» » பஞ்ச பாண்டவர்களின் குகை... கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள்!

பஞ்ச பாண்டவர்களின் குகை... கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள்!

Posted By: Udhaya

மகாபாரதத்தில் வரும் பஞ்சபாண்டவர்களை பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்கள். அவர்கள் வாழ்ந்த இடங்களை பற்றி தெரிந்துவைத்துள்ளீர்களா?

மத்தியப்பிரதேசத்தில் உள்ள ராய்சன் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பீமேட்கா குகைகள் 3 லட்சம் ஆண்டுகள் பழமையானது.

இந்த குகைகள் கற்காலத்தின் தொடக்கத்தினை குறிப்பதோடு, இங்கிருந்து கண்டறியப்பட்ட மனிதச் சுவடுகள்தான் இந்தியாவிலேயே பழமையானவையாக கருதப்படுகின்றன.

இந்த குகைகள் வரலாற்றுக்கு முந்தைய (தற்போது இந்தியா என்றழைக்கப்படும் பழைய தேசங்கள்) மனித வாழ்க்கையை அறிய உதவும் தடயங்களாக திகழ்கின்றன.

இங்கு காணப்படும் 30, 000 ஆண்டுகள் பழமையான 'பாலியோலித்திக்' வகை ஓவியங்கள் அக்கால மக்களின் வேட்டை, நடனம் மற்றும் அவர்களின் பல்வேறு வாழ்க்கை முறையை எடுத்துச்சொல்லும் விதமாக இன்றும் நம்மிடையே இருக்கன்றன.

பீம்பேட்கா என்றால் பீமன் அமர்ந்த இடம் என்பது பொருளாகும். அதாவது மகாபாரத காலத்தில் பாண்டவர்களில் ஒருவனான பீமன் இங்கு அமர்ந்ததால் இந்த குகைகளுக்கு இப்பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

வரலாறு சொல்லும் ஆமைப்பாறை

வரலாறு சொல்லும் ஆமைப்பாறை

பல்லாயிரம் ஆண்டுகளாக காற்றிலும், மழையிலும் கிடந்து இயற்கையாக ஒரு ஆமையின் வடிவத்தில் காட்சி தரும் பாறை.

PC : Surohit

ஸ்பெயினுடன் பாண்டவர்களுக்கு என்ன தொடர்பு?

ஸ்பெயினுடன் பாண்டவர்களுக்கு என்ன தொடர்பு?


வி.எஸ். வாகன்கர் என்பவர் 1957-ஆம் ஆண்டு ரயிலில் போபால் செல்லும்போது பீம்பேட்கா பாறை வடிவங்களை கண்டு அவை ஸ்பெயின் மற்றும் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள சில பாறை அமைப்புகளோடு ஒத்துப்போவதை

Pc: Nikhil2789

மனிதனை வேட்டையாடும் மிருகம்

மனிதனை வேட்டையாடும் மிருகம்

பீம்பேட்கா குகைகளில் எண்ணற்ற வேட்டை ஓவியங்கள் காணப்பட்டாலும் அவை யாவும் மனிதன் ஆயுதங்கள் கொண்டு வேட்டையாடுவதை காட்சிப்படுத்தும் வேளையில, இந்த ஓவியம் மட்டுமே மனிதனை மிருகம் வேட்டையாடும் காட்சியை காட்டுகிறது.

படம் : Raveesh Vyas

யுனெஸ்கோவின் பெருமிதம்

யுனெஸ்கோவின் பெருமிதம்


பீம்பேட்கா குகைகள் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படம் : Nikhil2789

அந்த காலத்திலேயே சிறந்து விளங்கிய கலை

அந்த காலத்திலேயே சிறந்து விளங்கிய கலை

பீம்பேட்கா குகைகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வாழ்ந்த ஆதிமனிதனின் தோற்றத்தை ஒத்த சிலை தற்போது வடிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

படம் : Nandanupadhyay

பாண்டவர்களும், எலும்புக்கூடுகளும்!

பாண்டவர்களும், எலும்புக்கூடுகளும்!

மஹாபாரத காலத்தில் பாண்டவர்கள் பீம்பேட்கா குகைகளில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இங்கு ஒருமுறை நடைபெற்ற தொல்லியல் ஆராய்ச்சியில் 6000 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

படம் : Raveesh Vyas

Read more about: travel, பயணம்