Search
  • Follow NativePlanet
Share
» »ஸ்லீப்பர் கோச்களுடன் அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில்கள் - வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை!

ஸ்லீப்பர் கோச்களுடன் அறிமுகப்படுத்தப்படும் வந்தே பாரத் ரயில்கள் - வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவை!

ரயில் பயணிகளின் அனுபவத்தை உயர்த்தியது மட்டுமின்றி ரயில்வே நெட்வொர்க்கின் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தற்போது அடுத்த கட்டத்தில் கால் எடுத்து வைக்கின்றன. இப்போது, இந்திய ரயில்வே பயணிகளின் வசதிக்காக மார்ச் 2024க்குள் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகப்படுத்த தயாராகி உள்ளது! இதன் மூலம் வசதியான மற்றும் விரைவான பயணம் பயணிகளுக்கு கிடைக்கும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது!

சிறப்புகள் நிறைந்த வந்தே பாரத் ரயில்கள்

ஒரு முற்போக்கான மற்றும் தன்னிறைவு கொண்ட இந்தியாவின் அடையாளமாக பார்க்கப்படும், உள்நாட்டு அரை-ஒளி-வேக ரயில் பயணிகளுக்கு முற்றிலும் புதிய பயண அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேகம், பாதுகாப்பு மற்றும் சேவை ஆகியவை வந்தே பாரத் ரயிலின் தனிச்சிறப்புகளாக நம்பப்படுகிறது.

1

வெற்றிகரமாக செயல்படும் வந்தே பாரத்

உலகத்தரம் வாய்ந்த அம்சங்களுடன் கூடிய, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பயணிகளுக்கு வசதியான பயணத்தை உறுதியளிக்கிறது. முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், புது தில்லி மற்றும் வாரணாசி இடையே, பிரதமர் நரேந்திர மோடி பிப்ரவரி 15, 2019 அன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களில் 25 வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றன.

புதிதாக கால்பதிக்கவுள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள்

சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் (ICF) தயாரிக்கப்பட்ட இந்த ரயில் பெட்டி, 'மேக்-இன்-இந்தியா' முயற்சியின் அடையாளமாக நின்று இந்தியாவின் பொறியியல் திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில் இப்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன.

2

16 பெட்டிகள், 857 பெர்த்கள்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்கள் இந்தியாவின் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் (RVNL) மற்றும் ரஷ்யாவின் TMH குழுமத்தின் கூட்டமைப்பால் தயாரிக்கப்படுகின்றன. சென்னையில் அமைந்துள்ள இன்டக்ரல் கோச் பேக்டரி (ICF) தயாரிக்கப்படும் 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் மொத்தமாக 857 பெர்த்கள் இருக்கும், அதில் 823 பெர்த்கள் பயணிகளுக்கும் மீதமுள்ள 34 பெர்த்கள் ஊழியர்களுக்கும் வழங்கப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் தனித்தனியாக மினி பேண்ட்ரி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

முன்பை விட கூடுதல் வசதி

செலவு குறைந்ததாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில், வந்தே பாரத் ஸ்லீப்பர் பதிப்பில் 11 ஏசி மூன்றடுக்கு, 4 ஏசி இரு அடுக்கு மற்றும் 1 முதல் ஏசி உட்பட 16 பெட்டிகள் அடங்கிய வகையில் இந்த ரயில் தயாரிக்கப்படும். தற்போது, இந்த ரயிலில் விசாலமான, சாய்வு இருக்கைகள், பரந்த காட்சிகளுக்கான பெரிய ஜன்னல்கள் மற்றும் பொழுதுபோக்கிற்கான மேம்பட்ட இன்ஃபோடெயின்மென்ட் அமைப்புகள் உள்ளன.

வசதியான மற்றும் விரைவான பயணம்

வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களின் அறிமுகத்தால் இந்திய ரயில்வே பெரிதும் பயனடையும், இது பயணிகள் ஒரே இரவில் நீண்ட தூரம் பயணிக்க உதவும். தற்போதைய வந்தே பாரத் ரயிலின் இருக்கை பெட்டிகளின் ஒரே இரவில் நீண்ட தூரம் அமர்ந்து செல்வதற்கு ஏற்றவாறு இல்லாததால், புதிய ஸ்லீப்பர்கள் இந்த சிக்கலை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வந்தே பாரத் மெட்ரோ சேவை

கூடுதலாக, நடப்பு ஆண்டின் இறுதிக்குள், வந்தே பாரத் மெட்ரோ தயாராகிவிடும் என்றும் கூறப்படுகிறது. 2024 ஜனவரி அல்லது பிப்ரவரியில் மெட்ரோ சேவை பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. வந்தே பாரத் மெட்ரோ உள்ளூர் போக்குவரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

More News

    Read more about: vande bharat indian railways
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+