Search
  • Follow NativePlanet
Share
» »விருதுநகர் சுற்றுலா தலங்கள் - ஈரக்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

விருதுநகர் சுற்றுலா தலங்கள் - ஈரக்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

விருதுநகர் சுற்றுலா தலங்கள் - ஈரக்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது

விருதுநகர் மாவட்டம் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் இந்த பதிவில் காண்போம். விருதுநகரின் பழைய பெயர் விருதுப்பட்டி ஆகும். இங்கு உணவுப் பொருட்கள் வியாபாரமும், மலைத்தோட்ட விளைப்பொருட்கள் வியாபாரமும் பெரிய அளவில் நடைபெறுகின்றன. உயர்ந்த ரக கருங்கண்ணிப் பருத்தி பல ஊர் ஆலைகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதியாகிறது. இத்தனை இருக்கும் விருதுநகரில் சில சுற்றுலாத் தளங்கள் உலகப் புகழ் பெற்று விளங்குவனவாகும். வாருங்கள் அனைத்து சுற்றுலாத் தகவல்களையும் காண்போம்.

 திருவில்லிப்புதூர்

திருவில்லிப்புதூர்

பால்கோவா என்று கூறியதுமே நம் நினைவுக்கு வருவது ஸ்ரீவில்லிப்புத்தூர் தான். இது பால்கோவாவிற்கு மாத்திரம் அல்ல கோவிலுக்கும் பெயர்பெற்ற நகரமாக திகழ்கின்றது. தனக்கென ஒரு தனித்துவமான பண்டைகால வரலாற்றை உடைய புனிதமான கோவில் நகரமான ஸ்ரீவில்லிபுத்தூர், தமிழ் நாட்டில் உள்ள விருதுநகரில் இருக்கின்றது. இந்தியா முழுவதிலும் இக்கோவில்கள் புகழ்பெற்றனவாக இருக்கின்றன, தமிழக மக்கள் இவற்றை புனிதமானதாக மதிக்கின்றார்கள்.

Gauthaman

 செண்பகத்தோப்பு அணில் சரணாலயம்

செண்பகத்தோப்பு அணில் சரணாலயம்


சாம்பல் நிற இராட்சஸ அணிலை பாதுகாப்பதற்காக செண்பகத்தோப்பு இராட்சஸ அணில் சரணாலயம் நிறுவப்பட்டது. இவ்விடம் கோவில் நகரமாகிய ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அருகிலும், புகழ்பெற்ற பாலக்காட்டு சந்திற்கு தெற்கிலும் அமைந்து இருக்கிறது. இந்த மாநிலத்தின் மக்கள் இந்த இடத்தை சிறந்த பாதுகாக்கப்பட்ட காட்டுப்பகுதியாக கருதுகின்றார்கள். அநேக மிருகங்களை இந்த இடத்தில் பார்க்க முடிந்தாலும், இவ்விடம் இராட்சஸ அணிலுக்கே பெயர்பெற்றது. இந்தியாவில் அழிந்துவரும் மிருகங்களில் இதுவும் ஒன்று என்பதால் இதை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்த அழகிய சரணாலயம் உருவாக்கப்பட்டு உள்ளது. வனவிலங்குகளை பாதுகாப்பது கடினம் என்பதால் சரணாலய நிர்வாகிகள் மிகவும் கவனமாக இருந்து வருகிறார்கள்.

Cyrillic

 வடபத்ரசாயி கோவில்

வடபத்ரசாயி கோவில்

தமிழகத்தின் வடபத்ரசாயி கோவிலில் பெருமாள் வடபத்ரசாயியாக வீற்றிருக்கிறார். ஸ்ரீவில்லிப்புத்தூரில் புகழ்பெற்ற கோவில்களில் இதுவும் ஒன்று. கி.மு. முதலாம் நூற்றாண்டுக்கு முன்பு கட்டப்பட்டது என்று நிபுணர்களால் கூறப்படும் இக்கோவில், வைஷ்ணவ பாரம்பரியத்தின் சிறந்த இடங்களில் ஒன்றாகும். புகழ்பெற்ற பிரம்மகைவட்ச புராணத்தில் இக்கோவில் குறிப்பிடப்பட்டு இருப்பது மிகவும் சிறப்பான காரியம் ஆகும். மதுரை நாயக்கரின் காலத்தில் இங்கே புதுப்பிக்கும் பணி நிகழ்ந்தது. இந்த கோவில் வளாகத்தில் ஆண்டுதோறும் ஆறு வழிபாட்டு ஆராதனைகள் நிகழ்த்தப்பெறுகின்றன. இக்கோவிலின் தெய்வம் புனிதமானதாகவும், இக்கோவிலுக்கு வருகிறவர்களுக்கு வேண்டுகிற காரியம் எல்லாம் கிடைக்கும் என்று உள்ளூர் மக்களால் நம்பப்படுகின்றது.

Shanze1

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X