Search
  • Follow NativePlanet
Share
» »ஆர்பரித்துக் கொட்டும் திற்பரப்பு அருவி - குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் எப்போது செல்லலாம்?

ஆர்பரித்துக் கொட்டும் திற்பரப்பு அருவி - குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் எப்போது செல்லலாம்?

பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது, தென் தமிழகம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் மழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைப் பற்றி தான் கொஞ்ச நாட்களாக நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாகர்கோயில், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள பல்வேறு அருவிகளும், நீர்வீழ்ச்சிகளும் ஆர்பரித்துக் கொட்டுகின்றன. அந்த வகையில் ன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திற்பரப்பு அருவி மிகவும் கண்கவர் வகையில் நம்மை தற்போது வரவேற்க தயாராக இருக்கிறது! பொங்கி வழியும் நீர்வீழ்ச்சி இந்த நீர்வீழ்ச்சியில் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை ஜாலியா ஆட்டம் போடலாம்!

Thirparappu waterfalls Kanyakumari

ஆர்பரித்துக் கொட்டும் திற்பரப்பு நீர்வீழ்ச்சி

திற்பரப்பு நீர்வீழ்ச்சியின் சரியான சீசன் இப்போது தான் ஆரம்பிக்கிறது. ஆம்! திற்பரப்பு நீர்வீழ்ச்சி தனித்துவமானது, இது இயற்கையான நீர்வீழ்ச்சி அல்ல, மாறாக செயற்கையானது மற்றும் பேச்சிப்பாறை அணையின் விளைவாக உருவானது. இந்த நீர்வீழ்ச்சி கன்னியாகுமரியின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும், இது ஆண்டு முழுவதும் பலரால் பார்வையிடப்படுகிறது. திற்பரப்பு அருவிகளில் இருந்து 50 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. திற்பரப்பு அருவி பருவத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து வரும் மழைநீரால் கோதையாறு நிரம்பி வழியும் பருவ மழைக்காலத்தில் பார்வையிட தகுந்தது.

குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் செல்ல ஏற்ற இடம்

திற்பரப்பு நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடுவதற்கு பருவமழையின் போது நீர் முழு கொள்ளளவிற்குப் பாய்கிறது. இது நீர்வீழ்ச்சியின் சிறந்த காட்சியை அளிக்கிறது, அங்கு நீங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விளையாடலாம் மற்றும் மகிழலாம். நீர்வீழ்ச்சியின் அடியில் மக்கள் நின்றுகொண்டு கோதையாற்றின் தூய நீரின் ஓட்டத்தையும் சலசலப்பையும் ரசிப்பதைக் காணலாம். ஆண்டு முழுவதும் இது பார்வையிட தகுந்தது என்றாலும், பருவமழை நேரத்தில் ஆர்பரித்துக் கொட்டும் நீரில் நனைவது தான் தனிச்சிறப்பு.

Thirparappu waterfalls Kanyakumari

திற்பரப்பு நீர்வீழ்ச்சியை பார்வையிட முக்கிய காரணங்கள் என்ன

குழந்தைகளுடன் செல்ல ஏற்ற இடம்:

பார்த்தவுடன் உங்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு 50 அடி உயரத்தில் இருந்து விழும் இந்த நீர்வீழ்ச்சி நம்பமுடியாத குளியல் அனுபவத்தை வழங்குகிறது. இந்த நீர்வீழ்ச்சி ஒரே நேரத்தில் பல மக்கள் நின்று குளிக்கும் அளவுக்கு மிகப் பெரியது. நீங்கள் உங்கள் குட்டீஸ்களுடன் சென்று, ஆட்டம் போட இது சரியான ஸ்பாட்.

படகு சவாரி செய்ய மறக்காதீர்கள்:

பசுமையான மரங்கள் நிறைந்த ஆற்றில் படகு சவாரி செய்வது மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நீங்கள் மகிழக்கூடிய மலிவான பெடலிங் படகுகள் உள்ளன.

நீச்சல் குளத்தில் நீந்தலாம்:

நீர்வீழ்ச்சிக்குப் பிறகு, பெரும்பாலான பார்வையாளர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் விளையாடும் இடம் என்றால் அது அந்த நீச்சல் குளம் தான். உண்மையில், திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தானாக உருவாகும் தனி நீச்சல் குளம் ஒரு முக்கிய ஈர்ப்பாகும்.

சிவன் கோவில்:

மகாதேவர் கோயில் திற்பரப்பு நீர்வீழ்ச்சிக்கு அருகில் அமைந்துள்ளது, இது 18 ஆம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முன்பே கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது. திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் அருகில் இந்த கோயில் அமைந்திருப்பதால் இங்கு வரும் அனைவரும் இந்த கோவிலுக்கு வருகை தருகின்றனர்.

நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிறந்த நேரம் எது

மயக்கும் நீர்வீழ்ச்சிகளை பார்வையிட சிறந்த நேரம் குளிர்காலம் ஆகும், ஏனெனில் கொடை ஆற்றில் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால், நீர்வீழ்ச்சிகளை முழுமையாகக் காண உங்களை அனுமதிக்கிறது. மேலும், குளிர்காலத்தில் வெப்பநிலை சுவாரஸ்யமாக இருக்கும், சிரமமின்றி உங்கள் பயணத்தை அனுபவிக்க அனுமதிக்கிறது.

திறந்திருக்கும் நேரம் என்ன

திற்பரப்பு நீர்வீழ்ச்சி நாள் முழுவதும் சிறந்த அனுபவத்தை வழங்குகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அருவிகளை பார்வையிடலாம். இதற்கான நுழைவுக் கட்டணம் தலா ரூ.10 மட்டுமே!

More News

    Read more about: kanyakumari tamil nadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+