» »ரான் ஆப் குட்ஜ் பற்றி உங்களுக்குத் தெரியாத பத்து விசயங்கள்!

ரான் ஆப் குட்ஜ் பற்றி உங்களுக்குத் தெரியாத பத்து விசயங்கள்!

Written By: Udhaya

ரான் ஆப் குட்ஜ் எனப்படும் பகுதி குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது மிகவும் வரலாற்று சிறப்பு மிக்கது. இந்திய வரலாற்றில் அறியப்படாத சில விசயங்கள் குறித்து இந்த பதிவில் காண்போம்

1

1

குட்ஜ் என்ற வார்த்தைக்கு சமஸ்கிருத மொழியில் தீவு என்று பொருளாகும். பண்டைய காலத்தில் குட்ஜ் பகுதியில் இருந்த ரான்ஸ் என்ற பாலைவனப் பகுதிகள் சிந்து நதியால் அடித்துச் செல்லப்பட்டு அவை கடலில் தள்ளப்பட்டன. இந்த இயற்கை நிகழ்வால் ஒரு சிறிய பகுதி, முக்கிய பகுதியிலிருந்து பிரிந்து நீருக்கு மத்தியில் ஒரு தீவைப் போலக் காட்சியளிக்கிறது.

Kaushik Patel

2

2

1819ல் இந்த பகுதியில் ஏற்பட்ட ஒரு பெரிய நிலநடுக்கம், இந்தப் பகுதியின் இயற்கை அமைப்பை மாற்றியது. அதனைத் தொடர்ந்து சிந்து நதி இன்னும் அதிக தூரம் மேற்கு நோக்கிய பாயத் தொடங்கியது. மேலும் இந்த பகுதியிலிருந்த ரான்ஸ் மிக அதிக அளவில் விரிந்து, உப்பு மணல் குவியலானது. அதோடு இந்த ரான்ஸ் ஈரப்பதமுள்ள உப்பு மணல்களைக் கொண்ட பகுதியாக மாறியது. கோடைகாலத்தில், இந்த மணல்களில் உள்ள ஈரப்பதம் உறியப்பட்டு, அவை வெள்ளை வெளேரன்று காட்சியளிக்கும்.

3

3

வரலாறு குட்ஜ் பகுதியிலிருந்த குதிர் என்ற தீவில் செய்யப்பட்ட அகல்வாராய்ச்சியில் ஹராப்பா நாகரீக கால ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆபரணங்களின் மூலம் பண்டைய இந்தியாவின் ஒரு பகுதியாக குட்ஜ் இருந்ததை இந்தப் பொருள்கள் நிரூபிக்கின்றன.

4

4

முதலில் சிந்துவைச் சேர்ந்த ரஜபுத்திர மன்னர்களால் குட்ஜ் ஆளப்பட்டது. காலப்போக்கில் ஜடேஜா ரஜபுத்திர அரசரான கெங்கார்ஜி I என்பவரின் ஆட்சியின் போது புஜ் நகரம் குட்ஜியின் தலைநகரமாக மாறியது. கிபி 1741ல் முகலாய மன்னர்களின் ஆட்சி காலத்தில் லக்பட்ஜி I என்பவர் குட்ஜியின் அரசராக அரியனை ஏறினார். அவர் ஐனா மகால் அரண்மனையைக் கட்டுவதற்கு ஆவண செய்தார். மேலும் அவர் புலவர்கள், பாடகர்கள் மற்றும் நடனம் ஆடுபவர்கள் போன்றோருக்கு ஒரு கொடை வள்ளலாக விளங்கினார். அவருடைய ஆட்சியின் போது குட்ஜ் கலாச்சாரத்தில் சிறந்த விளங்கியது.

commons.wikimedia.org

5

5


1815-ல் ஆங்கிலேயர்கள் புஜியோ டுங்கார் மலையைக் கைப்பற்றியனர். அதன் மூலம் குட்ஜ் ஆங்கிலேய ஆட்சியின் ஒரு பகுதியாக மாறியது. ப்ராக் மகால் அரண்மனை, ரஞ்சித் விலாஸ் அரண்மனை மற்றும் மன்ட்வியில் இருக்கும் விஜய் விலாஸ் அரண்மனை போன்றவை ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டன.

commons.wikimedia.org

6

6

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குட்ஜ் ஒரு முக்கிய பகுதியாக இருந்ததால், குட்ஜ் சுதந்திரம் பெற்ற இந்தியாவின் ஒரு பகுதியாக இணையும் வரை, இங்கு ஏராளமான வளர்ச்சிப் பணிகள் ஆங்கிலேயரால் செய்யப்பட்டன. புவியியல் குட்ஜியிலிருக்கும் ரான்ஸூக்கு வெளியில் பாண்ணி என்ற புல்வெளிப் பகுதிகள் காணப்படுகின்றன.

commons.wikimedia.org

7

7

தெற்கில் குட்ஜ் வளைகுடாவும், மேற்குப் பகுதியில் அரபிக்கடலும், வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பெரிய மற்றும் சிறிய ரான்ஸுக்களும் குட்ஜ் பகுதியைச் சூழந்திருக்கின்றன. ரான்ஸ் ஈர நிலங்களாக இருக்கின்றன.

commons.wikimedia.org

8

8

கண்ட்லா மற்றும் முன்ட்ரா என்ற இரண்டு துறைமுகங்களை குட்ஜ் கொண்டிருக்கிறது. இந்த இரண்டு துறைமுகங்களும், ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு கப்பல் வழியாகச் செல்ல மிக முக்கிய வழிகளாக உள்ளன.
commons.wikimedia.org

9

9

குட்ஜ் பகுதியின் முக்கிய மொழியாக குட்ஜ்ஜி விளங்குகிறது. அதோடு குஜராத்தி, சிந்தி மற்றும் இந்தி ஆகிய மொழிகளும் இங்கு பேசப்படுகின்றன. குட்ஜ்ஜி மொழியின் எடுத்து வடிவங்கள் தற்போது மறைந்து விட்டதால், எல்லாமே குஜராத்த மொழியில் எழுதப்படுகின்றன.

commons.wikimedia.org

10

10


குட்ஜ் பகுதியில் பல இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக மார்வார், சிந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளிலிருந்து வந்த மக்கள் இந்த பகுதியின் மக்களான குட்ஜ் மக்களோடு கலந்து வாழ்ந்து வருகின்றனர். எனவே குஜராத் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பல்வேறுபட்ட கலாச்சார அம்சங்களை காண மற்றும் குட்ஜ் ரான்ஸின் புவியியில் அமைப்பைப் பார்க்க கண்டிப்பாக குட்ஜ்ஜிக்கு சென்று வரவேண்டும்.
commons.wikimedia.org

Read more about: travel, gujarat