Search
  • Follow NativePlanet
Share
» »கூர்க் TO கோவா - எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம் தெரியுமா ?

கூர்க் TO கோவா - எங்கவெல்லாம், எப்படியெல்லாம் போகலாம் தெரியுமா ?

கூர்க் அல்லது கொடகு என்று அழைக்கப்படும் மலைப்பிரதேசம் கர்நாடக மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. மேற்கத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான இது உலக பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலமும் ஆகும். அது இருக்கட்டும், "மச்சா இந்த வருசமாச்சும் கோவா போயே ஆகனும்டா"-ன்னு நம்மில் பெரும்பாலான இளைஞர்கள் சிறு வயதில் இருந்தே கோவா டூர் போகனும், கூர்க் டூர் போகனும் என்று வருடம் தவறாமல் முடிவெடுத்து பல ஆண்டுகள் கடந்தும் அந்த முடிவு வெறும் சொல்லாகவே இன்று வரை இருக்கும். அப்படி பல திட்டங்கள் தீட்டி இன்று வரை நிறைவேற்றாமல் இருக்கும் இளைஞரா நீங்க, அப்படின்னா இந்த தொகுப்பில் வரும் திட்டப்படி டூர் போங்க. ஒரு டிரிப்ல சகலமும் சுற்றி அனுபவித்து வரலாம்.

நீங்களே முடிவு செய்யுங்க!

நீங்களே முடிவு செய்யுங்க!

இப்பயணத்தை நீங்கள் இருக்கும் பகுதியில் இருந்து முடிவு செய்து முதலில் கூர்க்கை அடையுங்கள். கோயம்புத்தூரில் இருந்து மைசூர் வழியாக 306 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து பெங்களூர் வழியாக 576 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது கூர்க் மலைச் சுற்றுலாத் தலம். முதல் பயணத்தில் கூர்க் அடைந்த பின் அங்கே உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களை தேர்வு செய்து சுற்றிப் பார்ப்பது சிறந்தது.

cat_collector

வரலாற்று சின்னமும், கோட்டையும்

வரலாற்று சின்னமும், கோட்டையும்

கூர்க் பகுதியில் பலவிதமான வரலாற்றுச் சின்னங்களும், அரண்மனைகளும், கோட்டைகளும், புராதன கோவில்களும், நீர்வீழ்ச்சிகளும், சரணாலயங்களும் என எண்ணற்ற எழில் வாய்ந்த சுற்றுலாத் தலங்கள் காணப்படுவதால் இது சுற்றுலாப் பிரியர்கள் மற்றும் பயணிகளால் விரும்பி பயணம் செய்யப்படுகிறது.

Koushik

நீர்விழ்ச்சிகள்

நீர்விழ்ச்சிகள்

கூர்க்கில் பிரசிதிபெற்ற நீர்வீழ்ச்சிகளாக அப்பே நீர்வீழ்ச்சி, இருப்பு நீர்வீழ்ச்சி, மல்லள்ளி நீர் வீழ்ச்சி, இயற்கை எழிலை ரசிப்பதற்கு ஏற்றதாக செலவரா நீர்வீழ்ச்சி, ஹரங்கி அணை, காவேரி நிசர்கதாமா, துபரே யானை காப்பகம், ஹொன்னம்மன ஏரி மற்றும் மண்டல பட்டி போன்ற இடங்களும் காட்டுயிர் ஆர்வலர்கள் விரும்பும் இடங்களாக நாகர்கோல் தேசிய பூங்கா மற்றும் அருகிலுள்ள பண்டிபூர் தேசிய பூங்கா ஆகியவையும் காணப்படுகின்றன.

Rajeev Rajagopalan

சாகச விரும்பிகளுக்காக

சாகச விரும்பிகளுக்காக

சாகச பொழுது போக்குகள் மற்றும் விளையாட்டு பொழுது போக்குகளுக்கும் கூர்க் தலம் ஏராளமான வாய்ப்புகளை வழங்குகிறது. மலை ஏற்றம், கோல்ப், தூண்டில் மீன் பிடித்தல், பரிசல் சவாரி போன்ற பல வெளிப்புற பொழுது போக்கு அம்சங்களுக்கு இங்கே உங்களுக்காக காத்திருக்கின்றன.

Philip Larson

கூர்க் - கொல்லூர்

கூர்க் - கொல்லூர்

கூர்கில் இரவு தங்கி மறுநாள் காலை மீண்டும் பயணத்தை தொடங்குனீர்கள் என்றால் மங்களூர் வழியாக 294 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கொல்லூரை அடைந்து விடலாம். கர்நாடக மாநிலத்தில் குண்டப்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள இந்த சிறு நகரம், நாடு முழுவதிலுமுள்ள பக்தி யாத்ரீகர்களால் விரும்பப்படும் நகரமாகும்.

Jackson

தேவி மூகாம்பிகை கோவில்

தேவி மூகாம்பிகை கோவில்

அழகிய மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடர் பின்னணியில் வீற்றிருக்கும் கொல்லூரில் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் சௌபர்ணிகா ஆற்றின் கரையில் சாந்தம் தவழும் சூழலில் அமைந்துள்ளது தேவி மூகாம்பிகையின் திருத்தலம். பரசுராமரால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் புகழ்பெற்ற மூகாம்பிகை தேவியின் கோவில் இந்த தலத்தில் பிரசித்தமாக அறியப்படுகிறது. மேலும், இத்தலத்தின் அருகிலேயே வனப்பகுதியில் அரிஷ்ணா குந்தி நீர்வீழ்ச்சி, கொடசத்ரி மலைத் தொடர், மூகாம்பிகா வனவிலங்கு சரணாலயம் உள்ளிட்ட பல சுற்றுலாத் தலங்கள் உள்ளன. நேரம் இருப்பின் சென்று வரலாம்.

Premkudva

கொல்லூர் - ஜோக் நீர்வீழ்ச்சி

கொல்லூர் - ஜோக் நீர்வீழ்ச்சி

கொல்லூரில் கோவிலையும், இதர சுற்றுலாத் தலங்களையும் ரசித்து பயணத்தை தொடர்ந்தால் நம்முடைய அடுத்த இலக்கான ஜோக் நீர்வீழ்ச்சியை 87 கிலோ மீட்டர் தொலைவில் அடைந்து விடலாம். 2 முதல் 3 ணி நேர பயணத்திற்குப் பிறகு நம் உடலுக்கும், மனதிற்கும் ஏற்பட்டுடிருக்கும் சோர்வைப் போக்கக் கூடிய இடம் தான் இந்த ஜோக் நீர்வீழ்ச்சி. ஷராவதி நதியிலிருந்து உற்பத்தி ஆகும் ஜோக் நீர்வீழ்ச்சி ராஜா, ராணி, ராக்கெட், ரோவர் என்று நான்கு வேறுபட்ட பகுதிகளை கொண்டது.

SajjadF

பாகுபலி அருவி...

பாகுபலி அருவி...

ஜோக் நீர்வீழ்ச்சி தங்கு தடையின்றி பாறைகளிலும், குன்றுகளிலும் வழிந்து ஓடி பாகுபலி படத்தில் வருவதைப் போல சுமார் 830 அடி உயரத்திலிருந்து கீழே கொட்டும் அந்த கவின்மிகு காட்சியை காண கண்கள் இரண்டு போதாது. நீங்கள் புகைப்பட விரும்பியாக இருந்தால் கூடுதல் மெம்மரி கார்டையும் எடுத்துச் செல்லுங்கள். அதுமட்டுமா, அருவியை சுற்றி பச்சை பட்டாடை உடுத்தியது போல் அமைந்திருக்கும் மரங்களும், செடிகொடிகளும் நீர்வீழ்ச்சியின் அழகை மேலும் மெருகேற்றக் கூடியவை.

Vmjmalali

லிங்கனமக்கி அணை

லிங்கனமக்கி அணை

ஜோக் நீர்வீழ்ச்சியில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது லிங்கனமக்கி அணை. மழைக் காலங்களில் இந்த அணையை சுற்றிப் பார்க்க வருவது சிறப்பாக இருக்கும். ஷராவதி ஆற்றின் குறுக்கே கட்டபட்டிருக்கும் லிங்கனமக்கி அணை, மகாத்மா காந்தி நீர் மின்சார திட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. சக்ரா மற்றும் சவஹக்லு நீர்த்தேக்கங்கள் இந்த அணைக்கு மூலமாக இருந்து வருவதோடு, இது இரண்டும் லிங்கனமக்கி அணையுடன் ஒரு கால்வாய் வழியாக இணைக்கப்பட்டிருக்கிறது.

USAID

ஜோக் நீர்வீழ்ச்சி - தெற்கு கோவா

ஜோக் நீர்வீழ்ச்சி - தெற்கு கோவா

ஜோக் நீர்வீழ்ச்சியில் சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு பயணத்தை தொடர்ந்தீர்கள் என்றால் கும்டா, கார்வார் வழியாக 230 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தெற்கு கோவாவை அடைந்துவிடலாம். இரவுப் பொழுதில் கோவாவை அடைந்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கான ஓய்வுத் தளமாக பல அம்சங்கள் அங்கே உள்ளன.

Tjeerd Wiersma

இரவு விடுதிகள்

இரவு விடுதிகள்

கஃபே டெல் மார் பீச் பார் அண்ட் கிளப், மார்கோ மற்றும் பனாஜியை உள்ளடக்கிய தெற்கு கோவாவின் புகழ்பெற்ற கேளிக்கை விடுதியாகும். இந்த உல்லாச விடுதி பலோலம் கடற்கரையில் அமைந்திருக்கிறது. தெற்கு கோவாவில் உள்ள இரவு விடுதிகளில் நீங்கள் வேறெங்கும் அதிகாலை மூன்று அல்லது நான்கு மணிவரை கேளிக்கைகளில் ஈடுபட முடியாது.

Rajan Manickavasagam

வர்கா பீச்

வர்கா பீச்

தெற்கு கோவாவில் உள்ள கோல்வா பீச் போன்ற பெரிய கடற்கரைகளுக்கு மத்தியில் சிறிய கடற்கரையாக இருந்தாலும் வர்கா பீச் அவற்றுக்கு எந்த வகையிலும் தரத்தில் குறைந்ததில்லை. இந்த கடற்கரையில் வரிசையாக அமைந்திருக்கும் பனை மரங்களும், சூரிய கதிர்களில் மின்னிடும் வெண் மணலும் கண்களுக்கு விருந்து படைக்கும் அற்புதக் காட்சிகள்.

Rajarshi MITRA

பழைய கோவா

பழைய கோவா

பழைய கோவா, கோவா தலைநகர் பனாஜிக்கு வடக்கே 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. பழைய கோவாவில் தேவாலயங்களை தவிர எண்ணற்ற பொழுதுபோக்கு தலங்களும் உள்ளன. அதிலும் முக்கியமாக செயற்கை முறையில் உருவாக்கப்பட்ட கரம்போலிம் ஏரி, சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் இடங்களில் ஒன்று. பழைய கோவாவில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய மற்றொரு இடம் டைவார் தீவு.

McKay Savage

பனாஜி

பனாஜி

பனாஜி, மிகப்பெரிய நகரமல்ல, அதேபோல் அதிக மக்கள் தொகையையும் கொண்டிருக்கவில்லை. எனினும் கேளிக்கைக்கும், கொண்டாட்டத்துக்கும் மையமாக விளங்கும் பனாஜி உங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கடிக்கப் போவது நிச்சயம். ரெய்ஸ் மகோஸ் கோட்டைக்காக புகழ்பெற்ற ரெய்ஸ் மகோஸ் கிராமம் பனாஜி நகருக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது.

ptwo

மாண்ட்ரேம் பீச்

மாண்ட்ரேம் பீச்

கோவாவின் மற்ற கடற்கரைகளை போல அல்லாமல் பயணிகள் பார்வையிலிருந்து ஒதுங்கியே இருப்பதால் தனிமையை அனுபவிக்க விரும்புவர்கள் மாண்ட்ரேம் கடற்கரைக்கு தாராளமாக வரலாம். மேலும் இங்கு குடில்கள் மற்றும் உணவகங்களையும் அதிகமாக பார்க்க முடியாது.

Alosh Bennett

பர்வோரிம்

பர்வோரிம்

பனாஜியின் வாயிலிலேயே அமைந்திருக்கிறது பர்வோரிம் நகரம். இந்த நகரத்துக்கு வெகு அருகாமையிலேயே சலீம் அலி பறவைகள் சரணாலயம் உள்ளது. பர்வோரிம் நகரில் உள்ள கேஜுவாரியோ மற்றும் பேஸ்ட்ரி ஷாப் என்ற இரு உணவகங்களும் சுற்றுலாப் பயணிகளிடையே மிகப்பிரபலம்.

abcdz2000

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X