» »இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

Written By: Balakarthik Balasubramanian

9500 அடி உயரத்தில் காணப்படும் மலானா கிராமத்திற்கு ஒரு சிறு பயணம் செல்வதன் மூலம், அந்த கிராமத்தின் ஒடுக்குமுறைகளை நாம் தெரிந்து கொள்ளலாம். அப்படி என்ன தான் இங்கு இருக்கிறது? வாங்க பார்க்கலாம். மலானா கிராமம், சுயமாக நிர்வகிக்கின்ற அமைப்பினை கொண்டு விளங்கும் ஒரு சிறு கிராமமாகும். இங்கு கடைப்பிடிக்கப்படும் சம்பிரதாயங்களும் மிகவும் தனித்தன்மை கொண்டு விளங்குகிறது.

இமாச்சல பிரதேசத்தில், பனிகளால் பளபளவென காட்சி அளிக்கும் சிகரங்களும், பள்ளத்தாக்குகளும், காட்சிகளை கண்களிற்கு சமர்ப்பித்து கொண்டிருக்கும் நீர் வீழ்ச்சிகளும், ஆர்வத்தினை தூண்டும் ஓடைகளின் நீரோட்டமும் நம் மனதை மட்டும் மயக்குவதல்லாமல் மதியையும் மயக்குகிறது. குறிப்பாக இத்தகைய காட்சிகள், மலானாவில் குடிகொண்டு நம் மனதை... அந்த இடத்தை விட்டு நகர விடாமல் இயற்கை அழகால் கட்டி ஈர்க்கிறது என்று நாம் கூறலாம். ஆம், 9500 அடி உயரத்தில் காணப்படும் இந்த கிராமம், சுயமாக நிர்வகிக்கும் அமைப்பினை கொண்ட ஒரு சிறிய கிராமமாக விளங்குகிறது. இங்கு நாம் காணும் வித்தியாசமான சம்பிரதாயங்களின் அனுகுமுறையும் நம்மை அன்னாந்து வியப்புடன் நோக்க வைக்கிறது.

இந்த இடத்தின் தனித்துவமான சிறப்பு, நம் மனதை ஆச்சரியபடவும் வைத்து வரலாற்றின் சிறப்பை உணர்த்துகிறது. சந்திரகானி மற்றும் தியோதிப்பா மலை சிகரம், இதற்கு பின்னணியில் அமைந்து காட்சிகளை கண்களுக்கு வழங்கி நம் மனதை குளிரூட்டுகிறது. மத்தியில் காணப்படும், பசுமையான காட்சிகளும், பனியால் ஆடை உடுத்தப்பட்ட பார்வதி பள்ளத்தாக்கும், இந்த மலானா பயணத்திற்கு மேலும் அழகு சேர்த்து நம் மனதை இயற்கையால் வருடுகிறது. மேலும் இந்த கிராமத்தில் வாழும் மக்களின் நாகரிகமும் நம் கண்ணோட்டத்தை உயர்ந்ததாக மாற்றுகிறது.

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

Bharatkaistha

இந்த பயணத்திற்கு ஏதுவானதொரு கால நிலைகள்:

தீவிர குளிர் காலத்தின் போது இந்த மலானாவை நோக்கி நாம் பயணம் செல்வது, நம்மை காட்சிகளால் கவர்ந்து, உற்சாகத்தின் எல்லையில் நின்று கூச்சலிட வைக்கிறது. மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலங்களில் நாம் பயணத்தை திட்டமிடுவோமாயின் சிறப்பான ஒரு அனுபவத்தை நமக்கு அளித்து மனதை இதமாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்று நாம் ஆணித்தரமாக கூறலாம்.

பயணத்திற்கு தேவையான அத்தியவாசிய பொருட்கள் ஒரு பார்வை:

வெது வெதுப்பான ஆடைகள், சூரிய திரைகள், சூரிய வெளிச்சத்திலிருந்து காத்துக்கொள்ள தேவைப்படும் கண்ணாடிகள், தொப்பிகள், கொசு கடியிலிருந்து நம்மை காத்து கொள்ள பயன்படும் தடுப்பான்கள், தலையில் மாட்டிக்கொள்ளும் ஒரு விளக்கு, மருந்துகள் அடங்கிய முதலுதவி பெட்டி, புகைப்படக்கருவி, கிருமி நாசினி (சோப் வகைகள்), மலை ஏற தேவைப்படும் காலணிகள், வெப்பத்தில் இருந்து காத்துக்கொள்ள ஆணியும் ஆடைகள், சிற்றுண்டிகள், வாட்டர் பாட்டில்கள் ஆகியவை நம் பயணத்திற்கு அத்தியவாசிய பொருளாக அமைந்து நம் பயணத்தின் சிரமத்தை தவிர்க்க உதவுகிறது.

அங்கு நிலவும் அசாதாரணமான சூழல், நம்மை குழப்பத்தில் ஆழ்த்த, மலைஏறும் ஆர்வலர்களின் ஆலோசனைப்படி வார விடுமுறையில் மலானாவை நோக்கி குடும்பத்துடன் செல்ல திட்டமிட, அது எங்கள் கவலையை நொடிபொழுதில் மறக்க செய்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. எங்கள் திட்டத்தின் படி, செல்ல போகும் ஒரு நாளை நோக்கி எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க, அந்த எதிர்ப்பார்ப்பு எங்கள் மனதில் பல கற்பனைகளை கப்பம் இன்றி வழங்கி, பயண நாளை நோக்கி காத்து கொண்டிருந்தது.

நாள் 1: பெங்களூரு - பூந்தார்

என் குடும்பத்துடன் பெங்களூரிலிருந்து தில்லியை நோக்கி விமானத்தின் மூலம் நான் பறந்து சென்று சேர்ந்தேன். ஆம், இரவு 7 மணிக்கு தில்லியை அடைந்த நாங்கள், மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து நிலையமாக விளங்கும் காஷ்மிரி கதவு (I.S.B.T) பகுதியிலிருந்து மீண்டும் புறப்பட்டு பேருந்தின் மூலம் மணலியினை அடைந்தோம். நாங்கள் இரவு பயணத்தின் வாயிலாக 14 மணி நேரம் பேருந்தில் செல்ல, இறுதியாக பூந்தாரினை அடைந்தோம்.

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

Biswarup Ganguly

நாள் 2: பூந்தார் - மலானா பயணம் - மலானா கிராமம் - கசோல்

இரண்டாம் நாள் காலையில் உணவை எங்கள் வயிற்று பகுதியில் நிரப்பிவிட்டு, உள்ளூர் பேருந்தின் உதவியுடன் கசோலை நோக்கி சென்று 8 கிலோமீட்டர் முன்பே அமைந்துள்ள ஜாரி கிராமத்தில் இறங்கினோம். ஜாரி கிராமம் தான், மலானாவிலிருந்து நம் பயணத்தை ஆரம்பிக்க, குறுகிய பாதையை நமக்கு விரைவில் அமைத்து தந்து பெரிதும் உதவுகிறது. இந்த ஜாரி கிராமத்திலிருந்து தனியார் டாக்சிகளின் உதவியுடன் நாம் மலானா கிராமத்தை அடையலாம். ஏன் இந்த இடத்திற்கு பேருந்துகள் இயக்கபடவில்லையா? என நீங்கள் முகம் சுளிப்பது எனக்கு தெரிகிறது... ஏன் இல்லை! இருக்கிறதே! ஒரு நிமிடம் நான் முழுவதுமாக கூறி முடித்துவிடுகிறேன்..சரியா? ஆம், கோடைக்காலத்தின் போது மட்டும் காலம் நமக்கு உதவ, ஊள்ளூர் பேருந்துகள் இந்த வழியில் இயக்கபடுகிறது. என்னங்க! மறுபடியும் உங்கள் முகம் தொங்கிவிட்டதே...20 கிலோமீட்டர் பயணத்திற்கு பிறகு உங்கள் ஏக்கத்திற்கு தீணி போடும் அற்புதம் நிறைந்த பகுதியை பற்றி நாம் பார்க்கலாமா? வாங்க போகலாம்...

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

Shepi003

ஜாரி பகுதியின், மலை மத்தியில் அமைந்திருக்கும் ஆற்றல் ஆலை, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி பயணத்திற்கான ஆற்றலையும் எகிர வைக்கிறது. நாங்கள் முன்னோக்கி செல்ல, திடீரென காணப்பட்ட கரடுமுரடான சாலைகளில் ஏறிய கார் மெதுவாக நகர, காரின் ஆற்றலை அந்த சாலை உறிஞ்சிக்கொண்டிருக்கிறது என்பதனை நம்மால் உணர முடிகிறது. அந்த 20 கிலோமீட்டரை கடக்க 2 மணி நேரங்கள் ஆக, அந்த கார் கடந்து வந்த பாதையின் கடினத்தை உங்களால் இந்நேரம் யூகித்திருக்க முடியும்? என்று நான் நம்புகிறேன். ஆம், 'காரின் ஆற்றல் மட்டும் உறிஞ்சபடவில்லை... உன்னுடைய ஆற்றலையும் தான்..' என எங்களிடம் அந்த சாலை கூற, மலானாவில் நாங்கள் கண்ட அந்த ஆற்றல் ஆலையும், பசுமை நிறைந்த மலைக்குன்றுகளும், அவ்வப்போது விழும் அருவி நீர்களும், ஓடைகளில் ஓடிய நீரின் அழகிய சத்தமும் எங்கள் மனதின் ஆற்றலை ஆனந்தம் கொண்டு அதிகரிக்க செய்தது. அங்கு சுற்றி காணப்பட்ட அடர்த்தியான தேவதாரு மரங்கள் அடங்கிய காடுகள் மலைகளை சூழ்ந்திருக்க, நீரோடைகளின் நீர்களில் படிந்திருந்த பச்சை சாயல்கள் நம் மனதினை ஒருவித சலனத்தில் தள்ளுகிறது.

மலானா பயணம்:

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

ArjunChhibber01

அப்பாடா! நாங்கள் கண்டுவிட்டோம். ஆமாம்ங்க... ஒரு வாயிலில் எழுதப்பட்ட, "மலானா கிராமத்திற்கு செல்லும் வழி" என்னும் வாசகத்தை நாங்கள் கண்டுவிட்டோம். மேலும், 4 கிலோமீட்டர் நாங்கள் முன்னோக்கி ஏறி செல்ல அந்த கிராமத்தினை அடைவோம் என்றதொரு தகவலையும் கண்டுவிட்டு களிப்புடன் பயணத்தை தொடர்ந்தோம். இருங்க... இருங்க.. ஒரு நிமிடம்...ஆமாம் ஏற ஆரம்பிக்காதிங்க. முதலில் நமக்கு தேவை நாம் வாங்கிய, பயணத்திற்கு ஏதுவான காலணிகள். ஆமாம், காலில் மாட்டியாச்சா... வாங்க இப்போ ஏறலாம்...எங்கள் பயணத்தை நாங்கள் ஏற்றம் மூலம் தொடங்க, தேவதாறு மரங்கள், எங்கள் மனதினை தூய காற்றால் வருடியது. எங்கள் பயணத்தின் சில நிமிடங்களுக்கு பிறகு, பள்ளத்தாக்கின் கீழ்புறத்தை கண்ட எங்கள் மனம், நெகிழ்ச்சியுடன் சென்றது. அதுமட்டுமா எங்கள் மனதை கவர்ந்தது...? கண்டிப்பாக இல்லைங்க...ஆமாம், நாங்கள் கண்ட மலானா அணையும் எங்கள் அமைதியை நிலை நாட்டி நெகிழ்ச்சியடைய உதவியது.

அந்த புதியதோர் பயணம், எங்களுக்கு புத்துணர்ச்சியை தர, நாங்கள் எங்களுடைய பயணத்தை நிறுத்தாமல் தொடர்ந்தோம். இருப்பினும், நாங்கள் கண்ட அந்த தேவதாறு மரங்களை கொண்ட காடுகளின் அழகினை காணும் நம் கால்கள், உற்சாகத்தில் திளைத்து சில நிமிடங்கள் அமைதியுடன் அதனை ரசித்து... அதன் பின்னே மீண்டும் நகர்கிறது. தேவதாறு மரங்களின் அழகில் நம் கால்கள் கட்டுண்டு ஓரே இடத்தில் நின்றாலும், பீறிட்டு வீசும் தூய காற்று நம்மை முன்னோக்கி இழுத்து செல்கிறது.

நாங்கள் கண்ட காட்சிகளின் அழகை ரசித்து முன்னேற, தேவதாறு மரத்தின் எரிந்த தண்டுகள், நம்மை புதியதோர் உலகிற்கு வரவேற்க, அந்த தண்டில் பொறிக்கப்பட்டிருந்த நாணயம் எங்களை நெகிழ்ச்சி கொள்ள செய்தது. நான் ஒருபோதும் அந்த தண்டினை ஊறாத ஒன்று என கூறமாட்டேன்.

மலானாவை நெருங்கிவிட்டோம் என்று நம்முடைய மனதிற்கு தெரிந்து மகிழ்ச்சியில் குதிக்க, பெருமளவில் காணப்பட்ட கஞ்சாத்தோட்டத்தின் அணிவகுப்பு... எங்கள் மனதில் போதையை ஏற்றி அழகால் மயக்கியது. அந்த நீண்ட தோட்டத்தை கடந்து செல்லும் நம் கால்கள், இறுதியாக பெரும் பரவசத்தை உள்ளடக்கிய மலானா கிராமத்தை அடைந்தது.

மலானா கிராமம்:

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

Travelling Slacker

அப்படி என்ன தாங்க இங்க இருக்கு? இங்க உள்ள வீடுகள், 2 அல்லது 3 மாடிகளை அடுக்கி நம் மனதை கவர்ந்து ஆள்கிறது. அட இது என்ன அதிசயம்...! இப்போதான் 10 மாடிகள் கூட கட்டப்படுகிறதே என நீங்கள் மனதில் நினைப்பது எனக்கு புரிகிறது. ஆனால், மலையில் 2 அல்லது 3 மாடிகள் கட்டப்பட்டு பயமின்றி வாழ்வது என்பது கடினமான ஒன்றுதான் அல்லவா? இப்பொழுது சொல்லுங்கள் பார்க்கலாம்...இந்த மாடி வீடுகள் மரத்தாலும் கற்களாலும் கட்டப்பட்டிருப்பது, இந்த இடத்தின் அழகை மேலும் மெருகூட்டுகிறது. கி.மு 326ற்கு முன்பு வாழ்ந்த அலெக்சாண்டரின் நாகரிக தன்மையை இவர்கள் கடைப்பிடிப்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. கனாஷியை தாய்மொழியாக கொண்ட இந்த மக்கள் பேசும் மொழி, அண்டை கிராம மக்களால் கூட புரிந்துக்கொள்ள இயலாத ஒன்றாக இருக்கிறது. அதனால் வெளி ஆட்கள் இங்கு வருவதும் பழகுவதும் என்பது கடினமான ஒன்றாக இருப்பதால் இந்த கிராமத்திற்கு வரும் வெளியாட்களின் புழக்கம் தவிர்க்கபடுகிறது.
இருப்பினும் இங்குள்ள உள்ளூர் மக்களால் மலானாவின் ஸ்பெஷலான கஞ்சா பறிமாற்றம், நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி அன்னாந்து பார்க்க வைக்கிறது. இது அவர்களின் தொழில் வள திறமையையும் நமக்கு உணர்த்தி நம்மை நெகிழ்ச்சி கொள்ள செய்கிறது. ஆமாங்க, இந்த கிராமம், எதுக்கு ஸ்பெஷலோ இல்லையோ! கஞ்சாசெடி மரங்களுக்கு ரொம்பவே ஸ்பெஷல் என சொல்லும்போதே நமக்கு லேசாக தலை சுற்றுகிறது. இருப்பினும் இது அரசால் விலக்கப்பட்ட ஒரு வியாபாரம் என்பதால், 'மலானா கீரீம்' என்ற ஒன்றின் மூலமாகவும் கசகசா என்னும் வாசனை திரவியத்தினை விற்பதன் மூலமாகவும் இலாபத்தை ஈட்டுகின்றனர் என்பது அவர்கள் தொழில் திறமையை நமக்கு உணர்த்துகிறது. இங்கு நம் மக்கள் வந்து செல்கிறார்களோ இல்லையோ? ஆனால், வெளிநாட்டவர்கள் வந்து செல்வது அதிகமாகவே இருக்கிறது.

morisius cosmonaut

இங்குள்ள பண்டைய மரக்கோவில்களில் காணப்படும் சிற்பம், நம் உடம்பை சிலிர்க்க செய்கிறது. இனத்தின் அடையாளமாக விளங்கும் இந்த கோயில்களையோ வீடுகளையோ 'இங்கு வருபவர்கள் தொடக்கூடாது' என்னும் வாசகத்தின் மூலம், இந்த இடங்களின் பாரம்பரியத்தின் பெருமை நம் கண்களுக்கு பளிச்சென்று மின்னுவது தெரிகிறது. ஆலயங்களின் வெளிச்சுவற்றில் அலங்கரிக்கப்பட்ட விலங்குகளின் எழும்புகளும், மண்டை ஓடுகளும், கொம்புகளும் நம்மை வெகுவாக கவர்கிறது. இங்கு விற்கப்படும் உணவுகள் எளிய முறையில் இருப்பதோடு விலையும் அதிகம் கொண்டே விற்கப்படுகிறது. இருப்பினும், இங்குள்ள உள்ளூர் மக்களால் தரப்படும் உணவை பற்றியோ, நிலப்பரப்பில் காணும் நீரினை, நாம் கொண்டு செல்லும் பாட்டில்கள் மூலம் நிரப்பி கொள்வதனை பற்றியோ, எந்த ஒரு புகாரும் யாராலும் தரப்படுவதில்லை.

இந்த நாளின் இறுதியில் மீண்டும் நாங்கள் பயணத்தின் ஆரம்ப புள்ளிக்கே வந்து சேர்ந்தோம். ஆம், கசோலை அடைந்த நாங்கள், அங்கு எங்கள் இரவு பொழுதை, பயணம் முடிவுக்கு வந்ததொரு ஏக்கத்துடன் களித்தோம்.

நாள் 3: கசோல் - மனிகரன்

இதுவரை மலைக் கிராமத்துக்கு போயிருக்கீங்களா? வாங்க இப்போ கூட்டிட்டு போறோம்!!

Raahul95

மூன்றாம் நாளின் காலை பொழுதில் உணவை முடித்துவிட்டு மனிகரன் புறப்பட்ட நாங்கள், அங்கு பிரசித்திபெற்ற குருத்வாராவை கண்டோம். அங்கே ஊற்றுகளில் இருந்து விழும், வெதுவெதுப்பான நீரை பிடிக்கும் நம் கரங்கள், ஆச்சரியத்தின் எல்லைக்கே செல்கிறது. அங்கிருந்து பேருந்தின் மூலம் ஏக்கத்துடன் பூந்தாரை அடைந்த நாங்கள், பெங்களூருக்கு மீண்டும் நினைவுகளை சுமந்து பறந்து சென்றோம்.

நாங்கள் கண்ட அந்த கிராமத்தின் அழகு எங்களை வெகுவாக கவர்ந்து ஆச்சரியத்தில் ஆழ்த்த, மலைமுகடுகளின் இடையில் மனதினை தொலைத்தோம். அந்த கிராம மக்களின் வாழ்க்கை எங்களை ஏக்கத்தில் தள்ளி, அன்றாட எங்கள் இயந்திர வாழ்க்கையை வெறுக்க வைத்தது என்று தான் கூற வேண்டும். இருக்காதா என்ன! தாய் பூமியில் அமைதியை காண்பது என்பது இப்பொழுதெல்லாம் மிகவும் அரிதாகிவிட்டதே! என்ன செய்வது? அதேபோல் இந்த மலானாவின் மக்கள் வாழும் வடக்கு பகுதி, நம்முள் ஏற்படுத்தும் தாக்கம்... கொஞ்சம் கூட குறையாமல் நம் மனதினை ஆட்சி செய்ய, மீண்டும் இன்னொரு முறை இங்கு வர வேண்டுமென்றே செல்வோருக்கு தோன்றுகிறது. நாங்களும் அதே ஏக்கத்துடன் வீடு வந்து சேர்ந்தோம்.

Read more about: travel