Search
  • Follow NativePlanet
Share
» »அமைதியாக சுற்றுலாவை கழிக்கணுமா? இந்த 9 இடங்களுக்கு போகலாம்

அமைதியாக சுற்றுலாவை கழிக்கணுமா? இந்த 9 இடங்களுக்கு போகலாம்

பரபரபய்பாக இயந்திர மயமாக ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையில் எங்காவது நிம்மதியாக, அமைதியாக ஓய்வெடுத்து விட்டு வர மாட்டோமா என அனைவருக்கும் தோன்றுவது உண்டு. அப்படி நீங்களும் அமைதியாக, ஒரு இடத்திற்கு சென்று ஓய்வெடுக்க வேண்டும் என நினைத்தீர்கள் என்றால் இந்தியாவில் நீங்கள் இந்த 9 இடங்களுக்கு தான் செல்ல வேண்டும். தன்னை தேடி வரும் சுற்றுலா பயணிகளுக்கு அமைதியை தரும் அந்த இடங்களின் பட்டியல் இதோ...

Rishikesh

ரிஷிகேஷ்

ஆன்மிகத்திற்கும், இயற்கைக்கும், சாகசத்திற்கும் அழகான ஒருங்கிணைப்புடன், கங்கையின் கரையில், இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த நகரம், இந்தியாவின் யோகா தலைநகரம் என்ற பெருமையை கொண்டுள்ளது.பிரம்மாண்டமான கங்கா ஆரத்தி, தியானம், யோகா பயிற்சிகள் நடைபெறும் இடமாக உள்ளது. இங்குள்ள பழமைமிக்க ஆசிரமங்கள் ஆன்மிக தேடலுக்கான சிறந்த இடங்களாகவும் உள்ளன.

மூணாறு

மூணாறு, கேரளாவின் அழகிய மலைநகரம் ஆகும். பசுமை மூடிய தேயிலை தோட்டங்கள், மழை மேகங்கள் சூழ்ந்த மலைகள், குளிர் காற்று, நீர்வீழ்ச்சிகள் இவை அனைத்தும் மூணாறை சொர்க்கம் ஆக்குகின்றன. உலகின் சிறந்த தேயிலை தோட்டங்களில் ஒன்றாகவும்,வருடம் முழுவதும் சுத்தமான காற்று, அடர்ந்த காடுகள், ஆறுகள், மலையடிவாரப் பாதைகள் கொண்ட இடமாகும்.

ஆரோவில்

புதுச்சேரியில் அமைந்துள்ள ஆரோவில் வெறும் ஒரு சுற்றுலா தலம் மட்டுமல்ல. அது உலக அமைதிக்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான நகரம். மாத்ரிமந்திரில் தியானம் செய்யவும், அதிக கூட்டம் இல்லாமல் இயற்கையை அனுபவிக்கவும் சிறந்த இடம்.

Spiti

ஸ்பிதி பள்ளத்தாக்கு

ஸ்பிதி, இந்தியாவின் மிக உயர்ந்த, அதீத அமைதியான, பனிமூடிய மலைப்பாங்கான பகுதிகளில் ஒன்று. இது இமாச்சலப் பிரதேசத்தில், 12,500 அடி உயரத்தில் அமைந்துள்ளது. "மிதக்கும் பனிமலை தேசம்" என்றும் அழைக்கப்படும் இங்கு, குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவு இருக்கும்.

ஆலப்புழா

கேரளாவின் பிணையப்பட்ட நீர்வழிகள், பைலாக்குகள், பசுமை நிறைந்த நிலங்கள், மற்றும் அழகிய கடற்கரைகள் கொண்ட ஒரு மந்திரமான இடம். இது "இந்தியாவின் வெனிஸ்" என்று அழைக்கப்படுகிறது. இங்கு நீர்வழிகள் பிரதான போக்குவரத்து வழியாக பயன்படுத்தப்படுகின்றன.இங்கு உடல் மற்றும் மனதை புத்துணர்ச்சி பெற ஆயுர்வேத மசாஜ் சிகிச்சைகள் உள்ளன.

தவாங்

தவாங் என்பது அருணாசலப்பிரதேசத்தில் அமைந்துள்ள அழகிய பனிமலை நகரம். இங்கு உயர்ந்த இமயமலைத் தொடர்கள், அரிய புத்த மத மடங்கள், நீல நிற ஏரிகள், பனிமூடிய பள்ளத்தாக்குகள் ஆகியவை உள்ளன. இது இந்தியாவின் மிக அமைதியான மற்றும் சுவாசிக்க கூடிய இடங்களில் ஒன்று. இங்குள்ள நுரானாங் நீர்வீழ்ச்சி, இந்தியாவின் மிக அழகான நீர்வீழ்ச்சிகளில் ஒன்று.

கோகர்ணா

கோகர்ணா, கர்நாடகா மாநிலத்தின் மிக அழகான மற்றும் அமைதியான கடற்கரை நகரங்களில் ஒன்று. இது ஆன்மீக முக்கியத்துவமும், பசுமை சூழ்ந்த இயற்கைத் தலங்களும், குறைவான கூட்ட நெரிசல் கொண்ட ஒதுங்கிய கடற்கரைகளும் கொண்ட ஒரு சிறப்பு இடம்.இது கோவாவைப் போலவே அழகானது. ஆனால் மக்கள் திரளாக வராத ஒரு அமைதியான இடம்.

Coorg

கூர்க்

கர்நாடகா மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு மலைப்பகுதி, இது மணக்கும் காபி தோட்டங்கள், பசுமை நிறைந்த மலைத்தொடர்கள், தெளிந்த நீர்வீழ்ச்சிகள் ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இதை "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் இங்கு தொடர்ந்த பசுமை நிறைந்த மலைகள் மற்றும் தெளிந்த மழைக்காடுகள் உள்ளன.

கஜுராஹோ

கஜுராஹோ, மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான பாரம்பரிய தலம். இது யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னமாக கருதப்படுகிறது. இது தொன்மையான சிற்பக்கலையின் மையமாகவும், அற்புதமான கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்களின் நகரமாகவும் விளங்குகிறது. இது உலகம் முழுவதும் உள்ள சிற்பக் கலை ஆர்வலர்களையும், வரலாற்று ஆராய்ச்சியாளர்களையும், ஆன்மிகத் தேடலர்களையும் ஈர்க்கின்றது.

More News

    Read more about: rishikesh spiti coorg
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+