Search
  • Follow NativePlanet
Share
» »பக்தோக்ரா எனும் அழகிய தேயிலைத் தோட்டம்

பக்தோக்ரா எனும் அழகிய தேயிலைத் தோட்டம்

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான பனி

By Udhaya

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தின் வடக்குப் பகுதியிலிருக்கும் வேறெந்த இடங்களை விடவும் அதிகமாக சுற்றுலாப் பயணிகளை கவரும் இடங்களாகும். நல்ல பசுமையான தேயிலைத் தோட்டங்கள் ஒரு புறமும், பிரம்மாண்டமான பனி மூடிய இமயமலைகள் மறு புறமும் கொண்டுள்ள இந்த நகரங்கள் ஓய்வெடுக்கவும், வார இறுதி நாட்களை கழிக்கவும், பிறந்த நாள் மற்றும் தேனிலவு கொண்டாடவும் மிகவும் ஏற்ற இடங்களாகும். இந்த அனைத்து செயல்பாடுகளும் நடைபெறும் வகையில் டார்ஜீலிங், சிலிகுரி மற்றும் சிக்கிமின் அருகிலும் கூட அமைந்திருக்கும் ஒரு உண்மையான வடக்கத்திய நகரமாக பக்தோரா அமைந்துள்ளது.

சுற்றுலாத் தலங்கள்

பக்தோராவை மும்பை மற்றும் டெல்லியுடன் இணைக்கும் பக்தோரா விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. அருகில் ஓடிக் கொண்டிருக்கும் டீஸ்டா நதி மூச்சைத் திணறடிக்கும் காட்சிகளை காட்டவல்ல இடமாகும். பக்தோரா ஒரு சாதாரண சுற்றுலாத் தலமல்ல. மனதார ஓய்வெடுக்கவும், அற்புதமான காட்சிகளை சற்றே கண்டுகளிக்கவும் விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஏற்ற தலமாக இது உள்ளது. இந்த நகரத்தைச் சுற்றிலும் உள்ள முக்கியமான பார்வையிடங்களாக சேவோகேஸ்வரி காளி கோவில் மற்றும் சலுகாரா மடாலயம் ஆகியவை உள்ளன.

பக்தோக்ரா எனும் அழகிய தேயிலைத் தோட்டம்

பக்தோராவின் உள்ளூர் கலாச்சாரம் பக்தோரா நகர மக்களை கூர்ந்து கவனித்தால் பௌத்த மதத்தின் தாக்கத்தால் இந்த நகரம் அமைதி பெற்றிருப்பதை அறிய முடியும். துர்கா பூஜை மற்றும் காளி பூஜை போன்ற பல்வேறு பண்டிகைகள் பௌத்த பாரம்பரியங்களுடன் இணைந்து கொண்டாடப்படுவதால், இந்நகரம் வரலாற்று மற்றும் கலாச்சார வளம் மிக்க இடமாக உள்ளது. பக்தோராவை அடையும் வழிகள் பக்தோராவில் உள்ளூரை சுற்றிப் பார்க்க கார்கள், பேருந்துகள் மற்றும் ரிக்சாக்கள் உள்ளன. ஆனால், அதற்கான கட்டணத்தை அவ்வப்போது கவனித்து செலுத்துவது பர்ஸை பதம் பார்க்காது.

பக்தோக்ரா எனும் அழகிய தேயிலைத் தோட்டம்

நீங்கள் உங்கள் நேரத்தை திட்டமிட்டு செலவிடுபவராக இருந்தால் சிக்கிம் மற்றும் டார்ஜீலிங்கிற்கு திட்டமிட்ட சுற்றுலாப் பயணங்கள் வரலாம். இவை சரியான விலையிலும், செலவிற்கேற்ற தரமான பயணங்களாகவும் இருக்கின்றன..

எப்படி செல்வது

விமானம் மூலமாக

பக்தோக்ராவில் விமான நிலையம் உள்ளது. இது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமான போக்குவரத்தை பெற்றுள்ளது. டெல்லி, கவுகாத்தி, சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களிலிருந்து விமானங்கள் இங்கு வருகின்றன. இங்கிருந்து வாடகை வண்டிகள் மூலம் தேயிலைத் தோட்டத்தை அடையலாம்.

ரயில் மூலமாக

ஜல்பய்குரி எனும் நகரம் இதன் அருகிலுள்ள ரயில் நிலையமாகும். இது இந்தியாவின் பல நகரங்களுடன் இணைப்பை பெற்றுள்ளது.

சாலை வழியாக

வடகிழக்கில் இருந்தும் மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு பகுதி நகரங்களிலிருந்தும் நிறைய பேருந்துகள் சேவை இங்கு உள்ளது. மேலும் இங்கிருந்து டார்ஜிலிங் 90 கிமீ தொலைவிலும், சிலிகுரி 14 கிமீ தொலைவிலும், காலிம்போங் 79 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.

Read more about: travel india west bengal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X