Search
  • Follow NativePlanet
Share
» »ஆண்களை பெண்கள் குச்சியால் அடித்து விளையாடும் ஹோலி! அப்றம் ஆரம்பிக்கும் ஜாலி!

ஆண்களை பெண்கள் குச்சியால் அடித்து விளையாடும் ஹோலி! அப்றம் ஆரம்பிக்கும் ஜாலி!

ஆண்களை பெண்கள் குச்சியால் அடித்து விளையாடும் ஹோலி! அப்றம் ஆரம்பிக்கும் ஜாலி!

இந்த மாசம் 21ம் தேதி ஹோலி பண்டிகை வருது.. வண்ணப் பொடிகள தூவி, எண்ணங்கள் நிறைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கலந்து மகிழ்ந்து கொண்டாடறாங்கனு மட்டும் நினச்சிடாதீங்க.. ஏன்னா நீங்கள் நினைக்குற மாதிரி ஹோலி ஒரே ஒரு நாள் பண்டிகை இல்ல.. இது நிறைய வகையில ஒவ்வொரு ஊர்லயும் வேற வேற மாதிரி அவங்க மண்ணுக்கு ஏத்தமாதிரி வேற வேற நாட்கள்ல கொண்டாடப்படுது. சரி வாங்க அது பத்தி தெரிஞ்சிக்கலாம்.

வண்ணத் திருவிழா

வண்ணத் திருவிழா

வண்ணப் பொடிகள் தூவி மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் வண்ணத் திருவிழா இந்தியாவில் எல்லா இடங்களிலும் கொண்டாடப்படும். ஆனால் ஹோலி பண்டிகை உண்மையில் 7 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிடும்.

இது சுற்றுலாப் பயணிகளையும், பக்தர்களையும், புகைப்பட கலைஞர்களையும் சேர்த்தே ஈர்க்கும். அப்படி ஈர்க்கும் சமயங்களில் அந்த ஊரே திருவிழா கோலம் பூணும். நாமும் கலந்து கொண்டு சிறப்பிப்போம் வாருங்கள்.

Narender9

பர்சானா மற்றும் நந்தகன்

பர்சானா மற்றும் நந்தகன்

ராதையின் ஊர்தான் பர்சானா என்ற நம்பிக்கை பல ஆண்டுகளாகவே நிலவி வருகிறது ராதையின் சொந்த ஊரில் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். அதே நேரம் கிருஷ்ணன் தனது கிராமமான நந்தகன்னிலிருந்து ராதையை காண ஹோலிப் பண்டிகையின் போது வருவதாக நம்பிக்கை.

உண்மையான ஹோலி பண்டிகை தினத்திற்கு 7 நாட்களுக்கு முன்னதாகவே இந்த கொண்டாட்டம் தொடங்கும். லாத்மர் ஹோலி எனும் பெயரில் இங்கு விழா எடுக்கப்படும். இங்குள்ள பெண்கள் குச்சிகளால் ஆண்களை அடித்து விளையாடுவார்கள். அதன் பிறகு மகிழ்வுடன் பூசைகளைத் தொடங்குவார்கள்.

Narender9

பிருந்தாவனம்

பிருந்தாவனம்

பிருந்தாவனம்தான் கிருஷ்ணரின் அழகிய விளையாட்டுகளையும், குறும்புகளையும் கண்டதற்கான சாட்சி. பிருந்தாவன் கோவில் மாலை 4 மணிக்கு திறக்கும். பக்தர்கள் மீது பூசாரி பூக்களை தூவுவார். கிருஷ்ணரே பக்தர்கள் மீது பூ தூவி அருள் செய்ததாக நம்பிக்கை. வண்ணப் பொடிகளுக்கு பதிலாக பல்வேறு நிறங்களிலான மலர்களைத் தூவுகிறார்கள்.

பூசை நேரத்துக்கு பிறகு கலக்கி வைத்திருக்கும் வண்ணப் பொடிகளும், வண்ண நீரும் மாறி மாறி ஒருவர் மீது ஊற்றி , தூவி மகிழ்கிறார்கள்.

சொந்தங்களையும் நட்புக்களையும் கொண்டாடுகிறார்கள். பல்வேறு இசைகளுக்கு ஏற்ப நடனமாடுகிறார்கள். வண்ணத்தை கொண்டாடுகிறார்கள்.

Narender9

கோகுலில் ஹோலி

கோகுலில் ஹோலி

கூகுள் அல்ல கோகுல். இங்கு கொண்டாடப்படும் ஹோலி பண்டிகை சற்று வித்தியாசமானது. விதவைகள் எனப்படும் கைம்பெண்கள் கொண்டாடும் ஹோலி இங்கு கொண்டாடப்படுகிறது. பாகல் பாபா கோவில் என்ற ஒன்று கோகுலில் இருக்கிறது. அதாவது பைத்தியம் பாபா.

இந்த கோவிலில் கைம்பெண் பெண்களுக்கென சிறப்பாக ஹோலி கொண்டாடப்படுகிறது.

Steven Gerner

இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகைகள்

இந்தியாவில் கொண்டாடப்படும் ஹோலிப் பண்டிகைகள்

பர்சனா லத்மார் ஹோலி

நந்தகன் ஹோலி

பூலான் வாலி ஹோலி

கோகுல் ஹோலி

கைம்பெண்களின் ஹோலி

பங்கே பிஹாரி கோவிலில் சிறப்புவாய்ந்த ஹோலி

மதுராவில் கொண்டாடப்படும் ஹோலி

    Read more about: india festivals
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X