» »இந்தியாவில் இருக்கும் சிகரங்கள் எத்தனை? அதுல நீங்க எத்தனை பாத்திருக்கீங்க? நீங்க வியக்கப் போகும் சிக

இந்தியாவில் இருக்கும் சிகரங்கள் எத்தனை? அதுல நீங்க எத்தனை பாத்திருக்கீங்க? நீங்க வியக்கப் போகும் சிக

Written By: Balakarthik Balasubramanian

உங்களிடம் ஒரு சிறிய கேள்வி. ஆம், ஒரு வேளை உங்கள் கண்களை கட்டி உயரமான இடத்தில் உங்களுக்கே தெரியாமல் ஏற்றி நிற்க வைத்து கண்களை அவிழ்த்து விட்டால்...எத்தகைய உணர்வினை நீங்கள் கொள்வீர்கள்?

அட ஆமாம்ங்க...டைட்டானிக் திரைப்பட பாணியில் தான். கண்டிப்பாக, உற்சாக வெள்ளத்தில் துள்ளி குதிப்பீர்கள் என்பதே உண்மை. அப்படி இருக்க ஒரு உயரமான மலையில் நீங்கள் ஏறி நிற்க...அதன் உணர்ச்சியினை வார்த்தைகளால் நம்மால் உணர்த்த முடியுமா என்ன? கண்டிப்பாக முடியாது அல்லவா? அப்பேற்ப்பட்ட உயரமான இடங்களை தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

இந்தியாவில் பிரசித்திபெற்ற இமயமலையினை மட்டுமே நாம் நினைத்து பார்த்து ஆச்சரியம் கொள்ள...'நாங்களும் உயரம் தான்...நாங்களும் அழகு தான்...' என பல மலைகள், அழகிய நிலபரப்புகளுடன் கண்களுக்கு காட்சிகளை பரிசாக தருகிறது. இந்தியாவில் காணப்படும் பிரசித்திபெற்ற இடங்கள் பலவற்றினை ஆராய்ந்தால், அதனை எண்ணிலடங்கா புதிர்கள் சூழ, அவற்றினால் தடுமாறி தான் நிற்கின்றனர் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள். ஆம், பல மலைகள் பிரசித்திபெற்று விளங்க...அதன் ரகசியங்களும், அழகும் உயரத்தில் புதைக்கப்பட்டு மறைக்கப்பட்டு இன்றும் ஆச்சரியத்தின் எல்லைக்கே நம் மனதினை பயணிக்க வைக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து பாருங்களேன். உங்களை உயரமான மலையின் மேல் ஏற்றிவிட்டு நிற்க சொன்னால்...அந்த ஆனந்தத்தை உங்களால் விவரிக்க முடியுமா என்ன? அத்துடன் அந்த உயரத்திலிருந்து நீங்கள் காணும் காட்சிகளையும் தான் உங்களால் விவரிக்க முடியுமா? கண்டிப்பாக இயற்கையினை வருணிக்கும் சக்தி, நாம் அனைவருக்கும் கொஞ்சம் குறைவு தான். அதனை உணர்வதே என்றும் அழகினை நமக்கு தருகிறது. இந்தியா முழுவதும் காணப்படும் உயரமான மலைகளும், குன்றுகளும், பள்ளத்தாக்குகளும், கைகளால் பிடிக்க முடியாத உயரத்தில் அமைந்து நம்மை அன்புடன் வரவேற்கிறது. அத்துடன்...பனிகளால் சூழ்ந்த காட்சிகளும், வனங்களின் அழகும், புதர் செடிகளில் ஒளிந்திருக்கும் அழகிய ரகசியங்களும் என மனதினை வருட காத்துகொண்டிருக்கும் இந்த மலைப்பகுதிகளுக்கு ஒரு முறை சென்று தான் பாருங்களேன்.

நாம் மலை நோக்கி மேல் ஏற...நம் மீது படும் குளிர்ந்த காற்றினால் முகம் புத்துணர்ச்சி அடைய...நாம் செய்யும் ஆரவாரத்தின் மூலம் அகமும் புத்துணர்ச்சி கொண்டுள்ளது என்பதனை உணர்கிறோம். இந்த மலையின் மேல் நாம் ஏற... சில சமயங்களில் தூரோகியை பார்ப்பது போல் நாம் கீழ் நோக்கி பூமியை பார்க்க...அப்படி என்ன தான் மேலே இருக்கிறது என பார்க்கும் ஆர்வமும் கால்களை முன்னோக்கி நகர வைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அப்பேற்ப்பட்ட 10 இடங்களை தான் நாம் இப்பொழுது கீழ்க்காணும் பத்திகளின் வாயிலாக பார்க்க போகிறோம்.

கஞ்சன்ஜங்கா:

கஞ்சன்ஜங்கா:

உலகிலேயே 3 ஆவது பெரிய மலையாக கருதப்படும் கஞ்சன்ஜங்கா, சுமார் 8586 மீட்டர்கள் உயரத்தில் அமைந்து காட்சிகளை கண்களுக்கு வழங்கி மனதினை இதமாக்க காத்துகொண்டிருக்கிறது. இந்த மிகப்பெரிய மலை... 5 சிகரங்களால் அழகிய காட்சிகளை நமக்கு தர...செவியால் நாம் அறியும் செய்தியை காட்டிலும் கருவிழிகளால் காணும் காட்சிகள், கண் இமைக்காமல் நம்மை அந்த இயற்கை அழகிடம் சரணடைய செய்கிறது. இந்த மலையின் வரலாற்றினை தெரிந்துகொண்ட உள்ளூர் வாசிகள்...கடவுளை போல் வணங்குகிறார்கள் என்பதனை தெரிந்துகொள்ளும் நம் மனம்...அவர்கள் இந்த மலையினை பேணி பாதுகாக்கும் அழகியலை நமக்கு தெரியபடுத்துகிறது.

இந்த இடத்தின் அழகும், மலைப்பகுதிகளில் காணும் எண்ணற்ற அதிசயங்களும் மனதில் நிறைந்து...நினைவுகளை திரும்ப சுமந்து செல்ல மட்டும் அனுமதி வழங்கி நம்மை மகிழ்விக்கிறது. இங்கிருந்து நாம் பார்க்க...டார்ஜிலிங்கின் பல பகுதியை நம்மால் காண முடிகிறது. அவற்றுள் நம் கண்களுக்கு புலப்படும் டைகர் ஹில்ஸின் அழகு, நம் மனதில் ஈடற்ற இன்ப பெருக்கினை உருவாக்கி மனதில் மகிழ்ச்சி கரை புரண்டோட செய்கிறது. அப்பொழுது ‘நான் மட்டுமா தெரிகிறேன்...' என அது ஏக்கத்துடன் பார்க்க...கோர்கா போரின் நினைவிடங்களும் கஞ்சன்ஜங்காவின் பின் புலத்தில் இருந்து காட்சியளித்து கண்களை வெகுவாக கவர்கிறது. பனிகளால் மூடப்பட்ட இந்த கண்கொள்ளா காட்சிகள் ஒரு பக்கமிருக்க...மிதந்து செல்லும் நீலவானமும் மற்றொரு பக்கம் அழகிய காட்சிகளால் கண்களை குளிர்விக்கிறது.

commons.wikimedia.org

சல்டோரோ கங்க்ரி:

சல்டோரோ கங்க்ரி:

சல்டோரோ மலைகளில் காணப்படும் இந்த சல்டோரோ கங்க்ரி, காரகோரத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறது. இதனை அங்கிருப்பவர்கள்..."சல்டோரோ மலைதொடர்ச்சி" என்றே அழைக்கின்றனர். உலகிலேயே 31வது உயரமான மலையான இந்த சிகரம், சியாச்சன் பகுதியிலுள்ள இந்திய கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு இடையிலும், சல்டோரோ மலைத்தொடரின் மேற்கு பகுதியில் காணப்படும் பாகிஸ்தானி கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு இடையில் அமைந்து நம் மனதினை இன்புற செய்கிறது.

சல்டோரோ கங்க்ரி, கோண்டஸ் பள்ளத்தாக்கிற்கு மேலே வியத்தகு முறையில் உயர்ந்து செல்வதுடன்...சிகரத்தின் மேற்கில் பல்திஸ்தானின் சல்டோரோ நதிகளாலும் உயர்ந்து காட்சிகளை பரிசாக கண் இமைகளுக்கு தருகிறது. இராணுவ பயிற்சி முகாம்கள் நடக்கும் இந்த பகுதி...சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு அபாயம் நிறைந்ததாக தெரிய, இந்த இடத்திற்கு வந்து செல்வோர்களின் எண்ணிக்கை குறைவாகவே காணப்படுகிறது. இந்த சிகரத்தின் மேற்கு பகுதிகள், பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருக்க...கிழக்கு பகுதிகள் இந்தியாவின் கட்டுப்பாட்டிலும் இருந்து வருகிறது என்கிறார்கள்.

commons.wikimedia.org

நந்தா தேவி:

நந்தா தேவி:

இந்தியாவில் காணப்படும் உயரமான மலைகளுள் இரண்டாம் இடத்தினை பிடித்திருக்கும் இந்த நந்தா தேவி மலை...7816 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த சிகரத்தின் பெயரினை நாம் ஆராய்ந்தால்..."தேவியால் தரப்பட்ட பேரின்பம்" என்றதொரு பொருளை தந்து மனதினை தெய்வீக காட்சிகளால் கவர்கிறது. உத்தரகாண்டின் இமயமலையை பாதுகாக்கும் தெய்வமாக இந்த மலை கருதப்பட...இதனை மத முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடமாகவே அனைவரும் பார்க்கின்றனர். இந்த மலை அங்குள்ள பலவீனம் கொண்ட சுற்றுசூழலை பாதுகாத்து வர...இந்த சிகரத்தின் சுற்றளவின் ஒரு பகுதியில் நந்தா தேவி சரணாலயம் இருந்ததாகவும்...அது 1983ஆம் ஆண்டு உள்ளூர் வாசிகளாலும் மலை ஏறுபவர்களாளும் மூடப்பட்டதாகவும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரியவருகிறது.

Michael Scalet

ரியோ புர்கில்:

ரியோ புர்கில்:


இதனை "லியோ பார்கியல்" என்றும் "லியோ பார்கில்" என்றும் அழைப்பர். ஹிமாலயர்களின் மேற்கத்திய இமயமலையில் உள்ள சன்ஸ்கர் மலைத்தொடரின் தெற்கு முனையில் காணப்படும் இந்த சிகரம்...ஹிமாச்சல பிரதேசத்தில் 6818 மீட்டர் உயரத்தில் அமைந்து, ரியோ பார்கில் என்னும் பெயரை கொண்டு விளங்கும் உயரமான ஒரு சிகரமென்கின்றனர். பூகோள ரீதியாக பார்க்கப்படும் இந்த மலை...குவிமாட தோற்றத்துடன் காணப்பட, சுட்லெஜ் நதி மற்றும் திபெத்தின் மேற்கு பள்ளத்தாக்கு பகுதியுடன் உயர்ந்தும் காட்சியளிக்கிறது.

Abhishek

சாரமட்டி:

சாரமட்டி:

இந்த அழகிய சிகரம், நாகலாந்து மாநிலத்தின் மலை எல்லைபகுதிகளுக்கும் பர்மாவின் சாகைங்க் பகுதிகளுக்கு அருகில் காணப்படும் மலைகளை விட உயர்ந்து, அழகிய காட்சிகளால் மனதினை வருடி மகிழ்விக்கிறது. இந்த சிகரம்...நாகலாந்தில் உள்ள டுயன்சாங் நகரம் மற்றும் தன்மிர் கிராமத்திற்கு அருகில் அமைந்து அமைதியான மனதினை ஆக்கிரமித்து அசையவிடாமல் வியப்பில் நம்மை ஆழ்த்துகிறது.
3826 மீட்டர் உயரத்தில் காணப்படும் இந்த சிகரம்... தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய முக்கிய சிகரங்களுள் ஒன்றாகவும் திகழ்கிறது.

commons.wikimedia.org

சந்தக்பூ:

சந்தக்பூ:


இந்த சிகரத்திற்கு "சந்தக்பூ" மற்றும் "சந்தக்பூர்" என்னும் பெயரை கொண்டு அழைத்து மக்கள் மகிழ...நேபாலில் உள்ள இல்லம் மாவட்டத்தில் அமைந்து..."நான் உயரமான சிகரம்..." என கர்வம் பொங்க காட்சிகளை நம் கண்களுக்கு இந்த மலை தந்துகொண்டிருக்க. அத்துடன் மேற்கு வங்காளத்திலுள்ள டார்ஜிலிங்கில் இருக்கும் பெரிய மலையாகவும் இது திகழ்கிறது. சிங்காலிலா மலைமுகட்டின் மிக உயர்ந்த புள்ளியாக கருதப்படும் இந்த மலை, மேற்கு வங்காள நேபால் எல்லையின் டார்ஜிலிங்கில் அமைந்து மனதினை ஆரவாரம் செய்ய காத்திருக்கிறது.

11,941 அடி உயரத்தில் அமைந்து நம்மை அன்னாந்து பார்த்து வியப்பில் ஆழ்த்தும் இந்த சிகரம்...உலகின் ஐந்து உயரமான சிகரங்களுள் நான்காம் இடத்தை பிடித்து பெருமையுடன் நிற்கிறது. மௌன்ட் எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா, லோட்சே மற்றும் மக்களு ஆகியவற்றினை இதன் உச்சிமாநாட்டிலிருந்து பார்க்க முடியும் என்கின்றனர் ...இந்த சிகரம், ஐந்து உயரிய இடங்களுள் ஒன்றாக விளங்குவதுடன் கஞ்சன்ஜங்கா மலையின் முழுமையான காட்சிகளையும் இங்கிருந்தே நமக்கு பரிசாக தருகிறதாம்.

Solarshakthi

கயங்க்:

கயங்க்:


கடல் மட்டத்திலிருந்து 3114 மீட்டர் உயரத்தில் காணப்படும் இந்த மலை...அந்த பகுதியில் காணப்படும் பெரிய சிகரங்களுள் ஒன்று என்னும் பெருமையுடனும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆம், மனிப்பூரில் உள்ள உக்குருலில் காணப்படும் இந்த சிகரம், மற்ற சிகரங்களை காட்டிலும் பசுமையான காட்சிகளாளும், பனிகளாளும் ஆங்காங்கே சூழ்ந்திருக்க...இந்த சிகரத்தின் மீது தான் முதலில் நம் பார்வை பாய்கிறது என்பதே உண்மை.

the_great_himalaya_trail

ஆனைமுடி:

ஆனைமுடி:


கேரளாவில் காணப்படும் இந்த ஆனைமுடி மலை...மேற்குதொடர்ச்சி மற்றும் தென்னிந்தியாவில் காணப்படும் உயர்ந்த சிகரமாகும். இந்த மலை, 8842 அடி உயரத்தில் அமைந்து காட்சிகளை நம் கண்களுக்கு சமர்ப்பிக்க..."யானைகளின் நெற்றி"யினாலே இப்பெயர் பெற்றது என்கிறது வரலாறு. ஆம், இந்த மலை, யானையின் நெற்றி பகுதியினை ஒத்திருக்க, அதனாலே இப்பெயர் பெற்றது என்கின்றனர்.

இதன் செங்குத்தான பகுதிகள், வியத்தகு பார்வையை நமக்கு அளிக்க...கரடு முரடான காட்சிகளை அவை நமக்கு அதிகம் தருகிறதாம். இந்த சிகரம், எரவிக்குளம் தேசிய பூங்காவின் தென்பகுதியில் அமைந்திருக்க... ஏலைக்காய் மலைகள், ஆனைமலை, மற்றும் பழனி மலைகளின் சந்திப்பு வரை நீண்டு காணப்படுகிறது.

commons.wikimedia.org

தொட்டபெட்டா:

தொட்டபெட்டா:

நீலகிரி மலையில் காணப்படும் இந்த தொட்டபெட்டா மலையினை நாம் கணக்கிட...அதன் உயரம் சுமார் 2,637 மீட்டர்கள் இருக்கிறது. இந்த சிகரத்தினை ஒரு பாதுகாக்கப்பட்ட வனம் சூழ்ந்திருக்க...தென்னிந்தியாவில் காணப்படும் உயரமான நான்காவது சிகரமென்னும் பெருமையுடன் இந்த மலை விளங்குகிறது. ஆம், ஆனைமுடி, மன்னாமலை, மீசப்புலிமாலா மலை...இவைகளுக்கு அப்பால்ப்பட்ட மலையாக இந்த சிகரம் இருக்கிறது. ஹெகுபா, கட்டாடாடு, மற்றும் குல்குடி சிகரங்கள் ஊட்டியின் தொட்டபெட்டா மலைப்பகுதியின் மேற்கு பகுதியில் இணைந்து காணப்படுகிறது.

தொட்டபெட்டாவையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் வனமாக காட்சியளிக்க... ரோடோடென்ரான் மரங்கள், பூத்துகுலுங்கும் ஆல்பைன் புதர்கள், மூலிகை செடிகளை தவிர சோலா வனப்பகுதி, மற்ற சரிவான வெற்றிடங்களை மூடிவிடுகிறது

commons.wikimedia.org

ஜிந்தாகாடா:

ஜிந்தாகாடா:


ஆந்திரபிரதேச மாநிலத்தில் காணப்படும் இந்த ஜிந்தாகாடா மலை..1690 மீட்டர் உயரத்தில் அமைந்து காட்சிகளை கண்களுக்கு சமர்ப்பிக்கிறது. கிழக்கு தொடர்ச்சியில் காணப்படும் இந்த மலை, இணையற்ற காட்சிகளாலும், சுற்றுபுறங்களினாலும் நம் மனதினை வருடி... தூக்கி கொண்டு தூர செல்கிறது. காபி தோட்டங்களுக்கும், பசுமையான காட்சிகளுக்கும் புகழ்பெற்ற இந்த சிகரம் பற்றி, எண்ணங்கள் சிந்தையில் உதித்து... மறு நிமிடமே, நம் மனம்... சுற்றுலா பயணத்திற்கு தயாராகிறது என்பதே உண்மையானதொரு நிலைப்பாடாக இருக்கிறது.

commons.wikimedia.org

Read more about: india travel

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்