Search
  • Follow NativePlanet
Share
» »இந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்

இந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்

இந்த ஆண்டில் கோடீஸ்வரராகப்போகும் அந்த மூன்று நட்சத்திரங்கள்

By IamUD

யாருக்குத்தான் இல்லை ஆசைகள். எல்லாருக்கும் தான் வசதியாக வாழவேண்டும் தன் குடும்பத்தை சீரும் சிறப்புமாக நடத்தி, ஊரில், நாட்டில் பெரிய ஆளாக வேண்டும் என்ற ஆசை அனைவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அதைப் பற்றி சிந்திக்க கூட நேரம் இல்லாமல் பிரச்சனைகளும், கடன் தொல்லைகளும் கழுத்தை நெறிக்கின்றன. சரிதானே.. ஆனால் இந்த மூன்று நட்சத்திரத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு யோகம் இருக்கிறது. அவர்கள் நினைத்தால் ஓரிரு ஆண்டுகளுக்குள் கோடீஸ்வரராகிவிடுவார்களாம். அதற்காக செய்யவேண்டியவை பற்றி இந்த பதிவில் காண்போம்.

 நட்சத்திரங்கள்

நட்சத்திரங்கள்

ஜோதிட சாஸ்திரங்களை நம்புபவர்களுக்கு பிறந்த நேர பலன்கள் குறித்து நம்பிக்கை இருக்கும். ஒருவரின் பிறந்த நேரத்தைப் பொறுத்து ஒரு நட்சத்திரத்தை கணக்கிட்டு அவருக்கு உரித்ததாக ஜோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். அதன்படி அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு அசைவையும் கணிக்க முடியும் என்கிறார்கள்.

கோடீஸ்வரர்

கோடீஸ்வரர்

அப்படி 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் இந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் ஒரு யோகம் உள்ளது. அதுதான் அவர்களை ஒரே வருடத்தில் கோடீஸ்வரராக மாற்றும் யோகம்.

அஸ்வினி ஆலயம்

அஸ்வினி ஆலயம்

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு சென்றால், கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என ஜோதிட வல்லுனர்கள் கணித்துள்ளார்கள். அது எந்த ஆலயம் என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்கள் தானே.. வாருங்கள் அந்த ஆலயத்துக்கே அழைத்துச் செல்கிறோம்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி

திருத்துறை பூண்டி, திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரமாகும். இங்கு அமைந்துள்ள சிவன் கோவில் பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும். இது அஸ்வினி நட்சத்திரத்துக்குரிய ஆலயம். அஸ்வினி நட்சத்திர தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் வழிபாடு செய்யக்கூடிய கோயிலாகும்.

 எப்படி இது புகழ்பெறுகிறது

எப்படி இது புகழ்பெறுகிறது

அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய தேவதைகள் சிவபெருமானை வழிபடுவதால், இவ்வாலயம் அஸ்வினி நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாக கருதப்படுகிறது. இங்கு அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வந்து வழிபடுவதால், அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம். மேலும் கோடீஸ்வர யோகம் அவர்களை ஒரு வருடத்துக்குள் உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும்.

எப்படி செல்வது

எப்படி செல்வது


தஞ்சாவூரிலிருந்து வேதாரண்யம் செல்லும் சாலையில் பயணித்தால் வழியில் 70ஆவது கிமீ தொலைவில் திருத்துறைபூண்டியை அடையலாம். இது 2 மணி நேர பயணம் ஆகும்.

கோடீஸ்வரராகும் யோகம்

கோடீஸ்வரராகும் யோகம்

பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்குச் சென்று மூலவரை மாதம் ஒருமுறை அல்லது வாரம் ஒருமுறை எது சாத்தியமோ அதன்படி வழிபட்டு வந்தால், அஸ்வினி நட்சத்திரத்து காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கைகூடும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். ஆனால், அவர்களின் ராசிநாதரை பொறுத்து தொழிலில் முன்னேற்றம், பண வரவு அதிகரிப்பு போன்றவை மாறும் என்றும் கூறுகின்றனர்.

 நடைதிறப்பு மற்றும் பூசை நேரம்

நடைதிறப்பு மற்றும் பூசை நேரம்

இந்த ஆலயம் தினந்தோறும் காலை 6 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 11 மணி வரையிலும், பின் மாலை 4மணியிலிருந்து இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

காலை, மதியம், மாலை மற்றும் இரவு நேரங்களில் பூசைகள் நடைபெறும். சிறப்பு நாட்களில் சிறப்பு பூசைகளும் நடைபெறும்.

 ஆயில்ய கோவில்

ஆயில்ய கோவில்

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய கோவிலாக குறிப்பிடப்பட்டுள்ள கோவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஒரு சிவன் கோவில் ஆகும்.

கற்கடேஸ்வரர்

கற்கடேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருந்துதேவன்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள கற்கடேஸ்வரர் கோவில் தான் ஆயில்யம் நட்சத்திரத்துக்கான கோவில் ஆகும். இங்கு மட்டும் இந்த நட்சத்திரக்காரர்கள் சென்று வந்தால், போதும் அவர்கள் வாழ்வே தலைகீழாக மாறிவிடும்.

 தீரும் பிரச்சனைகள் வளரும் வசதிகள்

தீரும் பிரச்சனைகள் வளரும் வசதிகள்

இந்த கோவிலின் மூலவரை வாரம் ஒருமுறை அல்லது மாதம் ஒரு முறை தங்கள் வசதிக்கேற்ப தரிசித்து வந்தால் விரைவில் சொத்துப் பிரச்சனை தீரும், தொழிலில் லாபம் அதிகரிக்கும், நீண்ட நாட்களாக இருந்த தடங்கல்கள் நீங்கும்.

கோடீஸ்வர யோகம் வர

கோடீஸ்வர யோகம் வர


இந்த கோவிலில் நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து அதை அருந்தி வந்தால் அனைத்து வித கிரக தோஷங்களும் நீங்கி, கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.

எப்படி செல்வது

எப்படி செல்வது

கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஊருக்கு திருவையாற்றில் இருந்து எளிதாக செல்லமுடியும். 12 கிமீ பயண தூரத்தில் இந்த இடத்தை எளிதாக அடையமுடியும். அதிகபட்சம் 15 முதல் 20 நிமிடங்கள் எடுக்கலாம்.

அனுச கோவில்

அனுச கோவில்

நாகப்பட்டினம் மாவட்டம் திருநின்றவூரில் இருக்கும் இந்த கோவிலுக்கு அனுச நட்சத்திரக்காரர்கள் சென்று வந்தால் கோடீஸ்வரர் யோகம் கிடைக்கும்.

More News

Read more about: travel temples thanjavur
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+