» »திருவண்ணாமலை மர்மங்களும்! அண்ணாமலையாரின் அற்புதங்களும்!

திருவண்ணாமலை மர்மங்களும்! அண்ணாமலையாரின் அற்புதங்களும்!

Posted By: Staff

கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை கடுமையான சேதத்துக்கு உள்ளாக்கிய தானே புயல் பற்றியும், பணமதிப்பு நீக்கம் குறித்தும் முன்கூட்டியே குறிப்பால் உணர்த்தியவர் மூக்குப்பொடி சித்தர் என்று அதிர வைக்கிறார்கள் அவரின் பக்தர்கள். இவர் தற்போது திருவண்ணாமலையில் உணவகம் ஒன்றில் மாடியில் உள்ள தளத்தில் இருந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வருகிறார்.

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அவர் திடீரென திருவண்ணாமலையில் உள்ள பூபதி காபி பார் என்ற கடைக்கு வந்துள்ளார். கடையை சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே சென்றவர் திரும்பவும் கடைக்குள் வந்துள்ளார்.

இதனால் திருவண்ணாமலையில் ஏதோ குறியீடு உள்ளதாக அவரது பக்தர்கள் நம்புகின்றனர். கார்த்திகை தீபத்திருவிழாவுக்கான நாள் நெருங்கி வருகையில், இந்த சம்பவம் திருவண்ணாமலையில் பரபரப்பாக பேசப்படுகிறது.

உலகெங்கும் வாழும் தமிழர்கள் தங்கள் வீடுகளில் தீப விளக்கேற்றி ஒளி ரூபமாக எங்கும் நிறைந்திருக்கும் எல்லம் வல்ல இறைவனை வணங்கும் கார்த்திகை தீப திருவிழா இன்னும் சில வாரங்களில் கொண்டாடப்படுகிறது.  இந்த தீப திருநாளில் திருவண்ணாமலையில் ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியின் வடிவாக சிவ பெருமான் அண்ணாமலையப்பராக எழுந்தருளி காட்சிதருகிறார்.  

விஜய் படத்தில் வந்த சில அற்புதமான சுற்றுலாத்தலங்கள்

கார்த்திகை தீப திருநாளில் திருவண்ணாமலையில் ஏற்றப்படும் தீபத்தை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். தமிழ்நாட்டில் நடக்கும் மிக முக்கியமான ஆன்மீக நிகழ்வுகளில் ஒன்றாக திருவண்ணாமலை தீப திருவிழா இருக்கிறது.

இந்த பீச்சுக்கு போனா பேய் கூட வாக்கிங் போகலாமாம்? வாங்க போயித்தான் பாக்லாமே!

அதிசயங்கள் பல பொதிந்த பழமையான திருவண்ணாமலை அண்ணாமலையப்பர் கோயிலில் புதைந்திருக்கும் சில ஆச்சரியமூட்டும் உண்மைகளை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள். 

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

முடிவற்ற இந்த அண்டம் எங்கும் பஞ்ச பூதங்களின் வடிவாக சிவபெருமான் நிறைந்திருக்கிறார். அதை குறிக்கும் வகையில் இந்தியாவில் சிவபெருமானுக்கு ஐந்து பஞ்சபூத கோயில்கள் இருக்கின்றன.

காஞ்சிபுரத்தில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோயில் பூமியையும், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் நீரையும், காலஹஸ்தி கோயில் வாயுவையும், சிதம்பரம் நடராஜர் கோயில் ஆகாயத்தையும், திருவண்ணாமலைஅண்ணாமலையார் கோயில் அக்னியையும் குறிக்கின்றன.

Pandiyan V

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

திருவண்ணாமலையில் அக்னி லிங்கமாக இருக்கும் சிவ பெருமான்அண்ணாமலையார் மற்றும் அருணாச்சலேஸ்வரர் என்ற பெயர்களில் வழிபடப்படுகிறார்.

உமையாளாக பார்வதி தேவி உண்ணாமலை அம்மனாக காட்சிதருகிறார்.

Kirk Kittell

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

இக்கோயிலைப் பற்றிய முதல் வரலாற்றுக் குறிப்புகள் தேவாரத்தில் சைவக்குரவர்களான சம்பந்தர் மற்றும் அப்பர் ஆகியோரது பாடல்களில் இடம்பெற்றுள்ளன.

இப்போது நாம் பார்க்கும் கோயிலானது தமிழகத்தில் சைவம் வளர முக்கிய காரணமாயிருந்த சோழ மன்னர்களால் ஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

mr.donb

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

13ஆம் நூற்றாண்டில் சோழர்களுக்கு பின்வந்த ஹோசல்ய அரசின் தலைநகரமாகவும் திருவண்ணாமலை திகழ்ந்திருக்கிறது.

இக்கோயிலிலுள்ள கல்வெட்டுகள் படி விஜயநகர பேரரசை சேர்ந்த துளுவ வம்சத்து அரசர்களும் 15 நூற்றாண்டில் இந்தியா இதுவரை கண்ட பிரமாண்டமான ஹிந்து சாம்ராஜ்யத்தை நிறுவிய கிரிஷ்ணதேவராயர் ஆகியோரும்அண்ணாமலையார் கோயிலுக்கு கொடைகள் அளித்திருக்கின்றனர்.

Kirk Kittell

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

17ஆம் நூற்றாண்டில் முகாலாயர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தவுடன் திருவண்ணாமலையை ஆண்டுவந்த கர்நாடக நவாபின் ஆட்சியும் முடிவுக்கு வருகிறது.

அதன்பிறகு சில ஹிந்து மற்றும் இஸ்லாமிய ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இருந்த இக்கோயிலை 1757ஆம் ஆண்டு பிரஞ்சு படையினர் கைப்பற்றினர். மூன்று ஆண்டுகள் கழித்து பிரிட்டிஷ் கட்டுப்பாட்டில் வந்த இக்கோயிலை 1790ஆம் ஆண்டு திப்பு சுல்த்தான் கைப்பற்றினார்.

Renju George

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

திப்புவை தொடர்ந்து மீண்டும் பிரிட்டிஷ் வசம் வந்த திருவண்ணாமலை நகரம் சுதந்திரத்திற்கு பிறகு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் ஹிந்து சமய அறநிலையத்துறையின் பராமரிப்பின் கீழ் இயங்கி வருகிறது.

2002ஆம் ஆண்டு இங்கு ஆய்வை மேற்க்கொண்ட இந்திய அகழ்வாராய்ச்சி மையம்அண்ணாமலையார் கோயிலை தேசிய புராதன சின்னம் என்ற அங்கீகாரத்தை வழங்கியது.

Kirk Kittell

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலை என்கிற மலையின் அடிவாரத்தில் கிட்டத்தட்ட இருபத்தியைந்து ஏக்கர் பரப்பளவில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது.

வானுயர்ந்த நான்கு கோபுரங்கள் இக்கோயிலின் வாயிலை அலங்கரிக்கின்றன. கிழக்கு வாயிலில் இருக்கும் ராஜகோபுரம் மற்ற மூன்று கோபுரங்களைக் காட்டிலும் மிகப்பெரியதாகும்.

Natesh Ramasamy

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் லிங்க வடிவாக இக்கோயிலின் மூலவராக கிழக்கு நோக்கி இருக்கிறார். சிவனின் வாகனமான நந்தி அண்ணாமலையார் சந்நிதிக்கு எதிரே இருக்கிறது.

இது தவிர விஷ்ணுபகவான் வேனுகோபாலசுவாமியாக காட்சி தருகிறார். சோமாஸ்கந்தர், துர்க்கை, சந்தகேஸ்வரர், கஜலக்ஷ்மி, ஆறுமுகசுவாமி, தட்சிணாமூர்த்தி, நடராஜர் போன்றோரது சந்நிதிகளும் இங்கே உள்ளன.

Mat McDermott

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

இக்கோயில் வளாகத்தில் ஆயிரம் கால் மண்டபத்திற்கு அருகில் பாதாள லிங்கம் உள்ளது. இந்த இடத்தில் தான் ரமண மகரிஷி தவத்தில் ஈடுபட்டார் என்று சொல்லப்படுகிறது.

இதனுள் சம்பந்த விநாயகர் சந்நிதியும், முருகன் சந்நிதியும் கூட இருக்கிறது.

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

பதினாறு அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த தூண்கள் இருக்கும் தீப தரிசன மண்டபம், வசந்த மண்டபம், விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இருக்கின்றன.

இந்த தூண்களில் சிங்கத்தின் உடலும், யானையின் முகமும் கொண்ட யாளியின் சிற்பங்கள் குடையப்பட்டுள்ளன. யாளி நாயக்கர்களின் வலிமையின் அடையாளமாக கருதப்பட்டிருக்கிறது.

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி நாளன்று அண்ணாமலையார் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. அந்நாளில் திருவண்ணாமலைக்கு வரும் பக்தர்கள் அண்ணாமலையை சுற்றி 14கி.மீ கிரிவலம் செல்கின்றனர். வெறும் காலில் இப்படி கிரிவலம் செல்வதால் பிறப்பு மற்றும் இறப்பு என்பதில் இருந்து விடுதலை பெற்று முக்தியை அடையலாம் என்ற நம்பிக்கை பக்தர்களுக்கு இருக்கிறது.

Karthik Pasupathy Ramachandran

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

கார்த்திகை தீபம் தான் இக்கோயிலில் கொண்டாடப்படும் மிக முக்கிய பண்டிகை ஆகும். கார்த்திகை தீப திருநாளில் அண்ணாமலையின் மேல் மிகப்பெரிய பாத்திரம் ஒன்றில் டன் கணக்கான நெய் ஊற்றப்பட்டு தீபம் ஏற்றப்படுகிறது.

Vinoth Chandar

அண்ணாமலையார் கோயில் !!

அண்ணாமலையார் கோயில் !!

திருவண்ணாமலை

திருவண்ணாமலை ஹோட்டல்கள்

Natesh Ramasamy