» »முழுமையாக கட்டி முடிக்கப்படாத ஒரு மர்ம நகரத்தைப் பற்றி பார்க்கலாமா?

முழுமையாக கட்டி முடிக்கப்படாத ஒரு மர்ம நகரத்தைப் பற்றி பார்க்கலாமா?

Written By: Udhaya

மத்தியப்பிரதேச மாநிலத்தில் அமைந்திருக்கும் 11-ஆம் நூற்றாண்டு நகரம் போஜ்பூர். மணற்கற்களால் ஆன முகடுகள் கொண்ட மத்திய இந்தியாவில் அமைந்திருக்கிறது போஜ்பூர். நகரின் குறுக்கே ஓடும் பெட்வா ஆறு, போஜ்பூரின் தொன்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. போஜ்பூர், மத்தியபிரதேசத் தலைநகர் போபாலில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது.

11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இரண்டு பெரிய அணைகள் இங்கு உள்ளன. பெரிய பாறைகளால் கட்டப்பட்ட மிகவும் தொன்மையான அணைகள் இவை. பெட்வா ஆற்றின் குறுக்கே அமைந்திருக்கும் இந்த அணைகளால் ஏற்பட்டது தான் அங்கிருக்கும் ஏரி. பரமர சாம்ராஜ்ய அரசரான போஜர், இந்தப் பகுதியை ஆண்டமையால், இந்த நகரத்திற்கு போஜ்பூர் என்ற பெயர் உண்டாயிற்று. போஜ அரசரின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணைகள் சுண்ணாம்பு மற்றும் மணற்கற்களைக் கொண்ட கட்டமைப்பைக் கொண்டது. இந்த அணைகள், மணற்கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி வைத்தது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கிறது. இவ்வாறு அமைந்திருப்பதை சைக்லோபியன் கட்டமைப்பு என்பர். சுற்றுலாப் பயணிகள் மற்றும் கட்டமைப்பு வல்லுனர்கள் பார்க்க வேண்டிய முக்கியமான அணைகளாக இவை விளங்குகின்றன.

போஜ்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

போஜ்பூரைச் சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்

கிழக்கு சோம்னாத் என்றழைக்கப்படும் சிறப்பு வாய்ந்த போஜேஸ்வரர் திருக்கோவில் போஜ்பூரில் அமைந்துள்ளது. கோவில் கட்டமைப்பில் பல சிறப்பம்சங்களைக் கொண்ட இத்திருக்கோவில், நாம் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு தலமாகும். சிறப்புமிக்க சைக்லோபியன் அணைகள், கட்டி முடிக்கப்படாத நிலையில் இருப்பதை இங்கு காண முடியும். இந்த நகரத்தின் அழகே, கட்டி முடிக்கப்படாமல் இருக்கும் அழகிய கட்டமைப்புக்கள் தான். அங்குள்ள கற்சுரங்கங்களில், கைகளால் செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்களை காண முடியும். சிற்ப வேலைகள் முடிவடைந்திருந்தால், இவைகள் அரண்மனைக்கோ அல்லது கோவிலுக்கு எடுத்துசெல்லப்பட்டிருக்கும். அவை முடியாத நிலையில் இருப்பதால் அங்கேயே இருப்பதை காண முடிகிறது.

wiki

இடிபாடுகளின் நகரம்

இடிபாடுகளின் நகரம்

ஒரு நகரம் அந்த காலத்தில் செழிப்பாக இருந்திருக்கும். இப்போது அது இடிபாடுகளுடன் இருக்கும். இதனைத் தான் நாம் போதுவாக சுற்றுலாத் தலங்களில் பார்ப்போம். ஆனால் இங்கு கட்டியே முடிக்கப்படாத நகரமாக போஜ்பூர் இருப்பதைப் பார்ப்பது வித்தியாசமான உணர்வைத் தரும்.

இவ்வாறு நிறைவடையாத வகையில் இருக்கும் கட்டமைப்புக்களில் ஒரு ஜைன கோவிலும் அடக்கம். போஜ்பூரில் இருந்து சுமார் 20 கிமீ தொலைவில் இருக்கும் ஊர் பிம்பேட்கா. அங்குப் பாறைகளில் தீட்டப்பட்டிருக்கும் ஓவியங்கள் காண்பவரின் எண்ணத்தைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.

பிம்பேட்காவை உலகப் புராதனச் சின்னமாக அடையாளப்படுத்தியிருக்கிறது யுனஸ்கோ. இதுமட்டுமன்றி, நர்மதா ஆற்றங்கரையில் அமைந்திருக்கும் சேதானி கட்டமைப்பும், ஹோஷங்காபாத் கோட்டையும் மிகவும் சிறப்புவாய்ந்தவை. பிம்பேட்காவில் இருந்து சுமார் 40 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் இந்த அழகிய கட்டமைப்புக்கள் சுற்றுலாப் பயணிகளை அதிகம் கவருபவையாக திகழ்கிறது.
wiki

போஜ்பூரில் என்ன வாங்கலாம் ? என்ன சாப்பிடலாம்?

போஜ்பூரில் என்ன வாங்கலாம் ? என்ன சாப்பிடலாம்?

கபாப், புத்தே கி கீஸ், மாவா-பட்டி, கோப்ரபாக் மற்றும் மல்புவா போன்றவை போஜ்பூரின் சிறப்புமிக்க உணவுகள். போஜ்பூரின் கைவினைப் பொருட்கள் மிகவும் புகழ்வாய்ந்தவை. சுற்றுலா செல்பவர்கள் போஜ்பூரின் நினைவாக அவற்றை வாங்கி செல்கின்றனர். மேலும், கைவினைத் தொழிலாளர்களின் வாழ்வை உயர்த்தி மேம்படுத்த மத்தியபிரதேச ஹஸ்ட்ஷில்ப் இவாம் ஹத்கிரஹா விகாஸ் நிகாம் என்ற நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது.

wiki

போஜேஷ்வரர் திருக்கோவில்

போஜேஷ்வரர் திருக்கோவில்

கட்டி முடிக்கப்படாமல் இருந்தாலும், போஜேஷ்வரர் திருக்கோவிலின் கட்டமைப்பு நம்மை பிரம்மிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது. சிவபெருமானை மூலவராகக் கொண்ட இத்திருக்கோவிலில், மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது. இந்தியாவிலிருக்கும் மிகப் பெரிய சிவலிங்கங்களில் ஒன்றான இது, ஒற்றைப் பாரையில் இருந்து வடிவமைக்கப்பட்டதாகும். சுமார் 7.5 அடி உயரமும், 17.8 அடி சுற்றளவும் கொண்ட அழகிய சிவலிங்கத்தின் சிறப்பை பெற்றதனால் இதனை கிழக்கு சோம்னாத் என்று அழைக்கின்றனர். 11,12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற கட்டமைப்பை கொண்டதாக விளங்குகிறது போஜேஷ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் மட்டும் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தொன்மையான இந்தியாவின், அதிசயமாக திகழ்ந்திருக்குமாம். போஜேஷ்வரர் கோவிலின் எழில்மிகு மண்டபம், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள கதவுகள், பாதைகள் மற்றும் சிற்பங்கள் காண்பவரை அதிசயப்படும் வகையில் அமைந்திருக்கிறது. அழகிய தூண்கள் மாடிக்குச் செல்லும் வழியைத் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கிறது. வெளிப்புற சுவர்கள் மற்றும் அது தொடர்பான கட்டிடங்கள் கட்டப்படாமலே இருக்கிறது. கோவிலை மண்டபத்தோடு சரி சமமாக உயர்த்த பயன்படுத்தப்பட்ட மணற்கற்களால் ஆன வளைவுகள் இன்றளவும் அங்கே காணப்படுகின்றன. இது நம் தொன்மையான கட்டிடக்கலை திறமைகளை பறைசாற்றும் ஆவணங்களாக திகழ்கின்றன.

wiki

 பாறை ஓவியங்கள் மற்றும் சுரங்கங்கள்

பாறை ஓவியங்கள் மற்றும் சுரங்கங்கள்

போஜ்பூர் திருக்கோவிலை கட்டும் பணி முடியாமல், அதன் மீதமாக பாறை ஓவியங்களும், சிற்பங்களும் இங்கு காணப்படுகின்றன. இவை நம் பழமையான கட்டிடக் கலையின் சிறப்பை கூறுவதாக அமையப்பெற்றுள்ளன. இங்கு தான் சிற்பங்களை செதுக்கி, அழகுபடுத்தி பின்னர் கோவிலுக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். மேலும், செதுக்கப்பட்ட அழகிய சிற்பங்கள், தூண்கள், ஓவியங்கள், கோவிலின் திட்ட வரைபடம் என ஏராளமான கட்டமைப்புக்களை இங்கே காணமுடிகிறது. கோவிலை மண்டபத்துடன் சரி சமம் ஆக்க பயன்படுத்தப்பட்டிருக்கும் மணற்கற்களால் ஆன மிகப் பெரிய வளைவு நம் கட்டிடக் கலையின் சிறப்பை உணர வைக்கிறது.

wiki

 பார்வதி குகை

பார்வதி குகை

போஜேஷ்வரர் கோவிலை பார்த்தவாறு நேர் எதிரே அமைந்திருக்கிறது பார்வதி குகை. பெட்வாவின் தெற்கே அமைந்திருக்கும் பார்வதி குகை, பாறையினால் ஆன ஒரு தங்குமிடம் போல இருக்கிறது. இப்போது இந்தக் குகையில் ஆன்மீகத் துறவிகளின் உறைவிடமாக, அன்றாட வாழ்விற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் கட்டிடக் கலை நுணுக்கங்களும், பண்டைய சிற்பங்களின் அழகும், நம்மை 11 ஆம் நூற்ற்றாண்டிற்கே அழைத்துச் செல்லும். இவ்விடம் ஆன்மீகத் துறவிகளின் மையமாகத் திகழ்வதால், இன்றளவிலும் மாசுபடாமல் 1000 வருடங்களுக்கு முன்பிருந்த எழிலுடன் அப்படியே அமைந்திருக்கிறது. சுற்றுலாத் திட்டமிடும்போதே, போஜேஷ்வரர் திருக்கோவில், பாறை ஓவியங்கள் மற்றும் கற்சிற்பங்கள், பார்வதி குகை மற்றும் போஜர் அரசரின் மாளிகை போன்ற இடங்களை பார்க்கும் வகையில் திட்டமிட்டு, தொன்மையான இந்தியாவின் சிறப்பை உணரலாம்.


wiki

போஜரின் எழில்மிகு அரண்மனை

போஜரின் எழில்மிகு அரண்மனை

பார்வதி குகையை பார்த்து முடித்த பிறகு, அப்படியே அங்கிருந்து போஜர் அரசரின் அரண்மனைக்கு சென்று பார்ப்பது வசதியாக இருக்கும். அரண்மனை முற்றிலும் அழிக்கப்படிருந்தாலும், அதன் அடித்தளம் அப்படியே இருக்கிறது. இந்த அடித்தளத்தை வைத்தே, அந்த காலத்தில் இந்த அரண்மனை எவ்வளவு பிரம்மாண்டமாக இருந்திருக்கும் என்பதை உணர முடியும். சுற்றி வேலி அமைத்தது போன்ற அமைப்பு கொண்டு, அதன் நடுவே அழகிய முற்றத்தைக் கொண்டதாக அமைந்திருக்கிறது போஜர் அரண்மனை. கட்டிடக் கலை ஆய்வுகளின் படி, இதனை வடிவமைத்தது போஜ அரசர் என்றும் இதனை சமரங்கன சுத்ரதார என்றும் கூறுவர். செதுக்கப்பட்ட கட்டமைப்புக்கள் மற்றும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பாறைகளால் ஆன அழகிய தரை என அரண்மனை எழில்கொஞ்சும் இடமாக காட்சியளித்திருக்கிறது. அரண்மனையில் இருக்கும் விளையாட்டு தொடர்பான வரைபடங்கள், அரசரின் விளையாட்டு மற்றும் பொழுது போக்கு எண்ணங்களை வெளிப்படுத்துபவையாக விளங்குகின்றன.

wiki

 ஜைன திருக்கோவில்

ஜைன திருக்கோவில்

போஜேஷ்வர திருக்கோவிலின் அருகே அமைந்திருக்கும் ஜைன திருக்கோவிலும், கட்டி முடிக்கப்படாத ஒரு கோவிலாகும். போஜேஷ்வர கோவிலில் இருந்தது போலவே ஜைன கோவிலிலும் மணற்கற்களால் ஆன வளைவைக் காண முடிகிறது. அன்பையும், வெறுப்பையும் வென்று ஜைன சாம்ராஜ்யத்தை நிறுவுபவர் தீர்த்தங்கரா எனப்படுவர். அவ்வாறு நிறுவிய மூன்று தீர்த்தங்கரர்களின் சிலைகளைக் கொண்டுள்ளது ஜைன கோவில். அவற்றில் மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது 20 அடி உயரம் கொண்ட மஹாவீரரின் திருவுருவச் சிலையாகும். மற்ற இரண்டும் பரஸ்வநாதரின் சிலைகளாகும். செவ்வக வடிவத்தில் இருக்கும் இத்திருக்கோவிலில் போஜர் அரசரைப் பற்றிய குறிப்புகளும் உள்ளன. மேலும் பக்தமர ஸ்தோத்திரத்தை இயற்றிய ஆச்சார்ய மான்துங்காவின் சிலையும் இந்த கோவிலில் இருக்கிறது.

wiki

 போஜ்பூரை அடைவது எப்படி?

போஜ்பூரை அடைவது எப்படி?

விமானம் மூலமாக
மத்தியபிரதேச தலைநகரான போபாலில் விமான நிலையம் உள்ளது. போபாலில் இருந்து சுமார் 28 கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது போஜ்பூர். மும்பை, தில்லி, ஜபால்பூர், இந்தோர் மற்றும் குவாலியர் போன்ற இடங்களில் இருந்து போபாலுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. சாட்டிலைட் நகரமான பைராகருக்கு அருகில் அமைந்திருக்கிறது போஜ்பூர். பைராகர், பஞ்சாத்தி வழியாகவோ அல்லது காந்தி நகர் ரோடு தேசிய நெடுஞ்சாலை 12 வழியாகவோ போஜ்பூரை அடையலாம்.

ரயில் மூலமாக
போஜ்பூருக்கு அருகில் அமைந்திருக்கும் ரயில் நிலை போபாலில் அமைந்திருக்கிறது. வடக்கு தெற்கு தளவாடங்களின் முக்கிய வழித் தடத்தில் அமைந்திருப்பதால், பல்வேறு ரயில்கள் போபாலுக்கு இயக்கப்படுகின்றன. போபால் ரயில் நிலையம், கிழக்கு மத்திய ரயில்வே பிராந்தியத்தைஸ் சேர்ந்ததாகும்.

சாலை வழியாக
போபாலுடன் சாலைகள் இணைக்கப்பட்டிருப்பதால் போஜ்பூரை பேருந்து அல்லது கார் மூலம் எளிதில் அடையலாம். வேறு மாநில பேருந்து நிறுத்தம் போபாலில், ஹபிகஞ் நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. போபாலில் இருந்து மெட்ரோ அல்லது டேக்சி மூலம் போஜ்பூரை சிரமமின்றி அடையலாம்.

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

போஜ்பூரின் தொன்மையான அழகையும், கட்டிடக்கலையின் சிறப்பையும் வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் வந்து ரசிக்கலாம். இருப்பினும், பிப்ரவரி தொடங்கி ஜூன் வரை வெப்பம் தணிந்து இருக்கும் நேரத்தில் போஜ்பூரை ரசிப்பது சிறப்பாக இருக்கும்.

Read more about: travel, fort