» »மும்பைக்கு அருகிலுள்ள மஹாபலேஷ்வர் மலைப்பகுதியில் அவசியம் பார்க்க வேண்டிய அழகிய இடங்கள்!!

மும்பைக்கு அருகிலுள்ள மஹாபலேஷ்வர் மலைப்பகுதியில் அவசியம் பார்க்க வேண்டிய அழகிய இடங்கள்!!

Written By: Bala Karthik

மும்பையிலிருந்து 285 கிலோமீட்டர் தொலைவில் மஹாபலேஷ்வரில் ஒரு அகன்று விரிந்த பீடபூமி காணப்பட, 150 கிலோமீட்டருக்கு பரந்து விரிந்து காணப்படுவதோடு, அனைத்து பகுதிகளும் பள்ளத்தாக்கால் மூடப்பட்டும் உள்ளது. இந்த இடத்தில் உயரமான சிகரமொன்று காணப்பட, அதன் உயரம் 1430 மீட்டர் இருப்பதோடு, இதனை 'சூரியஉதயப் புள்ளி அல்லது வில்சன்' என்றும் அழைக்கப்படுகிறது.

கிருஷ்ணா நதியின் பிறப்பிடமாக மலைப்பகுதி காணப்பட, மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம் மாநிலம் முழுவதும் இது பாய்ந்தோடுகிறது. புராணத்தின்படி, இந்த நதியின் ஆதாரமாக நந்தி சிலை வாயிலிருந்து விழும் நீரானது இருப்பதாக நம்பப்பட, பழமையான மஹாபலேஷ்வரத்தில் பண்டை காலத்து ஆலயமான மஹாதேவ் காணப்படுகிறது.

மஹாபலேஷ்வரை நாம் அடைவது எப்படி?

மஹாபலேஷ்வரை நாம் அடைவது எப்படி?

ஆகாய மார்க்கமாக செல்வது எப்படி:

அருகில் காணப்படும் விமான நிலையமாக 120 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பூனே விமான நிலையமானது அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து தில்லி, பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் என பல நகரங்களுக்கு சேவை இயக்கப்பட்டு வருகிறது.

தண்டவாள மார்க்கமாக செல்வது எப்படி:

சத்தாரா தான் அருகில் காணப்படும் ஒரு இரயில் நிலையமாக இருக்க, 55 கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது. அதோடு, மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களுடனும் இணைந்து காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக செல்வது எப்படி:

மஹாபலேஷ்வரத்தை அடைவதற்கு சிறந்த வழியாக சாலை வழி அமைகிறது. நகரமானது சாலையுடன் நன்றாக இணைந்திருக்க, பல முக்கிய நகரங்களிலிருந்தும் மஹாபலேஷ்வரத்திற்கு தினசரி பேருந்துகள் இயக்கப்படுகிறது. மும்பையிலிருந்து புறப்படும் நாம் மஹாபலேஷ்வரத்தை அடைய, ஒட்டு மொத்தமாக 263 கிலோமீட்டர்கள் ஆகிறது.

இந்த இடத்தை நாம் காண சிறந்த நேரங்கள்:

வருடமுழுவதும் நாம் பார்க்க ஏதுவாக மஹாபலேஷ்வரம் அமைய, அக்டோபர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் இந்த மலைப்பகுதியை பார்க்க சிறந்த நேரமாக அமைகிறது.

Ankur P

வழிகளின் வரைப்படம்:

வழிகளின் வரைப்படம்:

மும்பையிலிருந்து புறப்படும் நாம் மஹாபலேஷ்வரத்தை அடைய, கீழ்க்காணும் ஏதேனும் ஒரு வழியை தேர்ந்தெடுக்கலாம்.

வழி 1:

மும்பை - ரசயானி - லோனாவாலா - பிம்ப்ரி - சிஞ்ச்வாத் - பூனே - கண்டலா - வாய் - மஹாபலேஷ்வர் வழி மும்பை - பூனே நெடுஞ்சாலைவழி மற்றும் தேசிய நெடுஞ்சாலைவழி 48.

வழி 2:

மும்பை - ரசயானி - கொப்புலி - பாலி - கோலாட் - மங்கோன் - பொலாட்பூர் - மஹாபலேஷ்வர் வழி தேசிய நெடுஞ்சாலைவழி 66.

வழி 3:

மும்பை - ரசயானி - கொப்புலி - கோலாட் - மங்கோன் - பொலாட்பூர் - மஹாபலேஷ்வர் வழி தேசிய நெடுஞ்சாலைவழி 66 மற்றும் மாநில நெடுஞ்சாலைவழி 72.

நீங்கள் பயணத்திற்கான வழியாக முதல் வழியை தேர்ந்தெடுத்தால், 263 கிலோமீட்டர்கள் பயணத்தின் மூலம் மஹாபலேஷ்வரத்தை அடைய மும்பையிலிருந்து 5 மணி நேரம் ஆகிறது.

இரண்டாம் வழியை தேர்ந்தெடுத்தால், 5.5 மணி நேர பயணத்தின் மூலமாக 231 கிலோமீட்டரை தேசிய நெடுஞ்சாலை 66 இன் வழியாக கடந்து செல்ல வேண்டியுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலை வழி 66 மற்றும் மாநில நெடுஞ்சாலை 72 இன் வழியாக செல்ல 221 கிலோமீட்டரை நாம் கடக்க 6 மணி நேரங்கள் தேவைப்படுகிறது.

 பிம்ப்ரியில் சிறு நிறுத்தம் – சிஞ்ச்வாத்:

பிம்ப்ரியில் சிறு நிறுத்தம் – சிஞ்ச்வாத்:


பூனேவில் காணப்படும் புற நகர் பகுதியான பிம்ப்ரி - சிஞ்ச்வாத் முன்னால் சுதந்திரமான இடமாக சிஞ்ச்வாத், பிம்ப்ரி, நிகிடி, அகுர்டி, கலேவடி, மற்றும் போசரியில் அமைந்த ஒன்றாகும். சிஞ்ச்வாத் என்னும் பெயரானது சிஞ்ச் அல்லது புளி மற்றும் வாத் அல்லது ஆலமரம் என பொருள் தருகிறது.

மோர்யா கோசவி ஆலயத்துக்கு பெயர் பெற்ற இவ்விடம், மகாராஷ்டிராவின் அஷ்டவிநாயக ஆலயங்களுள் ஒன்றிற்கு பெயர் பெற்று விளங்குகிறது.

Udhayakumar PR

 பிம்ப்ரி – சிஞ்ச்வாத்தின் சிறு நிறுத்தங்கள்:

பிம்ப்ரி – சிஞ்ச்வாத்தின் சிறு நிறுத்தங்கள்:


ஆசியாவின் தொழிற்சாலை மையங்கள் நிறைந்த பல இடங்களுள் இதுவும் ஒன்றாக இருக்க, இன்னும் சில ஈர்க்கும் இடங்களாக ராவெத்தின் ISKCON ஆலயம், மற்றும் நிசர்ககவி பஹினாபாய் சௌத்ரி விலங்கியல் பூங்கா எனவும் காணப்பட இதனை பாம்பு பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது.

Krupasindhu Muduli

 இலக்கு: மஹாபலேஷ்வர்:

இலக்கு: மஹாபலேஷ்வர்:

சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட இந்த மஹாபலேஷ்வர் என்னும் வார்த்தைக்கு கடவுளின் பெரும் சக்தி எனப் பொருளாகும். இந்த இடமானது அழகிய காட்சியை கண்களுக்கு தர, ஆலயங்கள் மற்றும் இனிமையான கால நிலை எனவும் இயற்கை ஆர்வலர்களின் கூட்டம் மிகுதியாக காணப்படுமோர் இடமாக இது காணப்படுகிறது.

இந்த மலைப்பகுதியானது பம்பாய் ராஜதானியின் கோடை தலைநகரமாக விளங்க, பிரிட்டிஷ் ராஜ்ஜால் விட்டுசெல்லப்பட்ட கட்டிடக்கலை அமைப்புகளும் மனதில் ஆச்சரியத்தை விதைக்கிறது. மேலும், ஸ்ட்ராபெரி தோட்டங்கள் மற்றும் தேனுக்கு மஹாபலேஷ்வர் பெயர் பெற்றும் விளங்குகிறது.

Tfinc

எண்ணற்ற காட்சி புள்ளிகள்:

எண்ணற்ற காட்சி புள்ளிகள்:

இங்கே காணப்படும் ஆர்தர் இருக்கையானது அனைத்து விதமான காட்சி புள்ளிகளுக்கும் இராணியாக விளங்க, இடது புறத்தில் காணப்படும் சாவித்ரி பள்ளத்தாக்கு மனதினை நெகிழ செய்கிறது. அதோடுமட்டுமல்லாமல், ஆழமற்ற பசுமை பள்ளத்தாக்கும் வலது புறத்தில் காணப்படுகிறது.

ஆர்தர் இருக்கையின் சிறப்பம்சமாக கொங்கன் மற்றும் டெக்கான் பீடபூமியின் புவியியல் வித்தியாசத்தை நம்மால் தெளிவாக பிரித்து பார்க்க முடிகிறது.

Unknown

 இயற்கை தான் என்றுமே சிறந்தது:

இயற்கை தான் என்றுமே சிறந்தது:

எல்பின்ஸ்டோன் புள்ளியானது சிறிய கண்கொள்ளா காட்சிகள் சூழ்ந்த இடமாக அமைய, இங்கிருந்து பார்க்க பள்ளத்தாக்குடன் இணைந்த கோய்னா மற்றும் சாவித்ரி நதியும் காணப்பட, இந்த பகுதி நாம் பார்க்க வேண்டிய இடங்களுள் முக்கியமாகவும் அமைந்து பலராலும் வந்துசெல்லப்படுகிறது.

Unknown

Read more about: travel