Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையின் பிரபலமான 7 கிறிஸ்தவ தேவாலயங்கள்!!!

சென்னையின் பிரபலமான 7 கிறிஸ்தவ தேவாலயங்கள்!!!

By

கிறிஸ்தவ மதத்தின் துவக்க காலத்தில் கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் என்பது கிடையாது. கி.பி 4-ஆம் நூற்றாண்டில் போப் முதலாம் ஜீலியஸ் காலத்தில்தான் கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியது.

அதன் பிறகு மெல்ல மெல்ல இந்தப் பண்டிகை 6-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து தேசம் சென்றடைந்தது. உலகெங்கும் கிருஸ்துமஸ் மரம் வைக்கும் வழக்கத்தை பிரபலபடுத்தியது இங்கிலாந்தின் அரச குடும்பமே ஆகும்.

பின்னர் 8-ஆம் நூற்றாண்டில் ஸ்காண்டிநேவியாவிலும் கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் பரவலாக கொண்டாடப்படலாயின. இப்படியாக தொடங்கிய கிருஸ்துமஸ் கொண்டாட்டங்கள் இன்று பெரும்பாலும் எல்லா நாடுகளிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நம் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வசிப்பவர்களுக்காகவும் அல்லது கிருஸ்துமஸ் பண்டிகைக்காக சென்னைக்கு தங்கள் உறவினர் இல்லங்களுக்கு வரும் பணிகளுக்குக்காகவும் உதவியாக சென்னையின் முக்கியமான கிறிஸ்தவ தேவாலயங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

சாந்தோம் தேவாலயம்

சாந்தோம் தேவாலயம்

16-ஆம் நூற்றாண்டில் சென்னைக் கடற்கரைக்கு வந்திறங்கிய போர்த்துக்கீசியர்களால் சாந்தோம் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. அப்போது சிறியதாக உருவாக்கப்பட்ட இந்த ஆலயம் பின்னர் 1893-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் மறு உருவாக்கம் செய்யப்பட்டு கத்தீட்ரல் அந்தஸ்தும் அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தகவலுக்கு

செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம்

செயின்ட் தாமஸ் மவுண்ட் தேவாலயம்

சென்னை கிண்டி அருகேயுள்ள பரங்கிமலை எனும் சிறு குன்றின் மீது இந்த புனித தோமையார் தேவாலயம் அமைந்துள்ளது. ஏசு கிறித்துவின் 12 சீடர்களில் ஒருவரான செயிண்ட் தாமஸ் கி.பி 52ம் ஆண்டில் கேரளாவுக்கு வந்திறங்கி பின் சென்னையில் உள்ள பரங்கிமலைக்கு வந்து மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டு மரித்ததாக நம்பப்படுகிறது. இது பற்றிய குறிப்புகளை பரங்கி மலை தேவாலய வளாகத்தில் காணலாம்.

மேலும் தகவலுக்கு

பிரகாச மாதா தேவாலயம்

பிரகாச மாதா தேவாலயம்

1516-ஆம் ஆண்டு போர்த்துக்கீசர்களால் கட்டப்பட்ட பிரகாச மாதா தேவாலயம் சென்னையின் மிகப்பழமையான தேவாலயங்களில் ஒன்றாகும். இது போர்த்துக்கீசிய பெயரான 'நோசா சென்ஹோரா டா லஸ்' (Nossa Senhora da Luz) என்று அலுவல் ரீதியாக அறியப்பட்டாலும், 'லஸ் சர்ச்' என்றே பிரபலமாக அழைக்கப்படுகிறது. மயிலாப்பூரில் உள்ள இந்த தேவாலயம் சாந்தோம் தேவாலயத்துக்கு அருகிலேயே அமையப்பெற்றிருக்கிறது.

செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல்

செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல்

ஆங்கிலிக்கன் சபை, மெதடிஸ்டு சபை, பிரெஸ்பிட்டேரியன் சபை மற்றும் கான்ங்ரகேஷனல் சபைகள் ஒன்றிணைந்து தென்னிந்தியத் திருச்சபையை இந்த தேவாலயத்தில்தான் 1947-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது. பொதுமக்களிடம் நிதி வசூல் செய்து கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயம் 1815ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு

செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் சர்ச்

செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் சர்ச்

செயின்ட் ஆண்ட்ரூவ்ஸ் சர்ச் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் எழும்பூர் ரயில் நிலையத்துக்கு பின்னால் அமைந்துள்ளது. ஸ்காட்லாந்து பாணியில் கட்டப்பட்டிருக்கும் இந்த தேவாலயம் 1821-ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.

மேலும் தகவலுக்கு

செயின்ட் மேரிஸ் தேவாலயம்

செயின்ட் மேரிஸ் தேவாலயம்

சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையினுள் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் தேவாலயம், 1680-ல் கிழக்கிந்திய கம்பெனியாரால் கட்டப்பட்டதாகும். இவ்வாலயத்தில்தான் புகழ்பெற்ற ஆங்கிலேய மேஜர் ஜெனரல் இராபர்ட் கிளைவ்வின் திருமணம் நடைபெற்றது.

வேளாங்கண்ணி சர்ச்

வேளாங்கண்ணி சர்ச்

அவர் லேடி ஆஃப் ஹெல்த் வேளாங்கண்ணி தேவாலயம் சென்னையில் பெசன்ட் நகர் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள வேளாங்கண்ணி தேவாலயத்தின் சிறிய வடிவத்தில் காட்சியளித்துக்கொண்டிருக்கிறது.

More News

    Read more about: ஆன்மிகம்
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+