Search
  • Follow NativePlanet
Share
» »நீங்கள் ரஹ்மானின் இசைப்பிரியரென்றால் கண்டுபிடியுங்கள் பாக்கலாம் இவை எந்தெந்த இடங்கள் என்று?

நீங்கள் ரஹ்மானின் இசைப்பிரியரென்றால் கண்டுபிடியுங்கள் பாக்கலாம் இவை எந்தெந்த இடங்கள் என்று?

இசைப்புயல் இசையமைத்த பாடல்களில் வரும் இந்த இடங்களை உங்களுக்கு தெரியுமா.. தெரிந்தால் ஒவ்வொன்றாக சரியாக கூறுங்களேன்.

By Udhaya

ஆஸ்கார் நாயகன்... ஓர் இந்தியத் தமிழன் ... ஏஆர் ரஹ்மானின் 50 வது பிறந்தநாள் இன்று. அவரின் சாதனைகள் இசை உலகு மட்டுமின்றி, பொது வெளியிலும், இந்தியர் ஒவ்வொருவரையும் பெருமையடையச் செய்யும்.

மற்ற இசையமைப்பாளர்களின் இசைக்கு நாம் ஆடுவோம் என்றால், ரஹ்மானின் இசைக்கு பாடலே ஆட்டம் போடும். அந்த அளவுக்கு மெல்லிசை, மேற்கத்தியஇசை, இந்திய இசை என்று கலந்து ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்வதில் ஞானி இந்த ரஹ்மான்.

பயணக்கட்டுரையாக இன்று நாம் அவரின் இசையால் மெருகேற்றிய பாடல்களையும், அவை படம்பிடிக்கப்பட்ட இடங்களையும் காணலாம்.

ரஹ்மானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு....

சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம்

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்னும் பாடலில் முதலில் சென்னை உயர்நீதிமன்றத்தைக் காண்பிப்பார்கள். அதில் பிரபுதேவா பெண்கள் அணியும் உடையில் வந்து மகளிர் பேருந்தில் ஏறுவார்.

ஹைரபா ஹைரபா எனுமாறு மென்மையாகத் தொடங்கும் பாடல் திடீரென வேகமெடுக்கத் தொடங்கி, மேற்கத்திய இசையில் ராக்கெட்டாக முன்னேறும்.

இந்த பாடல் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவானது. காதலன் படத்தில் இசையமைத்திருந்த ரஹ்மான் அந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பின்னி எடுத்திருப்பார்.

PC: Roasconnoisseur

பெரம்பூர் - பெசண்ட்நகர்

பெரம்பூர் - பெசண்ட்நகர்

முதல் காட்சியின் தொடர்ச்சியில் காட்டப்படும் பேருந்து பெரம்பூர் முதல் பெசன்ட்நகர் வரை செல்லும் பேருந்தாகும். இந்த பேருந்தில்தான் பாடல் தொடங்கும். துவங்கும்போதே, இசையில் நனைய வைத்து, நமக்குள் ஒரு ஆட்டத்தை தூண்டிவிடுவதில் வல்லவர் ரஹ்மான்.

வாய் வழியே வரும் சத்தங்களை, இசையுடன் கலந்து நம்மை மெய் மறக்கச் செய்வதில் ரஹ்மானுக்கு நிகர் அவரேதான்.

அண்ணா மேம்பாலம்

அண்ணா மேம்பாலம்

காதலன் படத்தில் வரும் அதே பாடலில், பேருந்துகள் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும்.

பிரபுதேவா, வடிவேலு மற்றும் மற்ற கலைஞர்கள் அனைவரும் பேருந்தின் மேற்புறத்தில் நிற்பதாகவும், பேருந்து இந்த மேம்பாலத்தை கடப்பது போலவும் காட்சியமைக்கப்பட்டிருக்கும்.

இந்த இடத்தில் வரும் இசையை கவனித்திருந்தால் தெரியும் அந்த வயலின் இசையை வாய் வலி இசையுடன் எப்படி இணைத்திருப்பார் என்று. ரஹ்மான் என்றுமே ஒரு சகாப்தம்தான்.....

PC: Balasubramanian

 நேப்பியர் பாலம்

நேப்பியர் பாலம்

ஆய்தஎழுத்து படத்தில் நேப்பியர் பாலத்தை காட்டியிருப்பர். ஏ ஆர் ரஹ்மான் இசை படம் முழுவதும் பேசப்பட்டிருக்கும். அதிலும் நெஞ்சமெல்லாம் காதல் பாடல் அவ்வளவு அருமையாக இருக்கும்.

மேற்கத்திய இசையில் ஒரு கவிதையை தந்திருப்பார் ரஹ்மான். படம் சராசரியாக இருந்தாலும் இந்த படத்தின் இசை மிகவும் பேசப்பட்டது.

நேப்பியர் பாலம் சுற்றுலாத் தலமாக கருதப்படாவிட்டாலும், நீங்கள் சென்னைக்கு வந்து தவறாமல் காணவேண்டிய ஒன்றாக குறிப்பிடப்படும் இடங்களில் இதுவும் ஒன்றாக திகழ்கிறது.

PC: Ravichandar84

ஸ்பென்சர் பிளாசா

ஸ்பென்சர் பிளாசா


எனக்கொரு கேர்ள் பிரெண்ட் வேணுமடா.... பாய்ஸ் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை ஸ்பென்சர் பிளாசாவில் படமாக்கியிருப்பர்.

படம் முழுக்க பின்னணி இசையில் வெளுத்துவாங்கியிருப்பார்கள். இந்த படம் வெளியான 2003ஆம் ஆண்டு இந்த பாடல் தான் பலரின் ரிங்க்டோனாக இருந்தது என்றால் யாராலும் மறுக்க இயலாது. ஏஆர் ரஹ்மானின் மந்திர இசையால் நம்மை கட்டுப்படுத்தியிருப்பார்.

PC: L.Vivian.richard

நேரு ஸ்டேடியம் கொச்சி

நேரு ஸ்டேடியம் கொச்சி


பாய்ஸ் படத்தில் வரும் மாரோ மாரோ எனும் மற்றொரு பாடல் கொச்சியில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் படமாக்கப்பட்டது.

இந்த காட்சியில், சோனி டிவி சிஇஓவை கன்வைன்ஸ் செய்வதற்காக கதாநாயகனும் அவரது நண்பர்களும் முயற்சிப்பார்கள். அப்போது அரங்கமே அதிர ஒரு இசை அணிவகுப்பையே நடத்திவிடுவார் ரஹ்மான்.

மாரோ மாரோ என்ற அந்த பாடல் இப்போது கேட்டீர்களானால் நீங்கள் ஒரு விசயம் கவனிக்கவேண்டும். கிரிக்கெட் அரங்கத்திலிருந்து வெளியே வரும் முதல் காட்சியில் பாடல் சற்று அமைதியாகி பின் இசை சூறாவளி வரும் அந்த இடத்தை கவனியுங்கள்... ரஹ்மானை இன்றே காதலிக்கத் தொடங்கிவிடுவீர்கள்... ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நம்மை ஆட்டம் போட வைக்கும் இசையை தந்திருப்பார் ரஹ்மான்.

 மெரினா கடற்கரை

மெரினா கடற்கரை


யாரைக் கேட்டு எந்தன் நெஞ்சில் இடப்பக்கம் என்று ஒரு பாடல் வரும். பாய்ஸ் அனைவரும் அவர்களின் கேர்ள் பிரண்ட்ஸை தங்கள் காதலை ஏற்க சொல்ல, அதற்கு அவர்கள் அது தேவையில்லை, நண்பர்களாக இருப்போம் என்றொரு பாணியில் பதிலுக்கு பாடுவார்கள்.

இந்த இடத்தில் இசையை வைத்து கபடி கபடி ஆடியிருப்பார். நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும். கபடி கபடி என்ற குரல் கேட்கும், கூடவே பின்னணியில் பாடகர்கள் பாடிக்கொண்டிருப்பார்கள்..

மேலும், பரதநாட்டியத்தை நீச்சல் உடையில் பெண்கள் ஆடியது போல வரும் காட்சியில், மேற்கத்திய இசையில், கர்நாடக இசையை இணைத்து ஆங்கில கர்நாடிக் இசை ஒன்றை உருவாக்கியிருப்பார் ரஹ்மான்.

இந்த பாடல் முழுவதும் சென்னை சுற்றியுள்ள கடற்கரைகளில் படமாக்கப்பட்டிருக்கும்.

மும்பை ரயில் நிலையம்

மும்பை ரயில் நிலையம்


மும்பையின் பிரதான ரயில் நிலையமான மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் எடுக்கப்பட்ட ஜெய் ஹோ பாடல் உலகப்பிரபலம்..

இந்த பாடலை ஏ ஆர் ரஹ்மான் தனது இசையால் ஆக்கிரமித்திருப்பார். தனது பாணியான மெல்லிய இசையில் அணுகுண்டை சொருகி ஆட்டம்போட வைப்பது போல இந்த பாடலிலும் தினுசு தினுசாக இசையை வளைத்து நெளித்து ஆட்டம் போட வைத்திருப்பார்.

PC: Joe ravi

More News

    Read more about: travel பயணம்
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+