Search
  • Follow NativePlanet
Share
» »கேரள கோவிலை காக்கும் புதிய சைவ முதலை – அனந்தபுரா ஸ்ரீ ஆனந்தபத்பநாபசுவாமி கோவிலில் அதிசயம்!

கேரள கோவிலை காக்கும் புதிய சைவ முதலை – அனந்தபுரா ஸ்ரீ ஆனந்தபத்பநாபசுவாமி கோவிலில் அதிசயம்!

தலைப்பை படித்த உடனே சற்று ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா! ஆனால் அது உண்மைதான். கேரளாவில் உள்ள ஸ்ரீ அனந்தபுரா கோவில் குளத்தில் பபியா என்ற காவல் முதலை ஒன்று இருந்தது, பக்கத்தில் இருக்கும் மனிதர்களைக் கூட தீண்டாமல் கோவிலில் வழங்கப்படும் அரிசி, வெல்லம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வாழ்ந்து கொண்டு கோவிலை பாதுகாத்து வந்த பபியாவின் மறைவுக்கு பிறகு, இப்போது ஒரு புது முதலை கோவிலில் வட்டமிட ஆரம்பித்துள்ளது!

கேரள கோவிலில் அதிசயம்

உலகின் மிக மூர்க்கமான, இறைச்சி உண்ணும் உயிரினம் சைவ உணவில் உயிர்வாழ்வதை உங்களால் கற்பனை செய்ய முடியுமா? கேரளாவின் காசர்கோடு மாவட்டத்தின் அனந்தபுரா என்ற கிராமத்தில் உள்ள ஸ்ரீ அனந்தபுர கோவில் வளாகத்தில் உள்ள புனித குளத்தை ஒட்டிய குகையில் சைவ முதலை இந்த அதிசயத்தை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பபியா என்ற சைவ முதலை இந்த கோவிலில் வலம் வந்துள்ளது.

vegetariancrocodileinkeralatemple

பிரசாதம், அரிசி, வெல்லம் மட்டுமே இதன் மெனு

கோவில் குளத்தில் போதுமான மீன்கள் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்கள் இருந்தாலும், பபியா சைவ உணவுகளை மட்டுமே உண்டு வாழ்ந்து வந்தது. கருவறையில் உள்ள சுவாமிக்கு படைக்கப்படும் பிரசாதங்களும், அரிசியும், வெல்லமும் மட்டுமே பபியாவின் மெனு ஆகும். புனித நீரில் நீராடும் பூசாரிகளுடன் குளத்தை பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நட்பாக உள்ளது. பபியா யாரையும் தாக்கியதில்லை என்பதுதான் உண்மை. கோவிலுக்கு வரும் பக்தர்களும் இதன் அருகில் அமரலாம், உணவு கொடுத்து வந்தார்கள்.

சொல் பேச்சு கேட்டு வந்த பபியா

கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த இந்த காவல் முதலை, சில நேரங்களில் கோவில் சன்னிதானத்திற்குள் முதலை மெதுவாக ஊர்ந்து வருமாம். அங்கு மக்கள் கூட்டம் இருந்தால், அர்ச்சகர் அதை உடனே குளத்திற்கு திரும்புமாறு கேட்டுக் கொள்கிறார். அதுவும் உடனே அமைதியாக திரும்பி சென்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது. மீதி நேரத்தில் இது கோவிலுக்குள் ஊர்ந்து சென்றதை பொது மக்களும் வியந்து பார்த்துள்ளனர்.

அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தி சென்ற பபியா

இப்படி எல்லோருடனும் அன்பாக பழகி வந்த பபியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இறந்து விட்டது. காசர்கோடு மாவட்டத்தில் உள்ள மக்கள் திரளாக வந்து பபியாவுக்கு அஞ்சலி செலுத்தினர். கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்து அனைவராலும் விரும்பப்படும் சைவ முதலையான பபியா இறந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

புதிய முதலை உதயம்

ஒரு முதலை இறந்தால், மற்றொரு முதலை தவிர்க்க முடியாமல் ஏரியில் தோன்றும். மேலும் இந்த விவரிக்க முடியாத நிகழ்வு தொடரும் என்பது நம்பிக்கை. கோயில் வளாகத்தில் சுற்றித் திரிந்து அனைவராலும் விரும்பப்படும் சைவ முதலையான பபியா இறந்து ஒரு வருடம் கழித்து இந்த புதிய முதலை உதயமாகியுள்ளது. இருப்பினும், கோயிலுக்கு அருகில் ஒரு புதிய முதலை மர்மமான முறையில் தோன்றியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மூன்றாவது முதலை இதுவாம்

கோயில் ஏரியில் பாரம்பரியமாக ஒரு முதலை வசிப்பதாக இணையதளம் மேலும் கூறுகிறது. அங்குள்ள முதியோர்களின் கூற்றுப்படி, கோவிலில் பார்த்த மூன்றாவது முதலைதான் புதிய முதலை. மேலும், அனந்தபத்மநாப ஸ்வாமி கோவிலில் முதலைகள் தோன்றுவது உண்மையில் ஒரு மர்மமான நிகழ்வு இன்றும் தொடரும் இனியும் தொடரும் என்று கூறப்படுகிறது. ஆனால் இன்னும் புதிய முதலை கோவிலுக்குள் வர ஆரம்பிக்கவில்லை. கூடிய விரைவில் அந்த அதிசயம் நடக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More News

    Read more about: kerala travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+