Search
  • Follow NativePlanet
Share
» »வெள்ளம் என்ன...கடலையே குடித்த அகத்தியர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்

வெள்ளம் என்ன...கடலையே குடித்த அகத்தியர் கோயிலுக்கு செல்லலாம் வாருங்கள்

By Super Admin

விடாது பெய்யும் மழையில் தத்தளிக்கிறது சென்னை. உதவிகள் பல செய்ய மனமும், பலமும் இருந்தும் வெளியூர்களில் இருக்கும் பலரால் பிரார்த்தனை மட்டுமே செய்ய முடியும் என்ற நிலையில் இருக்கின்றனர். மழை வேண்டி யாகம் செய்த காலம் போய் மழை நிற்க இறைவனை வேண்டும் நேரம் வரும் என்று நம்மில் ஒருவரும் கனவில் கூட நினைத்திருக்க மாட்டோம்.

நம்ம தமிழ் மக்கள் எங்கெல்லாம் வசிக்கிறாங்க என்பது உங்களுக்கு தெரியுமா??நம்ம தமிழ் மக்கள் எங்கெல்லாம் வசிக்கிறாங்க என்பது உங்களுக்கு தெரியுமா??

இப்படிப்பட்ட கடுமையான சூழலில் வெள்ளம் என்ன ஒரு கடலையே குடித்த தமிழ் மாமுனிவரான அகத்தியரை பற்றியும் அவருக்கு தமிழகத்தில் இருக்கும் கோயில்கள் பற்றியும் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?

அகத்தியர் வரலாறு

அகத்தியர் வரலாறு

முன்னொரு காலத்தில் தாரகன் முதலான அரக்கர்கள் பூமியில் வாழும் மக்களையும் வானுலகில் வாழும் தேவர்களையும் பெரும் துன்பத்திற்கு ஆளாக்கியிருக்கின்றனர். இவர்களின் அட்டகாசத்திற்கு முடிவு கட்ட இந்திரன், வாயு, அக்கினி முதலானோர் பூமிக்கு வந்திருக்கின்றனர்.

இந்திரனின் யோசனைப்படி வாயுவும், அக்கினியும் இணைந்து அகத்தியராய் மண்ணுலகில் அவதரித்திருக்கின்றனர்.

அகத்தியர் வரலாறு

அகத்தியர் வரலாறு

அகத்தியர் எங்கே தம்மை அழித்துவிடுவாரோ என்ற பயத்தில் தாரகன் முதலான அரக்கர்கள் கடலுக்குள் சென்று ஒளிந்துகொண்டனர்.

இதைக்கண்டு அசராத அகத்திய முனிவர் ஒரு மொத்த சமுத்திரத்தையும் குடித்து நீரை வற்றிப்போகச் செய்து அரக்கர்களை வதம் செய்துள்ளார்.

அகத்தியர் வரலாறு

அகத்தியர் வரலாறு

அகத்தியர் ஏழு சப்த ரிஷிகளுள் ஒருவராகவும், பதினெட்டு சித்தர்களுள் முதன்மையானவராகவும் திகழ்கிறார்.

சிவன்-பார்வதி திருமணத்தை காண பூமியில் வாழும் எல்லா முனிவர்களும், ரிஷிகளும் கயிலாயம் சென்றுவிட பூமியின் எடை ஒருபக்கமாக அதிகரித்து அதன் சமநிலையை இழந்தது. இதை சரி செய்யும் பொருட்டு சிவபெருமானின் ஆணைக்கு இணங்க தென்னகம் வந்து பூமி சமநிலையடைய உதவியிருக்கிறார் அகத்தியர்.

அகத்தியர் வரலாறு

அகத்தியர் வரலாறு

சிவ பெருமானிடம் இருந்து தமிழ் மொழியை கற்றவர் என்றும் அகத்தியம் என்ற முதல் தமிழ் இலக்கண நூலை எழுதியவர் என்றும் அகத்தியர் அறியப்படுகிறார்.

காலத்தால் தொல்காப்பியருக்கே மூத்தவரான அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற நூல் காலத்தால் அழிந்துபோயிருக்கிறது.

குறுமுனி, மாமுனி, முதல் சித்தர், அமர முனிவன் போன்ற பெயர்களால் விளிக்கப்படும் அகத்தியருக்கு தமிழகத்தில் சில கோயில்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அகத்திய மலை

அகத்திய மலை

அகத்திய முனிவர் வாழ்ந்ததாக சொல்லப்படும் அகத்திய மலையின் மேல் அவருக்கு ஒரு சிறிய கோயில் இருக்கிறது. அகத்தியர் பக்தர்களால் புனித ஸ்தலமாக போற்றப்படும் இந்த மலையானது தமிழக கேரள எல்லையில் நெய்யாறு காப்பகத்தின் ஒரு பகுதியில் இருக்கிறது.

அகத்திய மலை

அகத்திய மலை

கடல் மட்டத்தில் இருந்து 1868.மீ உயரத்தில் இருக்கும் இந்த பொதிகை மலையில் இருந்து தான் தாமிரபரணி ஆறு உற்பத்தியாகி திருநெல்வேலி மாவட்டத்தின் ஊடாக பாய்கிறது.

பல செங்குத்தான பாதைகள், ஓடைகள் போன்றவற்றை கடந்து இந்த மலையில் திட்டத்தட்ட மூன்று நாட்கள் நடந்தால் தான் அகத்தியர் கோயிலை அடைய முடியும்.

இந்த பயணத்தின் போது வழியில் பக்தர்கள் தங்குவதற்காக கேம்ப்கள் இருக்கின்றன.

அகத்திய மலை

அகத்திய மலை

அகத்தியர் கோயிலை அடைந்த பிறகு பக்தர்கள் தாங்கள் கொண்டுவந்திருக்கும் பூசைப் பொருட்களை கொண்டு அகத்தியருக்கு அலங்காரம் செய்து வழிபடுகின்றனர்.

இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமில்லாது கேரளத்தில் இருந்தும் பக்தர்கள் ஜனவரி முதல் மே மாதம் வரை வருகை தருகின்றனர்.

அகத்திய மலை

அகத்திய மலை

வெளியுலகத்தோடு முற்றிலும் தொடர்பற்று, மூலிகைகள் நிறைந்த அடர்ந்த வனத்தின் ஊடாக, கடினமான மலைப்பாதைகளில் பயணம் செய்வது உடலுக்கும், மனதுக்கும் மிகுந்த புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும்.

அகத்திய மலையில் சில அற்புதமான புகைபப்டங்களை அடுத்தடுத்த பக்கங்களில் காண்போம் வாருங்கள்.

Varkey Parakkal

அகத்திய மலை

அகத்திய மலை

அகத்திய மலையில் இருக்கும் அகத்தியர் கோயிலில் பூஜையில் ஈடுபடும் பக்தர்கள்.

Ajaykuyiloor

அகத்திய மலை

அகத்திய மலை

மேகங்கள் சூழ்ந்திருக்கும் எழில் மிகு அகத்திய மலை.

Rakesh

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்

அகத்திய மலைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் இருக்கும் பிரசித்திபெற்ற அகத்தியர் கோயிலென்றால் அது காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்திருக்கும் அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில் தான்.

திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற புண்ணிய ஸ்தலமாக இந்த அகத்தீஸ்வரர் கோயில் திகழ்கிறது.

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்

இக்கோயிலின் மூலவராக சிவ பெருமான் அகத்தீஸ்வரராக வீற்றிருக்கிறார். உமையாளாக பார்வதி தேவி மங்கை நாயகியாக எழுந்தருளியிருக்கிறார்.

முன்பே சொன்னது போல சிவன்-பார்வதி திருக்கல்யாணத்தின் போது புவியின் எடையை சமநிலை படுத்துவதற்காக தென்னகம் வந்துவிட்ட அகத்தியருக்கு இக்கோயில் இருக்கும் இடத்தில் தான் சிவபெருமான் பார்வதியுடன் தோன்றி காட்சியளித்ததாக சொல்லப்படுகிறது.

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்

இக்கோயிலில் அகத்திய முனிவருக்கும் தனி சந்நிதி இருக்கிறது. வன்னி மரம் மற்றும் அகத்தி மரம் ஆகியவை இக்கோயில் தல விருட்சங்கள் ஆகும்.

இந்த கோயிலில் இருக்கும் அக்கினி தீர்த்தம் மற்றும் அகத்திய தீர்த்தத்தில் குளித்தால் தீராத நோய்களும் குணமாகும் என்று நம்பப்படுகிறது.

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்

அகத்தியான்பள்ளி அகத்தீசுவரர் கோயில்

இந்த பெருமழை ஓய்ந்த பிறகு என்றேனும் ஒருநாள் முடிந்தால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் இரண்டு அகத்தியர் கோயில்களுக்கும் சென்ற வாருங்கள்.

தமிழகத்தில் அகத்தியருக்கு இருக்கும் கோயில்கள் பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் அவற்றையும் இங்கே பகிர்ந்திடுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X