இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களின் சுற்றுலா ஆசையை நிறைவேற்றும் வகையில் அவ்வப்போது அசத்தலான பல டூர் பேக்கேஜ்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் பகவான் ஸ்ரீ ராமருடன் தொடர்புடைய பல ஆன்மீக ஸ்தலங்களை தரிசிக்கும் வகையில் "ஸ்ரீ ராமாயண யாத்ரா" வை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனைப் பற்றிய இதர முக்கிய தகவல்கள் இதோ!

ராமாயண் யாத்ரா 2022
ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக IRCTC ஜூன் மற்றும் ஆகஸ்ட் 2022 இல் செய்த முயற்சி மாபெரும் வெற்றி கண்டது. அதனைத் தொடர்ந்து இந்த மாதத்திலும் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளின் அடிப்படையில் சில மாற்றங்களுடன் மீண்டும் இந்த யாத்ரீக ரயில் தொடங்கப்பட உள்ளது.
புது தில்லியின் சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் இந்தப் பயணம், அயோத்தி, ஜனக்பூர், சீதாமர்ஹி, பக்சர், வாரணாசி, பிரயாக்ராஜ், சித்ரகூட், நாசிக், ஹம்பி, ராமேஸ்வரம், காஞ்சிபுரம் மற்றும் பத்ராச்சலம் உள்ளிட்ட ராமர் தொடர்பான அனைத்து முக்கிய இடங்களையும் உள்ளடக்குகிறது. டெல்லியின் சப்தர்ஜங், துண்ட்லா, காசியாபாத், அலிகார், கான்பூர் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயிலில் ஏறிக் கொள்ளலாம்.

ரயிலில் உள்ள வசதிகள்
இந்த முழு குளிரூட்டப்பட்ட சுற்றுலா ரயிலில் பதினொரு 3வது ஏசி பெட்டிகள், ஒரு பேண்ட்ரி கார் மற்றும் இரண்டு எஸ்எல்ஆர் பெட்டிகள் இருக்கும். புதிதாக சமைத்த சைவ உணவுகள் நன்கு பொருத்தப்பட்ட பேண்ட்ரி காரில் இருந்து விருந்தினர்களுக்கு அந்தந்த இருக்கைகளில் வழங்கப்படும். ரயிலில் பயணிகளின் பொழுதுபோக்கு மற்றும் பொது அறிவிப்புகளுக்காக இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. தூய்மையான கழிவறைகள் முதல் சிசிடிவி கேமராக்கள் வரை அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு அம்சங்களும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
ராமாயண வழித்தடங்கள்
நவம்பர் 18, 2022 அன்று தொடங்கும் இந்த சுற்றுலா 17 இரவுகள் மற்றும் 18 நாட்களைக் கொண்ட டூர் பேக்கேஜ் ஆகும். டெல்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் இந்த பயணத்தில் நீங்கள் கீழ்க்கண்ட இடங்களுக்கு செல்வீர்கள்!
அயோத்தி: ராம ஜென்மபூமி கோவில், ஹனுமான் கர்ஹி, சரயுகாட்.
நந்திகிராம்: பாரத்-ஹனுமான் கோயில் மற்றும் பாரத் குண்ட்
ஜனக்பூர்: ராம்-ஜாங்கி மந்திர்.
சீதாமர்ஹி: சீதாமர்ஹி மற்றும் புனௌரா தாமில் உள்ள ஜானகி மந்திர்.
பக்சர்: ராம் ரேகா காட், ராமேஸ்வர நாத் கோவில்.
வாரணாசி: துளசி மானஸ் கோவில், சங்கட் மோகன் கோவில், விஸ்வநாதர் கோவில் & கங்கா ஆரத்தி. சீதா சமாஹித் ஸ்தல், சீதாமர்ஹி: சீதா மாதா கோவில்.
பிரயாக்ராஜ்: பரத்வாஜ் ஆசிரமம், கங்கா-யமுனா சங்கம், ஹனுமான் கோவில்.
சிருங்காவேர்பூர்: ஸ்ரீங்கே ரிஷி சமாதி & சாந்தா தேவி கோயில், ராம் சௌரா.
சித்ரகூட்: குப்த கோதாவரி, ராம்காட், சதி அனுசுயா கோவில்.
நாசிக்: த்ரயம்பகேஷ்வர் கோவில், பஞ்சவடி, சிதாகுஃபா, காலாராம் கோவில்.
ஹம்பி: அஞ்சனாத்ரி மலை, விருபாக்ஷா கோவில் & விட்டல் கோவில்.
ராமேஸ்வரம்: ராமநாதசுவாமி கோவில் மற்றும் தனுஷ்கோடி
பத்ராசலம்: ஸ்ரீ சீதாராம் சுவாமி கோவில், அஞ்சனி சுவாமி கோவில்
மேற்கண்ட அனைத்து இடங்களையும் சுற்றிப்பார்த்த விட்டப் பிறகு இந்த முழு ராமாயண சுற்றுப்பயணத்தை அதாவது சுமார் 8000 கிலோமீட்டர் தூரத்தை கடந்த பிறகு 19 வது நாளில் டெல்லிக்குத் திரும்பி பயணிகள் சுற்றுலாவை நிறைவு செய்வார்கள்.

கட்டணங்கள் மற்றும் பிற விவரங்கள்
கம்ஃபர்ட்டில் சிங்கிள் ஷேரிங்கில் ஒரு நபருக்கு 68,980 ரூபாயும், இரண்டு அல்லது 3 நபர்களுக்கு 59,980 ரூபாயும் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு 53,985 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பீரியர் சிங்கிள் ஷேரிங்கில் ஒரு நபருக்கு 82,780 ரூபாயும், இரண்டு அல்லது 3 நபர்களுக்கு 71,980 ரூபாயும் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு 64,785 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு நீங்கள் www.irctctourism.com என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம், மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் முன்பதிவு கிடைக்கும். மேலும் தகவல்களுக்கு 8287930202 மற்றும் 8287930297 என்ற எண்களையும் தொடர்பு கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications








