Search
  • Follow NativePlanet
Share
» » அரிய விலங்குகளைக் காண தமிழ்நாட்டின் அழகான இந்த தேசிய பூங்காக்களுக்கு தான் செல்ல வேண்டும்!

அரிய விலங்குகளைக் காண தமிழ்நாட்டின் அழகான இந்த தேசிய பூங்காக்களுக்கு தான் செல்ல வேண்டும்!

தமிழ்நாடு பழங்கால கோவில்கள், பாரம்பரிய கோட்டைகள், அழகிய மலைவாசஸ்தலங்கள், பச்சை பசேல் கிராமங்கள், துடிப்பான நகரங்கள் என பன்முகங்கள் கொண்ட மாநிலம். ஆனால் நம் மாநிலத்தில் பல வகையான அரிதான விலங்குகளையும் நாம் கண்டு மகிழலாம் என நம்மில் பலருக்கும் தெரியாது. புலிகள், சிறுத்தைகள், யானைகள் முதல் கரடி, குரங்குகள் வரை எல்லா வகையான விலங்குகளையும் அவற்றின் இருப்பிடங்களிலேயே கண்டு களிக்க தமிழ்நாட்டின் அழகான தேசியப் பூங்காக்களுக்கும் செல்லலாம். நீங்கள் எங்கே எல்லாம் செல்ல வேண்டும் என்று கீழே பாருங்கள்!

Mudumalai National Park

முதுமலை தேசிய பூங்கா

1940 இல் நிறுவப்பட்ட முதுமலை தேசிய பூங்கா, தமிழ்நாடு மற்றும் தென்னிந்தியாவில் உருவாக்கப்பட்ட முதல் தேசிய பூங்காவாகும். நீலகிரி மலைத்தொடர் இந்தியாவின் மிகவும் கவர்ச்சியான மலை வாசஸ்தலங்களில் ஒன்றாகும். புலிகள், சிறுத்தைகள், கோடிட்ட ஹைனாக்கள், சோம்பல் கரடிகள், ஆசிய யானைகள் மற்றும் தங்க நரிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகளை நீங்கள் இங்கு பார்க்கலாம். தேசியப் பூங்கா வழியாக யானை சஃபாரி செய்வதும், யானையுடன் பழகுவதும் அதன் செயல்களை ரசிப்பதும் மிகவும் மகிழ்ச்சிகரமாக இருக்கும். அது மட்டுமில்லாமல் நீலகிரியின் முழு அழகையும் மலைமீது ஏறி நின்று ரசிக்கலாம்.

guindynationalpark

கிண்டி தேசிய பூங்கா

தேசிய பூங்காவை ஆராய்வதற்காக உங்களால் அதிக தூரம் பயணிக்க முடியாவிட்டால், நீங்கள் சென்னைக்கு உள்ளேயே இருக்கும் கிண்டி தேசிய பூங்காவிற்கு செல்லலாம். இது ஒப்பிட்டளவில் சின்னதாக இருக்கலாம், ஆனால் இங்கு நீங்கள் புள்ளி மான், பொன்னெட் மக்காக், பாங்கோலின், கிளிகள், பாரடைஸ் ஃப்ளை-கேட்சர், கோல்டன்-பேக்ட் மரங்கொத்தி, ராஜ நாகம், மலைப்பாம்புகள் மற்றும் பிற பாம்புகளை இங்கு நீங்கள் காணலாம். இந்தியாவின் எட்டாவது சிறிய தேசிய பூங்காவாகும்.

gulfofmannarmarinenationalpark

மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா

இந்தியாவின் மிகவும் தனித்துவமான தேசிய பூங்காக்களில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள மன்னார் வளைகுடா கடல் தேசிய பூங்கா ஆகும். இந்தியப் பெருங்கடலில் மன்னார் வளைகுடா முழுவதும் 21 சிறிய, பிரமிக்க வைக்கும் தீவுகள், பவளப்பாறைகள் மற்றும் ஆழமற்ற நீர் வாழ்விடங்கள் உள்ளன. பவளப்பாறைகளுக்கு நடுவே மிகவும் திகைப்பூட்டும் வண்ணங்களில் உள்ள, பட்டாம்பூச்சி மீன், அணில் மீன், கிளி மீன், டுகோங், டால்பின்கள், திமிங்கலங்கள் மற்றும் ஆமைகளை நீங்கள் கண்டு மகிழலாம். பவளப்பாறைகள், சதுப்புநிலங்கள் மற்றும் கடற்பாறைகள் உட்பட மூன்று தனித்துவமான நீர் சுற்றுச்சூழல் அமைப்புகளை பூங்காவில் காணலாம்.

agasthyamalaibiospherereserve

அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகம்

இந்தியாவின் அகஸ்தியமலை உயிர்க்கோளக் காப்பகம் தமிழ்நாட்டின் தெற்குப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான தளமாகும். ஏலக்காய், ஜமுனா, ஜாதிக்காய், மிளகு மற்றும் வாழைப்பழம் போன்ற பயிரிடப்பட்ட தாவரங்களுக்கு ஒரு தனித்துவமான மரபணு நீர்த்தேக்கமாக உயிர்க்கோளக் காப்பகம் செயல்படுகிறது. இங்கே நீங்கள் செந்தூர்னி வனவிலங்கு சரணாலயம், பெப்பாரா வனவிலங்கு சரணாலயம், நெய்யார் வனவிலங்கு சரணாலயம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் போன்ற சில முக்கிய வனவிலங்கு சரணாலயங்களையும் கொண்டுள்ளது.

mukurthinationalpark

முகூர்த்தி தேசிய பூங்கா

முன்பு நீலகிரி தஹ்ர் தேசிய பூங்கா என்று அழைக்கப்பட்ட முகூர்த்தி தேசிய பூங்கா நீலகிரி பீடபூமியின் மேற்கு மூலையில் அமைந்துள்ளது. இந்த யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமானது அதன் முக்கிய இனமான நீலகிரி தஹ்ரை பாதுகாக்கும் பிரதான நோக்கத்துடன் நிறுவப்பட்டது. முகூர்த்தி தேசிய பூங்காவிற்குள் சாதாரண சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் மலையேற்றம் செய்பவர்களுக்கும் மற்றும் கேம்பிங் செய்பவர்களுக்கும் இங்கு அனுமதி வழங்கப்படுகிறது. இது ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.

இந்த தேசிய பூங்காக்களில் நீங்கள் எவற்றிற்கு சென்றுள்ளீர்கள், செல்லவில்லை என்றால் எப்போது செல்லப் போகிறீர்கள்?

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+