Search
  • Follow NativePlanet
Share
» »இந்த கனவு தேசங்கள் இந்தியாவுல நிஜத்துலயே இருக்குனு சொன்னா நீங்க நம்புவீங்களா?

இந்த கனவு தேசங்கள் இந்தியாவுல நிஜத்துலயே இருக்குனு சொன்னா நீங்க நம்புவீங்களா?

நம் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆசை கனவு லட்சியம் இருக்கும். அதைப் பொறுத்தே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா இல்லை ஓடிக் கொண்டிருக்கிறோமா என்பது அமையும். நீங்கள் தாயின் கருவறையில் இருந்து எழுந்து வந்ததிலிருந்து வேகமாக ஓடி எந்த பயனும் இல்லை. ஒரு கட்டத்தில் நீங்கள் நிற்கும்போது அதுவரை ஓடியது வட்டப்பாதை என்பது தெரியவரும். அப்போது புரியும் வாழ்க்கையை ரசிக்காமல் இவ்வளவு நாள் ஓடிக்கொண்டிருந்திருக்கிறோம் என்பது. அவ்வளவு அனுபவித்துதான் தெரிந்துகொள்ளவேண்டுமா.. இப்போதே வாழ்க்கையைத் தொடங்குவோம். முதலில் பயணிப்போம். பலரை சந்திப்போம். பலருக்கு உதவுவோம். வாருங்கள் இந்தியாவின் கனவு பிரதேசங்களான 10 இடங்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

கனவு பிரதேசம் 1 - மாஜூலி

உலகிலேயே மிகப்பெரிய ஆற்றுத்தீவாக புகழ் பெற்றுள்ள இந்த மாஜூலி தீவு முற்காலத்தில் 1250 ச.கி.மீ பரப்பளவில் இருந்திருக்கிறது. இருப்பினும் நீர் அரிப்பின் காரணமாக இதன் பரப்பளவு கணிசமாக குறைந்து தற்போது 421.65 ச.கி.மீ பரப்பளவில் மட்டுமே காணப்படுகிறது.

ஃபெர்ரி போக்குவரத்து

ஜோர்ஹாட் எனும் இடத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலுள்ள இந்த மாஜூலி தீவிற்கு ஃபெர்ரி போக்குவரத்து படகுகள் மூலம் சென்றடையலாம். மாஜூலி தீவில் வாழ்க்கை முழுமையாக ரசனையுடன் கொண்டாடப்படுகிறது. விடாத ஆற்று வெள்ளம் மற்றும் சூற்றுச்சூழல் சீரழிவுகள் ஆகியவற்றுக்கிடையே இங்குள்ள மக்களின் வாழ்க்கை உன்னதமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது.

முக்கிய அடையாளம்

கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய இரண்டும் இந்த தீவுப்பகுதியின் முக்கிய அடையாளமாக திகழ்கின்றன. சாத்ரா எனப்படும் மடாலயங்கள் இந்த தீவின் உயிர்நாடியாக வீற்றிருக்கின்றன. மொத்தம் 25 சாத்ராக்கள் இந்த தீவில் உள்ளன. உள்ளூர் மக்களின் கலாச்சார மையங்களாக இயங்கும் இவை சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்வதில் வியப்பொன்றுமில்லை.

கனவு பிரதேசம் 2 - கிரேட் குட்ஜ் ரான்

கிரேட் குட்ஜ் ரான் என்று நிலப்பகுதி, குஜராத் மாநிலத்தில் உள்ள குட்ஜ் மாவட்டத்தில் உள்ள தார் பாலைவனத்தில் அமைந்துள்ளது. இந்த பாலவைனம் உலகிலேயே உப்பான பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.

பரப்பளவு

இந்த கிரேட் ரான் ஏறக்குறைய 7505 சதுர பரப்பளவைக் கொண்டிருக்கிறது. அதாவது லிட்டில் ரானைவிட இந்த நிலப்பகுதி மிகப் பெரியதாகும்.

பறவைகளுக்கு புகலிடம்

இந்த ரான் பகுதி பலவகையான ஃப்ளோரா மற்றும் ஃபவ்னா இனங்களின் வாழிடமாக இருந்து வருகிறது. மேலும் இடம் பெயரும் பறவைகளுக்கு இந்த ரான் பகுதி ஒரு தங்கும் இடமாகவும் இருந்து வருகிறது.

கனவு பிரதேசம் 3 - குதுரேமுக்

குதுரேமுக் பகுதியில் ஏராளாமான சுற்றுலா அம்சங்கள் பயணிகளைக் கவரும் வகையில் உள்ளன. அவற்றில் லக்யா அணை, ராதா கிருஷ்ணா கோயில், கங்கமூலா மலை மற்றும் ஹனுமான் குந்தி நீர்வீழ்ச்சி போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்த நீர்வீழ்ச்சி 100 அடி உயரத்திலிருந்து ஒரு பாறை அமைப்பில் மீது வீழ்கிறது.

பிக்னிக்

இந்த அமைதியான இயற்கை எழில் கொஞ்சும் ஸ்தலம் குதுரேமுக் பயணத்தின்போது ஒரு சிற்றுலாவாகசெல்வதற்கு ஏற்றது. பலவிதமான இயற்கை சூழலைக்கொன்டுள்ள குதுரேமுக் பகுதியில் மலையேற்றப்பாதைகள் நிறைய உள்ளன.

அலாதி ஆவலும் கிடைக்கும் இன்பமும்

இவற்றில் பயணம் மேற்கொள்ள நீங்கள் வனத்துறையிடம் அனுமதி பெற வேண்டும் என்றாலும் இந்த சிரமம் காட்டுக்குள் கிடைக்கும் அற்புத அனுபவத்துடன் ஒப்பிடும்போது ஓன்றுமேயில்லை.

கனவு பிரதேசம் 4 - பட்டர்பிளை பீச்

கோவாவின் முக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றான பலோலம் கடற்கரையில் இருந்து 6கி.மீ தொலைவில் இந்த பட்டர்பிளை பீச் அமைந்திருக்கிறது. கோவாவின் தலைநகரான மார்கோவில் இருந்து 37கி.மீ தொலைவில் இது உள்ளது.

டால்பின்கள்

இந்த கடற்கரையை ஒட்டியுள்ள கடல் மிகவும் ஆழமானதாகும். எனவே கடற்கரைக்கு மிக அருகே வரை டால்பின்கள் வருகின்றன. கோவாவில் டால்பின்களை கண்டுரசிக்க மிகச்சிறந்த இடமென்று இதனை சொல்லலாம்.

தேவையானவற்றை எடுத்துச் செல்லவும்

கோவாவின் மற்ற கடற்கரைகளில் இருப்பது போல ரிசார்டுகளோ, கடைகளோ எதுவும் இங்கே இல்லை. எனவே இங்கே செல்லும்போதே குடிநீர், தேவையான அளவு உணவு மற்றும் நொறுகுத்தீனிகள் போன்றவற்றை எடுத்துச்செல்வது நல்லது.

சுந்தரவனக் காடுகள்

உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இடமாக சுந்தரவனக் காடுகள் இருக்கும். மேலும், இந்த பகுதியில் உள்ள யுனெஸ்கோ-வின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்

சுந்தரவனக்காடுகளின் சூழலுக்கேற்ப, உப்பு நீரில் வாழ தன்னைத் தயார் படுத்திக் கொண்டு, கம்பீரமாக உலவிக் கொண்டிருக்கும் இந்தியப் புலிகளை காண வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!

கொல்கத்தாவிலிருந்து

அறிவியல் ஆய்வாளர்கள் பருவநிலை மாற்றத்தால் சுந்தரவனக் காடுகளில் நிகழும் மாற்றங்களைக் கண்டு கவலை கொண்டிருக்கிறார்கள். இந்த காடுகள் கொல்கத்தாவிலிருந்து காரில் சென்று விடக்கூடிய தொலைவிலேயே உள்ளன.

தூய்மையின் உருவகம்

மானசா சரோவார் கொடை அல்லது 'தூய்மையின் உருவகமாக' மக்கள் மத்தியில் அறியப்பட்ட மான்சர் ஏரி, ஜம்முவின் முக்கிய சிறப்புகளில் ஒன்று. இந்த அழகான ஏரி ஒரு மைலுக்கு அதிகமான நீளமும் அரை மைலுக்கும் அதிகமான அகலமும் கொண்டு பச்சைப்பசேல் காடுகளால் சூழப்பட்டுள்ளது

குருடோங்மர் ஏரி

சிக்கிம் மாநிலத்தில் வடக்கு பகுதியில் கடல்மட்டத்தில் இருந்து 17,800 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது பேரழகு நிறைந்த குருடோங்மர் ஏரி. இமயமலைத்தொடரில் இருக்கும் அதிகம் அறியப்படாத, சற்றும் மாசுபடுத்தபடாத அற்புதமான இயற்கை பொக்கிஷங்களில் இதுவும் ஒன்றாகும்.

ட்சுகோவ் பள்ளத்தாக்கு

காட்டுப் பூக்களும், தெளிந்த நீரோடைகளும் இந்த இடத்திற்கு சொர்க்கம் போன்ற உணர்வினை தருகின்றன. இந்த பள்ளத்தாக்கிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை உற்சாகப்படுத்தி, புத்துணர்வூட்டும் பணியை இங்கிருக்கும் மலையோடைகள் செவ்வனே செய்து வருகின்றன.

நூப்ரா பள்ளத்தாக்கு

நூப்ரா பள்ளத்தாக்கை அடையும் வழியில் உலகத்திலேயே உயரமான இடத்திலிருக்கும் கார்டுங் லா கணவாயை, லே-யில் இருந்து கடக்க வேண்டும். கார்டுங் லா கணவாய் வருடம் முழுவதுமே பனி படர்ந்து கிடக்கும் இடமாகும்

ஸ்பித்தி பள்ளத்தாக்கு

இப்படி ஒரு தூய்மையான கன்னித் தன்மை கெடாத இயற்கைச்சூழலின் மத்தியில் மஹோன்னத கலைச்சின்னமாக இந்த மடாலயம் வளாகம் வீற்றிருக்கிறது. இப்பகுதியின் இயற்கை எழிலில் கவரப்பட்டு பல திரைப்பட இயக்குனர்கள் இங்கு படப்பிடிப்பு செய்துள்ளனர்.

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more