Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!

புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!

பிரெஞ்சு காலனித்துவ கட்டிடக்கலை, அழகிய ரம்மியமான கடற்கரைகள், துடிப்பான கஃபேக்கள், மனதை மயக்கும் பப்கள், வித விதமான ஷாப்பிங், பிரமிக்க வைக்கும் தேவாலயங்கள் மற்றும் கோவில்கள் என "மினி கோவா" என்று செல்லமாக அழைக்கப்படும் புதுச்சேரி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. எப்பொழுதும் புதுச்சேரி செல்லும் நபராக நீங்கள் இருந்தாலும் அல்லது புதுச்சேரியில் வாழும் பெரும்பாலான மக்களுக்கும் இது தெரியாத விஷயமாகும். ஆம்! ஒரே படகு சவாரியில் புதுச்சேரியின் 8 விதமான கடற்கரைகளை நீங்கள் ஆராயலாம். இந்த ருசிகரமான பீச் போட் ரைடு/க்ரூஸ் ரைடு பற்றி மேலும் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

புதுச்சேரியில் படகு சவாரி சுற்றுலா

நாளுக்கு நாள் புதுச்சேரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒரு சின்ன விடுமுறை அல்லது வார இறுதி நாட்கள் என்றால் போதும், புதுச்சேரி முழுக்க மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது. ஏனென்றால் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் சுதந்திரமான ஒரு நகரமாக பலவகையான விருப்பங்களையும் வாரி வழங்குகிறது. எனக்கு புதுச்சேரியில் எல்லாம் தெரியும் என்பவர்கள் கூட இந்த படகு சுற்றுலாப் பற்றி கேள்விப்பட்டு இருக்க மாட்டார்கள். ஆம்! புதுவை ராக் கடற்கரையில் ஆரம்பித்து ஒரு இரண்டரை மணி நேரத்திற்கு நீங்கள் கடலில் சவாரி செய்து புதுவையின் அழகை ஆராயலாம்.

seagullboatrideinpondicherry

அனைவரும் கட்டாயம் முயற்சி செய்ய வேண்டிய படகு சவாரி இது

சீகல் எனப்படும் நிறுவனம் புதுவை சுற்றுலாத் துறையுடன் இணைத்து இந்த படகு சவாரி சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது. வாரத்தின் எல்லா நாட்களிலும் வெவ்வேறு பேக்கேஜ்களில் வழங்கப்படும் இந்த பீச் சுற்றுலா உங்களுக்கு மிகவும் தனித்துவமான ஒரு வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. புதுவைக்கு புதிதாக வருகை தரும் சுற்றுலாப் பயணிகளாக நீங்கள் இருந்தாலும், புதுவையில் வசித்து வருபவர்களாக இருந்தாலும் இது முற்றிலும் முயற்சி செய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.

இந்த படகு சுற்றுலாவின் சிறப்பம்சங்கள் என்ன

1. நீங்கள் மிகவும் பாதுகாப்பாக, தேர்ச்சி பெற்ற நபர்களால் அழைத்து செல்லப்படுவீர்கள்.

2. அனைவர்க்கும் தேவையான லைப் ஜாக்கெட்களும் வழங்கப்படுகிறது.

3. ராக் கடற்கரையில் இருந்து தொடங்கி இரண்டரை மணி நேரத்திற்கு கடலில் வட்டமடித்து நாம் ஆர்ப்பரிக்கலாம்.

4. கடலில் இருந்து புதுவையின் அழகை ரசிப்பது நிச்சயம் ஒரு வித்தியாசமாக அனுபவமாக இருக்கிறது.

5. ஒரே சுற்றுலாவில் நீங்கள் 8 வெவ்வேறு புதுவை கடற்கரைகளை ஆராயலாம்.

6. உங்களுக்கு தேவையான அனைத்தும் படகிலேயே வழங்கப்படுகிறது. சிற்றுண்டி, காபி, ஜூஸ், தண்ணீர் அனைத்தும் வழங்கப்படுகிறது.

7. ராக் பீச், பழைய துறைமுகம், லைட்ஹவுஸ், வீராம்பட்டினம் பீச், பாண்டி மெரீனா, பாரடைஸ் பீச், ஈடன் பீச் ஆகிய இடங்களை நீங்கள் படகில் இருந்தபடியே சுற்றிப் பார்க்கலாம்.

8. அத்துடன் கழிவறை வசதியில் படகில் இருக்கிறது. எதற்கும் பயப்பட தேவையில்லை.

9. சன்ரைஸ் ரைடு காலை 5 மணிக்கும், படகு சவாரி 1 காலை 8 மணிக்கும், படகு சவாரி 2 காலை 11 மணிக்கும், சன்செட் ரைடு மதியம் 2 மணிக்கும் ஆரம்பிக்கிறது.

10. குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்களும் படகு சவாரியில் வழங்கப்படுகிறது.

seagullboatrideinpondicherry ride

பீச் படகு சவாரி பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்

1. இந்த படகு சவாரிக்கு நீங்கள் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய வேண்டும்.

2. டிக்கெட்டை பிரின்ட் அவுட் அல்லது போனில் டவுன்லோட் செய்து எடுத்துச் செல்லவும்.

3. நீங்கள் புக் செய்த ஸ்லாட்டுக்கு அரை மணி நேரம் முன்னதாக புதுவை இந்திரா காந்தி ஸ்டேடியம் அருகில் உள்ள எக்ஸ்போ கிரவுண்ட்டை அடையவும்.

4. 5 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் வயது வந்தவர்களாகக் கருதப்படுவார்கள், அதாவது முழு டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படும்.

5. எந்தவொரு செல்லுபடியாகும் அடையாளச் சான்றிதழோடும் ஒரு டிஜிட்டல் டிக்கெட் நகலை பயணிகள் கொண்டு வர வேண்டும்.

6. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அரை டிக்கெட் வசூலிக்கப்படும்.

7. https://seagullcruise.com/booking/ என்கிற இணையத்தளத்தில் டிக்கெட் புக் செய்து கொள்ளவும்.

8. பெரியவர்களுக்கு ரூ.650 மற்றும் குழந்தைகளுக்கு ரூ.325 டிக்கெட் கட்டணமாக வசூலிக்கப்படும்.

அடுத்த முறை புதுவைக்கு செல்லும் போது இந்த தனித்துவமான படகு சவாரியை முயற்சி செய்ய மறக்காதீர்கள்!

More News

    Read more about: puducherry boat ride
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+