» »உத்தரகாண்ட் மலைக் காட்டில் திரில்லூட்டும் முகாம்கள்..!

உத்தரகாண்ட் மலைக் காட்டில் திரில்லூட்டும் முகாம்கள்..!

Written By: Sabarish

இந்தியாவில் வடக்கே அமைந்துள்ள மாநிலங்களில் உத்தரகண்ட் மாநிலம் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். குறிப்பாக சாகச காதலர்கள், இயற்கை அழகை அதன் பூரணத்தில் அனுபவித்து மகிழ ஏற்ற இடங்கள் இங்கே நிறைந்து காணப்படுகிறது. உத்தரகாண்டுக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். அயல் நாட்டில் இருந்தும் ஆண்டுதோறும் லட்சக் கணக்கான சுற்றுலா பயணிகளும் இங்கு வருவது வழக்கம்.

பள்ளத்தாக்குகள், மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் என பயணிகளை ஈர்க்கும் பல அம்சங்கள் உத்தர்கண்டில் உண்டு. இதனாலேயே சாகச பயணம் மேற்கொள்வோரின் முதல் தேர்வாக இது உள்ளது. உயர்ந்த சிகரங்களின் மீது கூடாரங்கள் அமைத்து எழில் அழகை ரசிப்பது இங்கு வருபவர்களின் முக்கியத் தேர்வாகும். இங்குள்ள மக்களே அதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவது குறிப்பிடத்தக்கது.

வானிலை

வானிலை


உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் பெரும்பாலான பகுதிகளின் வானிலை மிகவும் ரம்மியமான சூழலைக் கொண்டுள்ளது. மலைப் புல்வெளிகளை உரசிச் செல்லும் மேகக் கூட்டங்கள், ஆல்பின் மரங்கள் நிறைந்த காடு, மற்றும் சுற்றித் திறியும் மான் கூட்டம், அதன் நடுவில் அமைக்கப்பட்டுள்ள கூடாரம்... இயற்கையின் உச்சத்தை தொட்டுவிடலாம். மலைப் பகுதியில் உள்ள பூங்கா, புகழ் பெற்ற சர்கொண்டா தேவி கோவில் உள்ளிட்டவையும் சுற்றுலாத் தலமாக உள்ளது.

Alokprasad

தியோரியா ஏரி

தியோரியா ஏரி


கடல் மட்டத்திலிருந்து 8 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள தியோரியா ஏரி ருத்ரபிரயாக் அருகே உள்ளது. பனி மூடிய மலைகள் மத்தியில் அமைந்திருக்கும் இந்த ஏரி, பசுமை மற்றும் இயற்கை அழகு கலந்த கலவையாகும். எனவே, இங்கு முகாமுக்கு வரும் மக்கள், குளிர்காலத்தை தேர்வு செய்து வர வேண்டும். அப்போதுதான் இந்த பணி படரும் ஏரியின் அழகை முழுமையாக காண முடியும்.

Kailas98

கனாட்டல்

கனாட்டல்

உத்தரகண்ட் தலைநகர் டேராடூனில் இருந்து 80 கிலோ மீட்டர் தூரத்தில் கனாட்டல் அமைந்துள்ளது. இது இந்தியாவின் மிகவும் பிரபலமான கேம்பிங் தளங்களில் ஒன்றாகும். உத்தரகண்ட் மாநிலத்தின் அழகை அனுபவிக்க மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகளுக்கு இடையில் உள்ள கனாட்டல் இயற்கை எழில் கொஞ்சும் இடமாகும். இதைத்தவிர, சிறிய கிராமம் போன்ற முகாம்களின் தொகுப்பு, மற்றும் அப்பகுதீயில் வசிப்போரின் நடைமுறைகளை இங்கே ஆராய ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது. தெஹ்ரி அணை, சம்பா மற்றும் காடி வனப்பகுதி இங்குள்ள தவறவிடக் கூடாத இடங்களாகும்.

சோப்தா

சோப்தா


உத்தர்கண்டில் உள்ள மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் சோப்தா, முகாமிட்டு தங்க மிகவும் ஏற்ற இடமாகும். இந்த இடம் கேதார்நாத் வனவிலங்கு சரணாலயத்தின் ஒரு பகுதியாக உள்ளது. இது பனிச்சரிவுகள் கொண்ட புல்வெளிகள் மற்றும் பசுமையான காடுகள் அயல் நாட்டினரையும் கூட இதைநாக்கி ஈர்க்கிறது. இதனருகே மலையேற்றத்தில் சாகச பயணம் செய்யவே பெரும்பாலான மக்கள் இங்கு வருகிறார்கள். மேலும், சுற்றுவட்டாரத்தில் பல நீர்வீழ்ச்சிகளும், கோவில்களும் உள்ளன.

Vvnataraj

பள்ளத்தாக்கு

பள்ளத்தாக்கு


டெர்ரான் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள டோன்ஸ் பள்ளத்தாக்கு, சிடார் மரங்கள் மற்றும் ஆல்பின் காடுகள் நிறைந்திருக்கும். டோன்ஸ் ஆற்றங்களையை ஒட்டியே இந்த பகுதியும் உள்ளது. புகைப்பட விரும்பிகளாக நீங்கள் இருந்தால் எண்ணற்ற புகைப்படங்களை இங்கே எடுக்கலாம்.

Keshariiiitm

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்