Search
  • Follow NativePlanet
Share
» »வாஜ்பாயை நாயகனாக்கிய போக்ரானின் மறுபக்கம் தெரியுமா ?

வாஜ்பாயை நாயகனாக்கிய போக்ரானின் மறுபக்கம் தெரியுமா ?

அப்துல் கலாம் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில் நடைபெற்ற அணு ஆயுத சோதனை ஓர் வரலாற்றுச் சரித்திரமே. இச்சோதனை நடந்த போக்ரான் தற்போது எப்படி இருக்கு தெரியுமா ?

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இவ்வுலகின் அசைக்க முடியாத மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்து வந்தார். மூத்த தலைவர் என்ற ஒற்றை சிறப்பு மட்டுமின்றி மேலும் பல சாதனை நாயகனாகவும் அரசியல் கலத்தில் அசைக்க முடியாத தலைவராகவும் தன்னை முன்னிருத்தினார் வாஜ்பாய். அப்போதைய சிறப்புப் பணிகளில் கறிப்பிடத்தக்க சிலவற்றில் இவர் மேற்கொண்ட போக்ரான் அணு ஆயுத சோதனை உலகமே வியந்து, அதிர்ந்து நோக்கிய ஒன்று. இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி, மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இருந்த அப்துல் கலாம் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகிய இருவரின் கட்டுப்பாட்டில் நடைபெற்ற இது இன்றும் ஓர் வரலாற்றுச் சரித்திரமே. இச்சோதனை நடந்த போக்ரான் தற்போது எப்படி இருக்கு தெரியுமா ?

வல்லரசு இந்தியா

வல்லரசு இந்தியா


வல்லரசு இந்தியா என்ற வார்த்தையைக் கேட்டாலும் சரி, பார்த்தாலும் சரி ஒரு நொடியில் தோன்றும் உருவம் நம் அப்துல் கலாம் ஐயா தான். அவர் கூறிச் சென்றது போல அது வெறும் வார்த்தை மட்டுமல்ல. வல்லரசுக்கான விதை என்றாலும் மிகையாகாது. உலகிலேயே அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா என 9 நாடுகளிடம் தான் அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று இந்தியா. பாதுகாப்பு துறையில் வல்லரசு நாடாக இந்தியாவை மாற்ற உதவியது வாஜ்பாய் காலத்தில் அப்தல் கலாம் தலைமையில் போக்ரானில் மேற்கொள்ளப்பட்ட அணு ஆயுத சோதனைதான்.

Public.Resource.Org

போக்ரான்

போக்ரான்

ராஜஸ்தான் மாநிலம் தார் பாலைவனத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள சிறிய நகரம் தான் போக்ரான். உப்புப்பாறைகள் சூழ மனிதர் வாழத் தகுதியற்ற பகுதிபோல காட்சியளிக்கும் இது இங்கே மேற்கொள்ளப்பட்ட அணு ஆயித பரிசோதனையால் இன்று உலகம் அறிந்த ஊராக மாறியுள்ளது.

போக்ரான் சிறப்புகள்

போக்ரான் சிறப்புகள்


போக்ரான் நகரம் சுற்றுலாப் பயணிகளால் அதிகம் பயணிக்கப்படாத இடமாக இருந்தாலும் இங்கே உள்ள கோட்டைகளும், ஹவேலியும், ஆன்மீகத் தலமும் புகழ் பெற்ற தளங்களாக உள்ளது. இவற்றுள் முக்கிய சுற்றுலா அம்சமாக இருப்பது பாலாகர் என்னும் பொக்ரான் கோட்டை ஆகும்.

Archan dave

பொக்ரான் கோட்டை

பொக்ரான் கோட்டை


சம்பாவத் ஆட்சியின் போது 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பொக்ரான் கோட்டை இதன் கட்டிட நயத்திற்காகவும், வரலாற்றுப் பின்னணிக்காவும் நாடுமுபவதும் அறியப்படுகிறது. குறிப்பாக, கோட்டையின் வளாகத்திலேயே செயல்படும் அருங்காட்சியகம் இன்றும் இங்கே பயணிகள் வந்து செல்வதை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது எனலாம். இதனுள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ராஜ வம்சத்தினரின் ஆடம்பர மற்றும் பாதுகாப்பு உடைகள், ஆயுதங்கள், அவர்கள் பயண்படுத்திய மண் பாண்டங்கள் உள்ளிட்டவை வரலாற்று ஆர்வலர்கள் கண்டு ரசிக்க ஏற்றது.

Archan dave

சிவப்பு அரண்மனைகள்

சிவப்பு அரண்மனைகள்


பொக்ரான் கோட்டை வளாகத்திற்கு உள்ளேயே சிவப்பு மணற் பாறைகளால் அன அழகிய அரண்மனைகளும், பழமைவாய்ந்தாலும் கம்பீரமாக காட்சியளிக்கும் கோபுரங்களும் இன்றும் பார்ப்போர் மனதை ஈர்க்கக் கூடியது தான். குறிப்பாக, முகலாய மற்றும் ராஜபுத்திர கட்டிடக்கலைக்கு உதாரணமாக இக்கோட்டை திகழ்கிறது.

Archan dave

கீச்சன்

கீச்சன்

போக்ரானில் இருந்த 66 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள முக்கிய சுற்றுலாத் தலம் தான் கீச்சன் பறவைகள் சரணாலயம். ராஜஸ்தானிற்கு உட்பட்ட பாலவனப் பகுதியாக கீச்சன் இருந்தாலும் இதன் அழகிய நிலத் தோற்றம் இக்கிராமத்தை நோக்கி உலகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பனிக் காலத்தில் பறவைகள் புலம்பெயர்ந்து வரக் காரணமாக உள்ளது. குறிப்பாக, இங்கே நிலவும் குளிர் காலத்தின் போது வரும் அதிகப்படியான இளநாரைகளை பார்பதற்காக சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் இங்கே சுற்றுலா வருவது வாழக்கம்.

राजू जांगिड़

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X