Search
  • Follow NativePlanet
Share
» »தென்னக காசி பைரவர் கோவில் எங்கு உள்ளது?

தென்னக காசி பைரவர் கோவில் எங்கு உள்ளது?

தேய்பிறை, அஷ்டமி என்றாலே நம் நினைவுக்கு வருபவர் பைரவர் தான். நமக்கு மட்டும் ஏன் தான் இவ்வளவு கஷ்டம்னு நொந்து போய் உள்ளவர்கள் இந்தக் கால ரைபரவரைத் தான் தரிசனம் செய்தாக வேண்டும் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.

நம் தலை எழுத்தையே மாற்றி அமைக்கும் சக்தி படைத்தவர். ஆன்மிக கலாசாரத்தில், காலத்திற்கான கடவுளாக போற்றி வழிபடக்கூடிய கால பைரவருக்கு மிக உயரம் கொண்ட ஆசியாவிலேயே பிரமாண்டமாக கட்டிய சிலையை, தென்னகத்தின் காசி பைரவர் கோவில் என்றே அழைக்கின்றனர்.

சிவ பெருமானின் ருத்திர ரூபமாக சொல்லப்படும் கால பைரவர், பொதுவாக, சிவன் கோவில்களில் அவரின் சன்னதி சிறியளவில் அமைந்திருக்கும். ஆனால், ஈரோடு மாவட்டம், காங்கேயம் மெயின் ரோடு அவல்பூந்துறை ராட்டை சுற்றி பாளையத்தில் பிரமாண்டமாக அமைந்திருக்கும், இக்கோவிலில் பைரவர் மேற்கு பார்த்து அமர்ந்திருப்பது தனிச்சிறப்பு ஆகும். பிரமாண்ட அமைக்கப்பட்டு இருக்கும் கால பைரவர் சிலையின் உயரம் 39 அடியாகும்.

erodekalabhairavarstatue1

பிரமாண்டம், உலக சாதனை

உடுக்கை, வேல், சூலம், அட்சயபாத்திரம் ஏந்தி நான்கு கைகளுடன் 39 அடி உயர காலபைரவர் சிலை, உலக சாதனையில் இடம் பிடித்துள்ளது. 125 அடி நீளத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் நுழைவு வாயிலில் கம்பீரமான சிலையை நிறுவி உள்ளனர்.

மேலும், 64 பைரவர்களில் முகப்பிலும், கருவறையிலும் இருவர் அமர்ந்தது போக, மீதி 62 பைரவர்களும் பிரகார மண்டபத்தின் மேற்பகுதியில் சுதைசிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளனர்.

தரிக்கும் நேரம்

தினமும், காலை 8:00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கோவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, செவ்வாய் தோறும் மண் விளக்கு பூஜை, அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் சிறப்பு யாகம் மற்றும் ஸ்வர்ணலிங்க சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது.

மேலும் தேய்பிறை அஷ்டமி அன்று நடைபெறும் சிறப்பு பூஜைகளில், சுற்று வட்டாரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அருள் பெறுகின்றனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு கோவில் கட்டுமானங்கள் முடிக்கப்பட்டு, மார்ச் மாதம் மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது 650 கிலோ பஞ்சலோக சிலைக்கு நெய் ஆரோக்கியத்தின் வடிவாகவும், நாணயங்கள் செல்வத்தின் வடிவாகவும் அர்ப்பணிக்கப்பட்டன.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீர்த்தங்களுக்கு அபிஷேக, ஆதாரனைகள் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.

வழித்தடம்

ஈரோடு - காங்கேயம் சாலையில் அவல்பூந்துறை அடுத்து ராட்டை சுற்றி பாளையம் பேருந்து நிறுத்தம். சென்னையில் இருந்து சுமார் 7.50 மணி நேரத்தில் சாலை மார்க்கமாக ஈரோட்டை சென்றடையலாம்.

அதேபோல கோயம்புத்தூரில் இருந்து 1.55 மணி நேரத்தில் ஈரோட்டை சென்றடையலாம். அங்கிருந்து உள்ளூர் பேருந்து வாயிலாக, கோவிலை அடையலாம்.

பைரவர் என்றால் பக்தர்களின் பயத்தை நீக்குபவர் என்ற பொருளை தாங்கி இருப்பதால், கம்பீரமாக வீற்றிருக்கும் கால பைரவரை ஒரு முறையாவது சென்று தரிசித்து விட்டு வருவோம் வாங்க...!

More News

    Read more about: tallest kalabhairava statue
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+