Search
  • Follow NativePlanet
Share
» »சபரிமலையில் 133 அடி உயரத்தில் கட்டப்படவிருக்கும் ஐயப்பன் சிலை – சிலைக்கு உள்ளே மியூசியம்!

சபரிமலையில் 133 அடி உயரத்தில் கட்டப்படவிருக்கும் ஐயப்பன் சிலை – சிலைக்கு உள்ளே மியூசியம்!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஆண்டுதோறும் அய்யனை காண வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமான சபரிமலை ஐயப்பனுக்கு கோவிலுக்கு அருகே 133 அடி உயரச் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சிலைக்கு உள்ளே அய்யன் ஐயப்பனுக்காக ஒரு மியூசியமும் அமைக்கப்படவிருக்கிறது! அதனைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இதோ!

133 அடி உயரத்தில் ஐயப்பன் சிலை

ஆண்டுதோறும் லட்சக்கணக்கில் பக்தர்களை ஈர்க்கும் அய்யன் ஐயப்பன்

சபரிமலை ஐயப்பன் கோவில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். அய்யனின் மகிமையை உணர்ந்து ஆண்டுதோறும் புதிதாக கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறதே தவிர எண்ணிக்கை குறைந்ததே இல்லை. பக்க்தியுடன் இந்த புனிதத் தலத்தில் ஒரு முறை கால் வைத்தாலும் போதும், அய்யனின் கருணையை நீங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

sabrimala

133 அடி உயர ஐயப்பன் சிலை

பத்தனம்திட்டாவில் உள்ள சுத்திபாரா மலையின் உச்சியில் மகாதேவர் கோவில் உள்ளது. இங்கு ரூ.25 கோடி செலவில் 133 அடி உயர ஐயப்பன் சிலை அமைக்க கோயில் அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 400 அடி உயரத்தில் உள்ள இந்த மலையில் 66 மீட்டர் சுற்றளவு கொண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது. 35 கிலோமீட்டர் தூரத்தில் இருந்து பார்த்தால் கூட சிலை தெரியுமாம். ஐயப்பன் பிறந்த பந்தளத்தில் இருந்தே கூட சிலையைப் பார்க்கலாம்.

sabrimala

சிலைக்கு உள்ளே மியூசியம்

சபரிமலை ஐயப்பனின் பிறப்பு துவங்கி, வாழ்க்கை வரலாற்றை விளக்கம் அருங்காட்சியகம் ஒன்றும் இங்கு அமைக்கப்பட உள்ளது. இதில், அய்யப்பன், சாஸ்தாவின் நண்பர் வாவர், பந்தளம் அரண்மனை, சபரிமலை, பம்பை, ஆருத நதிகளின் வரலாறு தத்ரூபமாக அமைக்கப்படும். சிலை அமைப்பதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட்டு ஐந்தாண்டுகளில் பணிகள் முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் ஐந்தாண்டுகளுக்கு பிறகு மிக உயரமான ஐயப்பன் சிலையையும் அதற்கு உள்ளே இருக்கும் மியூசியத்தையும் காணலாம் என்று கோவில் நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

sabrimala

ஆர்வத்தில் பக்தர்கள்

அய்யப்பன் சிலை அமைக்க எண்ணிய சுட்டிப்பாரா மலையில் ராமரும் சீதையும் சில காலம் தங்கியிருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. ஐயப்பன் யோக நிலையில் அமர்ந்திருப்பது போல் சிலை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய ஐயப்பன் சிலையை தரிசிக்க ஐயப்ப பக்தர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+