Search
  • Follow NativePlanet
Share
» »எல்லாரும் விரும்பும் குதுரேமுக், அப்படி என்னதான் இருக்கு ?

எல்லாரும் விரும்பும் குதுரேமுக், அப்படி என்னதான் இருக்கு ?

புதுவிதமான சுற்றுலா, அமைதியான சூழல், பசுமைக் காட்டில் பயணிக்க வேண்டும் என விரும்புவோர் ஒரு முறை இங்கே போய் பாருங்க.

கர்நாடகாவில் சிக்மகளூர் மாவட்டத்தை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதிதான் குதுரேமுக் மலைச் சிகரம். பிரபலமான சுற்றுலாத் தலமான இந்த மலைப் பரிதேசம் அடர்ந்த காடுகள், அருவிகள், ஆறுகள் என பல அற்புதங்களை சுற்றுலாப் பயணிகளுக்கு அளித்து வருகிறது. புதுவிதமான சுற்றுலாத் தலம், அமைதியான சூழல், இயற்கையுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என விரும்புவோருக்கு குதுரேமுக் சிகரம் வித்தியாசமான அனுபவத்தைத் நிச்சயம் தரும். அப்படி அங்கே என்னதான் உள்ளது என பார்க்கலாமா ?

குதுரேமுக்

குதுரேமுக்


குதுரேமுக் பகுதியில் ஏராளமான சுற்றுலாத் தலங்கள் பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்ளன. இதில், குதுரேமுக் தேசியப்பூங்கா, லக்யா டேம், ஹனுமான் குந்தி அருவி, குதுரேமுக் சிகரம், சாகச மலையேற்றம், இரும்புத்தாது நிறுவனம் போன்றவை பிரசிதிபெற்றவை.

Karunakar Rayker

குதுரேமுக் சிகரம்

குதுரேமுக் சிகரம்


கடல் மட்டத்திலிருந்து 1894 மீட்டர் உயரத்தில் இருக்கும் குதுரேமுக் சிகரம் டிரெக்கிங் பயணிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். இப்பகுதிக்கு வருவோர் நிச்சயம் இந்த பசுமை நிறைந்த மலைத் தொடருடன் இணைந்து விடுவர். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் குதுரேமுக்கில் இருந்து அரபிக்கடலின் அழகையும் கூட கண்டு ரசிக்க முடியும்.

Bhanurising

குதுரேமுக் டிரெக்கிங்

குதுரேமுக் டிரெக்கிங்


குதுரேமுக் டிரெக்கிங் முல்லோடி என்ற இடத்திலிருந்து தொடங்குகிறது. முல்லோடியிலிருந்து குதுரேமுக் சிகரம் சுமார் 9 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நண்பர்களுடன் திட்டமிட்டு இங்கே மலையேற்றத்தில் ஈடுபடுவது பல நினைவுகளையும், அனுபவங்களையும் தரும். முன்னதாக வனத்துறையிடம் மலையேற்றத்திற்கு அனுமதி பெறுவது கட்டாயம்.

Gvarma.biomed

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்


லக்யா அணை

குதுரேமுக் மலைப்பிரதேசத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் லக்யா அணையும் ஒன்று. இந்த அணை குதுரேமுக்கிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. குதுரேமுக் இரும்புத் தாது நிறுவனத்தால் கட்டப்பட்ட இந்த அணை பாத்ரா நதியின் துணை நதியான லக்யா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளதுஇந்த அணை குதுரேமுக் இரும்பு தாது நிறுவனத்தால் கட்டப்பட்டது. இந்த அணை பாத்ரா நதியின் துணை நதியான லகியா ஆற்றின் குறுக்கே அமைந்துள்ளது. குதுரேமுக் தேசிய பூங்காவின் ஒரு பகுதியாக அமைந்துள்ள இந்த அணை சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கு இடமாக உள்ளது.

solarisgirl

இரும்புத்தாது நிறுவனம்

இரும்புத்தாது நிறுவனம்


குதுரேமுக் பகுதி இரும்புத்தாது உற்பத்திக்காக மிகவும் பிரபலம். உலகின் மிகப்பெரிய இரும்புத்தாது நிறுவனங்களில் ஒன்றாக குதுரேமுக் இரும்புத்தாது நிறுவனம் திகழ்கிறது. பயணிகள் உள்ளே செல்ல அனுமதி இல்லாவிட்டாலும் பசுமைக் காடுகளின் நடுவே பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் நிறுவனத்தின் கட்டிடங்களை காண முடியும்.

e900

ஹனுமான் குந்தி அருவி

ஹனுமான் குந்தி அருவி


ஹனுமான் குந்தி அருவி குதுரேமுக் தேசியப்பூங்காவில், கர்கலா அணை மற்றும் லக்யா அணைக்கு இடைப்பட்ட பகுதியில் 100 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அருவிக்கு செல்ல வனத்துறையால் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்வதற்கு குதுரேமுக் அடர்ந்த காடு வழியாக பயணிகள் நடந்து செல்ல வேண்டும்.

ACKSEN

குதுரேமுக் தேசியப்பூங்கா

குதுரேமுக் தேசியப்பூங்கா


குதுரேமுக் தேசியப்பூங்காவானது மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் பாதுகாக்கப்பட்ட வனப்பிரதேசமாகும். பசுமைப் பள்ளத்தாக்குகளையும், பசுமை மாறாக் காடுகளையும் கொண்டுள்ள இங்கு சிறுத்தை உள்ளிட்ட பல விலங்குகள் உள்ளது. கர்நாடகாவில் உள்ள முக்கியமான தேசிய பூங்காவாக குதுரேமுக் தேசிய பூங்கா இருக்கிறது.

Manu gangadhar

எப்படி செல்வது ?

எப்படி செல்வது ?


குதுரேமுக் பிற நகரங்களுடனும், மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளால் நல்ல முறையிலும் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் சொகுசுப் பேருந்துகள், குளிர்சாதன சொகுசு வாகனங்கள் கர்கலா, மங்களூர், பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து இங்கே வர இயக்கப்படுகின்றன.

Kishrk91

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X