Search
  • Follow NativePlanet
Share
» »ஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் ?

ஒன்டே வேலூரில் எங்கவெல்லாம் சுற்றுலாம் ?

வேலை நிமிர்த்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ வேலூர் சென்றால் ஒரே நாளில் எங்கவெல்லம் சுற்றிப் பார்க்கலாம் ?.

வேலூர் நகரம் பல முக்கிய சுற்றுலா மற்றும் வரலாற்று அம்சங்களை உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளுக்கு அளிக்கிறது. இம்மாவட்டத்தில் உள்ள கோட்டையானது கிரானைட் கற்களால் கட்டப்பட்ட ஒரு வரலாற்று சின்னமாக ஒட்டுமொத்த நகரின் அடையாளமாகவும் திகழ்கிறது. இது தவிர மணிக்கூண்டு, அரசு அருங்காட்சியகம், ஃப்ரெஞ்சு பங்களா மற்றும் பாலாற்றின் கரையில் உள்ள முத்து மண்டபம் உள்ளிட்ட நினைவுச்சின்னங்கள் பயணிகளை வெகுவாக ஈர்க்கும். வேலை நிமிர்த்தமாகவோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ வேலூர் சென்றால் ஒரே நாளில் எங்கவெல்லம் சுற்றிப் பார்க்கலாம் ?.

காவலூர் வானோக்கு ஆய்வு மையம்

காவலூர் வானோக்கு ஆய்வு மையம்


வைனு பாப்பு அப்சர்வேட்டரி என்று அழைக்கப்படும் இந்த காவலூர் வானோக்கு மையமானது ஜவ்வாது மலையில் ஆலங்காயம் எனும் இடத்தில் உள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய வானோக்கியை கொண்டுள்ளது. காவலூர் வானோக்கு மையத்தில் 1 மீட்டர் கார்ல் ஜெய்ஸ் லென்ஸ்ம், 2.3 மீட்டர் ஆடியைக்கொண்ட வைனு பாப்பு எனும் மற்றொரு வானோக்கியும் இந்த மையத்தில் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. சனிக்கிழமைகளில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இந்த மையத்தில் பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

Prateek Karandikar

ஸ்ரீபுரம் தங்கக்கோவில்

ஸ்ரீபுரம் தங்கக்கோவில்


ஸ்ரீபுரம் தங்கக்கோவிலுக்கு பயணம் செய்யும் பயணிகள் கடுமையான உடை விதிமுறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அரைக்காற்சட்டை போன்ற உடைகள் இக்கோவிலின் உள்ளே அணிந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கைபேசி, கேமரா போன்ற மின்னனு சாதனங்களும் தடை செய்யப்பட்டிருக்கின்றன. காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை வருடம் முழுவதும் இக்கோவில் பக்தர்களுக்காக திறக்கப்படுகிறது.

Dsudhakar555

மொர்தானா அணை

மொர்தானா அணை


வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் 8 தொலைவில் மொர்தானா அணை அமைந்துள்ளது. வேலூர் பகுதியில் ஒரு அழகிய சிற்றுலாத்தலமாக இந்த அணைப்பகுதி உள்ளது. இந்த அணைக்கு அருகிலேயே கௌண்டின்யா காட்டுயிர் சரணாலயம், வடபள்ளி ஸ்ரீ வெங்கடேஷ்வரா கோவில் உள்ளிட்ட தவறவிடக்கூடாத சுற்றுலாத் தலங்கள் அமைந்துள்ளன.

Vfuller09

அம்ரிதி விலங்கியல் பூங்கா

அம்ரிதி விலங்கியல் பூங்கா


அம்ரிதி விலங்கியல் பூங்காவானது அம்ரிதி ஆற்றுக்கு அருகில் தெள்ளாய் எனும் இடத்தில் உள்ள ஜவ்வாது மலையடிவாரத்தில் அமைந்துள்ளது. அழகிய நீர்வீழ்ச்சிகளும், பலவகை விலங்கினங்களும், சுற்றுலாப் பயணிகளை இதை நோக்கி ஈர்க்கிறது. மேலும், இங்கே பல அரியவகை மூலிகைச் செடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றையும் காணலாம். இந்த சுற்றுலாத்தலத்தில் இரண்டு ஓய்வு இல்லங்கள் மற்றும் ஒரு குழந்தைகள் பூங்கா ஆகியவற்றோடு ஒரு தியான மண்டபமும் உள்ளது. விடுமுறைக்காலத்தில் இப்பகுதிக்கு ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருவது வழக்கம்.

Thomas Schoch

பாலமதி

பாலமதி


பாலமதி எனும் இந்த ஊர் இங்குள்ள பாலமுருகன் கோவிலுக்காக பெயர் பெற்றது. கிழக்குத்தொடர்ச்சி மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்த கிராமம் வேலூரிலிருந்து ஒரு சில நிமிட பயணத்தில் அடைந்துவிடலாம். கண்கவரும் இயற்கை அழகும் அமைதியான சூழலும் நிரம்பிக்காட்சியளிக்கும் பாலமதி ஒரு வித்தியாசமான சுற்றுலாத்தலமாக அதே சமயம் அவ்வளவாக பிரபலமாகாமல் அமைந்துள்ளது. வேலூர் பகுதியின் வெப்பத்திலிருந்து தப்பிக்க பயணிகள் இந்த மலை நகரத்துக்கு பயணம் செய்கின்றனர்.

Dsudhakar555

வள்ளிமலை

வள்ளிமலை


வேலூர் பகுதியில் திருவலம் எனும் ஊருக்கு வடக்கே இந்த வள்ளிமலை அமைந்துள்ளது. முருகப்பெருமானின் இரு மனைவியருள் ஒருவரான வள்ளி இம்மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இங்குள்ள குகைகளில் ஜைன பிக்குகள் வசித்திருந்ததற்கான ஆதாரமாக அவற்றின் சுவர்கள் கன்னட மொழியில் அமைந்த சுவர்ப்பொறிப்புகள் காணப்படுகின்றன. இயற்கை அழகு, குகைகள், அகழ்வு செய்யப்பட்ட பாறைப்படிவங்கள், குளங்கள் மற்றும் இயற்கைப்பசுமை போன்ற அம்சங்கள் நிறைந்து காணப்படும் வள்ளிமலைப்பகுதி சுற்றுலாப்பயணிகளை வெகுவாக வசீகரிக்கிறது.

Sreenivas101

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+