» »பஞ்சாப்பில் ஒரு சாகசப் பயணம் செல்வோமா?

பஞ்சாப்பில் ஒரு சாகசப் பயணம் செல்வோமா?

Written By:

இந்தியாவில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகர்களில் ஒன்றான சண்டிகர் பஞ்சாப் மாநிலத்தின் தலைநகராக உள்ளது. இந்த நகரத்தின் கலாச்சாரம் மற்றும் நாகரிக வாழ்க்கை முறை போன்றவை இந்தியா முழுமைக்கும் பிரசித்தி பெற்றுள்ளன. கம்பீரமான அரண்மனைகள், கோயில்கள், சன்னதிகள் மற்றும் வரலாற்று யுத்தங்கள் நடந்த ஸ்தலங்கள் என்று பல்வேறு அம்சங்கள் இந்த நகரை ஒரு முக்கியமான சுற்றுலாத்தலமாக மாற்றியுள்ளன. இது தவிர ஃபரித்கோட், ஜலந்தர், கபுர்தலா, லுதியானா, பதான்கோட், பாடியாலா, மொஹாலி போன்ற பல முக்கியமான நகரங்களும் பஞ்சாப் மாநிலத்திலுள்ள சுற்றுலாத்தலங்களாக புகழ் பெற்றுள்ளன. ஒவ்வொரு நகரமும் ஒவ்வொரு விதமான சிறப்பம்சங்களோடு பஞ்சாப் மாநிலத்தில் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த அம்சங்கள் பஞ்சாப் மாநிலத்தின் எல்லா சுற்றுலா சுவராசியங்களிலும் அடித்தளமாக அமைந்திருக்கின்றன. இங்கு கோபிந்த்கர் கோட்டை, கிலா முபாரக், ஷீஷ் மஹால், ஜகஜித் அரண்மனை போன்ற வரலாற்று சின்னங்கள் கடந்து போன உன்னத காலங்களின் தடயங்களாக இங்கு வீற்றிருக்கின்றன. இவை தவிர அட்டாரி பார்டர், ஆம் காஸ் பாக், பரதாரி தோட்டப்பூங்கா, தக்காத் இ அக்பரி, ஜாலியன் வாலா பாக் மற்றும் ரௌஸா ஷரீஃப் போன்ற முக்கியமான அம்சங்களும் பஞ்சாபில் அவசியம் பார்க்க வேண்டியவையாகும். இங்கு சாகச பயணம் ஒன்று சென்றால் எப்படி இருக்கும்?

ஹரிகே சதுப்புநிலம்

ஹரிகே சதுப்புநிலம்


ஹரிகே சதுப்புநிலம் ஃபெரோஸ்பூர் அம்ரிஸ்டர் எல்லையில் 86சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. 1999ல் வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இதில் விஜியான், ஷொவெல்லார், டீல், பின்டெயில் மற்றும் பிராமினி வாத்து ஆகிய பறவைகள் வருகின்றன.


எப்போது செல்லலாம்

அக்டோபர் முதல் பிப்ரவரி உள்ளிட்ட காலங்களில் இந்த இடத்துக்கு செல்வது சிறப்பு. மேலும் கோடைக்காலங்களில் இங்கு அவ்வளவு அருமையாக இல்லாவிட்டாலும், சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இங்குள்ள உயிரினங்களைக் கண்டு ரசித்து செல்கின்றனர்.

எவை எவை காணப்படுகின்றன

7 வகையான ஆமைகளும், 26வகையான மீன்களும் இங்குள்ள குளத்தில் காணப்படுகின்றன. அதுமட்டுமின்றி இந்திய காட்டுப்பன்றி, காட்டுப் பூனை,குள்ளநரி, மங்கூஸ் ஆகியவையும் இங்கு காணப்படுகின்றன.

மீன் வகைகளான ரோகு, கட்லா, சன்னா, சித்தலா, புன்டின்ஸ், சிப்ரின்ஸ், ஆம்பஸிஸ் என நிறைய காணப்படுகின்றன.

பறவைகள்

பனிக்காலங்களில் இங்கு வந்து பாருங்கள் எக்கச்சக்க பறவைகள் இங்கு வந்து குவியும். உங்களைக் காண அவைகளும், அவைகளை காண நீங்களும் கூடும் இடமாகும். இருநூறு வகை உயிர் பறவைகள் இங்கு கூடும். 45 ஆயிரம் வாத்துகள் இங்கு வாழ்கின்றன. நீங்கள் இவற்றை பக்கத்தில் பார்த்து ரசிக்கவேண்டுமானால் பைனார்குலரை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

நகரங்களிலிருந்து இணைப்பு

அமிர்தசரஸிலிருந்து 59கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த இடத்துக்கு தேநெ எ 15ல் பயணித்து சென்றடையலாம். பெராஸ்பூரிலிருந்து மாநில நெடுஞ்சாலை 20 மற்றும் தே நெ 15 வழியாக பயணித்தால் 66கிமீ தொலைவிலுள்ள ஹரிகேவை அடையலாம். கபுர்தலாவிருந்து 69 கிமீ தூரத்திலும், லூதியானாவிலிருந்து 108கிமீ தூரத்திலும் அமைந்துள்ளது இந்த இடம்.

டெல்லியிலிருந்து 434 கிமீ தூரத்திலும், மும்பையிலிருந்து 1680 கிமீ தூரத்தில் இந்த பகுதி உள்ளது.

எப்படி செல்லலாம்

அருகிலுள்ள விமான நிலையம் - அமிர்தசரஸ் 60 கிமீ தூரம்

அருகிலுள்ள ரயில் நிலையம் - அமிர்தசரஸ் 60 கிமீ தூரம்

சாலை வழியாக செல்வதென்றாலும் அமிர்தசரஸிலிருந்து செல்வததுதான் சிறந்தது.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

ஹரிக்கே ஏரி மற்றும் பறவைகள் சரணாலயம் ஆகியவை நிச்சயமாக நல்ல சுற்றுலாவாக அமையும். சாகசம் விரும்புவோர் இங்கு செல்லலாம்.

இங்கிருந்து அமிர்தசரஸ் நகரம் அருகிலுள்ளது இங்கு பல சுற்றுலா அம்சங்கள் காணப்படுகின்றன.

பயணிகள் கவனத்துக்கு - இங்கு அனுமதி கட்டணம் என்று எதும் இல்லை

Jaypee

 சக் சர்கார்

சக் சர்கார்


சக் சர்கார் என்ற அடர்ந்த வனப்பகுதி மும்டோட் கிராமத்திற்கு அருகில் உள்ளது. 1953ல் பஞ்சாப் அரசு இதை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்தது. இந்த வனப்பகுதியில் சில இடங்களில் செயற்கை காடுகளை உருவாக்கி அரசே பராமரித்தும் வருகிறது.

wikipedia.org

அபோஹர் வனவுயிர் சரணாலயம்

அபோஹர் வனவுயிர் சரணாலயம்

இயற்கை மிக உச்சமான அழகில் தோற்றமளிக்கும் இந்த இடம் 2000ஆண்டில் 1972 வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. பிஷ்னோய் மக்கள் உள்ள 13கிராமங்கள் இதன்கீழ் வருகின்றன. பலவகையான மிருகங்கள் இங்கு உள்ளன. கருப்பு பக் மான்கள் இங்கு சுதந்திரமாக உலாவுகின்றன. அவை மட்டுமின்றி முள்ளம்பன்றிகள், நீல்கை, காட்டுப்பன்றிகளும் இங்கு உள்ளன.

உயிரினங்கள்

காட்டு பன்றி, நீலநிற காளை, முள்ளம்பன்றி, ஹரே, ஜாக்கல் மற்றும் கருப்பு வாத்து ஆகியன இங்கு காணப்படும் உயிரினங்கள் ஆகும்.

எப்போது செல்லலாம்

அபோகர் காட்டுயிர் சரணாலயம் அக்டோபர் முதல் மார்ச் வரையுள்ள காலக்கட்டங்களில் செல்ல சிறந்த இடமாகும். இந்த காலங்களில்தான் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகிறார்கள்.

எப்படி செல்வது

இது பஞ்சாபின் முக்கிய நகரங்களிலிருந்து சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள், டாக்ஸிக்கள், கார்கள் மூலம் எளிதில் சென்றடையலாம்.

Diliff

டைகர் சவாரி

டைகர் சவாரி

ஜிடி சாலையில் லூதியானாவில் இருந்து 6கிமீ தொலைவில் உள்ள இந்த இடம் 25ஏக்கர் பரப்பில் உள்ளது. புலிகள், முயல்கள், ப்ளாக் பக்ஸ், சம்பார் மான்கள், மயில்கள் என பலவகையான விலங்குகளை இங்கு காணலாம்.

திங்கள் தவிர மற்ற அனைத்து நாளும் சஃபாரி திறந்திருக்கிறது. டைகர் சஃபாரி, ஹார்டிஸ் வர்ல்டு, ரஞ்சித் சிங் அருங்காட்சியகம் ஆகிய இடங்களை பயணிகள் அடுத்தடுத்து காணும் வகையில் பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளலாம்.

Koshyk

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்