Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் 8 முக்கியமான சர்வதேச விமான நிலையங்கள்!

இந்தியாவின் 8 முக்கியமான சர்வதேச விமான நிலையங்கள்!

இந்தியாவின் 8 முக்கியமான சர்வதேச விமான நிலையங்கள்!

By

இந்தியாவில் மொத்தம் 17 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இதன் காரணமாக உலக அளவில் 9-வது மிகப்பெரிய விமான போக்குவரத்து துறையாக இந்தியா திகழ்கிறது.

அதோடு இந்த 17 விமான நிலையங்களில் ஒரு சில விமான நிலையங்கள் உலகின் தலைசிறந்த விமான நிலையங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்தியாவின் பெருநகரங்களில் அமைந்திருக்கும் விமான நிலையங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம்

புது டெல்லியின் மையப் பகுதியிலிருந்து 16 கி.மீ தொலைவில் டெல்லியின் தென்மேற்கு பகுதியில் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நினைவாகப் பெயரிடப்பட்டுள்ள இந்த விமான நிலையம் இந்தியாவின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகும்.

சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்

சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்

மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் முன்பு சாகர் விமான நிலையம் என்ற பெயரில் அறியப்பட்டது. இந்தியாவில் உள்ள விமான நிலையங்களில் மொத்தப் பயணிகள் போக்குவரத்தில் 2-வது போக்குவரத்து மிக்க விமான நிலையமாக சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் திகழ்கிறது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம்

மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவின் மையப்பகுதியிலிருந்து 17 கி.மீ தொலைவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. இது சுபாஷ் சந்திரபோஸின் நினைவாகப் பெயர் மாற்றம் பெறுவதற்கு முன்பு டம் டம் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டு வந்தது. இந்த விமான நிலையம் இந்திய விமான நிலையங்களில் பயணிகள் போக்குவரத்து மிகுந்தவற்றில் 5-தாக உள்ளது.

அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம்

அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம்

சென்னையின் நகரப் பகுதியிலிருந்து சற்று விலகி 7 கி.மீ தொலைவில் மீனம்பாக்கத்தில் அறிஞர் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையம் மும்பை மற்றும் டெல்லிக்கு பிறகு முக்கியமான விமான நிலையமாகவும், மும்பைக்கு அடுத்தபடியாக அதிக போக்குவரத்துள்ள சரக்கு விமான நிலையமாகவும் திகழ்ந்து வருகிறது.

கொச்சி சர்வதேச விமான நிலையம்

கொச்சி சர்வதேச விமான நிலையம்

கொச்சி நகருக்கு தென்கிழக்காக 30 கி.மீ தொலைவில் நெடும்பாச்சேரி என்ற பகுதியில் கொச்சி சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் விமான நிலையம் இருந்தாலும் கொச்சி சர்வதேச விமான நிலையமே கேரளாவின் பரபரப்பான மற்றும் மிகப்பெரிய விமான நிலையமாகவும், நாட்டின் 4-வது பரபரப்பான விமான நிலையமாகவும் அறியப்படுகிறது.

பெங்களூர் சர்வதேச விமான நிலையம்

பெங்களூர் சர்வதேச விமான நிலையம்

பெங்களூர் நகர மையத்திலிருந்து 40 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பெங்களூர் சர்வதேச விமான நிலையம் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கெம்பேகவுடா விமான நிலையம் என்று பெயர் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. 10 உள்நாட்டு சேவைகளையும் 21 வெளிநாட்டு சேவைகளையும் இந்த விமான நிலையம் பெற்றுள்ளது.

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம்

ஹைதராபாத்திலிருந்து 22 கி.மீ தொலைவில் ஷம்ஷாபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் அமைந்திருக்கிறது. பேகம்பேட் பகுதியில் இயங்கி வந்த விமான நிலையத்துக்கு மாற்றாக கட்டப்பட்ட ராஜீவ் காந்தி விமான நிலையம் 2008-ஆம் ஆண்டிலிருந்து விமான போக்குவரத்து சேவையை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகளுக்கு வழங்கி வருகிறது.

கோவா சர்வதேச விமான நிலையம்

கோவா சர்வதேச விமான நிலையம்

கோவா தலைநகர் பனாஜியிலிருந்து 30 கி.மீ தொலைவில் தாபோலிம் எனும் கிராமத்தில் அமைந்திருக்கும் கோவா சர்வதேச விமான நிலையம் அந்த கிராமத்தின் பெயராலேயே தாபோலிம் விமான நிலையம் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+