Search
  • Follow NativePlanet
Share
» »உத்தரகண்ட்டின் பத்து அழகிய பறவைகள் சரணாலயங்களுக்கு போகலாமா?

உத்தரகண்ட்டின் பத்து அழகிய பறவைகள் சரணாலயங்களுக்கு போகலாமா?

By Udhaya

சுற்றுலா என்றாலே ஆர்வத்துடன் முன் வருபவரா நீங்கள். உங்களுக்கு எந்த மாதிரியான சுற்றுலா பிடிக்கும். கோடைக்காலத்தை தவிர்க்க மட்டும் சுற்றுலா செல்கிறார்களா அல்லது சுற்றுலா என்றாலே அதன்மேல் காதல் கொண்டு பயணிப்பவரா நீங்கள். உங்களுக்கு காடுகளில் அலைந்து திரிந்து மகிழ்வது பிடிக்குமா அல்லது நகரங்களில் சுற்றித் திரிவது பிடிக்குமா. எப்படி என்றாலும் சுற்றுலா பிரியர் என்றாலே பறவைகளையும், விலங்குகளையும் பிடித்துப் போகுமே. தமிழகத்தில் நிறைய உயரினங்கள் காடுகளிலும். சில வீடுகளிலும் வளர்க்கப்படுகின்றன. அவை எல்லாம் செல்லப்பிராணிகள் என்றும் காட்டு பிராணிகள் என்றும் அழைக்கப்படும். பறவைகளை வளர்ப்பவர்களும் உண்டு. சரி இந்த உலகத்தில் எத்தனை வகையான பறவைகள் இருக்கும்.. உங்களால் உடனே கூற முடியாதல்லவா. பல்வேறு வகையான பறவை இனங்களைக் காண உங்களுக்கு பிடிக்கும் என்றால் பறவைகள் சரணாலயத்துக்கு செல்வோம் வாருங்கள்.

 நந்தா தேவி தேசியப் பூங்கா

நந்தா தேவி தேசியப் பூங்கா

எப்படி செல்வது

நந்தா தேவி தேசியப் பூங்கா, ஜோஷிமத்திலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமாகும். சுமார் 630 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்ட இந்த தேசியப் பூங்கா, நாட்டின் இரண்டாவது பெரிய மலைத்தொடரான நந்தா தேவி மலைகளினால் சூழப்பட்டுள்ளது. இப்பூங்கா, 1988 ஆம் வருடம் யுனைட்டட் நேஷன்ஸ் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனத்தால் (யுனெஸ்கோ) உலகப் பாரம்பரிய மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழும் விலங்குகள்

இது தவிர, இப்பூங்கா மேற்குப்புற இமாலய என்டமிக் பறவைப் பகுதியின் கீழும் பட்டியலிடப்பட்டுள்ளது. நந்தா தேவி தேசியப் பூங்காவில், பனிச்சிறுத்தை, இமாலயன் கறுப்புக்கரடி, செரோவ் வகை ஆடுகள், பழுப்பு நிற கரடி, ரூபி த்ரோட், பாரல் வகை ஆடுகள், கரடிக் குரங்குகள், க்ரோஸ்பீக் வகை பறவைகள், இமாலயன் கஸ்தூரி மான் மற்றும் இமாலயன் வரையாடுகள் போன்ற விலங்குகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது.

பறவையினங்கள்

இந்த தேசியப் பூங்கா சுமார் 100 வகை பறவையினங்களின் வாழ்விடமாகவும் விளங்குகிறது. இங்கு அதிகமாகக் காணப்படும் பறவைகள், ஆரஞ்சு ஃப்ளாங்க்ட் புஷ் ராபின், நீல ஃப்ரன்டட் ரெட்ஸ்டார்ட், மஞ்சள் வயிறுடைய ஃபான்டெயில் ஃப்ளைகாட்சர், இந்திய மரவாழ் வானம்பாடிகள், மற்றும் செந்நிற நெஞ்சுப் பகுதி கொண்ட வானம்பாடிகள் ஆகியனவாகும். இப்பூங்கா சுமார் 312 வகை மலர்கள் மற்றும் பல்வேறு வகை வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகி

PC: Dhruvaraj S

கலஹார் பூங்கா

கலஹார் பூங்கா

இந்த தேசிய பூங்காவிற்கு தென்மேற்கில் அமைந்துள்ள பிரபலமான சுற்றுலா தலம் கலஹார் அணைக்கட்டாகும். இந்த அணைக்கட்டிலுள்ள நீர்மின் சக்தி நிலையம் தேவையான மின்னாற்றலை உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது.

இது மட்டுமல்லாமல், பறவைகளை கவனிப்பதற்கும் புகழ் பெற்ற இடமாக இந்த பூங்கா விளங்குகிறது. குளிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகள் இடம் பெயரும் வாட்டர்பௌல் பறவையை இங்கே காணலாம்.

PC: Dhruvaraj S

குவானோ ஹில்ஸ்

குவானோ ஹில்ஸ்

குவானோ ஹில்ஸ் என்பது நைனித்தால் நகரத்திற்கு அருகில் பாங்கோட் கிராமப்பகுதியில் அமைந்திருக்கும் மலைத்தொடர்களை குறிக்கிறது. இம்மலைகளில் அமைந்துள்ள மலையேற்றப்பாதைகள் செழிப்பான ஓக், தேவதாரு மற்றும் மூங்கில் மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிகள் வழியே நீள்கின்றன.

பல அரிய மூலிகைத்தாவரங்கள், அரிய வகை பறவையினங்கள் ஆகியவற்றை இம்மலைப்பகுதியில் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இயற்கை ரசிகர்களுக்கும், புகைப்பட ஆர்வலர்களுக்கும் மிகவும் பொருத்தமான இடம் இந்த குவானோ ஹில்ஸ் ஆகும்.

Shakti yadav ji

 வினோக் மவுண்டைன் குவாய்ல் சரணாலயம்

வினோக் மவுண்டைன் குவாய்ல் சரணாலயம்

லைப்ரரி பாயிண்டில் இருந்து தெற்கு நோக்கி 11கிமீ தொலைவில் அமைந்திருக்கும் வினோக் மவுண்டைன் குவாய்ல் சரணாலயம் 1993ல் உருவாக்கப்பட்டது. 339ஹெக்டேர் பரப்பளவு உள்ள இந்த சரணாலயம் அழிந்த இனமாக கருதப்படும் இமாலய குவாய்ல் என்றழைக்கப்படும் பஹரி பேடர் பறவைக்கு சரணாலயமாக திக்ழந்ததாக சொல்லப்படுகிறது. கடைசியாக இப்பறவை 1876ல் தென்பட்டது.

PC: Rshanspal11

 நீல் தாரா பறவைகள் சரணாலயம்

நீல் தாரா பறவைகள் சரணாலயம்

ஹரித்வாரில் இருந்து 4கிமீ தொலைவில் அமைந்திருக்கும் நீல் தாரா பக்‌ஷி விஹார் (நீல் தாரா பறவைகள் சரணாலயம்) பறவைகளைக் காண விரும்புவோரின் சொர்கபுரியாக திகழ்கிறது.

பீம்கோடா பாராஜில் அமைந்திருக்கும் இச்சரணலாயத்திற்கு சைபீரிய கொக்குகள் உள்ளிட்ட ஏராளமான இடம்பெயர் பறவைகள் குளிர்காலத்தில் வருகை தருகின்றன.

நைனித்தால் நகரிலிருந்து 15 கி.மீ தூரத்தில் இந்த பாங்கோட் எனும் சிறு கிராமம் உள்ளது. இந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் பயணிகள் நைனா பீக், ஸ்னோ வியூ மற்றும் கில்பரி ஆகிய இதர சுற்றுலா அம்சங்களை ரசித்தபடி செல்லலாம்.

T. R. Shankar Raman

பாங்கோட் கிராமப் பறவைகள் பூங்கா

பாங்கோட் கிராமப் பறவைகள் பூங்கா

இந்த கிராமப்பகுதியில் 150 வகையான பறவையினங்கள் வசிப்பதால் இது பறவை ரசிகர்களுக்கு பிடித்த இடமாக திகழ்கிறது. கிரிஃப்பான், நீலச்சிறகு மின்லா பறவைகள், அரிய வகை மரங்கொத்திகள், ஃபோர்டெயில் பறவைகள், லாமெர்கெயர் பறவைகள் மற்றும் கலீஜ் காக்கைகள் போன்றவற்றை இங்கு காணலாம்.

Diliff

ஆசன் பரேஜ்

ஆசன் பரேஜ்

ஆசன் மற்றும் யமுனா நதிகள் சந்திக்கும் இடத்தில் ஆசன் பரேஜ் உள்ளது. ஆசன் நதியின் மூலம் உருவாக்கப்பட்ட நான்கு சதுர பரப்பளவிலான செயற்கை ஈர நிலத்தை இங்கு காணலாம். நீரின் அளவு குறையும் போது பல மண் தீவுகளையும் இங்கு பார்க்க முடியும். சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் இங்கு வரும் பறவைகளை அரிய வகை பறவைகள் என்று சான்றளித்துள்ளது.

பறவையினங்கள்

மல்லார்ட் என்ற காட்டு வாத்து, சிவப்பு முகம் கொண்ட ஆண் வாத்து, சிவப்பு நிற வாத்துவகை, தண்ணீர்க் கோழி, பெரிய நீர்க் காகம், உண்ணிக்கொக்கு, வாலாட்டுக்குறுவி, குளநாரை, மீன்பிடிக் கழுகுகள், சேற்றுப் பூனைப் பருந்து, பெரிய புள்ளிகளுடைய கழுகு, கடற் பறவை, மற்றும் வன்பாலை போன்ற அரிய வகை பறவைகளை பறவை விரும்பிகள் கண்டு ரசிக்கலாம்.

பனிக்காலம் தென்னிந்தியாவை நோக்கி செல்லும் பல பறவைகள் இங்கு தங்கிச் செல்வதை காண்பது கண்ணுக்கழகு. அக்டோபர் இறுதியில் பாலி ஆர்டிக் கடற்கரையிலிருந்து புலம் பெயர்ந்து வரும் பறவைகளை இங்கு காணமுடிகிறது.

எப்போது காணலாம்

அக்டோபர் - நவம்பர் மற்றும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் பறவைகள் பலவற்றை கண்டு ரசிக்க முடியும். பாலஸ் என்ற மீன் கொத்தி கழுகின் முப்பது வருட தங்கும் இடமாக இவ்விடம் உள்ளது. பதினொறு வகை புலம் பெயர்ந்து வரும் பறவைகளையும், நீர்ப்பறவைகளும் இங்கு ஒன்றாக காணலாம். அதில் சில செம்மை நிறக் கழுத்துடைய வாத்துக்கள், ஊசிவால் வாத்து, கருவால் வாத்து, ஆண் வாத்து, அமெரிக்க பறவையான செம்மை நிற முகமுடைய வாத்து, காட்டு வாத்து, குடுமியுடைய வாத்து போன்ற பறவைகளாகும்.

செப்டம்பர் - மே மாதம் வரை இங்கு செங்கால் நாரை, திறந்த அலகுடைய நாறை, மற்றும் இரவு நாரை போன்ற பறவைகளை பார்க்க இது ஒரு சிறந்த பருவமாகும்.

wiki

சீதாபனி பறவைகள் சரணாலயம்

சீதாபனி பறவைகள் சரணாலயம்

சுற்றுலாப் பயணிகள் நடந்து சென்று அனுபவிக்கும் வாய்ப்புகளை வழங்கக் கூடிய ஒரே இடமான சீதாபனி பறவைகளை கவனிப்பதற்கு மிகவும் ஏற்ற இடமாகும். இந்த இடத்தில் சுற்றுலாப் பயணிகள் வால்மீகி கோவில் மற்றும் ஆற்றைக் காண முடியும். இந்த ஆற்றின் கரையில் பல்வேறு ஊர்வன விலங்குகளையும் காணலாம்.

புராணங்களின் படி, இராமரின் மனைவியான சீதா தேவியை இராமர் ஒதுக்கி வைத்த போது அவர் சில நாட்கள் இங்கே தங்கியிருந்திருக்கிறார். இந்த இடம் கார்பெட் புலிகள் காப்பகத்தின் கட்டுப்பாட்டில் இல்லாமல், இந்திய தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

உண்மையில் இவ்விடம், புலிகள், யானைகள், மான்கள், சம்பார், குரைக்கும் மான்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் ராஜநாகங்கள் இயற்கையாகவே வசித்து வரும் இடமாகும். சீதாபனி வனத்துறையினர் இங்கே யானை சவாரி செய்வதற்கு ஏற்ற வசதிகளை செய்து தருகிறார்கள்.

Shikra

சில்லா வனவிலங்கு சரணாலயம்

சில்லா வனவிலங்கு சரணாலயம்

1977ல் கண்டுபிடிக்கப்பட்ட சில்லா வனவிலங்கு சரணாலயம் 249 சதுர கிமீ பரப்பளவில் அமைந்துள்ளது. ஹரித்வாரில் இருந்து 10கிமீ தூரத்தில் கங்கை கரையில் உள்ளது இந்த சரணாலயம்.

1983ல் இந்த சரணாலயம், மோடிசூர் மற்றும் ராஜாஜி சரணாலயங்களுடன் இனைக்கப்பட்டு ராஜாஜி தேசியப் பூங்காவாக உருவாக்கப்பட்டது. புலிகள், யானைகள், கரடிகள், சிறிய பூனைகள் ஆகிய பல விலங்குகளின் சரணாலயமாக சில்லா வனவிலங்கு சரணாலயம் திகழ்கிறது. அதுமட்டுமல்லாது பலவிதமான பறவைகளையும் பயணிகள் இங்கு கண்டுகளிக்கலாம். நவம்பர் முதல் ஜூன் வரையிலான மாதங்கள் இங்கு வர ஏற்ற மாதங்களாக கருதப்படுகிறது.

bheinskitang

 கில்பரி

கில்பரி

கில்பரி எனும் இந்த அழகிய பிக்னிக் சுற்றுலாத்தலம் நைனித்தால் நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. ஓய்வாக விடுமுறையை கழிப்பதற்கு மிகவும் பொருத்தமான இந்த இடம் வளமான ஓக், பைன் மரங்கள் மற்றும் ரோடோடென்ரோன் காடுகளால் சூழப்பட்டிருக்கிறது.

கடல் மட்டத்திலிருந்து 2194 மீ உயரத்தில் இந்த இடம் அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே பயணிகள் இங்கிருந்து சுற்றிலும் எழும்பி நிற்கும் படர்ந்த சிகரங்களின் அழகை நன்றாக பார்த்து ரசிக்கலாம். கில்பரி ஸ்தலத்தில் 580 வகையான பறவை இனங்கள் வசிக்கின்றன என்பதால் இவற்றையும் பயணிகள் ரசித்து மகிழலாம்.

பிரவுன் வுட் ஆந்தை, காலர்ட் க்ராஸ்பீக் பறவை மற்றும் சிரிக்கும் குயில் போன்ற அபூர்வ பறவைகளை இப்பகுதியில் பயணிகள் காணலாம். மேலும் இங்குள்ள ஒரு காட்டு பங்களாவில் ஓய்வெடுக்கவும் வசதி உள்ளது.

wiki

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more