Search
  • Follow NativePlanet
Share
» »ஊட்டி மலை ரயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ஊட்டி மலை ரயிலைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ரயில் பயணங்கள் தரும் ஆனந்ததிற்கு என்றும் அளவே கிடையாது. அலுப்போ, அவஸ்தையோ இல்லாததால் நண்பர்களுடன் பயணிக்கையில் சிரித்து மகிழவும், தனியாக பயணிக்கையில் தனிமையை ரசித்திடவும் ரயில் பயணங்கள் தான் சிறந்தவை. நீண்ட தூர பயணங்களின் போது ரயிலில் பலவிதமான மனிதர்களை சந்திக்கலாம், இதுவரை பார்த்திராத பரந்துவிரிந்த இந்திய தேசத்தின் பகுதிகளையெல்லாம் கண்டு மகிழலாம்.

உங்களுக்கு ரயிலில் பயணம் செய்வது மிகவும் பிடிக்குமெனில் இந்தியாவில் இருக்கும் மிகச்சிறந்த ரயில் பயணம் என வர்ணிக்கப்படும் நீலகிரி மலை ரயிலில் வாழ்கையில் ஒருமுறையாவது நிச்சயம் பயணம் செய்திட வேண்டும். சரி, வாருங்கள் அற்புதமான அந்த பயணத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்துகொள்வோம்.

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

மலைகளின் ராணி என்றழைக்கப்படும் ஊட்டியில் 1908ஆம் ஆண்டு ஆங்கிலேயே அரசால் துவங்கப்பட்டது தான் 'நீலகிரி எக்ஸ்பிரஸ்' எனப்படும் ஊட்டி மலை ரயில் ஆகும்.

David Brossard

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

இந்த பயணிகள் ரயிலானது கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரையிலான 46 கி.மீ தொலைவுக்கு இயக்கப்படுகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலத்தை அடைய ஏறத்தாழ 5 மணி நேரம் ஆகிறது.

David Brossard

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

இந்த நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலானது ஊட்டியை அடையும் முன்பாக மொத்தம் 11 ரயில் நிலையங்களில் நின்று செல்கிறது. இதில் குன்னூர், வெல்லிங்டன் மற்றும் அரவங்காடு ஆகியவை முக்கியமான ரயில் நிலையங்களாக இருக்கின்றன.

David Brossard

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

இந்த ரயிலானது மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவியிலும், பின் அங்கிருந்து ஊட்டி வரை டீசல் எஞ்சினாலும் இயக்கப்படுகிறது.

இங்கே பயன்படுத்தப்படும் நீராவி எஞ்சின்கள் சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள ஒரு நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஆகும்.

ram reddy

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

ஊட்டியின் உண்மையான இயற்கையழகை ரசிக்க விரும்புகிறவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகப்பெரிய பரிசாக இருக்கும்.

இந்த ரயில் பாதை நெடுகிலும் மனிதனால் தீண்டப்படாத ஊட்டியின் இயற்கை பேரழகை கண்டு லயிக்கலாம்.

B Balaji

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான ரயில்களில் ஒன்றான இந்த நீலகிரி மலை ரயிலை 2005ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பானது உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

B Balaji

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

இந்த ரயிலில் பயணிக்கும் முன்பாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான விஷயம் இது அடிக்கடி பழுதாகி பாதிவழியில் நிற்கக்கூடும் என்பது தான்.

அதுமட்டுமில்லாமல் மழை காலங்களில் நிலச்சரிவு, பாறை இடைமறிப்பது போன்றவையும் நடக்க வாய்ப்புள்ளது என்பதால் அந்த நேரத்திற்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் ஆகியவற்றை உடன் எடுத்துசெல்வது நல்லது.

Sarah Huffman

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

இந்த ரயிலில் பயணிக்க கோடை காலம் சிறந்த ஒன்றாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த சமயத்த்தில் பயணிக்க இரண்டு மாதங்கள் முன்பே ரயில் பயணச்சீட்டுகளை முன்பதிவு செய்துகொள்வது நல்லது.

Sarah Huffman

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

நீலகிரி எக்ஸ்பிரஸ் :

இந்த ரயிலில் தான் காலங்களை கடந்து நிற்கும் சில திரைப்படங்கள் படமாக்கப்பட்டிருக்கின்றன. கமலஹாசன் நடிப்பில் வெளியான 'மூன்றாம் பிறை' ஷாஹ் ருஹ்கான் நடித்த உயிரே படத்தில் வரும் 'தையா தையா' பாடல் போன்றவை நிதாஹ் ரயிலில் தான் படமாக்கப்பட்டிருக்கின்றன.

B Balaji

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X