Search
  • Follow NativePlanet
Share
» »அத்வானி பெயருக்கு இப்படி ஒரு களங்கமா? சுற்றுலாப் பிரியர்களே!

அத்வானி பெயருக்கு இப்படி ஒரு களங்கமா? சுற்றுலாப் பிரியர்களே!

அத்வானி பெயருக்கு இப்படி ஒரு களங்கமா? சுற்றுலாப் பிரியர்களே!

By Udhay

அத்வானி என்றவுடன் நீங்கள் பாஜக தலைவர் அத்வானி எல் கே வை நினைத்திருந்தால், வருந்துகிறோம். நாங்கள் சொல்லவருவது உத்தரகண்ட் மாநிலம் பவுரியிலிருந்து அருகிலுள்ள சுற்றுலாத் தளமான அத்வானி. ஆம். அத்வானிக்கு என்ன ஆச்சு.. அப்படி என்ன களங்கள் என்பதை தொடர்ந்து பார்க்கலாம் வாருங்கள்.

எங்குள்ளது ?

எங்குள்ளது ?

பவுரியிலிருந்து 17 கிமீ தொலைவில் அத்வானி என்ற ஒரு அழகிய சுற்றுலாத் தலம் அமைந்திருக்கிறது. இது அருகிலுள்ள மற்ற சுற்றுலாத் தளங்களைப் போலவே மிகவும் அழகாகவும், சுற்றுலா அம்சங்கள் நிறைந்தும் காணப்படுகிறது.

Fowler&fowler

 விடுதியும் ரசனைகளும்

விடுதியும் ரசனைகளும்

அத்வானி பகுதி முழுவதும் பசுமை காடுகளால் சூழப்பட்டிருக்கிறது. மேலும் இந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்குவதற்கான ஒரு விடுதியும் உள்ளதால், இந்த விடுதியில் சுற்றுலா பயணிகள் தங்கி இந்த பகுதியை கண்டு ரசிக்கலாம். மேலும் பவுரியிலிருந்து இந்த பகுதிக்கு சாலைப் போக்குவரத்து வசதியும் உண்டு.

ஆனால் இப்படி அழகான சுற்றுலா தளத்தில் சுற்றுலா பயணிகள் சிலர் விரும்பத்தகாத நிகழ்வுகளை நிகழ்த்தி இந்த இடத்தின் பெயரை களங்கப்படுத்தி வருகின்றனர் என பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. இது மட்டுமில்லாமல் இந்தியாவின் பல சுற்றுலாத் தளங்கள் இப்படி பெயர் மழுங்கடிக்கப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி போயிருக்கிறது.

Goldi.negi

வெப்பநிலையும் காலச் சூழலும்

வெப்பநிலையும் காலச் சூழலும்

இங்கு பெரும்பாலும் வெப்பம் குறைவாகவே காணப்படும். தற்போது 23 டிகிரி செல்சியஸ் வரை காணப்படுகிறது. மழைக்காலங்களில் இன்னும் வெப்பம் குறைந்து காணப்படும். குளிர்காலங்களைப் பற்றி சொல்லவேத் தேவையில்லை.

Goldi.negi

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கிர்சு - பவுரியிலிருந்து 19 கிமீ தொலைவில் இருக்கும் கிர்சு ஒரு மிக முக்கிய சுற்றுலாத் தலமாகும். இந்த கிர்சு மத்திய இமயமலைச் சிகரங்களின் இயற்கைக் காட்சிகளை அள்ளித் தருகிறது.

கொண்டோலியா ஆலயம் - பவுரி நகருக்கு 2 கிமீ தொலைவில் கொண்டோலியா ஆலயம் அமைந்திருக்கிறது. பவுரி நகரின் பூமி தேவதையான கொண்டோலியா தேவதைக்கு இந்த ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம் - பவுரியில் மிகவும் பிரபலமான ஆலயமாக கியுன்களீஸ்வர் மகாதேவ் ஆலயம் உள்ளது. அந்த ஆலயம் கிபி 8 ஆம் நூற்றாண்டில் ஆதி சங்கராச்சாரியா அவர்களால் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தில் சிவபெருமான வீற்றிருந்து தனது பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்.

ஜவல்ப தேவி ஆலயம் - பவுரி பகுதியில் இருக்கும் இன்னுமொரு முக்கிய ஆலயம் ஜவல்ப தேவி ஆலயமாகும். இந்த ஆலயம் பவுரியிலிருந்து 34 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது. நவாலிகா என்ற ஆற்றின் இடது கரையில் அமைந்திருக்கும் இந்த ஆலயம் 350 மீ பரப்பளவைக் கொண்டது.

itznaval

Read more about: travel
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X