Search
  • Follow NativePlanet
Share
» »வட இந்தியாவில் ஹனிமூன் செல்ல சிறந்த ஐந்து இடங்கள்

வட இந்தியாவில் ஹனிமூன் செல்ல சிறந்த ஐந்து இடங்கள்

கல்யாணம், ஹனிமூன் பற்றிய விஷயங்களை பற்றி அறிந்து கொண்ட நாளில் இருந்து நமக்கும் எப்போது கல்யாணம் நடக்கும் நமது காதல் மனைவியுடனோ அல்லது கணவருடனோ மனதுக்கு பிடித்த இடத்திற்கு சுற்றுலா செல்லலாம் என்ற ரகசிய ஆசை எப்போதுமே நம்மில் ஒவ்வொருவரிடமும் இருந்திருக்கும்.

அப்படி ஹனிமூன் செல்லும் இடம் இதுவரை நாம் சென்று பார்த்திராத, இதுவரை நாம் அனுபவித்திராத புதுமையான அனுபவத்தை தருவதாக இருக்க வேண்டும். அப்படி புதுமையான ஒரு இடத்திற்கு உங்கள் மனைவியையோ அழைத்து சென்று அசத்தலாம் என ஆசைப்படுகிறீர்களா? அல்லது கல்யாணம் இன்னும் கொஞ்ச நாளைக்கு இல்லை ஆனாலும் காதலியுடன் இப்போதிருந்தே அதற்காக திட்டமிடலாம் என எண்ணுகிறீர்களா?.

வாருங்கள் வட இந்தியாவில் ஹனிமூன் செல்ல சிறந்த இடங்கள் என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம். இன்பம் பகிர ஒரு சுற்றுலா செல்வோம்.

இன்றைய தின சிறப்பு சலுகை: ஹோட்டல் கட்டணங்களில் 50% தள்ளுபடி பெற்றிடுங்கள்

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

தாஜ் மஹால், காதல் உண்மையில் இத்தனை சக்தி வாய்ந்ததா என உலகை வியப்பின் உச்சிக்கே கொண்டு சென்ற அதிசய கலைப்புதையல். யமுனை ஆற்றின் கரையில் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட காதலின் சின்னமான தாஜ் மகாலை விட ஹனிமூனுக்கு செல்ல வேறு சிறந்த இடம் இருக்க முடியுமா என்ன?

Photo:ASIM CHAUDHURI

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

தாஜ்மஹாலை பார்க்கும் அந்த கணம் வார்த்தைகள் எல்லாம் பயனற்று போய் நமது அன்பானவருடன் கைகளை கோர்த்து விவரிக்க முடியாத பரவச அனுபவத்தை பெறலாம்.

Photo:Abe Bingham

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

வெண்பனி மெலிதாய் அகலும் காலை நேரத்தில் இங்கு செல்கையில் தாஜ்மஹாலின் பரிசுத்தமான அழகை மனம் குளிர ரசிக்கலாம்.

Photo:Koshy Koshy

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

தலைநகர் தில்லியில் இருந்து 204 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் ஆக்ராவை தேசிய நெடுஞ்சாலை 2இன் மூலமாக மூன்று மணி நேர பயணத்தில் சென்றடையலாம். மேலும் தில்லியில் இருந்து ஆக்ரா வரை 'Palace on Wheels' எனப்படும் ஆடம்பர ரயில் சேவை இந்திய ரயில்வே துறையால் நடத்தப்படுகிறது.

Palace on Wheels Photo: Setu.upadhyay

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

தாஜ் மகாலை தவிர்த்து ஆக்ரா கோட்டை, அக்பர் சமாதி, மனகாமேஸ்வரர் கோயில் போன்ற வேறு சில நல்ல சுற்றுலாத்தலங்களும் உள்ளன.

ஆக்ரா கோட்டை Photo:Ed Johnson

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

ஆக்ரா - காதலின் புனித ஸ்தலம் இருக்குமிடம்:

ஆக்ராவில் தங்குவதற்கு ஆடம்பரமான ஹோட்டல்கள் முதல் பட்ஜெட் ஹோட்டல்கள் வரை நிறையவே உள்ளன. ஆக்ராவில் உள்ள ஹோட்டல்களை பற்றி இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர்:

இன்றும் நாம் செல்லத் தயங்கும் பேரழகு வாய்ந்த ஒரு சுற்றுலாத்தலம் என்றால் அது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீநகர் தான். கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதத்தின் பிடியில் சிக்கி அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வரும் இந்நகரம் ஹனிமூன் செல்ல அற்புதமான ஓரிடமாகும்.

Photo:McKay Savage

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர்:

ஹிமாலய மலையை ஒட்டி அமைந்திருக்கும் ஸ்ரீநகரின் மிக முக்கியமான சுற்றுலாத்தலம் என்றால் அது தால் ஏரி தான். காஷ்மீரின் மணிமகுடம் என்ற புனைப்பெயருடன் அழைக்கப்படும் இந்த ஏரியில் படகு பயணம் போவதென்பது அத்தனை அழகான ஒரு அனுபவமாக இருக்கும். அதிகாலையிலும், மாலை வேளையிலும் சூரியன் நிகழ்த்தும் வர்ண ஜாலங்களை நாம் இங்கே காணலாம்.

Photo:Basharat Shah

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர்:

தால் எரியியை ஒட்டியே கிழக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது நிஷ்ஹத் பாக் என்னும் முகலாயர் காலத்தில் ஏற்ப்படுத்தப்பட்ட தோட்டம். 'நிஷ்ஹத் பாக்' என்றால் மகிழ்ச்சியின் தோட்டம் என பொருள்படுகிறது. அதற்க்கு ஏற்றவாறே இந்த தோட்டத்தில் இருந்து ஹிமாலய மலைகளின் பேரழகை எந்த தொந்தரவும் இன்றி ரசிக்கலாம்.

நிஷ்ஹத் பாக் Photo:McKay Savage

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகர்:

ஸ்ரீநகரை எப்படி அடையலாம்?

ஸ்ரீநகரில் உள்ள ஹோட்டல்கள் பற்றிய விவரங்கள்.

 லெஹ் - லடாக்:

லெஹ் - லடாக்:

கொஞ்சம் வித்தியாசமாக ஹனிமூனை கொண்டாடலாம் என நினைக்கிறீர்களா?. உங்களுக்கும் உங்கள் துணைக்கும் பைக்கில் பயணம் செய்ய பிடிக்குமெனில் இந்தியாவில் சாலைப்பயணம் போக மிகச்சிறந்த ஒன்று என சொல்லப்படும் லெஹ் முதல் லடாக் வரையிலான சாலைப் பயணத்தை மேற்கொள்ளுங்கள்.

Photo:varun suresh

 லெஹ் - லடாக்:

லெஹ் - லடாக்:

475 கி.மீ தூரமுள்ள இந்த பயணத்தின் போது ஹிமாலய மலைகளின் அற்புதமான இயற்கை காட்சிகளையும், பசுமை நிறைந்த பள்ளத்தாக்குகளையும், மலைமுகடுகளையும் நாம் காணலாம். இந்த பயணத்தின் போது உலகில் பயணம் செல்லத்தகுந்த மிக உயரமான சாலை, வண்டிகளை தானாகவே மேலே இழுத்து செல்லும் 'காந்த சாலை' போன்ற பல்வேறு அபூர்வமான விஷயங்களை இந்தப்பயனத்தின் வழியாக நாம் அனுபவிக்க முடியும்.

Photo:Claude Chauvin

 லெஹ் - லடாக்:

லெஹ் - லடாக்:

இப்படிப்பட்ட பயணங்கள் தான் உங்களுக்குள்ளான பந்தத்தை மேலும் உறுதியாக்கும். சவால் நிறைந்த தருணங்களை ஒன்றாக கடந்து வருவதை தவிர வேறொரு அழகான தருணம் இருக்க முடியாது.

Photo:Kunal Mukherjee

சிம்லா :

சிம்லா :

குளுகுளு ஜிலுஜிலுவென குளிர் நிறைந்த சிம்லா ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கிறது. பிரிட்டிஷ் காலத்தில் அவர்களின் கோடைகால தலைநகராக விளங்கிய இந்த நகரம் ஹனிமூனுக்காகவே கடவுளால் படைக்கப்பட்டது போன்று உள்ளது. சுற்றிப்பார்க்கவும், ஷாப்பிங் செய்திடவும், சாகச விளையாட்டுகளில் ஈடுபடவும் இங்கே ஏராளமான இடங்கள் உண்டு.

Photo:ShashankSharma2511

சிம்லா :

சிம்லா :

சிம்லா வரும் அனைவரும் தவறாமல் செல்ல வேண்டிய இடம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 'தி மால்' என்னும் ஷாப்பிங் வளாகத்திற்கு தான். சிம்லாவில் தயாரிக்கப்படும் பாரம்பரிய பொருட்கள் விற்கப்படும் கடைகள், உணவகங்கள், கேளிக்கை கிளப்புகள், குளிருக்கு இதமாக காபி குடிக்க என இங்கே ஏராளமான விஷயங்கள் உண்டு.

மால் ரோடு Photo:sushmab

சிம்லா :

சிம்லா :

இது தவிர ச்ரிஸ்ட் சர்ச், ஜக்ஹூ ஹனுமான் கோயில், சம்மர் ஹில் என சுற்றிப்பார்க்கவும் நல்ல நல்ல இடங்கள் இங்கே ஏராளமாக உண்டு. மேலும் வருட வருடம் உலக பிரசித்தி பெற்ற மலை சைக்கிள் பந்தையங்கள் இங்கே நடைபெறுகின்றன. பனிச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட நினைப்பவர்கள் டிசம்பர் முதல் பிப்ரவரி மாதத்தில் செல்வது நல்லது.

Photo:Nishanth Jois

சிம்லா :

சிம்லா :


எப்படி அடையலாம்?

எங்கு தங்கலாம்?

உதய்பூர் - இது ராஜ தேனிலவு:

உதய்பூர் - இது ராஜ தேனிலவு:

ஒரு நாள் முதல்வர் மாதிரி சில நாள் ராஜா போல வாழ ஆசையா? அப்படியென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள உதய்புருக்கு தான். பெரும் ராஜ பாரம்பரியம் கொண்ட இந்த நகரில் மன்னர் காலத்திய அரண்மனைகள் இன்றும் அப்படியே பராமரிக்கப்படுகின்றன. அங்கே தங்குகையில் நாமும் ஒரு அரசைப்போல உணர்வோம்.

உதய்பூர் - இது ராஜ தேனிலவு:

உதய்பூர் - இது ராஜ தேனிலவு:

உதய்பூர் அரண்மனை:

ராஜஸ்தானில் உள்ள அரண்மனைகளில் வைத்து அளவில் மிகப்பெரியதாகவும், சுற்றுலாப்பயணிகளால் அதிகம் விரும்பப்படும் அரண்மனையாகவும் இருக்கிறது இந்த உதய்பூர் அரண்மனை. ஒரு அரண்மனையாக இல்லாமல் மகாராணா உதய் சிங் மற்றும் அவருக்கு பின் வந்த அரசர்களால் பல்வேறு காலகட்டங்களில் கட்டப்பட்ட பல அரண்மனைகளின் வளாகமாகவே இந்த உதய்பூர் அரண்மனை இருக்கிறது.

யானை சவாரி செய்தபடி இந்த அரண்மனையில் உலா வருவது மறக்க முடியாத அனுபவமாக அமையும்.

Photo:Dennis Jarvis

உதய்பூர் - இது ராஜ தேனிலவு:

உதய்பூர் - இது ராஜ தேனிலவு:

பதெஹ் சாகர் ஏரி:

உதய்புரில் உள்ள ஏரிகளில் மிக அழகானதாக இது வர்ணிக்கப்படுகிறது. 1680களில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாகும். இந்த ஏரியினுள் மூன்று சிறிய தீவுகள் உள்ளன. ஒரு தீவில் நேரு பூங்காவும், வனவிலங்கு காட்சியகமும் உள்ளது. மற்றறொரு தீவினுள் நவீனமான 'Water-Jet' நீருற்றுடன் கூடிய பூங்கா ஒண்டு அமைந்திருகிறது. மூன்றாவது தீவில் உதய்பூர் வான் ஆராய்ச்சி நிலையம் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட்-செப்டம்பர் மாதங்களில் 'ஹர்ஷலி அமவஷ்ய மேளா' என்னும் திருவிழா இந்த ஏரியின் கரையில் கொண்டாடப்படுகிறது.

Photo:Souvik Das Gupta

என்றென்றும் புன்னகை:

என்றென்றும் புன்னகை:

ஹனிமூன் தான் என்றில்லை உங்கள் வாழ்க்கைத் துணையுடன் எப்போது வட இந்தியாவிற்கு சுற்றுலா செல்ல நினைத்தாலும் மேலே சொன்ன இடங்களுக்கு சென்று வாருங்கள்.

Photo:Nishanth Jois

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X