» »அளவில்லாத ஆழம் கொண்ட அற்புத நீர்வீழ்ச்சி எங்கு தெரியுமா?

அளவில்லாத ஆழம் கொண்ட அற்புத நீர்வீழ்ச்சி எங்கு தெரியுமா?

Posted By: Udhaya

மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் அமைந்துள்ளது இந்த பாதாள் பானி. 

இந்தூர் நகரத்திலிருந்து 36 கிமீ தொலைவில் அமைந்துள்ள 300 அடி உயரமுள்ள அற்புதமான நீர்வீழ்ச்சி தான் பாதாள் பானி!

இந்நீர்வீழ்ச்சியின் உயரம் 300 அடியாக இருந்தாலும், இந்த தண்ணீர் விழுந்து கீழே உருவாகியுள்ள பள்ளத்தின் அளவு இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

புராணக்கதைகளில் இந்நீர்வீழ்ச்சி பூமியின் அடிப்பகுதி வரையிலும் நீண்டு செல்கிறது என்று பொருள் படும் வகையில் 'பாதாள்' என்று அழைக்கப்பட்டு இப்பொழுதைய பெயரையும் பெற்றிருக்கிறது.

வெப்பமான கோடைக்காலங்களில் இந்நீர்வீழ்ச்சி முழுமையாக வறண்டு விடும். அந்த சமயத்தில் இந்நீர்வீழ்ச்சியை உருவாக்கும் ஓடையானது, சிறு சிறு துளியாக வடிந்து கொண்டிருக்கும்.

ராஜ் வாடா

ராஜ் வாடா

 • இந்தூரில் உள்ள வரலாற்று முக்கியமான இடமாகும்.
 • இது மராத்திய மன்னர்களான ஓல்கர்களால் கட்டபட்ட அரண்மனையாகும்.
 • இது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும்.
 • இந்தூர் ரயில் நிலையத்திலிருந்து 6 நிமிடத்தில் செல்லும் அளவுக்கு குறைந்த தூரத்திலேயே உள்ளது இந்த ராஜ்வாடா. (1.6 கிமீ)

Bernard Gagnon

லால் பாக் மாளிகை

லால் பாக் மாளிகை


 • லால் பாக் மாளிகை மாமன்னர் சிவாஜி ராவ் ஹோல்கரால் 1886 - 1921 ம் காலக்கட்டத்தில் இந்தூரில் கட்டப்பட்டது.
 • இதன் நுழைவுவாயில் லண்டனில் உள்ள பக்கிங் காம் மாளிகையை ஒத்தது.
 • இது 28 ஏக்கர் நிலப்பரப்பில் அழகிய ரோஜா தோட்டத்துடன் பரந்துள்ளது.
 • இந்த மாளிகையினுள் அழகிய ஓவியங்கள், கண்கவரும் வண்ணங்களில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 • இந்தூர் ரயில் நிலையத்திலிருந்து 10 நிமிடத்தொலைவில் அமைந்துள்ளது இந்த மாளிகை.

Axel Drainville

இந்தூர் அருங்காட்சியகம்

இந்தூர் அருங்காட்சியகம்

 • இந்தூர் அருங்காட்சியகம் அமர்கண்டக் எனும் பகுதியில் அமைந்துள்ளது.
 • இதன் அருகிலுள்ள விமான நிலையம் ஜபல்பூர் இது 245 கிமீ தொலைவில் உள்ளது. பேருந்து மற்றும் கட்டண ஊர்திகள் வசதி உள்ளது.
 • ரயில் நிலையம் 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

mr8_maverick

அன்னபுரம் கோயில்

அன்னபுரம் கோயில்

 • இந்தூர் ரயில் நிலையத்திலிருந்து 5 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த அன்னபுரம் கோயில்.
 • வெறும் 15 நிமிடத்தில் அடையும் அளவுக்கு அருகில் அமைந்துள்ளது.
 • அடிக்கடி பேருந்து வசதிகளும் , தானி(ஆட்டோ) வசதிகளும் உள்ளன.
 கிருஷ்ணபுரம் கோயில்

கிருஷ்ணபுரம் கோயில்

 • இது இந்தூர் நகரத்தில் அமைந்துள்ளது. மல்வா பகுதியை ஆண்ட ஹோல்கர்கள் உருவாக்கிய கோட்டை இதுவாகும்.
 • இந்தூர் விமான நிலையத்திலிருந்து எளிதில் அடையலாம்.
 • பென்ட்ரா சாலை ரயில் நிலையம் 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

madhya-pradesh-tourism.

மயாங் நீல நீர் பூங்கா

மயாங் நீல நீர் பூங்கா

 • இது ஒரு கேளிக்கை பூங்கா (amusement park) ஆகும்.
 • இது இந்தூர் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
 • பேருந்து, மகிழுந்து (கார்), தானி (ஆட்டோ) வசதிகள் உள்ளன.

பிஜாசன் மாதா கோயில்

பிஜாசன் மாதா கோயில்


 • இந்தூர் ரயில் நிலையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
காந்தி மண்டபம்

காந்தி மண்டபம்

இந்தூர் ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில்தான் உள்ளது இந்த காந்தி ஹால்.

kapilkripa

கமலா நேரு விலங்குகள் பூங்கா

கமலா நேரு விலங்குகள் பூங்கா


 • இது ஒரு உயிரியல் பூங்கா ஆகும். இது இந்தூர் நகராட்சியால் கட்டுப்படுத்தப்படுகிறது.
 • இது மத்திய பிரதேச மாநிலத்தின் மிக பெரிய உயிரியல் பூங்கா ஆகும்.
 • இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட 180 பூங்காக்களில் இதுவும் ஒன்று
 • இங்கு இமாலய கரடி, வங்கப் புலி, வெள்ளை மயில் ஆகியன காணப்படுகின்றன.

அருகிலுள்ள பிற இடங்கள்

அருகிலுள்ள பிற இடங்கள்

 • இங்கு மேலும் காஜ்ரானா கணேஷ் மந்திர், வாஜ்பாய் பூங்கா, அனுமான் மந்திர், மெகதூத் தோட்டம், ராணி சதி வாயில், புக்ராஜ் மாளிகை,
 • மலை மற்றும் தேசியப் பூங்கா, சூர்யா மந்திர்
 • போன்ற கட்டாயம் காணவேண்டிய சில இடங்களும் உள்ளன.
 • இந்தூர் மொத்தத்தில் ஒரு மலைக்கவைக்கும் மகா பிரதேசம் இந்த மத்திய பிரதேசம்.

தொடர்ந்து இணைந்திருங்கள் தமிழ் நேட்டிவ் பிளானட்

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

Read more about: travel, picnic, tour