» »ஓர்ச்சாவில் ஒரு சாகசப் பயணம்! பேரெழில் பொங்கும் தருணம் வாங்க ரசிக்கலாம் #சாகசஉலா 2

ஓர்ச்சாவில் ஒரு சாகசப் பயணம்! பேரெழில் பொங்கும் தருணம் வாங்க ரசிக்கலாம் #சாகசஉலா 2

Written By: Udhaya

ஓர்ச்சா..... மத்தியப்பிரதேச மாநிலத்தின் திகம்கார் மாவட்டத்தில் பெட்வா நதி தனது கரங்களில் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கும் ஓர் அற்புத நகரம். பந்தல்கண்ட் பகுதியில் புகழ் பெற்று விளங்கிய மன்னரான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் 1501-ஆம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்ட ஓர்ச்சா, உத்தரப்பிரதேசத்தின் ஜான்ஸியிலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் நிறுவனரான மஹாராஜா ருத்ர பிரதாப் சிங் அவர்களே இதனை முதன்முதலில் ஆண்ட மன்னராவார். ஓர்ச்சா மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள் ஒரு மன்னரால் உருவாக்கப்பட்டு ஆளப்பட்ட ஓர்ச்சா, நெஞ்சார்ந்த பாராட்டுகளுக்குரியனவும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடியனவுமாகிய பல கட்டிடங்களைக் கொண்டுள்ளது. இது சாகசப் பயணங்களுக்கு மிகவும் சிறந்த இடமாக அறியப்படுகிறது. சாகசங்கள் செய்ய விரும்பும் சுற்றுலாப் பயணிகளே..... ரெடியா?

 ஓர்ச்சாவை அடைவது எப்படி?

ஓர்ச்சாவை அடைவது எப்படி?

ஜான்ஸி மற்றும் ஓர்ச்சாவிற்கு இடையிலான தூரம் சுமார் 16 கி.மீ. ஆகும். சாலை வழி போக்குவரத்து சேவைகள் எளிதாகக் கிடைக்கின்றன. பெரும்பாலான சமயங்களில் ஓர்ச்சாவில் ரம்மியமான வானிலையே நிலவுகிறது. ஓர்ச்சா நகரம் சில இடங்களில் காடுகளாகவும், மீதி இடங்களில் சிறப்பானதாகவும் அமைந்து காணப்படுகிறது.

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

சந்திரஷேகர் ஆசாத் நினைவகம், சாத்ரிகள், தௌஜி கி ஹவேலி, தின்மான் ஹர்டாலின் அரண்மனை, ஃபூல் பாக் போன்றவை ஓர்ச்சாவில் உள்ள சில அற்புதமான ஸ்தலங்களாகும். ஓர்ச்சா சுற்றுலாத்துறை, ராஜா மஹால், ராணி மஹால், சுந்தர் மஹால், லக்ஷ்மி நாராயண் கோயில் போன்ற பல இடங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்க்க அனுமதிக்கின்றது. ஓர்ச்சாவில் சுற்றுலாப் பயணிகள் ஆற்றில் செலுத்தப்படும் கட்டுமரத்தில் பயணம் செய்யும் அனுபவத்தைப் பெறலாம். இது சாகச விரும்பிகள் கட்டாயம் மேற்கொள்ள வேண்டிய ஒரு பயணமாகும்.

ShivaRajvanshi

கலாச்சார உலா

கலாச்சார உலா


ஓர்ச்சா அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்துக்காகவும் பெரிதும் அறியப்படுகிறது. இது பெரிய நகரமாக இல்லாவிடினும், இங்கு வாழ்ந்து வரும் மக்கள் ஒருவருக்கொருவர் நல்ல புரிதலுடன் பழகி வருகிறார்கள் என்பதை விழாக் கொண்டாட்ட சமயங்களில் கண்கூடாகக் காணலாம். இங்குள்ள கலாச்சார நிகழ்வுகளைப் பற்றி புரிந்துகொள்ள குறிப்பிட்ட விழா நாட்களில் இங்கு பயணிக்கவேண்டும்.

Malaiya

பேரெழில் பொங்கும் ஓர்ச்சா

பேரெழில் பொங்கும் ஓர்ச்சா

பிரபல நகரமான ஓர்ச்சாவின் எல்லைக்குள் பொதிந்திருக்கும் சொக்க வைக்கும் அழகை ரசிக்கவரும் பயணிகளை ஓர்ச்சா சுற்றுலாத்துறை பெருமையுடன் வரவேற்கிறது. இந்த எழில்மிகு நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஏராளமான மஹால்கள், கோயில்கள், அரண்மனைகள் மற்றும் அழகிய கட்டுமானங்கள் பார்த்து ரசிக்கும் பொருட்டு அணி வகுக்கின்றன. ஓர்ச்சா பயணத்தின் அற்புதமான நினைவுகளில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்த பட்சம் நான்கு நாட்களாவது செலவிட வேண்டும்.

Malaiya

சந்திரஷேகர் ஆசாத் நினைவகம்

சந்திரஷேகர் ஆசாத் நினைவகம்

சந்திரஷேகர் ஆசாத் நினைவகம், வீரம் செறிந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரான சந்திரஷேகர் ஆசாத் அவர்களின் தியாகத்தை போற்றிப் பாதுகாக்கும் பிரயத்தனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர்ச்சாவில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த இடம். சந்திரஷேகர் ஆசாத்தின் போராட்டங்களை மக்கள் அறியும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த நினைவகம், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் நாட்டுப்பற்றை உயிர்ப்பிக்க உதவுகிறது.

Varunkau

 சாத்ரிகள்

சாத்ரிகள்

ராஜ சமாதிகளான சாத்ரிகள் ஓர்ச்சாவின் நதிகளின் கரைகளில் அமைந்து வருவோரின் கவனத்தை ஈர்த்துவருகிறது. சூரிய ஒளியில், இந்த கட்டிடங்கள் நதி நீரில் பிரதிபலிப்பதைப் பார்ப்பது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். உயர்த்தப்பட்ட நடைமேடைகளில், தூண்களை ஆதரவாகக் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த சாத்ரிகள், வருடந்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கக்கூடியதொரு வசீகரமான அழகைக் கொண்டுள்ளன. குறுகலான ஒரு பாலத்திலிருந்து நன்றாக பார்க்கக்கூடியனவாகிய இந்த சாத்ரிகள், ஓர்ச்சா வரும் பயணிகள் கட்டாயமாக பார்க்க வேண்டிய ஒரு ஸ்தலமாகும். நதியின் இப்பகுதிக்கு வருகை தரும் பயணிகள் கண்டிப்பாக ஒரு மகத்தான அனுபவத்தைப் பெறலாம்.

LRBurdak

தௌஜி கி ஹவேலி

தௌஜி கி ஹவேலி


ஓர்ச்சாவில் உள்ள சிறிய அளவிலான அரச மாளிகையாகிய தௌஜி கி ஹவேலி, கண்ணைக் கவரும் அழகுடன் கூடிய ஒரு கட்டிடம் ஆகும். தௌஜி கி ஹவேலி, ஓர்ச்சாவின் வணிக வர்க்கத்தைச் சேர்ந்தவர்களால் மிகச் சிறந்த தொழிநுட்பங்களை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ள அரச மாளிகைகளின் அச்சு அசல் வார்ப்பாகத் திகழ்கிறது. உண்மையில் இது முடிந்து போன ஒரு சகாப்தத்தினை நினைவு கூரும் வகையிலான விரிவான திட்டமிடல் மூலம், பிரம்மாணடமான அரண்மனையின் சிறிய பதிப்பாக கட்டப்பட்டுள்ளது.

unknown

Read more about: travel, trekking, india, tour