Search
  • Follow NativePlanet
Share
» »குறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்!

குறைந்த விலையில் அள்ளித் தரும் ஜெய்ப்பூர் பஜார்கள்!

By Saba

ராஜஸ்தானில் பாலைவன நிலங்களில் அமைந்துள்ள நாட்டின் மிகச் சிறந்த நகரங்களில் ஒன்றாக இருப்பது நாம் அறிந்ததே. இளஞ்சிவப்பு நகரம் என பெரும்பாலும் அறியப்படுகின்ற இப்பகுதி ராஜஸ்தானின் தலைநகரமாகவும், அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய வணிக மையங்கள் நிறைந்ததாகவும் உள்ளது. இங்குள்ள பிரபலமான கோட்டைகள் மற்றும் நினைவு சின்னங்களுக்காக உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். அவ்வாறு வருவோர் தவறாது பயணிக்க வேண்டிய வணிக வளாகங்கள் எது எனத் தெரியுமா ?

ஜோஹரி பஜார்

ஜோஹரி பஜார்


ஆடம்பர நகை விற்பனைக்காக புகழ்பெற்ற ஒரு வணிக வளாகம் உள்ளது என்றால் அது ஜோஹரி பஜார் தான். நகைக் கடைகள் அணிவகுத்து நிற்கும் இங்கே நீங்கள் எங்கு பார்த்லும் ஜொலிக்கும் ஆபரணங்கள் உங்களது கண்களை கொள்ளை கொல்லும். குறிப்பாக, நாட்டில் வேறெங்கும் கிடைக்காத, வண்ணமயமான மீனாக்கரி ஆபரணங்கள் இங்கே வடிவமைக்கப்படுவது தனிச் சிறப்பு. மேலும், இங்கு பன்ஹானி என்னும் துணிகளுக்கு மிகவும் பிரபலமாக விற்பனை செய்யப்படுகிறது.

பாப்பு பஜார்

பாப்பு பஜார்


ஜெய்பூர் நகரம் ஆடம்பரமான நகரமாக இருந்தாலும், அங்கே குறைந்த விலையில் பல பொருட்களை வாங்கி வர விரும்பினால் தாராளமாக பாப்பு பஜாருக்கு பயணிக்கலாம். ஜெய்ப்பூருக்கே உரித்தான பழமைமாறாக் கட்டிடங்களில் எந்நேரமும் gரபரப்பாக விற்பனைகள் நடந்து கொண்டிருக்கும். அவற்றுள் உங்களுக்கு ஏற்ற பொருட்களை குறைந்த விலையில் அள்ளிவரலாம். குறிப்பாக, ஒட்டகத் தோலில் தயாரிக்கப்படும் அழங்காரப் பொருட்கள் கூட இங்கே குறைந்த விலையில் கிடைக்கும்.

திரிப்பொலி பஜார்

திரிப்பொலி பஜார்


திரிபோலியா பஜார் மற்றும் அmதனருகே உள்ள சௌரா ரஸ்தா பஜார் பெண்களுக்காகவே உருவாக்கப்பட்ட பல நகைகளுக்கு பிரசிதிபெற்றது. கலைநயமிக்க வளையல்கள் உள்ளிட்டு விதவிதமான நகைகளின் கூடரம் இதுவாகும். திரிப்பொலி பஜாரில் இளைஞர்களுக்கு எனவே பல ரகங்களில், பலதரப்பட்ட விலைகளில் ஆடைகள், வீட்டு உபகோயப் பொருட்கள், கைவேலைப்பாடுகள் நிறைந்த மர உபயோகப் பொருட்கள் என பலவை உள்ளன.

நேரு பஜார்

நேரு பஜார்


ஜெய்ப்பூரின் பாரம்பரியமும், துடிப்பான பிரகாசம் நிறைந்த சந்தை நேரு பஜார். வருடம் முழுவதும் இந்த சந்தையில் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்துகிடப்பதை காண முடியும். ராஜஸ்தானி வகையிலான நகைகளுக்கும், உடைகளுக்கும் பெயர்பெற்ற இச்சந்தையில் பேரம் பேசி வாங்க ஏராளமான அழகியப் பொருட்கள் உள்ளன. குறிப்பாக, வீட்டு உபயோகப் பொருட்கள், பெண்களுக்கு ஏற்ற அழங்காரப் பொருட்கள் அதிகளவில் இங்கே கிடைக்கும் என்பது தனிச் சிறப்பு.

சாண்ட்போல் பஜார்

சாண்ட்போல் பஜார்


ஜெய்ப்பூரின் பளிங்குக் கல் தொழிலாளர்கள் மற்றும் ஓவியர்களின் கலைப் படைப்புகளை விற்பனை செய்யும் இடமாகத் திகழ்வது சாண்ட்போல் பஜார். விதவிதமான, கண்களால் நம்பவே முடியாத அளவிற்கு கலைகள் நிறைந்த பொருட்கள் இங்கே விற்பனைக்காக உள்ளன. நுகர்வோரின் கண் எதிரேயே அவர்களது விருப்பத்திற்கு ஏற்ப கலை ஓவியங்கள் கூட பளிங்குக் கற்களில் அமைந்திருக்கிறார்கள்.

கிஷன்போல் பஜார்

கிஷன்போல் பஜார்


கிஷன்போல் பஜாரானது அச்சிடப்பட்ட ஆடைகளுக்காகவும், கவர்ச்சிகரமான நகைகளுக்காகவும் புகழ்பெற்ற சந்தையாகும். இங்கே அழகுப் பொருட்கள் மட்டுமின்றி அதனைப் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்ற நகை பெட்டிகள், நாற்காலிகள், துண்டுகள் என இன்னும் ஏராளமானவை குவிந்து கிடக்கும். அதுவும் உங்களுக்கு ஏற்ற விலையில்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X