Search
  • Follow NativePlanet
Share
» »ஹோய்சலாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நினைவுசின்னம் பாத்திருக்கீங்களா? வாங்க அதப் பத்தி தெரிஞ்சு

ஹோய்சலாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நினைவுசின்னம் பாத்திருக்கீங்களா? வாங்க அதப் பத்தி தெரிஞ்சு

ஹோய்சலாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நினைவுசின்னம் பாத்திருக்கீங்களா? வாங்க அதப் பத்தி தெரிஞ்சுக்குவோம்!!

By Staff

கர்நாடகாவின் சிக்மகளூர் மாவட்டத்திலிருந்து 67 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஒரு சிறிய கிராமம் தான் இந்த அம்ருதபுராவாகும். இந்த கிராமத்தின் சிறப்பம்சமாக, ஹோய்சலா வம்சத்தில் கட்டப்பட்ட அற்புதம் நிறைந்த கோவில் ஒன்று பெருமையுடன் பிரசித்திபெற்று விளங்குகிறது. ஆம், அந்த ஆலயத்தின் பெயர் தான் அம்ருதேஸ்வரர் ஆலயமாகும்.

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த ஆலயம், கிபி 1196 ஆம் ஆண்டு, இரண்டாம் பல்லால அரசரின் ஆட்சியின் கீழ் வாழ்ந்த தளபதியான அம்ருதேஸ்வரா டண்டனாயாகா என்பவரால் கட்டப்பட்டதாகும். பத்ரா ஆற்று நீர்த்தேக்கத்தின் அருகில் காணப்படும் இந்த ஆலயத்தை சுற்றி...தென்னை மரங்களும், பனை மரங்களும் உயர்ந்து புகழை தாங்கிகொண்டு நிற்கிறது.

நேபாளத்தின் கண்டகி நதியிலிருந்து எடுத்து வரப்பட்ட சிவபெருமான் சிலையோடு, சாரதா தேவியும் வலது புறத்தில் வீற்றிருக்கிறாள். இந்த அம்ருதேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பம்சமாக, உள்ளே எரிந்து கொண்டிருக்கும் விளக்கொன்று, 200 வருடங்களுக்கு முன்னால் இருந்து எரிந்துகொண்டிருப்பதாக கூறுவதை கேட்கும்பொழுது வரலாற்றின் பெருமையை உணர்ந்து வாயடைத்து தான் நாம் நிற்கிறோம். இந்த விளக்கில் ஊற்றப்படும் எண்ணெய்யானது...ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் அளவிற்கு தேவைப்படுகிறது.

ஹோய்சலாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நினைவுசின்னம் பாத்திருக்கீங்களா? வாங்க அதப் பத்தி தெரிஞ்சுக்குவோம்!!

Dineshkannambadi

ஹோய்சலா கட்டிடக்கலை:

பதினொன்றாம் மற்றும் பதினான்காம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட பெரும்பாலான ஆலயங்கள், இந்த பகுதியை சுற்றி தான் அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக, பேலூர் மற்றும் ஹலேபிட் ஆகிய இடங்களில் கட்டப்பட்டவை ஹோய்சலா சாம்ராஜ்ஜியத்தின் பங்களிப்பாக சிறந்து விளங்குகிறது. இந்த சகாப்தத்தின் கைவினைஞர்கள், தங்களுக்கென்ற பிரத்யேகமான தனித்துவமிக்க திறமையுடன் இருந்து வந்தார்கள்.

அவர்களால், அந்த காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்களின் வடிவமைப்பானது...சில முக்கிய சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக இருக்கிறது. மேல்புறத்தில் மலர் வடிவங்களை கொண்ட விரிவான சிற்பங்களால் ஆன மண்டபம், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட தூண்கள், அழகிய சந்நிதிகள், விமானம் ஆகியவை உள்புறத்தில் அமைக்கப்பட்டு, விரிவான அழகிய வடிவமைப்புடன் வெளிப்புறத்தையும் அலங்கரித்தனர்.

கோயில் கட்டிடக்கலை:

ஆலயங்கள், எக்ககுட்டா பாணியில் கட்டப்பட்டிருக்க, ஒற்றை வானம் அமைப்புடன் அது காணப்படுகிறது. மூடப்பட்ட மண்டபமானது ஒரு திறந்த வழியுடன் காணப்பட...ஒட்டுமொத்த இதன் தோற்றமானது நடுத்தர அளவில் காணப்படுகிறது.

ஹோய்சலாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நினைவுசின்னம் பாத்திருக்கீங்களா? வாங்க அதப் பத்தி தெரிஞ்சுக்குவோம்!!

Dineshkannambadi

ஹோய்சலாவின் மற்ற ஆலயங்களான பெலாவாடியில் காணப்படும் வீர நாராயண ஆலயம் என பலவற்றை காட்டிலும் இதன் அளவு நடுத்தரமாகவே காட்சியளிக்கிறது. இந்த ஆலயத்தில் தான் புகழ்பெற்ற சிற்பியான ருவாரி மல்லிடமாவின் தொழில் வாழ்க்கை தொடங்கியதாகவும் நம்பப்படுகிறது.

அம்ருத்வாரா ஆலயத்தில் எண்ணற்ற தனித்துவமிக்க சிறப்பம்சங்கள் காணப்படுகிறது. இவை அனைத்தும் மற்ற ஹோய்சலா அமைப்புகளை காட்டிலும் தனித்தன்மை நீங்காமல் தலைசிறந்து நிற்கிறது. அவற்றுள் ஒன்று தான், ஆலயத்தின் மேல்புறத்தில் காணப்படும் பளபளப்பான தூண்களாகும். இது ஹோய்சலா கட்டிடக்கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக மட்டும் விளங்காமல், சாளுக்கிய கலைஞர்களின் திறமையையும் பிரதிபலித்து கொண்டிருக்கிறது. மேலும், இந்த ஆலயத்தில் பெரிய பாறை கல்வெட்டுக்கள் காணப்படுவதோடு...அவை அனைத்தும் கன்னட கவிதைகளாகவும் காணப்படுகிறது. அவை அனைத்தும், அந்த காலத்தில் வாழ்ந்த கவிஞர்களின் எழுத்தாற்றலை நமக்கு தெளிவுபடுத்துகிறது.

இரண்டாவதாக, ஆலயத்தின் வெளிப்புறத்தில் காணப்படும் பலகைகளானது, நுண்ணிய வடிவத்தில் காணப்படாமல், பெரிதாக காணப்படுகிறது. ராமாயணம் மற்றும் மகாபாரத புராணங்களின் சிற்பத்தோடு சேர்த்து, சுமார் 140 பலகைகள் இந்த ஆலயத்தில் காணப்படுகிறது.

மூன்றாவதாக, மண்டபத்தின் திறந்த அல்லது வெளிப்புறங்களின் மேற்பகுதியில் கைப் பிடி கொண்ட சிறு தூண் வரிசையும் அமைந்துள்ளது. அந்த ஆலயத்தின் கோபுரங்களில் காணப்படும் வடிவமைப்பானது 100 நுண்ணிய வடிவங்களால் ஆனதாகும். இவற்றை கடந்த சிறப்பம்சங்களாக, ஆலயத்தில் 29 விரிகுடாக்களும், அதில் 25 உள் புறத்திலும் அமைந்திருக்கிறது. மற்ற நான்கு, நுழைவாயிலில் காணப்படுகிறது.

கோயில் நேரம்:

ஹோய்சலாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நினைவுசின்னம் பாத்திருக்கீங்களா? வாங்க அதப் பத்தி தெரிஞ்சுக்குவோம்!!

Dineshkannambadi

காலை 6 மணிக்கு திறக்கப்படும் கோவில், மாலை 6 மணிக்கு மூடப்படுகிறது. வாரத்தில் அனைத்து நாட்களும் திறந்திருப்பதோடு, பொது விடுமுறைகள் நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது.

எப்படி நாம் செல்வது:

ஆகாய மார்க்க வழி:

அம்ருதபுராவிற்கு அருகில் காணப்படும் ஒரு விமான நிலையம், 260 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் பெங்களூரு சர்வதேச விமான நிலையமாகும். அங்கிருந்து இரயில் அல்லது பேருந்தின் மூலம் நாம் அம்ருதபுராவை அடையலாம்.

தண்டவாள மார்க்க வழி:

தரிகெரெ தான் அருகில் காணப்படும் ஒரு இரயில் நிலையமாகும். ஆலயத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இந்த இரயில் நிலையத்துக்கு பெங்களூரிலிருந்து தினசரி ரயில்கள் இயக்கப்படுகிறது. அத்துடன், நாம் இந்த ஆலயத்தை அடைவதற்கு சுமார் 4 மணி நேரம் தேவைப்படுகிறது.

சாலை மார்க்க வழி:

KSRTC பேருந்து சேவைகளின் மூலமாக தரிகெரெவை கர்நாடகாவின் எந்த மூலையிலிருந்தும் நாம் அடையலாம். (அல்லது) பேருந்தின் உதவியுடன் பெங்களூரிலிருந்து சிக்மகளூருக்கும் நாம் செல்லலாம். இந்த வழியில் பேருந்துகள் அதிகம் இயக்கப்படுகிறது. அதன் பின், ஆட்டோ அல்லது தனியார் வாகனத்தின் மூலம் அங்கிருந்து நாம் அம்ருதபுராவை அடைகிறோம்.

ஹோய்சலாவில் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் நினைவுசின்னம் பாத்திருக்கீங்களா? வாங்க அதப் பத்தி தெரிஞ்சுக்குவோம்!!

Shynahegde

அம்ருதேஸ்வரர் ஆலயத்தை சுற்றி நாம் பார்க்க வேண்டிய இடங்கள்:

அம்ருதபுராவிலிருந்து 100 கிலோமீட்டர் விட்டப் (Diameter) பரப்பளவில் எண்ணற்ற அழகிய இடங்கள் நம் கண்களுக்கு தென்படுகிறது. இந்த நகரத்திலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் தரகெரெவில் உள்ள மலைப்பகுதி தான் கெம்மன்குடி. இது மைசூர் நான்காம் கிருஷ்ண ராஜ உடையாரின் கோடைக்கால ஓய்வு தளமாக பயன்படுத்தப்பட்டது. ஹெப்பி நீர்வீழ்ச்சி, கல்ஹத்தி வீழ்ச்சி, ராக் (பாறைகள்) மற்றும் ரோஸ் தோட்டம் ஆகியவை கர்நாடகாவின் தோட்டக்கலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் நாம் இங்கே அருகில் பார்த்து ஆர்ப்பரிக்க வேண்டிய முக்கிய இடங்களாக அமைகிறது. சிமோகா, சிக்மகளூர், முள்ளையங்கிரி மலை ஆகியவை அம்ருதபுரா அருகில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற சுற்றுலா தளங்களாகும்.

More News

Read more about: travel temple
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+