Search
  • Follow NativePlanet
Share
» »தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் இருக்கிறீர்களா? இந்த நீண்ட வார இறுதியை சரியாக திட்டமிடுங்கள்!

தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் இருக்கிறீர்களா? இந்த நீண்ட வார இறுதியை சரியாக திட்டமிடுங்கள்!

இன்னும் இரண்டு நாட்களில் ஒரு நீண்ட வார விடுமுறை வரவிருக்கிறது. என்ன? அனைவரும் அதைத்தானே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் இது மூன்று நாட்கள் விடுமுறையாகவோ அல்லது நான்கு நாட்கள் தொடர் விடுமுறையாகவோ வர உள்ளது.

இது போல தொடர் விடுமுறை எப்போதாவது ஒரு முறை தான் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இந்த குறுகிய விடுமுறையில் பட்ஜெட்டுக்கும் அதிக பாதகம் இல்லாமல், அதே நேரத்தில் நமக்கும் ஒரு சிறிய பிரேக் கிடைத்தால் நன்றாக இருக்கும் அல்லவா?

ஆம்! தமிழ்நாட்டின் பெரு நகரங்களில் வசிக்கும் நீங்கள், எங்கு செல்லலாம் என்று தேடிக் கொண்டிருக்காமல், உடனே நண்பர்களுடன் அல்லது குடும்பத்தினருடன் கீழ்க்கண்ட இடங்களில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தேடுத்து ஒரு சிறு சுற்றுலா சென்றுவிட்டு வாருங்கள்!

சென்னையிலிருந்து சுற்றுலா

சென்னையிலிருந்து சுற்றுலா

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு இடங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சுலபமாக செல்லும் வசதி உண்டு.

சென்னை விமானம், ரயில் மற்றும் பேருந்து மூலம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று நாட்களில் நீங்கள் கீழ்க்கண்ட இடங்களுக்கு தாராளமாக சுற்றுலா செல்லலாம்.

· பிரஞ்சு கலாச்சாரம், பலவகை கஃபேக்கள், வண்ணமயமான ஷாப்பிங், கண்கவர் கடற்கரைகள், அழகிய ஆரோவில் அமைந்துள்ள புதுச்சேரி.

· இரவு வாழ்க்கை, ஷாப்பிங், மால்கள், தியேட்டர்கள், பூங்காக்கள் மற்றும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் நிறைந்த பெங்களூர்.

· கிளியூர் நீர்வீழ்ச்சி, லேடி சீட், பட்டுப் பண்ணை, ரோஜா பூங்கா, மான் பூங்கா, கரடிகள் குகை, கொட்டச்சேடு தேக்கு காடு அமைந்த ஏற்காடு.

· பழத்தோட்டங்கள், ரோஜா தோட்டங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்கு ஆகியவற்றால் சூழப்பட்ட ஏலகிரி.

· புலிகாட் ஏரி மற்றும் நெலப்பட்டு பறவைகள் சரணாலயம் போன்ற சுவாரஸ்யமான இடங்கள் நிறைந்த நெல்லூர்.

கோயம்பத்தூரிலிருந்து சுற்றுலா

கோயம்பத்தூரிலிருந்து சுற்றுலா

மேற்கு தொடர்ச்சி மலைகளின் சாரலில் நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ள கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் முக்கியமான மற்றும் மிக அழகான நகரமாகும்.

நீங்கள் கோயம்புத்தூரில் வசிக்கிறீர்கள் அல்லது கோயம்புத்தூரில் இருந்து இந்த வார இறுதிப் பயணத்தைத் திட்டமிடுகிறீர்களானால் கீழ்க்கண்ட இடங்களுக்கு செல்லலாம். கோயம்பத்தூர் தனக்குள்ளேயே பல சுற்றுலாத் தலங்களை வைத்து இருந்தாலும், அங்கு வசிக்கும் பலர் அவற்றில் பாதியை கூட பார்த்தது இல்லை. ஆனால் இந்த விடுமுறையை நீங்கள் நன்கு பயன்படுத்திக்கொண்டு அவற்றை ஆனந்தமாக சுற்றிப் பார்த்துவிடலாம்.

· சிம்ஸ் பார்க், லாம்ப்ஸ் ராக், ஹை ஃபீல்ட் டீ எஸ்டேட் அமைந்த அழகிய குன்னூர்.

· மலம்புழா அணை, பாலக்காடு கோட்டை, பேண்டஸி பூங்கா மற்றும் பல இயற்கை பொக்கிஷங்கள் நிறைந்த பாலக்காடு.

· அரண்மனைகள், பல வண்ண பூங்காக்கள் நிறைந்த கலாச்சாரமும், வரலாறும் அடங்கிய மைசூர் நகரம்.

· ஏரிகள், ரோஸ் கார்டன்கள், தாவரவியல் பூங்காக்கள், மௌண்டெயின் ரயில்வே கொண்ட மலைகளின் ராணியான ஊட்டி.

· பாணாசுர மலை, செம்ப்ரா, எடக்கல் குகைகள் மற்றும் பல நீர்வீழ்ச்சிகள் சூழ்ந்த வயநாடு.

திருச்சியிலிருந்து சுற்றுலா

திருச்சியிலிருந்து சுற்றுலா

தமிழ்நாட்டின் மிகவும் முக்கிய நகரங்களில் ஒன்றான திருச்சி வணிக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் முன்னணியில் இருக்கும் ஒரு நகரமாகும். பல்வேறு

கோவில்கள், தேவாலயங்கள், கோட்டைகள் நிறைந்த திருச்சியே ஒரு அழகிய சுற்றுலாத் தலமாகும். திருச்சியில் சொந்த விமான நிலையமும், ரயில் நிலையமும் உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களுடன் தொடர்புடைய பேருந்து நிலையமும் உள்ளது. நீங்கள் திருச்சியில் இருந்தால் இந்த வார இறுதியில் கீழ்க்கண்ட இடங்களுக்கு சுற்றுலா செல்லுங்கள்.

· தமிழர் பெருமையான பிரகதீஸ்வரர் கோயில், சிவகங்கைத் தோட்டம், அரச மாளிகை, நாயக் தர்பார் ஹால், பல அருங்காட்சியகங்கள் கொண்ட தஞ்சாவூர்.

· ஆதி கும்பேஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், ராமசுவாமி கோவில், சக்ரபாணி கோவில், நாகேஸ்வரன் கோவில், பட்டீஸ்வரம் கோவில், ஐராவதேஸ்வரர் கோவில், சுவாமிமலை ஆகியவை அடங்கிய கும்பகோணம்.

· கொல்லி மலை, தாவரவியல் பூங்கா, நீர்வீழ்ச்சிகள் மற்றும் பல கோவில்கள் நிறைந்த நாமக்கல்.

· ஏரிகள், சிகரங்கள், நீர்வீழ்ச்சிகள், ஹேர் பின் பெண்டுகள் நிறைந்த மலைகளின் இளவரசியான கொடைக்கானல்.

மதுரையிலிருந்து சுற்றுலா

மதுரையிலிருந்து சுற்றுலா

தமிழ்நாட்டின் மிகவும் நிறுவப்பட்ட நகர்ப்புற சமூகங்களில் மதுரையும் ஒன்று. பாண்டிய மன்னர்களின் தலைநகரான மதுரை ரோம் நகருடன் வர்த்தக தொடர்புகள் இருந்ததால், மதுரை நம்பமுடியாத சமூக-கலாச்சார பாரம்பரியத்தை கொண்டுள்ளது.

மதுரை விமானம், ரயில் மற்றும் பேருந்து மூலம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மதுரையில் இருந்தால் இந்த வார இறுதியை கீழ்க்கண்ட இடங்களில் செலவிடலாம்.

· ஜீப் சவாரிகள், வனவிலங்கு சஃபாரி, தோட்ட நடைகள், மூங்கில் ராஃப்டிங், படகு சவாரி கொண்ட குமுளி.

· வனவிலங்கு சஃபாரி, முகாம், மலையேற்றம், படகு சவாரி, ஷாப்பிங் செய்வதற்கு ஏற்ற தேக்கடி.

· கொழுக்குமலை, லக்கம் நீர்வீழ்ச்சி, குந்தலா ஏரி, கார்மேலகிரி யானைகள் பூங்கா மற்றும் பிற ஈர்ப்புகள் அடங்கிய மூணார்.

· அணைகள், ட்ரெக்கிங், பாராகிளைடிங், பல ரிசார்ட் ஸ்டே அடங்கிய இடுக்கி.

· பைன் காடுகள், நீர்வீழ்ச்சிகள், பசுமை பள்ளத்தாக்குகள் நிறைந்த கொடைக்கானல்.

மேற்கண்ட யாவும் அந்த அந்த இடங்களில் இருந்து ஓரிரு நாட்களில் தாராளமாக சுற்றி பார்த்துவிட்டு வரக்கூடிய இடங்கள் தான்! ஆகவே அதிகம் யோசிக்காமல் உடனே உங்களது பிரயாணத்தை திட்டமிடுங்கள்.

Read more about: best weekend plan chennai
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X