» »இந்தியாவில் யானைச் சவாரி இங்கெல்லாம் ஃபேமஸ் தெரியுமா?

இந்தியாவில் யானைச் சவாரி இங்கெல்லாம் ஃபேமஸ் தெரியுமா?

By: Bala Karthik

வனவிலங்கு சரணாலயம் அல்லது தேசிய பூங்காவானது சவாரியில் அதீத ஆச்சரியத்தை தந்திடும் ஒரு அங்கமாக விளங்குகிறது. இந்த சவாரிப்பயணமாக தேசிய பூங்காவின் காடுகளில் நாம் உலா வர, மற்றுமோர் சவாரியாக யானைகளும், ஒட்டகங்களும் என பல விலங்குகளும் காணப்படுகிறது. இது ஒரு வித அனுபவமாக அமைய, வாழ்க்கையில் ஒருமுறையாவது நாம் இதனை முயற்சி செய்திடவும் வேண்டும்.

நமது நாட்டில் விலங்குகள் சரணாலயம் பலவும் உலகப் புகழ்பெற்றதக இருக்கிறது. அதுபோலவே மனதை மகிழ்விக்க விலங்கு சவாரியும் இங்கே காணப்படுகிறது. இந்த ஆர்டிக்கல், குறிப்பாக யானைகளை பற்றி சற்று தெரிந்து கொள்ளவும், யானை சவாரிகள் எங்கெல்லாம் பிரசித்திப் பெற்றதும் என தெரிந்து கொள்ளவும்தான். உங்கள் எண்ணமானது சிறகு விரித்து பறந்திட, இந்தியாவில் காணப்படும் இடங்களையும், அதனால் ஏற்படக்கூடிய அனுபவத்தையும் நாம் பெறலாமே.

 காஷிரங்கா தேசிய பூங்கா:

காஷிரங்கா தேசிய பூங்கா:


இந்த காஷிரங்கா தேசிய பூங்கா, ஒற்றை கொம்பு காண்டாமிருகங்களுக்கு புகழ்பெற்று இந்த சரணாலயத்தில் காணப்பட, மூன்றில் இரண்டு பங்கு மக்கள்தொகைக்கு இவ்விடமானது வீடாக விளங்குகிறது. ஆனால், யானைகளுக்கும், யானை சவாரிகளுக்கும் பெயர்பெற்று விளங்குகிறது காஷிரங்கா. இந்த சவாரியானது அதிகாலையில் தொடங்க, அரை மணி நேரமும் நாம் செல்ல வேண்டியதாக இருக்கிறது.

வனவிலங்குகளையும், பல்லுயிரினங்களையும் காஷிரங்காவில் நாம் ஆராய, இந்திய யானைகள், காண்டாமிருகங்கள் என பல கால்நடைகளோடு சேர்த்து கால் நடையாக ஒய்யாரமான யானை சவாரியும் இங்கே அமைகிறது.

PC: Suvra Saha

அமீர் கோட்டை:

அமீர் கோட்டை:


இந்த மாபெரும் அமீர் கோட்டை ராஜஸ்தானில் காணப்பட, இதனை கோட்டைகளின் நிலமெனவும், அரண்மனைகள் என பலவாறும் அழைக்கப்படுகிறது. மணல் கற்களையும், பளிங்கு கற்களையும் கொண்டு கட்டப்பட்டிருக்க, இது அழகாகவும் அமைந்திருக்க, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாகவும் விளங்குகிறது. இக்கோட்டையானது மகத்தான யானை சவாரியுடனும் காணப்பட, இந்த அழகிய பகுதியை சுற்றியும் சவாரியானது காணப்படுகிறது.

நெகிழவைக்கும் கட்டிடக்கலைக்கொண்டு காணப்படும் அமீர் கோட்டையின் கோட்டை சுற்றி யானை சவாரியானது காணப்பட, தனித்துவமிக்க இடமாக அமைவதோடு, குறும்புத்தனமும் நம்முடைய பார்வையினுள் தொற்றிக்கொள்ளக்கூடும்.

PC: Jason Rufus

கன்ஹா தேசிய பூங்கா:

கன்ஹா தேசிய பூங்கா:

மத்திய பிரதேச மாநிலத்தின் கன்ஹா தேசிய பூங்கா, இந்தியாவிலேயே மிகப்பெரிய புலிகள் சரணாலயமாக காணப்படுகிறது. இங்கே காணும் விலங்குகளாக அரச குடும்பத்து வங்காள புலிகள், இந்திய சிறுத்தைப்புலிகள் என பலவும் காணப்படும் இடமாக கன்ஹா தேசிய பூங்கா காணப்படுகிறது. இவ்விடமானது ருட்யார்ட் கிப்லிங்கின் புகழ்மிக்க ஜங்கிள் புக் உருவாக முக்கிய காரணமாக அமைந்தது.

யானை சவாரி இங்கே காணப்பட, புலியை வைத்து சிறப்பு நிகழ்வுகளும் இந்த தேசிய பூங்காவில் நடத்தப்படுகிறது. இங்கே 4 நபர்கள் புலிகளின் அருகாமையில் செல்ல முடிய, யானை சவாரியும் 10 முதல் 15 நிமிடங்களுக்கு நம் மனதில் நிம்மதியை விதைக்கிறது.

PC: Vrinda Menon

 பண்டவ்கார்ஹ் தேசிய பூங்கா:

பண்டவ்கார்ஹ் தேசிய பூங்கா:


அதீத பல்லுயிரை கொண்டு விதவிதமான தாவரங்களையும், விலங்குகளையும் பெருமளவில் கொண்டிருக்கும் பண்டவ்கார்ஹ் என்னும் அழகிய தேசிய பூங்கா, மத்திய பிரதேச மாநிலத்தில் காணப்படுகிறது. இவ்விடம் பெருமளவிலான புலிகளையும், சிறுத்தைப்புலிகளையும் கொண்டு, அத்துடன் நீலான் மான், வரி மான், சீதல் மான் என பல இனத்திற்கு வீடாகவும் விளங்குகிறது.

விலங்கின விரும்பிகள் இந்த யானை சவாரியை பண்டவ்கார்ஹில் விரும்பிட, இதனால் பூங்கா முதல் கம்பீரமான புலிகள் காணப்படும் இடம் வரையிலான பாதுகாப்பான பயணமாகவும் நமக்கு தேவைப்படுகிறது. உலகிலேயே சிறந்தவற்றை பண்டவ்கார்ஹில் நம்மால் பார்த்திட முடியக்கூடும்.

PC: Archith

பெரியார் தேசிய பூங்கா:

பெரியார் தேசிய பூங்கா:

கேரளாவின் பெரியார் தேசிய பூங்கா, யானைகள் சரணாலயத்தையும், புலிகள் சரணாலயத்தையும் சேர்த்தே கொண்டிருக்க, இயற்கையாக இதனை விலங்குகள் வாழுமிடமெனவும் அழைக்கப்படுகிறது. இந்த சரணாலயமானது மேற்கு தொடர்ச்சியின் இரு மலைகளில் காணப்பட, இயற்கை விரும்பிகளின் உன்னதமான இடமாகவும் அமையக்கூடும்.

யானை சவாரி நாம் செல்ல, நீலகிரி மரப்புறா, நீல வாள் கொண்ட பச்சைக்கிளி, நீலக்கிரி பறவை பிடிப்பான்கள் என பல அழகிய பறவைகளும், கருங்காலி, தேக்கு என பல மரங்களையும் இவ்விடம் கொண்டிருக்கிறது.

PC: PoojaRathod

பந்திப்பூர் தேசிய பூங்கா:

பந்திப்பூர் தேசிய பூங்கா:


1974ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பந்திப்பூர் தேசிய பூங்கா, கர்நாடகாவின் அதீத அழகுடன் கூடிய தேசிய பூங்காக்களுள் ஒன்றாகும். புலிகள், சிறுத்தைபுலிகள், இந்திய யானைகள், சாம்பல் நிற சிங்கவால் குரங்குகள் என பலவும் காணப்பட, இந்த வித விலங்குகள் இந்த தேசிய பூங்காவில் காணப்படுகிறது. யானை சவாரி நாம் செல்ல, அனைத்து விலங்குகளையும் அத்துடன் சேர்த்து பறவைகளான சிவப்பு தலைக்கொண்ட கழுகுகள், ஹூப்போஸ், மரங்கொத்தி என பலவற்றை நம்மால் இங்கே பார்க்க முடிகிறது. பெங்களூருவிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவில் பந்திப்பூர் காணப்படுகிறது.

PC: Nikhilvrma