Search
  • Follow NativePlanet
Share
» »கேரளா செல்வதற்கு சிறந்த நேரம் இதுதான் – நிச்சயம் இந்த மாபெரும் கண்கவர் படகு போட்டியைக் காண தவறாதீர்கள்!

கேரளா செல்வதற்கு சிறந்த நேரம் இதுதான் – நிச்சயம் இந்த மாபெரும் கண்கவர் படகு போட்டியைக் காண தவறாதீர்கள்!

மலைப்பிரதேசங்கள், மழைக்காடுகள், அழகிய நீர்வீழ்ச்சிகள், கண்கவர் உப்பங்கழிகள், தனித்துவமான கலாச்சரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்து கேரளா கடவுளின் தேசம் என்ற பெயரைப் பெற்றுள்ளது. கேரளாவில் பிரபலமான பல்வேறு விஷயங்களில் இந்த படகு போட்டியும் ஒன்றாகும்.

கேரளாவின் அழகான உப்பங்கழிகளில் சுமார் மூன்று மாதக் காலம் நடைபெறும் இந்த மாபெரும் படகு பந்தயம் செப்டம்பர் 4 அன்று தொடங்கி நவம்பர் 26 வரை நடக்கிறது. இந்த பிரபலமான பாம்பு படகு பந்தய நிகழ்வு இங்கு மிக ஆடம்பரமாகவும் கோலாகலமாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த மாபெரும் போட்டியைக் காண நாடு முழுவதிலிருந்தும், ஏன் வெளிநாட்டவர்களும் கூட வருகை தருகின்றனர். பல்வேறு சிறப்புகள் நிறைந்த இந்த படகுப் போட்டி 2022 ஐப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும், ஏன் நீங்கள் இதைக் கட்டாயம் பார்க்க வேண்டும் என்பதையும், இதனைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள் பற்றியும் இங்கே காண்போம்!

பாரம்பரியம் நிறைந்த படகுப் போட்டி

பாரம்பரியம் நிறைந்த படகுப் போட்டி

பாம்புப் படகுகள் ஏழு நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே காணப்படுகின்றன. ஊர்வன வடிவில் உயர்ந்து நிற்கும் மரங்களைக் கொண்டு தேவநாராயணன் அரசரின் கட்டளைப்படி இவை வடிவமைக்கப்பட்டன. அந்த நேரத்தில், படகு ஒரு பல்நோக்கு கேரியராக இருந்தது, அது கடலில் பல போர்களை வென்றது.

சுதந்திரத்திற்குப் பிறகு 1952 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தனது முதல் சுற்றுப்பயணத்தின் போது குட்டநாட்டிற்குச் சென்றதை நினைவுகூரும் வகையில் படகுப் போட்டிக்கு அவரது பெயரிடப்பட்டது. இந்த கம்பீரமான படகு போட்டி கேரளாவின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் நோக்கத்தில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது.

பாம்பு படகுப் போட்டி 2022

பாம்பு படகுப் போட்டி 2022

இந்த மாபெரும் திருவிழாவானது செப்டம்பர் 4 ஆம் தேதி ஆலப்புழாவில் நேரு டிராபி படகுப் போட்டியுடன் தொடங்கியது. மாநிலம் முழுவதும் 12 வெவ்வேறு இடங்களில் நடைபெறும் இந்த படகுப் போட்டி நவம்பர் 26 ஆம் தேதி கொல்லத்தில் ஜனாதிபதி கோப்பை படகுப் போட்டியுடன் முடிவடையும். இதற்கிடையில் படகுப் போட்டி நடைபெறும் அனைத்து இடங்களுமே விழாக்கோலம் பூணும்.

இந்த காலநிலை இந்த படகு திருவிழாவிற்கு இனிமையான அனுபவத்தை சேர்க்கிறது. வெவ்வேறு அணிகளைச் சேர்ந்த ஆர்வமுள்ள படகோட்டிகள் தங்கள் திறமையை ஒத்திசைவுடன் வெளிப்படுத்துவதைக் காணும் போது பார்வையாளர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

பார்ப்போரை மிரளவைக்கும் படகுப் போட்டி

பார்ப்போரை மிரளவைக்கும் படகுப் போட்டி

தண்ணீரை கிழித்துக்கொண்டு மேல தாளத்துடன் படகுகள் வேகமாக செல்வதை பார்க்கும்போது நம்மில் எழும் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.நாம் ஒரு அமைதியான பேர்வழியாக இருந்தாலும் கூட அங்கு நடக்கும் கலையபரத்தை பார்த்து நமக்கும் கூட சத்தமிட்டு சந்தோஷப்பட தோணும் என்பது இயற்கையே.

இந்த சிலிர்ப்பான மற்றும் வேடிக்கையான நிகழ்வைக் காண மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும், நாடெங்கிலும் இருந்து மக்கள் கூட்டம் கூடுகின்றனர். கரைகளின் ஓரத்தில் முன்வரிசையில் நிற்க காலை முதலே மக்கள் கூட்டம் முண்டியடிக்கிறது. நீங்களும் காலையிலேயே சென்று இடம் பிடித்தால் நன்றாக பார்த்து ரசிக்கலாம்.

படகுப் போட்டி நடைபெறும் இடங்கள்

படகுப் போட்டி நடைபெறும் இடங்கள்

ஆலப்புழாவில் செப்டம்பர் 4ம் தேதி அன்று நேரு டிராபி படகுப் போட்டி; செப்டம்பர் 17ல் ஆலப்புழாவின் கருவாட்டாவில்; அக்டோபர் 8ம் தேதி எர்ணாகுளத்தின் மரைன் டிரைவில்; அக்டோபர் 15ல் திருச்சூரின் கோட்டப்புரத்தில்; அக்டோபர் 22ல் ஆலப்புழாவின் கைனக்கரியில்; அக்டோபர் 29 அன்று கோட்டயத்தின் தாழத்தங்கடியில்; நவம்பர் 5 ஆம் தேதி ஆலப்புழாவின் பாண்டநாட்டிலும், செங்கனூரிலும்; நவம்பர் 12ஆம் தேதி ஆலப்புழாவின் காயங்குளத்தில்; நவம்பர் 19ம் தேதி கொல்லத்தின் கல்லாடாவில் படகுப் போட்டி நடைபெறுகின்றன. கடைசிப் போட்டி நவம்பர் 26 அன்று கொல்லத்தின் ஜனாதிபதி கோப்பை படகு போட்டியுடன் முடிவடைகிறது.

ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூரில் பார்க்க வேண்டிய இடங்கள்

ஆலப்புழா, எர்ணாகுளம் மற்றும் திருச்சூரில் பார்க்க வேண்டிய இடங்கள்

ஆலப்புழாவில்மராரி பீச், ஸ்ரீகிருஷ்ணா கோவில், பத்திரமணல் தீவு, லைட்ஹவுஸ், கிருஷ்ணாபுரம் பேலஸ், புன்னமடா ஏரி ஆகியவற்றை நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டும்.

எர்ணாகுளத்தில்ஹில் பேலஸ் மியூசியம், கேரளா ஃபோக்ளோர் மியூசியம், லுலு ஷாப்பிங் மால், மங்கலாவரம் பறவைகள் சரணாலயம், எடப்பள்ளி சர்ச், சிவன் கோவில் ஆகியவை பார்க்க வேண்டிய இடங்களாகும்.

ஸ்ரீ வடக்கும்நாதன் கோவில், சக்தன் தம்புரான் பேலஸ், உயிரியல் பூங்கா, லேடி ஆஃப் டாலர்ஸ் பசிலிக்கா, பகவதி கோவில், பல மியூசியங்கள் ஆகியவற்றை நீங்கள் திருச்சூரில் கண்டு களிக்கலாம்.

ஆகவே மாபெரும் படகுப் போட்டி நடைபெறும் இந்த நேரத்தில் இந்த இடங்களுக்கு சென்று வருவது கூடுதல் சிறப்பாகும். சுற்றுலா தலங்களைக் கண்டு களித்தாவாறே படகுப் போட்டியைக் காணும் அரிய வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X