Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!

சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை உத்தண்டியில் அமைந்துள்ள பெருமாளின் தசவதாரங்களில் முதல் அவதாரமான மத்ஸ்ய அவதார கோவில் மிகவும் தனித்துவமாகவும், அழகுடனும், அமைதியுடனும் கானப்படுக்கிறது. இங்கு ஒரு முறை சென்றால் போதும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நீங்கள் கட்டாயம் செல்வீர்கள்.

இந்த இடத்திற்கு சென்று வந்தால் மன நிம்மதி, சந்தோஷம், ஆத்ம திருப்தியுடன் கடவுளின் ஆசீர்வாதமும் கிடைக்கின்றது மக்களே! மிகவும் அழகிய சூழலுக்குள் அமைந்திருக்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில் அனைவரும் கட்டாயம் பார்க்க்க வேண்டிய இடமாகும். ஏன் என்று சொல்லுகிறேன் வாருங்கள்!

சென்னை உத்தண்டியில் அமைந்துள்ள வித்தியாசாமான கோயில்

சென்னை உத்தண்டியில் அமைந்துள்ள வித்தியாசாமான கோயில்

இந்த புதுமையான மத்ஸ்ய நாராயணன் கோவில் சென்னையிலிருந்து மகாபலிபுரம் செல்லும் ECR சாலையில் உத்தண்டியில் அமைந்துள்ளது. இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு சின்மயா மிஷனுக்கு தானமாக கொடுக்கப்பட்ட இடத்தில் தான் அன்பர் ஒருவரால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. இது பாரம்பரியக் கோவிலைப் போன்று கோபுரம் மற்றும்விமானம் வைத்து கட்டப்படவில்லை. இது ஒரு திறந்த வெளி (open to sky) கோயிலாகும். இங்கு பிரதிர்ஷ்டை செய்யப்பட்டுள்ள மத்ஸ்ய நாராயண பெருமாள் ஒரு சிறு குளத்தின் நடுவே நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.

ஒரு இடத்தில் பல கடவுள்களின் சன்னதிகள்

ஒரு இடத்தில் பல கடவுள்களின் சன்னதிகள்

கீதாசாரத்தில் அர்ஜுனருக்கு உபதேசம் செய்யும் கிருஷ்ணர் முகப்பிலேயே நம்மை வரவேற்கிறார். முழுமுதற் கடவுளான விநாயக பெருமானை வழிபட்டுவிட்டு நாம் மத்ஸ்ய நாராயணனை தரிசிக்க செல்லலாம். ஒரே கிரானைட் கல்லால் செதுக்க்கப்பட்டுள்ள பகவான் மத்ஸ்ய நாராயணர் பார்ப்பதற்க்கு சற்றே திருவல்லிக்கேணி பார்த்தசாரதியை போன்று இருக்கிறார். மேலே மனித ரூபமும் கீழே மத்ஸ்ய ரூபமும் கொண்டு பகவான் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். ராமர், லட்சுமணர், சீதா பிராட்டி மற்றும் அனுமன் திருவுருவங்கள், முருகப்பெருமான் திருவுருவம், பகவான் ஸ்ரீ கிருஷ்ணின் திருவுருவம் ஆகியவையும் காணப்படுகின்றன.

மிகவும் தனித்துவமான மத்ஸ்ய நாராயண பெருமாள்

மிகவும் தனித்துவமான மத்ஸ்ய நாராயண பெருமாள்

மத்ஸ்ய நாராயணனுக்கு அருகிலேயே விஷ்ணுவுக்கும் லட்சுமி தேவிக்கும் ஒரு சிறு சன்னதி அமைந்துள்ளது. ஆஞ்சநேய பெருமான் மத்ஸ்ய நாராயணனை நோக்கி கை கூப்பியவாறு காட்சி தருகிறார். ஆதி பரம்பொருளான சிவபெருமானும் இங்கு நமுக்கு அருள் பாலிக்கிறார். மத்ஸ்ய நாராயணனை சுற்றி ஏழு அடி உயரத்திற்கு 108 தூண்கள் அமைந்துள்ளன. அந்த தூண்களில் நாராயணனின் 1008 நாமாவளிகள் தமிழ், சமஸ்கிருதம் மற்றும் ஆங்கில மொழிகளில் பொறிக்கப்பட்டுள்ளது.

புத்துணர்ச்சி அளிக்கும் சுற்றுப்புறம்

புத்துணர்ச்சி அளிக்கும் சுற்றுப்புறம்

இந்த கோவிலை சுற்றி வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று சாதாரண சுற்றுப் பாதை, இரண்டாவது கூழாங்கற்களை வைத்து அமைக்கப்பட்ட பாதையாகும். இந்த இரண்டாவது வழியில் நடந்து செல்வது உடலுக்கு அக்கு ப்ரஷர் (Accu pressure) மூலம் புத்துணர்ச்சியை அளிக்கிறது. கடல் காற்று, சுற்றிலும் அமைதி, அழகிய மேடை என இந்த முழு இடமும் மிகவும் ரம்மியமாக இருக்கிறது.

காசியை போலவே ஆரத்தி

காசியை போலவே ஆரத்தி

தெய்வத்தை தரிசித்துக் கொண்டே நாம் இங்கு தியானத்திலும் ஈடுபடலாம். அது இங்கு மிகவும் விசேஷமாகும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இங்கு சமுத்திர ஆரத்தி எடுக்கப்படுகிறது. அது பார்ப்பதற்கு காசியில் நடைபெறும் கங்கா ஆரத்தி போலவே இருக்கிறது. இதைக் காண உள்ளூர் மக்களும், அதிகப்படியான பக்தர்களும் இங்கு ஒன்று கூடுகின்றனர்.

கோயில் திறந்திருக்கும் நேரம்

கோயில் திறந்திருக்கும் நேரம்

சின்மயா தரங்கிணி மத்ஸ்ய நாராயணன் கோவில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 6.௦௦ மணி முதல் 1௦.௦௦ மணி வரையிலும் மாலை 5.௦௦ மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்து இருக்கும். வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் காலை 6.௦௦ மணி முதல் 11.௦௦ மணி வரையிலும் மாலை 4.௦௦ மணி முதல் 9.00 மணி வரையிலும் திறந்து இருக்கிறது. இரவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்படும் கோயில் மனதை கொள்ளையடிக்கிறது.

எப்படி செல்வது

எப்படி செல்வது

ECR சாலையில் அமைந்திருக்கும் உத்தண்டியில் இருந்து இடதுபுறமாக செல்ல வேண்டும். பின் ராஜாஜி சாலைக்குள் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் சாலை முடிவில் இருக்கும் இந்த அழகிய கோயிலை அடைந்திடலாம். கோயிலுக்கு அருகாமையிலே கடற்கரை அமைந்திருப்பது கூடுதல் விசேஷமாகும். கோயிலில் நன்கு நேரம் செலவிட்டப்பிறகு அருகிலேயே அமைந்துள்ள உத்தண்டி கடற்கரைக்கு செல்லுங்கள். கடற்கரையில் சற்று நேரம் செலவிடுங்கள்.

சென்னைக்கு உள்ளேயே அமைந்திருக்கும் இந்த வித்தியாசாமான கோவில் குழந்தைகளுக்கும் குடும்பத்தினருக்கும் மிகவும் பிடிக்கும். இந்த அருமையான கோயிலுக்கு நீங்கள் எப்போது செல்ல போகிறீர்கள்?

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X