஷும் வழியானது லாஹௌல்-ஸ்பித்தி பள்ளத்தாக்குடன் இணைந்து குள்ளு பள்ளத்தாக்கு வரை காணப்படுகிறது.

PC: Shiraz Ritwik

குன்ஷும் லா:

குன்ஷும் லா:

பராரி ஷிராரி பனியாற்றின் பார்வையானது ஒட்டுமொத்த காட்சியையும் நமக்கு அளித்திட, அது குன்ஷும் லாவின் சிறப்பம்சமாகவும் காணப்படுகிறது. குன்ஷும் கணவாயானது புகைப்படம் எடுக்க சிறந்து காணப்படுவதோடு, ரோட்டங்க் கணவாயிற்கு எதிராகவும் காணப்படுகிறது. ரோட்டங்க் கணவாய் வாகனங்களை இயக்க கடினமாக இருப்பதால், புகைப்படம் எடுப்பதற்கான சாதக நிலையானது குறைவாகவே காணப்படுகிறது. குன்ஷும் தேவியவளால் இந்த கணவாயை காண வரும் மக்களும் பாதுகாக்கப்படுவது தெரியவருகிறது. இந்த கணவாயானது குன்ஷும் தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டும் காணப்படுகிறது.

Lev Yakupov

 சந்திரத்தால் ஏரி:

சந்திரத்தால் ஏரி:

பிறை நிலா வடிவில் இந்த ஏரி காணப்பட, அதனால் இதனை சந்திரத்தால் ஏரி என்று அழைக்கின்றனர். சந்திரத்தால் ஏரியானது பிரசித்திபெற்ற, லாஹௌல்-ஸ்பித்தி பயணத்தின் விரும்பத்தக ஒன்றாகவும் அமைகிறது. பத்தாலிலிருந்து இது அணுகப்பட, குன்ஷும் கணவாய் பாதம் வரை செல்கிறது.

PC: Nitinram Velraj

சந்திரத்தால் ஏரி:

சந்திரத்தால் ஏரி:

கடல் மட்டத்திலிருந்து 4300 மீட்டர் உயரத்தில் இது உயர்ந்து, சமுத்ர தபு பீடபூமியின் நிலையிலும் காணப்படுகிறது. அதீத பார்வையை செலுத்திட சந்திரா நதியும் காணப்படுகிறது. இங்கே பல கூடாரங்கள் காணப்பட, சந்திரத்தால் ஏரி அருகில் நாம் தங்கவும் இவை உதவுகிறது.

Saptarshi Sanyal

 கய் மடாலயம்:

கய் மடாலயம்:


‘கீ கொம்பா' என்றும் அழைக்கப்பட, பதினொன்றாம் நூற்றாண்டில் இந்த மடாலயம் நிறுவப்பட்டது. லாஹௌல்-ஸ்பித்தியில் காணப்படும் பெரிய புத்த மடாலயமும் இதுவேயாகும். கடல் மட்டத்திலிருந்து 4166 மீட்டர் உயரத்தில் இவ்விடம் காணப்படுவதோடு, இந்த மடாலயம் சில முடி திரட்டும் பார்வையையும் கொண்டுள்ளது. இது ஒரு பயிற்சி மையமாகவும் காணப்பட, 200 துறவிகள் மற்றும் சந்நியாசிகளும் நெருங்கி காணப்படுகின்றனர்.

PC: Arup1981

 கய் மடாலயம்:

கய் மடாலயம்:

இந்த மடாலயத்தில் அறைகள் பல காணப்பட அவை அனைத்தும் பூட்டிய நிலையிலும் காணப்படுகிறது. குட்டுங்க் எனப்படும் படுக்கையறை தலை லாமாவில் காணப்பட மூடப்படாமலும் காணப்படுகிறது. கய் மடாலயம் அமைதியை உருவாக்கிட, நிம்மதியையும் தருகிறது.

Binny V A

தங்கர் ஏரி:

தங்கர் ஏரி:

தங்கர் கிராமத்திலிருந்து 45 நிமிடங்கள் ஆகிறது தங்கர் ஏரியை நாம் அடைய... கடல் மட்டத்திலிருந்து 4136 மீட்டர் உயரத்தில் இது காணப்படுகிறது. மத்தியில் பச்சை மேய்ச்சல் இயற்கை காணப்பட, தங்கரி ஏரியானது ஒரு வண்ணமயமான அணிவகுப்பை கொண்டிருக்கிறது.

PC: Sumita Roy Dutta

தங்கர் ஏரி:

தங்கர் ஏரி:

இருப்பினும், கோடைக்காலத்தில் ஏரியிலிருந்து நீரானது ஆவியாக, ஏரிபடுகையை ஆடு மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரிப்பயணத்தின் மஹிராங்க் சிகரத்தின் பார்வையானது அதிர்ச்சியூட்டும் வகையில் காணப்படுகிறது.

Wolfgang Maehr

க்யூ மம்மி:

க்யூ மம்மி:

ஸ்பித்தி பள்ளத்தாக்கின் சிறிய கிராமத்தில், டஷன் கணக்கில் வீடுகளை கொண்டிருக்கிறது க்யூ. ஒரு துறவியான மம்மியின் இருப்பிடமாக இது காணப்பட அந்த துறவியின் பெயர் ஷங்கா டென்ஷின் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் காணப்படும் ஓர் மம்மியாக இது இருக்க, எட்டப்பட்ட இயற்கை மம்மியாக்கமும் இதுவாக காணப்படுகிறது.

PC: Rakesh31277

க்யூ மம்மி:

க்யூ மம்மி:

இந்த துறவி தன்னை இந்த கிராமத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டதாகவும், தேள்களின் தொல்லை இதனால் இங்கே குறைவதாகவும் நம்பப்படுகிறது. இந்த கிராமத்து நாட்டுப்புறவியலின் மூலம் ஷங்கா டென்ஷின் உடலைவிட்டு அவர் ஆத்மா பிரிந்து சென்றதாகவும் சொல்லப்பட, வானவில்லும் தோன்றி, அதனால், தேள்களிடமிருந்து தொல்லை நீங்குவதாகவும் நம்பப்படுகிறது.

ஹம்ப்தா கணவாய்:

ஹம்ப்தா கணவாய்:

தாழ்வாரத்தின் சரியான கோணத்தில் ஹம்ப்தா கணவாயில் பச்சை பள்ளத்தாக்கு வெளிவந்து காணப்படுகிறது. இந்த தாழ்வாரம்/தொங்கல் பால்கனியாய் காணப்பட, இங்கிருந்து நாம் பார்க்க உலகமே தெரிவது போன்ற உணர்வினை மனதில் தருகிறது. அதனால் பிரத்தியேக மற்றும் நம்பமுடியாத ஒன்றாக கருதப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 4270 மீட்டர் உயரத்தில் இவ்விடம் காணப்படுகிறது.

PC: solarisgirl

ஹம்ப்தா கணவாய்:

ஹம்ப்தா கணவாய்:

ஹம்ப்தா கணவாய், சந்திரத்தால் ஏரியின் நுழைவாயிலாக காணப்படுகிறது. இந்த கணவாயின் கீழ் பள்ளத்தாக்கில் மேய்ச்சல் காணப்பட, அதீத உயர புல்வெளி நிலங்களையும் கோடைக்காலத்தில் கொண்டிருக்கிறது.

mkasiak

தபோ மடாலயம்:

தபோ மடாலயம்:


கி.பி. 996இல் இது நிறுவப்பட, நாட்டின் முந்தைய புத்த மடாலயங்களுள் ஒன்றாகவும் இந்த தபோ காணப்படுகிறது. இந்த நினைவு சின்னம் பாதுகாக்கப்பட்டு வர, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் இது கருதப்படுகிறது.

PC: Eshank Sehgal

தபோ மடாலயம்:

தபோ மடாலயம்:

இந்த தபோ மடாலயத்தில் பல ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் சுவற்றில் காணப்பட, அதனால் பெயர் ஈட்டப்பட, ‘இமய மலையின் அஜந்தா' எனவும் சொல்லப்படுகிறது. இங்கே 9 ஆலயங்கள், 4 ஜோடிக்கப்பட்ட ஸுதூபிகள், குகை ஆலயங்களும் காணப்படுகிறது. தபோ, கற்க முக்கியமான மையமாக கருதப்பட, கல்வி நிலையமாகவும் முந்தைய நூற்றாண்டில் இருந்து வந்தது. தபோ மடாலயத்தில் தற்போது ஷெர்கோங்க் பள்ளி காணப்பட, 274 மாணவர்களையும் கொண்டிருக்கிறது.

Sumita Roy Dutta

த்ரிலோக நாத் ஆலயம்:

த்ரிலோக நாத் ஆலயம்:

சந்திரபாகா பள்ளத்தாக்கின் கண்கொள்ள காட்சியாக இது அமைந்திட, கி.பி. 10ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயம் கட்டப்பட்டது. இதனை முன்பு ‘துன்டா விஹார்' என்றழைக்க, இந்து மற்றும் புத்த மதத்தின் மதிப்பிற்குரிய ஆலயமாகவும் இருக்கிறது.
இந்து மற்றும் புத்தர்களால் ஒரே சிலையை வணங்கிட, வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

PC: Shambhu.389

த்ரிலோக நாத் ஆலயம்:

த்ரிலோக நாத் ஆலயம்:

இங்கே காணப்படும் சிலையை இந்துக்கள் சிவபெருமானாக வணங்கிட, புத்தர்களால் ஆர்ய அவலோகித்தேஷ்வர் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் தனித்தன்மையுடன் காணப்படுகிறது. மாபெரும் புனித ஆலயமாக த்ரிலோக நாத் ஆலயத்தை கருதிட, கைலாஷ் மற்றும் மனசரோவருக்கும் அப்புறமெனவும் தெரியவருகிறது.

Shambhu.389

கிப்பர் கிராமம்:

கிப்பர் கிராமம்:


ஸ்பித்தியில் கிப்பர் கிராமம் காணப்பட, உலகத்திலேயே வாகனம் செல்லும் உயரமான கிராமும் இதுவே என்பது தெரியவருகிறது. கடல் மட்டத்திலிருந்து 4205 மீட்டர் உயரத்தில் இது உயர காணப்படுகிறது. வானத்தை தொட ஆசைக்கொள்பவர்களுக்காக கடவுள் கிப்பரை தந்திட, புகைப்பட ஆர்வலர்களுக்கும் உயரத்தின் தன்மையினால் சிறந்த புகைப்படம் எடுக்கும் இடமாக இது அமைந்திடுகிறது.

PC: Sanky cse

கிப்பர் கிராமம்:

கிப்பர் கிராமம்:

கிப்பர், கய் மடாலயத்தை நெருங்கிய அழகுடன் காணப்பட, இன்னும் பல மடாலயங்களும் அவ்வாறு காணப்படுகிறது. இங்கே வனவிலங்கு சரணாலயம் காணப்பட, பல இருப்பிட விலங்குகளான மலை ஆடு, இமாலய ஓநாய், பனி சிறுத்தை என பலவும் காணப்படுகிறது.

Vishrutpanday

Read more about: travel hills