» »நான்கு மலை சூழ்ந்து கம்பீரமாய் நிற்கும் அஸ்ஸாமில் பார்ப்பதற்கு என்னென்ன இடங்கள் இருக்கிறது?

நான்கு மலை சூழ்ந்து கம்பீரமாய் நிற்கும் அஸ்ஸாமில் பார்ப்பதற்கு என்னென்ன இடங்கள் இருக்கிறது?

Written By: Balakarthik Balasubramanian

பிரம்மபுத்திரா பரந்து விரிந்து நீளமாக காணப்பட, இந்தியாவின் வடகிழக்கு மாநிலமாக அசாமானது காணப்படுகிறது. இவ்விடம், இந்தியாவின் வரைபடத்தில் பறந்து விரிந்து பறவை இறகு போல் தென்பட, பூகோள முகவரியின்படி இந்தியாவின் ஏழு தங்கை மாநிலமானது விடுமுறைக்கு சிறந்த இடமாக விளங்குகிறது.
'பட்டுக்கு' பெயர் பெற்ற அசாமானது, அழிந்துவரும் ஒற்றை கொம்பு இந்திய காண்டாமிருக இனங்களுக்கு இருப்பிடமாகவும், மேலும், ஆசியாவின் யானை வகைகளுள் ஒன்றான இனத்தின் வனவாழிடமாகவும் சிறந்து விளங்குகிறது.

கவனிக்கத்தக்க நிலப்பரப்புகளும், மாபெரும் நிலப்பகுதிகளும், தேயிலை தோட்டங்களும், பசுமையான வெளிகளும் என இந்த மாநிலத்தை அழகாக மாற்ற...இந்த மாநிலத்தின் 35 சதவிகிதமானது காடுகளாகவும், தேயிலை தோட்டங்களாகவும் காணப்படுகிறதாம். அதனால், அசாம் வருகையில் மறக்காமல் தேயிலை தோட்டங்களையும் தான் பார்த்து செல்லுங்களேன். இந்த அருமையான சிறப்பம்சங்களை கொண்ட அசாமானது, விடுமுறையின் போது, விம்மியெழுந்து நம்மை அரவணைக்க இயற்கை அன்னையும் நம் மனதிற்கு துணையாக தோல் தந்து தட்டி தூங்க வைக்கிறாள்.

எண்ணற்ற மலை பகுதிகள் நிறைந்த அசாம், இயற்கை காட்சிகளால் நம்மை ஆசிர்வதிக்க...விடுமுறைக்கு ஏற்ற பல மலை பகுதிகள் இங்கே நம் மனதினை இதமாக்க முயல்கிறது. இந்த ஆர்டிக்கலின் மூலமாக, மைபாங்க், உம்ராங்க்சோ, ஹப்லாங்க், திபு போன்ற நான்கு மதிமயக்கும் அழகிய இடங்களினை பற்றி இப்பொழுது பார்க்கலாமே.

 அசாமை நாம் காண சிறந்த நேரங்கள்:

அசாமை நாம் காண சிறந்த நேரங்கள்:

கோடைக்கால மாதங்களான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மாதங்கள், நாம் இந்த அசாமை காண ஏதுவாக சிறந்து அமைகிறது. இந்த கால நிலைகள், புத்துணர்ச்சியை மனதிலும், முகத்திலும் விதைக்க, மென்மையானதாகவும் அமைகிறது. குளிர்காலத்தில் இங்கே அசாமிற்கு வர நினைப்பவர்கள், உறையவைக்கும் குளிரில் தன்னை உட்படுத்திக் கொள்கின்றனர். பருவ மழைக்காலங்கலானது நமக்கு சிரமமாக காணப்பட, அத்தகைய நிலையில் மழையானது கடுமையாகவும், ஒழுங்கற்ற நிலையிலும் பெய்துக் கொட்டுகிறது.

Pankaj Kaushal

 அசாமை நாம் அடைவது எப்படி?

அசாமை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக:

கவுஹாத்தியில் காணப்படும் லோக்ப்ரியா கோபிநாத் பர்டலை சர்வதேச விமான நிலையமானது முக்கியமான ஒன்றாக அமைந்து, ஐஷ்வில், பெங்களூரு, ஹைதராபாத், ஜெய்ப்பூர் என பல முக்கிய நகரங்களுக்கும் சேவை இயக்கப்படுகிறது.

தண்டவாள மார்க்கமாக:

மாநிலத்தில் மிக முக்கிய ரயில் நிலையமாக கவுஹாத்தி இரயில் நிலையமானது விளங்க, இங்கிருந்து கொல்கத்தா, தில்லி, சென்னை, போன்ற பல முக்கிய நகரங்களுக்கு சேவையானது இயக்கப்பட்டு வருகிறது.

சாலை மார்க்கமாக:

மாநிலத்தின் வழியே தேசிய நெடுஞ்சாலை செல்ல, அவை நன்றாகவும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையானது, மாநிலத்தின் அருகில் காணப்படும் மணிப்பூர், மிஷோராம், மேற்கு வங்கம் என பல இடங்களுக்கு செல்ல...கார்கள் மற்றும் மாநிலத்தின் உள்துறை பேருந்துகளின் மூலம் நாம் எளிதாக வழக்கமான பயணத்தின் மூலம் மாநிலத்தின் பகுதியை நாம் அடையலாம்.

utpal

 மைபங்க்:

மைபங்க்:


இரண்டு திமாசா வார்த்தைகள் ஒன்றிணைந்தால், ‘மைபங்க்' என்னும் பெயர் கிடைக்கிறது. அப்படி என்றால்..."எண்ணற்ற அளவிலான அரிசி" என அர்த்தமாம். இந்த மைபங்கில் நிலமானது செழிப்புடன் காணப்பட, இவ்வாறு அழைப்பதாகவும்...கி.பி 1536ஆம் ஆண்டிலிருந்து திமசா கச்சாரி அரசின் தலை நகரமாகவும் விளங்கியதாக தெரியவருகிறது. இந்த நேரங்களில், கல்வீடுகள் நிறுவப்பட்டதாகவும், இவ்விடம் பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தளமாக விளங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த கல் வீடுகளுக்கு பின்னே புராணம் இருப்பதாகவும், அது என்னவென்றால்... தமசாவின் அரசனுக்கு தேவியை பற்றி கனவு தோன்ற, அதனால் ஒரு கல் கொண்டு வற்புறுத்தி கட்டியதாகவும், அதுவும் ஓரிரவில் கட்டி முடிக்க, கோச்சியால் தாக்கப்பட்ட அரசாட்சியானது அவருக்கு மீண்டும் கிடைக்கவேண்டுமென தேவியிடமும் கோரிக்கை வைத்திருக்கிறார்.

ஆனாலும், அவன் தோல்வியடைய...கோச்சிக்கு எதிரான போரில் தோற்றுவிட, கல்வீடுகளில் தோன்றிய சாளரங்களை பாறையை கொண்டு உள்ளே அடைக்கப்பட்டது என்றும் தெரியவருகிறது. அந்த காலத்தின் கல்வெட்டுகளானது கற்களில் காணப்பட, அவை கல்வீட்டிற்கு அருகாமையிலும் தென்படுகிறதாம்.

Dimaraja

 திபு:

திபு:

தலைநகரமான திஷ்பூரிலிருந்து 43 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நகரமான திபு, கவுஹாத்தியிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் காணப்படுகிறது. அழகிய மலைப்பகுதியான இந்த திபு, வாரவிடுமுறையின் போது நம் மனதினை வருடும் ஓர் இடமாகும். இந்த பெருமூச்செரிய செய்யும் நிலப்பரப்புகளை கடந்து திபுவில், இன்னும் பல இடங்கள் காண நம்மை அழைக்கிறது. இந்த திட்டமிடப்பட்ட தாவரவியல் நிலப்பரப்பானது, சுற்றுலா பயணிகள் தேடி காண வேண்டிய ஒன்றாக அமைய, வனத்துறை இதனை பராமரித்து வருகிறது. மேலும், உள்ளூர் காடுகளும் இங்கே சூழ்ந்து காணப்படுகிறது.

தரலாங்க்சோ கலாச்சார மையமும், தாவரவியல் பூங்காவும், மாவட்ட அருங்காட்சியகமும் என சில இடங்கள் திபுவில் நாம் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களாக அமைகிறது.

Akarsh Simha

 உம்ராங்க்சோ:

உம்ராங்க்சோ:

அசாம் மற்றும் மேகாலயா எல்லைகளில் காணப்படும், மலைகள் மற்றும் பசுமையான இடங்களை கொண்ட அழகிய நகரம் தான் உம்ராங்க்சோ. தொழிற்சாலை நகரமான இந்த இடத்தில் கோபிலி நீர்மின் திட்டமானது கோபிலி நதிக்கு அருகாமையில் நிறுவப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர சுற்றுலா மையங்களுள் ஒன்றான இவ்விடம், அசாம் மக்களின் உணவு வகையான வாத்து இறைச்சி கறி, மற்றும் மசோர் டெங்கா (உன்னதமான மீன் கறி) ஆகியவற்றின் ருசியாலும் இங்குள்ள நகரத்து உணவகங்கள் நம் நாவை சுழட்ட செய்கிறது.

உம்ராங்க்சோ நகரமானது இயற்கை சூடான நீரூற்றுக்களுடன் காணப்பட, இந்த வசந்த காலத்தின் தன்மையில் மருத்துவ பண்புகள் நிறைந்திருப்பதாகவும், இங்கே வரும் சுற்றுலா பயணிகள், இந்த நீரில் முக்கி எழுந்து செல்வதாகவும் தெரியவருகிறது.

Xorg27

 ஹப்லாங்க்:

ஹப்லாங்க்:

மேலே நாம் பார்த்த அனைத்து இடங்களைபோலவே, அசாமின் பிரசித்திபெற்ற ஓர் மலை பகுதியாக இந்த ஹப்லாங்க் காணப்படுகிறது. 2,230 அடி உயரத்தில் இந்த பகுதியானது காணப்பட, மலை மற்றும் நிலப்பரப்புகளுக்கு சிறந்த இடமாக விளங்கி காட்சிகளால் மனதினை கவரும் ஒரு இடமாகவும் இவ்விடம் காணப்படுகிறது. கவுஹாத்தியிலிருந்து 310 கிலோமீட்டர் தொலைவில் இந்த இடம் காணப்பட, இயற்கை ஆர்வலர்களின் மனதினை இதமாக்கும் ஓர் இடமாகவும் சிறந்து விளங்குகிறது. மலை ஏறும் ஆர்வலர்களுக்கும், கூடாரம் அமைத்து தங்குபவர்களுக்கும் சிறந்த இடமாக இவ்விடம் காணப்பட, ஹப்லாங்கின் சிறப்பம்சமாக பாராகிளைடிங் காணப்படுகிறது.
மேலும், ஹப்லாங்க் ஏரி, ஜாதிங்க பறவைகள் ஆய்வகம், ஹப்லாங்க் மலை என இன்னும் சில இடங்களும் நம்மை பார்க்க வரவேற்று மனதினை வருட துடிக்கிறது.

PhBasumata

Read more about: travel, hills