Search
  • Follow NativePlanet
Share
» »அழிந்துவரும் வங்கப்புலிகளைப் பாதுகாக்கும் ஒரே பூங்கா!

அழிந்துவரும் வங்கப்புலிகளைப் பாதுகாக்கும் ஒரே பூங்கா!

அழிந்துவரும் வங்கப்புலிகளைப் பாதுகாக்கும் ஒரே பூங்கா! இந்தியாவின் தேசிய விலங்கு புலி. அட அதைத்தான் மன்னர்காலத்திலேயே சுட்டு வேட்டையாடு அருகிவரும் அழிந்த இனமாக மாற்றிவிட்டோமே... இப்போது அதை எங்கே காண்ப

By Udhaya

இந்தியாவின் தேசிய விலங்கு புலி. அட அதைத்தான் மன்னர்காலத்திலேயே சுட்டு வேட்டையாடு அருகிவரும் அழிந்த இனமாக மாற்றிவிட்டோமே... இப்போது அதை எங்கே காண்பது? இந்தியாவின் பெருமையே பல்லுயிர்த்தன்மைதான். உலகின் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு உயிரினம் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் பல இனங்கள் ஒன்றுகூடி வாழும். மனிதர்கள் மட்டுமல்ல விலங்குகளும்தான். ஆம்.. இந்தியாவில் நிறைய வகை இனங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன. ஆனால் ஒன்று இரண்டு என்று சொச்ச எண்ணிக்கையில்தான். நம்புங்கள்... இப்போதுதான் அரசும் சரி, மக்களாகிய நாமும் சரி குறைந்து வரும் அல்லது அழிந்துவரும் இனங்களை கண்டு அதைப் பேணிக் காக்க முயற்சி மேற்கொண்டு வருகிறோம். சரி வாருங்கள் உத்தரகண்ட் மாநிலத்தில் இருக்கும் பூங்காக்களுக்கு சென்று வரலாம்.

உத்தரகண்ட்டில் இருக்கும் பூங்காக்கள்

உத்தரகண்ட்டில் இருக்கும் பூங்காக்கள்

கார்பெட் தேசிய பூங்கா

கோவிந்த் தேசிய பூங்கா

நந்தாதேவி தேசியபூங்கா

பூக்களின் பள்ளத்தாக்கு

ராஜாஜி தேசிய பூங்கா

கங்கோத்ரி தேசிய பூங்கா


உத்ரகண்ட்டில் இருக்கும் காட்டுயிர் சரணாலயங்கள்

கோவிந்த் காட்டுயிர் சரணாலயம்

கேதார்நாத் காட்டுயிர் சரணாலயம்

ஆஸ்கோட் காட்டுயிர் சரணாலயம்

வினோக் மலை காடைகள் சரணாலயம்

ஆசன் காட்டுயிர் சரணாலயம்

ஹில்மில் காட்டுயிர் சரணாலயம்

Ashok.delhi17

 கார்பெட் தேசிய பூங்கா

கார்பெட் தேசிய பூங்கா

இயற்கையின் மடியில் ஓய்வெடுத்துக் கொண்டு வாழ்க்கையை அனுபவிக்க நினைக்கும் வனவிலங்கு ஆர்வலர்களின் சொர்க்கம் கார்பெட் தேசிய பூங்கா! முன்பு ராம்கங்கா தேசிய பூங்கா என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த பூங்கா 1957-ம் ஆண்டு கார்பெட் தேசிய பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. புகழ் பெற்ற பிரிட்டிஷ் வேட்டைக்காரர், இயற்கை ஆர்வலர் மற்றும் புகைப்படக் கலைஞருமான ஜிம் கார்பெட்டின் பெயராலேயே இந்த பூங்கா பெயர் பெற்றுள்ளது.

விலங்குகள்

ராம்கங்கா ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த இடத்தின் இயற்கை எழிலை காணும் வாய்ப்புகளுக்காகவும் மற்றும் சாகசப் பயணங்களுக்காகவுமே எண்ணற்ற சுற்றுப்பயணிகள் இங்கு வந்து செல்கின்றனர். புலிகள், சிறுத்தைப்புலிகள், யானைகள், புள்ளி மான்கள், சம்பார், ஹாக் மான்கள், தேவாங்கு கரடிகள், காட்டுப் பன்றி, குரல், லாங்கூர் மற்றும் ரெசுஸ் குரங்குகள் ஆகியவை இந்த பூங்காவில் காணப்படும் விலங்குகளாகும்.

பறவைகள்

இந்த பூங்காவைத் தாயகமாகக் கொண்டிருக்கும் 600 வகையான பறவைகளில் மயில்கள், பீஸன்ட், மாடப் புறா, ஆந்தை, ஹார்ன்பில், பார்பெட், லார்க், மைனா, மக்பி, மினிவெட், பாட்ரிட்ஜ், த்ரஷ், டிட், நுதாட்ச், வாக்டெயில், சன்பேர்டு, பன்டடீங், ஓரியோல், கிங்பிஷர், ட்ராங்கோ, புறா, மரங்கொத்தி, வாத்து, டீல், கழுகு, நாரை, கார்மோரன்ட், வல்லூறுகள், புல்புல் மற்றும் ஃப்ளை கேட்ச்சர் ஆகியவை அடங்கும். இவை மட்டுமல்லாமல், 51 வகையான புதர்களையும், 30 வகையான மூங்கில்களையும் மற்றும் 110 வகையான மரங்களையும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூங்காவில் கண்டு ரசித்திட முடியும்.

சுற்றுசூழலில் முக்கிய பங்கு வகிக்கும் ஆறுகள்

கார்பெட் தேசிய பூங்காவிற்கு செல்ல விரும்பும் சுற்றலாப் பயணிகள் பாட்டில் துன் பள்ளத்தாக்கின் முனையில் உள்ள திக்காலாவிற்கும் செல்லலாம். இந்த தேசிய பூங்காவின் சுற்றுப்புறச் சூழலை நிர்ணயிப்பதில் ராம்கங்கா ஆறு, மண்டல் ஆறு மற்றும் சோனாநாடி ஆறு ஆகியவை பெரும்பங்கு வகிக்கின்றன. மேலும் சுற்றுலாப் பயணிகள் 'சாட்ஸ்' (Sots) என்றழைக்கப்படும் பருவகால ஓடைகளையும் காணும் வாய்ப்பு கிடைக்கும். சீதாபனி கோவில் மற்றும் ராம்நகர் ஆகியவை இந்த பூங்காவின் இதர முக்கியமான பார்வையிடங்களாகும்.

எப்படி செல்வது

விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளால் நன்றாக இணைக்கப்பட்ட இடமாக ஜிம் கார்பெட் தேசிய பூங்கா உள்ளது. கோடை மற்றும் மழைக்காலங்களில் இந்த பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் வரலாம். நவம்பர் 15 முதல் ஜூன் 15 வரை மட்டுமே இங்கு பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இங்கு செல்லவிரும்புபவர்கள் கவனத்துக்கு

இந்த பூங்காவானது தலைநகர் டெல்லியில் இருந்து ஏறக்குறைய 260கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த பூங்காவுக்கு அருகில் இருக்கும் நகரம் ராம்நகர். இது டெல்லி, பைரேலி, மோராடாபாத் போன்ற இடங்களிலிருந்து நல்ல முறையில் விமானம், ரயில், சாலை இணைப்பைப் பெற்றுள்ளது.

டெல்லி அல்லது மொராடாபாத் நகரத்திலிருந்து உபி மாநில பேருந்துகளில் பயணித்து இங்கு வந்து சேரலாம். ராம்நகரிலிருந்து 15கிமீ தொலைவில் இந்த பூங்காவின் முகப்பு உள்ளது. டெல்லியிலிருந்து சாலை மூலம் அடைவதற்கு ஐந்தரை மணி நேரங்கள் ஆகின்றன.

ரயிலில் சென்றாலும் ராம்நகரில் இறங்கி, அங்கிருந்து பேருந்தில் செல்லவேண்டும்.

Harnoor1996

கோவிந்த் தேசிய பூங்கா

கோவிந்த் தேசிய பூங்கா

உத்ரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள உத்தரகாசி மாவட்டத்தில் உள்ளது கோவிந்த் தேசிய பூங்கா. இது கோவிந்த காட்டுயிர் சரணாலயத்தில் அமைந்துள்ளது. 953சகிமீ அளவுக்கு பரப்பளவு கொண்ட இந்த பூங்கா, கார்வால் பகுதியில் மிக அழகிய பூங்காவாகும். இங்கு மிகவும் கவர்ச்சியான மலைகள் சில காணப்படுகின்றன. அவை ஸ்வர்க் ரோஹினி, கறுப்பு சிகரம், பந்தர் பஞ்ச் ஆகியனவாகும்.

இங்கு டிரெக்கிங் செய்ய ஏற்ற இடம் என ஹார் கி டன் எனும் பகுதி அறியப்படுகிறது. நீங்கள் மலையேற்ற பிரியர் என்றால் உங்களுக்கு இது மிக அற்புதமான இடம்.

பார்ப்பதற்கு பச்சை பசேலென்று நாற்புறமும் காணக்கிடைக்கும் இயற்கை அழகு, உங்களை மலையின் உச்சியில் இருக்கும் ஆற்று நீர் தேக்கத்தை காண இட்டுச் செல்லும். யமுனா நதிக்கு நீர் சேர்க்கும் நீர் ஆதாரங்கள் பல இந்த மலையில்தான் இருக்கிறது.

அழிந்து வரும் அரிய இனங்கள் பலவற்றிற்கு இந்த காடு புகலிடமாக இருக்கிறது.

விலங்குகள்

தார், காட்டுப்பன்றி, புலிகள், பனிச்சிறுத்தை, அரிய வகை மான்கள், அரிய வகை ஆடுகள், சீரோ, கருப்பு கரடி, பழுப்பு நிற கரடி, கஸ்தூரி மான், சாம்பார், காக்கர், பைத்தான் என நிறைய உயிரினங்கள் இங்கு வாழ்ந்து வருகின்றன.


எப்படி செல்வது

அருகிலுள்ள விமான நிலையம் டேராடூன் ஜாலி கிராண்ட். இது 195 கிமீ தூரத்தில் உள்ளது.

அருகில் உள்ள ரயில் நிலையமும் டேராடூன்தான்.

சாலை வழியாக செல்வதென்றால் ரிஷிகேஸ் - உத்தரகாசி அல்லது முசுறி - சார் வழியாக சென்று சேரலாம்.

Ssaurism

நந்தாதேவி தேசியபூங்கா

நந்தாதேவி தேசியபூங்கா

நந்தா தேவி தேசியப் பூங்கா, ஜோஷிமத்திலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமாகும். சுமார் 630 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த தேசியப் பூங்கா, நாட்டின் இரண்டாவது பெரிய மலைத்தொடரான நந்தா தேவி மலைகளினால் சூழப்பட்டுள்ளது. இப்பூங்கா, 1988 ஆம் வருடம் யுனைட்டட் நேஷன்ஸ் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, இப்பூங்கா மேற்குப்புற இமாலய என்டமிக் பறவைப் பகுதியின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது.

விலங்குகள்

நந்தா தேவி தேசியப் பூங்காவில், பனிச்சிறுத்தை, இமாலயன் கறுப்புக்கரடி, செரோவ் வகை ஆடுகள், பழுப்பு நிற கரடி, ரூபி த்ரோட், பாரல் வகை ஆடுகள், கரடிக் குரங்குகள், க்ரோஸ்பீக் வகை பறவைகள், இமாலயன் கஸ்தூரி மான் மற்றும் இமாலயன் வரையாடுகள் போன்ற விலங்குகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது.

பறவைகள்

இந்த தேசியப் பூங்கா சுமார் 100 வகை பறவையினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. இங்கு அதிகமாகக் காணப்படும் பறவைகள், ஆரஞ்சு ஃப்ளாங்க்ட் புஷ் ராபின், நீல ஃப்ரன்டட் ரெட்ஸ்டார்ட், மஞ்சள் வயிறுடைய ஃபான்டெயில் ஃப்ளைகாட்சர், இந்திய மரவாழ் வானம்பாடிகள், மற்றும் செந்நிற நெஞ்சுப் பகுதி கொண்ட வானம்பாடிகள் ஆகியனவாகும். இப்பூங்கா சுமார் 312 வகை மலர்கள் மற்றும் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

எப்படி செல்வது

ரிஷிகேஸிலிருந்து ஜோஷிமத் 278 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதில் 25கிமீ மலைப்பாதையில் பயணிக்கவேண்டும்.

அருகிலுள்ள விமான நிலையம் டேராடூன். இது 315கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள ரயில் நிலையம் ரிஷிகேஸ் ஆகும். .

Charlesjsharp

 பூக்களின் பள்ளத்தாக்கு

பூக்களின் பள்ளத்தாக்கு

வேலி ஆஃப் பிளவர்ஸ் என்று அழைக்கப்படும் இந்த பூங்கா 7 சகிமீ பரந்து விரிந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த பூங்கா முழுவதும் பூக்களால் நிறைந்திருக்கும் என்பதே இதன் சிறப்பாகும். இது உலக பாரம்பரிய சின்னமாகும். அழகிய காட்சி தரும் இந்த இடத்தில் பாலிவுட், கோலிவுட் உட்பட பல படங்களும் தயாராகின.

காண்பவரை சொக்கி விழச் செய்யும் அளவுக்கு அதிக அழகை தன்னுள் கொண்ட இந்த பூங்காவுக்கு நீங்கள் செல்ல விரும்புகிறீர்களா

இந்த பூங்கா சண்டிகரில் இருந்து 422கிமீ, டெல்லியில் இருந்து 441கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

இதன் அருகிலுள்ள விமான நிலையம் 292கிமீ தொலைவில் உள்ள ஜாலி கிராண்ட் விமான நிலையம்தான்,. இங்கு தினமும் டெல்லியிலிருந்து விமானங்கள் இருக்கின்றன. சென்னை, பெங்களூரு உள்ளிட்ட தென்னக நகரங்களும் இதனுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் பயணிப்பவர் என்றால் உங்களுக்கான ரயில் நிலையம் ரிஷிகேஷ். இங்கு இறங்கி நீங்கள் இந்த பூங்காவுக்கு சாலை வழியாக பயணிக்க வேண்டும்.

ராஜாஜி தேசிய பூங்கா

ராஜாஜி தேசியப் பூங்காவும் உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள முக்கியமான பூங்காக்களில் ஒன்றாகும். உயரிய மற்றும் அழகிய பல்லுயிர்த் தன்மையோடு காணப்படும் இந்த பூங்காவுக்கு சமீப நாட்களில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

மொத்தம் 820.42 சகிமீ பரப்பளவில் விரிந்து காணப்படும் இந்த பூங்கா, நவம்பர் பாதியிலிருந்து ஜூன் பாதி வரை மட்டுமே திறந்திருக்கும்.

Dinesh Valke

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X