Search
  • Follow NativePlanet
Share
» »வெளிவுலகிற்கு தெரிந்திராத சிதம்பரத்தின் உண்மை வரலாறு இது!

வெளிவுலகிற்கு தெரிந்திராத சிதம்பரத்தின் உண்மை வரலாறு இது!

By Udhaya

12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிதம்பரம் கோயிலுக்கு இருக்கும் வரலாற்றைவிட இந்த ஊருக்கு மிகப்பெரிய வரலாறு உள்ளது. தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிதம்பரம் சோழர்காலத்தின் மிகப்பிரபலமான கோயில் நகரம். நான்கு திசைகளிலுமே நன்கு துல்லியமாக கட்டப்பட்ட அழகியலை விவரிக்க முடியா பேரழகு கொண்ட மிகப்பெரிய கோபுரங்களையும், அதில் அற்புதமான வடிவங்களையும் கொண்ட ஒரு கோயில் இதுவாகும். இந்த கோயிலைச் சுற்றி அமைந்த நகரமே சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. இந்நகரத்தின் வரலாற்றையும், சுற்றுலா அமைப்பையும் இந்த கட்டுரையில் விரிவாக காணலாம். ஆனா அதுக்கு முன்னாடி இந்த பக்கத்தில் மேல் பகுதியில் இருக்கும் பெல் பட்டனைத் தட்டி, இந்த தளத்திலிருந்து தொடர் அப்டேட்டுகளை பெறுங்கள். மேலும் நமது முகநூல் பக்கத்திலும் பின்தொடருங்கள். ஏதேனும் சுற்றுலாத் தொடர்பான சந்தேகங்களுக்கு முகநூல் பக்கத்தின் உள்டப்பியைத் தொடர்புகொள்ளுங்கள். தமிழ் நேட்டிவ் பிளானட்

பழமையும் ஆட்சியும்

பழமையும் ஆட்சியும்

உலகின் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு அதிக அளவு இன்றளவும் இயங்கும் பழமையான நகரங்களைக் கொண்டது, இந்தியா மட்டும்தான். அதிலும் தமிழகத்தின் புகழ் பாரெங்கும் பரவி நிற்கிறது. மூவேந்தர்கள் ஆட்சி செய்த ஒவ்வொரு இடத்தையும் தற்போது தமிழகம் சுற்றுலாத் தளமாகக் கொண்டுள்ளது. பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர பேரரசர்கள் என அவரவர் ஆட்சிகாலங்களில் இந்த கோயில் மிக அழகாக கட்டுமானப் புனரமைப்புப் பணிகள் செய்யப்பட்டதுடன், நிறைய நன்கொடையும் அளித்தது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராசர் கோயில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இங்கு மூலவராக அமர்ந்திருப்பது தில்லை நடராசர். இவருக்கு கூத்தன் எனும் பெயரும் உண்டு.

Richard Mortel

மானிட உடலில் சிவபெருமான்

மானிட உடலில் சிவபெருமான்

உலகில் எத்தனையோ சிவன் கோயில்கள் இருக்கின்றன. எல்லா கோயில்களிலும் சிவலிங்கமே கோயிலின் மூலவராக இருக்கும். சிவ பெருமான் எந்த கோயிலிலுமே மானிட உருவில் இல்லை. ஆனால் இந்த சிதம்பரம் கோயில் மட்டும் விதிவிலக்கு. சிவபெருமான மனித அவதாரத்தில் வீற்றிருக்கும், அதிலும் நடனமாடிய காட்சியிலேயே இருக்கும் உலகின் ஒரே கோயில் இதுமட்டும்தான். அவருக்கு உமையாளாக பார்வதி தேவியும், அவருடன் விநாயகர், முருகர், பெருமாள் ஆகியோரும் இங்கு இருக்கின்றனர்.

Richard Mortel

பரதநாட்டியத்தை தோற்றுவித்த கலைக் கடவுள்

பரதநாட்டியத்தை தோற்றுவித்த கலைக் கடவுள்

பொதுவாகவே பரதநாட்டியம் ஆடுபவர்கள் தில்லை நடராசரை வணங்கியே ஆடுவார்கள்,. அவரே இந்த கலையின் கடவுளாக போற்றப்படுகிறார். இவரது நடன அசைவுகளிலிருந்தே பரதநாட்டியம் எனும் கலை பிறந்ததாக நம்பப்படுகிறது. சிதம்பரம் கோயிலுக்கு சென்று பாருங்கள். இந்த கோயிலின் சிற்பங்கள் அனைத்தும் பரத கலையின் முத்திரைகளை வைத்துள்ளதுபோலிருக்கும்.

Richard Mortel

மதுரைக்கு அடுத்து சிறப்புடையது

மதுரைக்கு அடுத்து சிறப்புடையது

இந்த கோயில் நூல்கள் இயற்றுவதில் மதுரைக்கு அடுத்து சிறப்புடையதாக போற்றப்படுகிறது. மதுரையில் தமிழின் முதுபெரும் நூல்கள் பல இயற்றப்பட்டுள்ளது. திருக்குறள் கூட மதுரையில் இயற்றப்பட்டதுவே ஆகும். அதுமாதிரி இந்த கோயிலில் திருமூலர் முனிவர் தனது திருமந்திரம் எனும் நூலில் இக்கோயிலைப் புகழ்ந்து நிறைய பாடல்கள் எழுதியுள்ளார். மேலும் இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆணைக்கு இணங்க 63 நாயன்மார்களின் வாழ்க்கை வரலாற்றை சேக்கிழார் தில்லை நட ராசர் கோயிலில் இருந்துதான் எழுதியுள்ளார். இங்குள்ள ஆயிரம் கால் மண்டபத்திலேயே இந்த நூல் இயற்றப்பட்டுள்ளது.

Ssriram mt

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

தில்லை நடராசர் கோயில் அமைந்துள்ள சிதம்பரம் நகருக்கு புராண காலத்தில் நிறைய பெயர்கள் இருந்துள்ளன. அவற்றில் தில்லை, பெரும்பற்ற புலியூர், தில்லை வனம் என்பவை பலரால் அழைக்கப்பட்டு வந்த பெயராகும். தில்லை மரங்கள் நிறைந்து வளர்ந்த இடங்கள் ஆதலால் இதற்கு தில்லை எனும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இது திருச்சிற்றம்பலம் என்றும் அழைக்கப்பட்டது. சிற்றம்பலம் என்பது மருவியே சிதம்பரம் ஆகியிருக்கிறது.

Ssriram mt

 தங்கக்கூரை வேயப்பட்ட முதல் கோயில்

தங்கக்கூரை வேயப்பட்ட முதல் கோயில்

இந்திய கோயில்களிலேயே தங்கத்தில் கூரை வேயப்பட்ட முதல் கோயில் சிதம்பரம் தில்லை நடராசர் கோயில் என்று நம்பப்படுகிறது. பெரும்பாலும் நிறைய பேருக்கு தெரிந்து பஞ்சாப் பொற்கோயிலிலும், சபரி மலை அய்யப்பன் கோயிலிலும் பொற்கூரை உள்ளது.

சோழர் ஆட்சிகாலத்தில் முதலாம் பிராந்தகன் எனும் மன்னர் இந்த அரும்பெரும்காரியத்தைச் செய்து முடித்தார். அவரது முயற்சியினால் தில்லை நடராசர் கோயிலுக்கு தங்க கூரை கிடைத்தது. இதனால் பொன்கூரை வேய்ந்த தேவன் எனும் பெயர் கிடைத்தது.

Nittavinoda

மாயம் செய்யும் மரகதக் கல்

மாயம் செய்யும் மரகதக் கல்

புதுக்கோட்டை பேரரசர் சேதுபதி அவர்களால் இந்த கோயிலுக்கு ஒரு மரகதக் கல் தானமாக அளிக்கப்பட்டது. இந்த மரகதக் கல் செய்யும் மாயம் இங்கு வரும் பக்தர்களை புத்துணர்வு அடையச் செய்கிறது. கோயிலின் வெளிப்புறத்திலிருந்து வரும் பக்தர்கள் கோயிலுக்குள் வருவதற்குள்ளாகவே கலைப்படைந்துவிடுகின்றனர். ஆனால் அவர்கள் சிதம்பரம் நடராசரை பார்த்ததும் புத்துணர்வு பெறுகின்றனர். இதற்கு காரணம் அந்த மரகத கல்தான் என்று நம்பப்படுகிறது.

Ms Sarah Welch

 அறிவியலுக்கு ஈடு கொடுக்கும் அற்புத கணக்குகள்

அறிவியலுக்கு ஈடு கொடுக்கும் அற்புத கணக்குகள்

தில்லை நடராசர் கோயில் ஆன்மீகத்துக்கு மட்டுமல்ல அறிவியல் பார்வையில் பார்க்கும்போதும் பல கேள்விகளை நமக்கு உதிர்த்திவிட்டு செல்கிறது,. காளகஸ்தி, காஞ்சிபுரம், தில்லை நடராசர் கோயில் ஆகிய மூன்று கோயில்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன. வடக்கிலிருந்து தெற்கு நோக்கும்போது மிகத் துல்லியமாக இந்த அமைவு உள்ளது. அப்படியானால் அந்த காலத்தில் இதை எப்படி கணித்து கட்டியிருப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி. இது இன்றைய அறிவியலுக்கு கொடுக்கப்படும் சவாலாக இருக்கிறது..

Richard Mortel

மனித இனத்தின் அருமை சொல்லும் கணக்குகள்

மனித இனத்தின் அருமை சொல்லும் கணக்குகள்

இந்த கோயிலில் மொத்தம் ஒன்பது நுழைவு வாயில்கள் இருக்கின்றன. அவற்றில் இந்த 9 எனும் எண் குறிப்பது நம் உடலில் இருக்கும் ஒன்பது நவத் துவாரங்களையும் ஆகும். மேலும் கருவறையில் 21 ஆயிரத்து 600 தங்கத் தகடுகள் இருக்கின்றன. 72 ஆயிரத்து ஆணிகளைக் கொண்டு பதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு மனிதன் சுவாசிக்கும் கணக்கு. எழுபத்தி இரண்டாயிரம் என்பது மனித உடலில் இருக்கும் நரம்புகள் என்பது நிச்சயம் அறிவியலை ஆச்சர்யம் கொள்ளச் செய்யும் கணக்குதானே.

மேலும் இங்கு சித்ர சபை, கனக சபை, நாட்டிய சபை, ராஜ சபை, தேவ சபை என்று அழைக்கப்படும் ஐந்து சபைகள் இருந்துள்ளது. இக்கோயிலில் இருக்கும் புனித குளம் சிவ கங்கை என்று அழைக்கப்படுகிறது.

Ssriram mt

பிக் பாங்க் தியரி சொல்லும் வரலாறு

பிக் பாங்க் தியரி சொல்லும் வரலாறு

பலர் பிக் பாங்க் தியரி உருவாவதற்கு முன்னரே உலகம் எப்படி தோன்றியது என்ற தத்துவத்தை தில்லை நடராசர் கூறியுள்ளதாக நம்புகின்றனர். அதாவது இந்த உலகம் ஒலியின் மூலம் தொடங்கியது. ஒரு பெரிய வெடிப்புதான் இந்த உலகம் தோன்றியதற்கு காரணம். அதன்படி, இந்த கோயிலின் மூலவரான ஒரே இடத்தில் நில்லாமல், ஆடிக்கொண்டே இருக்கிறார். வலது புறத்தில் ஒரு கையில் உடுக்கையும், இடது புறத்தின் ஒரு கையில் தீயையும் வைத்துள்ளார் நடராசர்.

ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, அதன்படித்தான் சிவனை அழிக்கவோ ஆக்கவோ முடியாது. சிவன் என்பது வேறு யாரும் இல்லை ஆற்றல்தான் என்பதற்கு சான்றாகத் தான் இந்த கோயில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

Destination8infinity

 பொது தகவல்கள்

பொது தகவல்கள்

சிறப்பு - கோயில்கள்

சென்னையிலிருந்து தொலைவு -

வருடத்தின் எல்லா நாட்களிலும் பயணம் செய்யலாம்

எப்படி செல்வது

ரயில் மூலமாக

விருத்தாச்சலம் ரயில் நிலையம் சிதம்பரத்திலிருந்து 54 கிமீ தூரத்தில் உள்ளது . இங்கிருந்து மயிலாடுதுறை சந்திப்பு 41 கிமீ தூரத்தில் உள்ளது. பாண்டிச்சேரியிலிருந்தும் இங்கு ரயில் வசதிகள் உள்ளன.

பேருந்து

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் இங்கு வருகை தரலாம். மேலும் சென்னையிலிருந்து அடிக்கடி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருச்சி, தஞ்சாவூர் பேருந்து நிலையங்களிலிருந்து எளிதில் இந்த ஊரை அடையமுடியும்.

Melanie Molitor

சிதம்பரம் சுற்றுலா வழிகாட்டி

சிதம்பரம் சுற்றுலா வழிகாட்டி

சிதம்பரம் செல்ல உங்களுக்கு உதவி புரியும் சிதம்பரம் சுற்றுலா வழிகாட்டி (Chidambaram Travel Guide in tamil) இதுவாகும். வாருங்கள் சென்னையிலிருந்தும், கோயம்புத்தூரிலிருந்து சிதம்பரத்தை எப்படி அடைவது என்று பார்க்கலாம்.

சென்னை - சிதம்பரம்

சென்னையிலிருந்து சிதம்பரத்துக்கு இரண்டு வழித்தடங்கள் உள்ளன.

ஒன்று சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை மற்றொன்று கிழக்கு கடற்கரைச் சாலை.

முதல் வழித்தடம்

இந்த வழித்தடத்தில் நீங்கள் பயணிக்க விரும்பினால் ஐந்து மணி நேரத்தில் சிதம்பரத்தை அடைந்துவிடலாம். ஆனால் அதே நேரம் இங்கு போக்குவரத்து நெரிசல் இருந்தால் கொஞ்சம் தாமதமாகும். மொத்த தொலைவு 244 கிமீ ஆகும்.

இரண்டாவது வழித்தடம்

கிழக்கு கடற்கரைச் சாலையில், கடற்கரையை ரசித்துக் கொண்டே வரலாம். மொத்த தொலைவு 219 கிமீ. இந்த வழியில் மகாபலிபுரம், பாண்டிச்சேரி ஆகிய இடங்களும் வருகின்றன. நீங்கள் பல நல்ல சுற்றுலாவை இங்கு அனுபவிக்கலாம்.

கோயம்புத்தூர் - சிதம்பரம்

கோயம்புத்தூரிலிருந்து சிதம்பரம் மொத்தம் இரண்டு வழிகள் இருந்தாலும் வழக்கமாக திருப்பூர், ஈரோடு வழியாக சேலம் வந்தடைந்து, விருத்தாச்சலம் வழியாக சிதம்பரத்தை அடைவதே சிறந்த வழியாக அமையும்.

 பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்

பிச்சாவரம் மாங்குரோவ் காடுகள்

சிதம்பரம் அருகே இருக்கும் இந்த இடம் பிச்சாவரம் என்று அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளமாக விளங்கும் இந்த இடம் மிகப்பெரியதாகவும், இயற்கையை நேசிப்பவர்கள் அதிகம் வருகை தரும் இடமாகவும் அமைந்துள்ளது.

எங்கே உள்ளது

சிதம்பரத்திலிருந்து 14 கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த பிச்சாவரம். குறுக்கும் நெடுக்குமாக இங்கு நிறைய தீவுக்கூட்டங்கள் காணப்படுகின்றன.

பறவைகள்

புலம்பெயர் வெளிநாட்டு பறவைகளின் தங்குமிடமாக இது அமைந்திருக்கின்றது. வாட்டர் ஸ்னிப்ஸ், ஹர்ரான், பெல்லிக்கன், கார்மாராண்ட்கள் மற்றும் ஈக்ரட் ஆகிய பறவைகள் மிக அதிக அளவில் இங்கு வருகை தந்து செல்கின்றன.

படகுப் பயணம்

பிச்சாவரம் காடுகளுக்குள் படகுப் பயணம் செய்து சுற்றிப் பார்க்க முடியும் என்பது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றுமொரு அம்சமாகும். இந்த ஏரிகளை காலையில் சூரிய உதயத்தின் போது காண வருவது கண்களுக்கு மிகவும் விருந்தளிக்கும் காட்சியாக இருக்கும்.

Karthik Easvur

 ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயில்

ஆயிரம் ஆண்டு பழமையான சிவன் கோயில்

சிவபுரி என்று தற்போது அழைக்கப்படும் இந்த திருநெல்வாயில் ஊரில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து 3 கிமீ தூரத்தில் இது அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவர் உச்சிநாதர் என்று அழைக்கப்படுகிறார். இந்த கோயிலின் பெயர் உச்சிநாதர் கோயில் என்றாலும் இப்பகுதி மக்கள் தேவியின் பெயரால் கனகாம்பிகை எனும்படியே அழைக்கின்றனர்.

Ssriram mt

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X