Search
  • Follow NativePlanet
Share
» »பெட்வா நதியில் ஒரு கட்டுமரப்பயணம் போலாமா?

பெட்வா நதியில் ஒரு கட்டுமரப்பயணம் போலாமா?

By Udhaya

பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர்ச்சா, இந்தியாவின் இதயப்பகுதி போன்ற மத்தியப்பிரதேசத்தின் திகம்கார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய மன்னரான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் 1501-ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட ஓர்ச்சா, உத்தரப்பிரதேசத்தின் ஜான்ஸியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் நிறுவனரான மஹாராஜா ருத்ர பிரதாப் சிங் அவர்களே இதனை முதன்முதலில் ஆண்ட மன்னராவார். CoverPic

ஓர்ச்சா

ஓர்ச்சா

ஒரு மன்னரால் உருவாக்கப்பட்டு ஆளப்பட்ட ஓர்ச்சா, நெஞ்சார்ந்த பாராட்டுகளுக்குரியனவும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவுமாகிய பல கட்டிடங்களைக் கொண்டுள்ளது. சந்திரஷேகர் ஆசாத் நினைவகம், சாத்ரிகள், தௌஜி கி ஹவேலி, தின்மான் ஹர்டாலின் அரண்மனை, ஃபூல் பாக் போன்றவை ஓர்ச்சாவில் உள்ள சில அற்புதமான ஸ்தலங்களாகும்.

commons.wikimedia.org

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

ஓர்ச்சா சுற்றுலாத்துறை, ராஜா மஹால், ராணி மஹால், சுந்தர் மஹால், லக்ஷ்மி நாராயண் கோயில் போன்ற பல இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கின்றது. ஓர்ச்சாவில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் செலுத்தப்படும் கட்டுமரத்தில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெறலாம். இது சாகச விரும்பிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும்.

ஓர்ச்சா அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்காகவும் பெரிதும் அறியப்படுகிறது. இது பெரிய நகரமாக இல்லாவிடினும், இங்கு வாழ்ந்து வரும் மக்கள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் பழகி வருகிறார்கள் என்பதை விழாக் கொண்டாட்ட சமயங்களில் கண்கூடாகக் காணலாம். ஓர்ச்சா - பேரெழில் பொங்கும் ஸ்தலம்! பிரபல நகரமான ஓர்ச்சாவின் எல்லைக்குள் பொதிந்திருக்கும் சொக்க வைக்கும் அழகை ரசிக்கவரும் பயணிகளை ஓர்ச்சா சுற்றுலாத்துறை பெருமையுடன் வரவேற்கிறது.

இந்த எழில்மிகு நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான மஹால்கள், கோயில்கள், அரண்மனைகள் மற்றும் அழகிய கட்டுமானங்கள் பார்த்து ரசிக்கும் பொருட்டு அணி வகுக்கின்றன. ஓர்ச்சா பயணத்தின் அற்புதமான நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது செலவிட வேண்டும். ஓர்ச்சாவை அடைவது எப்படி? ஜான்ஸி மற்றும் ஓர்ச்சாவிற்கு இடையிலான தூரம் சுமார் 16 கி.மீ. ஆகும். சாலை வழி போக்குவரத்து சேவைகள் எளிதாகக் கிடைக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் ஓர்ச்சாவில் ரம்மியமான வானிலையே நிலவுகிறது.

commons.wikimedia.org

கட்டுமரப்பயணம்

கட்டுமரப்பயணம்

ஆற்றில் விடப்படும் கட்டுமரப்பயணம், சாகசத்தை விரும்பும் ஏராளமான குழந்தைகள் மற்றும் பெரியவர்களை ஈர்க்கக்கூடியதாகத் திகழ்கிறது. ஓர்ச்சாவின் அற்புதமான நினைவுச் சின்னங்கள் மற்றும் மாசு குறைந்த சுற்றுச்சூழல் ஆகியவற்றினிடையே, பெட்வா நதி விந்திய மலைத்தொடரில் இருந்து யமுனா நதி வரை பாய்கிறது.

சுற்றுலாப் பயணிகள் இந்த நதியில் தாம் கட்டுமரப்பயணம் மேற்கொண்டு சாகசத்தின் எல்லை வரை சென்று இன்புற்றுத் திரும்புகின்றனர். ஓர்ச்சாவின் கட்டுமரப்பயணம் தண்ணீர் விளையாட்டுக்கள் மற்றும் சாகசங்களில் ஈடுபாடு உடையோர் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். சுத்தமான தாவரம் மற்றும் விலங்கினங்களின் இருப்போடு, சிறப்பான கட்டிடங்கள் சூழ அமைந்திருக்கும் ஓர்ச்சாவின் பெட்வா நதியின் அமைப்பு, சாகசம் நிறைந்த தண்ணீர் விளையாட்டுக்களுக்கு மிக உசிதமான ஒரு இடமாக விளங்குகிறது.

எனினும், சுற்றுலாப் பயணிகள் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களுடன் மட்டுமே இப்பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். ஓர்ச்சாவின் வியத்தகு கட்டுமரப்பயணம் கண்டிப்பாக உங்கள் மனதைத் திருடி, வாழ்நாள் முழுக்க அசைபோட்டு ரசிக்கக்கூடிய ஞாபகங்களை அள்ளித் தரும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

commons.wikimedia.org

 ராணி மஹால்

ராணி மஹால்

அழகிய நகரமான ஓர்ச்சாவில் அமைந்துள்ள ராணி மஹாலில் இருந்து பார்த்தால் முழு நகரமும், பெட்வா ஆறும் தெள்ளெனத் தெரிவதனால் இது ஒரு பிரபல காட்சி முனையாகத் திகழ்கிறது. அற்புதமாகக் கட்டப்பட்டுள்ள ராணி மஹால், போற்றத்தக்க கட்டுமானக் கலையின் மற்றொரு சான்றாக விளங்கும் நவீன கட்டிடமாகும். ராணி மஹால் அதன் சுவர்களில் காணப்படும் சித்திரங்களுக்கு மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இது மன்னர் மதுகர் ஷாவினுடைய பேகத்தின் வசிப்பிடமாக இருந்ததனால் இது ராணியின் அறை என்று வழங்கப்படுகிறது. இந்த ராணி, ராமபிரானின் தீவிர பக்தையாக விளங்கினார். அதனால், இராமாயணத்தின் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ள அரிய பல சித்திரங்களை இங்கு காணலாம். புதுமையான கற்பனைத் திறனை வெளிப்படுத்தும் இதர சித்திரங்கள் இந்த மஹாலின் அழகுக்கு மேலும் அழகூட்டுகின்றன. குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய உட்புறம் மற்றும் வெளிப்புறங்களைக் கொண்டுள்ள ஓர்ச்சாவின் ராணி மஹால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்கும் ஒரு இடமாக உள்ளது.

சுந்தர் மஹால்

அற்புதமான கட்டிடக்கலைக்கு மற்றொரு சான்றாக நிற்கும், ஓர்ச்சாவின் புராதனப் பெருமையின் மிச்சங்களை சுமந்து கொண்டிருக்கும் சுந்தர் மஹால், பழங்காலம் தொட்டே பிரபலமான இடமாகத் திகழ்கிறது.

காதல் மாளிகை என்றே பெரும்பாலும் அழைக்கப்படும் சுந்தர் மஹால், ஹிந்து இளவரசரான துர்பஜனுக்கும் அவரது இஸ்லாமிய காதலிக்கும் இடையே நிலவிய தீவிரமான காதலின் நினைவாகக் கட்டப்பட்டதாகும்.

ராஜா ஜுஜர் சிங்கின் மகனாகிய இளவரசர் துர்பஜன் ஒரு சரித்திர சகாப்தம் ஆவார். இவ்விளவரசர் ஒரு இஸ்லாமிய பெண்ணை நேசித்ததனால் அவரது குடும்பத்தாரின் நிராகரிப்புக்கும், எதிர்ப்புக்கும் ஆளாகினார்.

இத்துணை பிரச்சினைகளையும் சந்தித்த பின் இளவரசர் அரண்மனையை விட்டு வெளியேறி துறவறம் பூண்டார். முடிவில், அவரது காதலியையே கைப்பிடித்து, இந்த அழகிய அரணமனையை கட்டி அதற்கு சுந்தர் மஹால் என்றும் பெயரிட்டார்.

துர்பஜன் இஸ்லாமிய மதத்தினராலும் வழிபடப்படுகிறார். இவரது புனித சந்நிதியை தரிசிப்பதற்கென்றே இம்மக்கள் ஏராளமானோர் இங்கு வருகை புரிகின்றனர். பிரம்மாண்டமான சுந்தர் மஹால், செறிந்த கலைநயம் மற்றும் அதீத கற்பனை வளத்தின் உதாரணமாக, தனித்துவமான தோற்றப்பொலிவுடன் காட்சியளிக்கிறது.

commons.wikimedia.org

லக்ஷ்மி நாராயண் கோயில்

லக்ஷ்மி நாராயண் கோயில்

லக்ஷ்மி நாராயண் கோயில், கோட்டை மற்றும் கோயில் ஆகிய இரு வகை கட்டுமானங்களின் அழகிய கலவையாக விளங்கும் அரிய கட்டுமான பாணியின் சிறப்பான உதாரணமாகத் திகழ்கிறது. வீர் சிங் டியோ அவர்களால் 1622 ஆம் ஆண்டு கட்டப்பட்டு, 1793 ஆம் ஆண்டில் பிருத்வி சிங் அவர்களால் புனரமைக்கப்பட்ட இக்கோயில் புராணங்களில் இருந்து புனையப்பட்ட காட்சிகளை சித்தரிக்கும் மிகச் சிறப்பான சுவரோவியங்களைக் கொண்டுள்ளது. லக்ஷ்மி நாராயண் கோயில் சிற்பங்கள், விலங்குகள் மற்றும் பூ வேலைப்பாடுகளோடு, கிருஷ்ண பகவானின் வாழ்க்கையைச் சித்தரிப்பதாக வடிவியல் அமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிப்பாய் கலகத்திற்குப் பின்னான காட்சிகளை சித்தரிக்கும் மிகப் பிரபலமான சித்திரங்களைக் கொண்டுள்ளதாலும் இது மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. செல்வத்துக்கு அதிபதியான லக்ஷ்மி தேவிக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுள்ள இக்கோயில் இவ்விடத்தின் முக்கிய சுற்றுலா ஈர்ப்புகளுள் ஒன்றாகும். அழகிய தட்டையான ஓடுகள் பதிக்கப்பட்ட ஒரு பாதை இக்கோயிலை ராம் ராஜா கோயிலுடன் இணைக்கின்றது. இக்கோயிலின் மத்திய கோபுரத்தில் பதிந்திருக்கும் அழகிய கணேசர் சிலை இந்த கோயிலின் அமைப்பை மேலும் அழகுறச் செய்வதாக உள்ளது.இக்கோயிலின் கட்டுமானத்தைக் காணும் சுற்றுலாப் பயணிகள் வியப்பின் உச்சிக்கே செல்கின்றனர்

commons.wikimedia.org

சாத்ரிகள்

சாத்ரிகள்

அடிப்படையில் ராஜ சமாதிகளான "சாத்ரிகள்" ஓர்ச்சாவின் நதியின் புறத்தே அமைந்து, வருவோரின் கவனத்தை ஈர்க்கக்கூடியனவாய் உள்ளன. இது போன்ற சுமார் பதினான்கு நினைவுச் சின்னங்கள் பெட்வா நதியில் உள்ள கஞ்சன் படித்துறையோரத்தில் அமைந்துள்ளன.

ஓர்ச்சாவின் ஆட்சியாளர்களை நினைவு கூரும் விதமாக எழுப்பப்பட்டுள்ள இந்த நினைவுச் சின்னங்கள் 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். இந்த சாத்ரிகள் உண்மையில் பந்தேலா ராஜாக்களை கௌரவப்படுத்தும் நோக்கில் பந்தல்கண்ட் பாணிகளைத் தழுவி கட்டுப்பட்டுள்ளன.

பொதுவாக, இந்த கட்டுமானங்களைக் கண்ணுற்ற காலகட்டம், "பொற் சகாப்தம்" என்று கூறப்படுகிறது. சூரிய ஒளியில், இந்த கட்டிடங்கள் நதி நீரில் பிரதிபலிப்பதைப் பார்ப்பது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும்.

உயர்த்தப்பட்ட நடைமேடைகளில், தூண்களை ஆதரவாகக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சாத்ரிகள், வருடந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியதொரு வசீகரமான அழகைக் கொண்டுள்ளன.

குறுகலான ஒரு பாலத்திலிருந்து நன்றாக பார்க்கக்கூடியனவாகிய இந்த சாத்ரிகள், ஓர்ச்சா வரும் பயணிகள் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும். நதியின் இப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் கண்டிப்பாக ஒரு மகத்தான அனுபவத்தைப் பெறலாம்.

commons.wikimedia.org

Read more about: travel chennai india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more