Search
  • Follow NativePlanet
Share
» »குருஷேத்ர போர் முடிந்து பார்த்தசாரதி இங்குதான் சென்றாராம்!

குருஷேத்ர போர் முடிந்து பார்த்தசாரதி இங்குதான் சென்றாராம்!

குருஷேத்ர போர் முடிந்து பார்த்தசாரதி இங்குதான் சென்றாராம்!

குருஷேத்திர போரில் தேர் ஓட்டியாக வந்த பகவான் விஷ்ணு, போர் முடிந்ததும் ஒரு அழகிய கலாச்சாரம் மிக்க, கோவில்களும் திருவிழாக்களும் நிகழும் ஊருக்கு சென்றதாக கூறப்படுகிறது. அது கேரளத்தில் இருக்கும் இந்த ஊர்தான் என்கின்றனர் இந்த ஊர் மக்கள். பத்தனம் திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அழகிய கலாச்சாரம் நிறைந்த ஊருக்கு ஒரு பயணம் செல்வோமா?

அடூர்

அடூர்


பத்தனம் திட்டா மாவட்டத்தின் இரு நிர்வாக வட்டங்களில் ஒன்றாக திகழும் அடூருக்குத்தான் கிருஷ்ணர் சென்றுள்ளார் என்பது இந்த மக்களின் நம்பிக்கை.

அடூர் இயற்கை எழில் கொஞ்சும், அழகிய கலைகள் நிறைந்த ஒரு ஊர் என்பதில் அங்கு சுற்றுலா சென்று யாவர்க்கும் மாற்று கருத்து இருக்காது. சரி வாருங்கள் அடூருக்கு சென்று அழகிய இடங்களையும், ஆன்மீகத்தையும் அனுபவிப்போம்.

Saatvik.Jacob

 விமானம் மூலம் செல்வோம்

விமானம் மூலம் செல்வோம்

விமானத்தில் பயணிக்க நினைப்பவர்களா நீங்கள். அப்போது அடூருக்கு விமானத்தில் செல்ல அருகிலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு பயணிக்கவேண்டும். அங்கிருந்து வாடகை வண்டிகள் மூலம் செல்லமுடியும்.

அடூரிலிருந்து திருவனந்தபுரம் 74 கிமீ தூரத்தில் அமைந்து இருக்கின்றது.

wiki

ரயிலில் பயணிக்கலாம் வாங்க

ரயிலில் பயணிக்கலாம் வாங்க

அழகிய ரயில் பயணத்துக்கான தருணம் இது. வாருங்கள் உங்கள் பகுதியிலிருந்து ரயிலில் பயணித்து அடூரை அடைய சிறப்பான வழிகள் இருக்கின்றன.

அடூருக்கு அருகிலுள்ள ரயில் நிலையம் என்றால் அது குரி. அடூரிலிருந்து 17 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த குரி.

அல்லது 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள கொட்டாரக்கரையிலும் இறங்கி அடூரை அடைய முடியும்.

Saatvik.Jacob

பேருந்து அல்லது வண்டிகள் மூலம் பயணிக்க

பேருந்து அல்லது வண்டிகள் மூலம் பயணிக்க


அருகிலுள்ள திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி உள்ளிட்ட இடங்களிலிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

சுய வாகனத்தில் பயணிக்க விரும்பினால், திருவனந்தபுரத்திலிருந்து சென்றால், கொல்லத்திலிருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

புனலூரிலிருந்து 30 கிமீ தொலைவிலும், பத்தனம்திட்டாவிலிருந்து 18கிமீ தொலைவிலும், செங்கனூரிலிருந்து 26 கிமீ தொலைவிலும் இந்த அடூரை அடைய முடியும்.

அடூரில் காணவேண்டிய இடங்கள்

அடூரில் காணவேண்டிய இடங்கள்

அடூர் முழுக்க முழுக்க கோவில்களால் நிறைந்து காணப்படுகிறது.

அருள்மிகு பார்த்தசாரதி கோவில்,

திருச்சென்ட மங்களம் மகாதேவ கோவில்,

சென்னப்பள்ளி தர்மசாஸ்தா கோவில்

பாட்டுப்புரக்கல் தேவி கோவில்

புதங்கவில் பகவதி கோவில்

நாராயண புரம் மகாவிஷ்ணு கோவில்

மகாலிங்கேஸ்வரா கோவில்

இப்படி பல கோவில்கள் இங்கு காணப்படுகின்றன. இதனாலேயே குருஷேத்ர போருக்கு பின் பகவான் இந்த ஊருக்கு வருகை தந்தார் என்று நம்பப்படுகிறது.

மற்ற சுற்றுலா தலங்கள்

மற்ற சுற்றுலா தலங்கள்


அடூர் நகரத்தின் பிரபலமான கிறிஸ்தவ தேவாலயங்களாக செயின்ட் ஜார்ஜ் ஆர்தோடக்ஸ் மற்றும் செயின்ட் மேரிஸ் ஆர்தோடக்ஸ் சிரியன் கத்தீட்ரல் தேவாலயங்கள் அறியப்படுகின்றன. அடூர் நகரில் அமைந்துள்ள மூலம் மார்கெட் கேரளாவின் பழமையான அங்காடிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்த மார்கெட்டுக்கு நீங்கள் வரும் போது இதுவரை கண்டிராத புது வித ஷாப்பிங் அனுபவத்தை கண்டிப்பாக உணர்வீர்கள்.

Saatvik.Jacob

தசவடராச்சர்டு திருவிழா

தசவடராச்சர்டு திருவிழா


அடூர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மனன்களா எனும் சிறிய கிராமத்தில் ஸ்ரீநாராயணபுரம் மஹாவிஷ்ணு கோயில் அமைந்திருக்கிறது.

பல ஆண்டுகள் தொன்மை வாய்ந்த கோயில் விஷ்ணு பகவானுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநாராயணபுரம் மஹாவிஷ்ணு கோயிலில் தசவடராச்சர்டு எனும் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடைபெறுவதோடு, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். அப்போது விஷ்ணு பகவானின் தசாவதாரங்களுக்கும் தனித்தனியாக ஒவ்வொரு நாளும் வழிபாடு நடத்தப்படும்.

Wiki

திரிச்செண்டே மங்களம் மகாதேவா கோயில்

திரிச்செண்டே மங்களம் மகாதேவா கோயில்

அடூர் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிங்கநாடு எனும் சிறிய கிராமத்தில் திரிச்செண்டே மங்களம் மகாதேவா கோயில் அமைந்திருக்கிறது.

திரிச்செண்டே மங்களம் மகாதேவா கோயிலில் ஆண்டு தோறும் கெட்டுக்காழச்சா எனும் திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படும். அப்போது ஏராளமான பக்தர்களும், பயணிகளும் கோயிலை தேடி படையெடுத்து வருவது போல் பேரார்வத்துடன் வருவார்கள்.

திருவிழாவின் தொடர்ச்சியாக நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக செல்வார்கள். அந்த சமயத்தில் மாபெரும் மரத்தேர் ஒன்றும், காளை ஒன்றும் பக்தர்களால் இழுத்துச் செல்லப்படும்.

அடூரைச் சுற்றி அமைந்திருக்கும் கோவில்களைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு சொடுக்கவும்

Sandeep pranavam

Read more about: temples kerala
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X