Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் தொலைந்த உலகின் பழைய நகரம் - உள்ள போயி பாத்த ஆங்கிலேயர்கள் ஷாக்! #NPH 10

இந்தியாவில் தொலைந்த உலகின் பழைய நகரம் - உள்ள போயி பாத்த ஆங்கிலேயர்கள் ஷாக்! #NPH 10

இந்தியாவில் தொலைந்த நகரம் - உள்ள போயி பாத்த ஆங்கிலேயர்கள் ஷாக்!

By IamUD

சவ்தா வம்சத்தை சேர்ந்த வன்ராஜ் சவ்தா எனும் மன்னரால் இந்த சம்பானேர் நகரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அவர் தனது முதலமைச்சரான சம்பராஜ் என்பவரின் பெயரை இந்நகரத்திற்கு அளித்துள்ளார். சம்பக் மலரின் நிறத்தை ஒத்த தோற்றத்துடன் இந்தப்பகுதியின் பாறைகள் காணப்படுவதால் இந்தப்பெயர் வந்ததாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. பவகாத் எனும் கோட்டை ஒன்று இந்த சம்பானேர் நகரத்திற்கு மேலே கிச்சி சௌஹான் ராஜபுதன வம்சத்தினரால் கட்டப்பட்டிருந்தது. இந்த கோட்டையை கைப்பற்றிய மஹ்மூத் பெக்டா மன்னர் அத்துடன் இந்த சம்பானேர் நகரத்தின் பெயரையும் மஹ்மூதாபாத் என்று மாற்றி தனது தலைநகரமாக்கிக்கொண்டு தனது வாழ்நாளின் அடுத்த 23 ஆண்டுகளை இந்த நகரத்தின் அலங்கார புதுப்பிப்புகளுக்காக செலவிட்டுள்ளார். பின்னாளில் இந்த ராஜ்ஜியம் முகலாயர் வசம் வந்தபோது தலைநகரம் திரும்பவும் அஹமதாபாத் நகரத்திற்கு மாற்றப்பட்டது. அத்துடன் இந்த சம்பானேர் நகரத்தின் பொலிவும் முக்கியத்துவமும் குறைந்து மறைந்து போனது. ஆனால் இதை இப்படியே விட்டுவிடமுடியாது.. வாருங்கள் அதன் அழகும் பொலிவும் எல்லையற்ற கலையையும் பற்றி தெரிந்துகொள்வோம். இது நேட்டிவ் பிளானட் ஹிஸ்டரி Native Planet History

ஆங்கிலேயரது கணக்கெடுப்பு

ஆங்கிலேயரது கணக்கெடுப்பு

சம்பானேரில் வீற்றிருந்த அற்புதமான கட்டிடச்சின்னங்கள் வனப்பகுதிக்குள் மூழ்கி மறைந்து கிடந்தன. பின்னர் ஆங்கிலேயரது கணக்கெடுப்புகளின்போது இந்த நகரத்தின் இருப்பு வெளிக்கொணரப்பட்டது. அற்புதமான நகர வடிவமைப்புகள் மற்றும் கட்டிடச்சின்னங்கள் போன்றவற்றை கொண்டிருக்கும் இந்த வரலாற்று நகரத்தை நேரில் தரிசிக்கும் போது நாம் அனுபவிக்கும் உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

பார்த்து வியக்கும் கலை

பார்த்து வியக்கும் கலை

அப்படி ஒரு கலையம்சமும் அதீத கட்டிடக்கலை நுணுக்கமும் இந்த ஸ்தலத்தில் வீற்றிருக்கும் சின்னங்களில் ஒளிர்கின்றன. இந்த கட்டிடக்கலை பாரம்பரியம் ஏன் இப்படி வெட்டவெளியில் கிடக்கின்றன. ஏறக்குறைய ஐரோப்பிய நாடுகளில் காணப்படும் சில அற்புதமான கட்டமைப்புகளின் நுணுக்கங்களை ஒத்த கட்டிடக்கலை அமைப்புகளை இந்த அற்புத ஸ்தலத்தில் நீங்கள் தரிசிக்கலாம். ஏன் இவை பிரபலமடையவில்லை என்றும் உங்களால் வியப்படையாமல் இருக்க முடியாது.

இதைப் பற்றி ஏன் நாம் படிக்கவில்லை

இதைப் பற்றி ஏன் நாம் படிக்கவில்லை

எங்கோ இருக்கும் தூண்களையும், பாலங்களையும் பற்றி படிக்க வைக்கப்பட்டிருக்கும் நமக்கு இந்திய மண்ணில் குஜராத்தில் வீற்றிருக்கும் அற்புத வரலாற்று சின்னங்கள் குறித்த அறிமுகம் வாய்க்காதது ஏன்? இந்த கேள்வி உங்கள் மனதை ஆக்கிரமிக்கக்கூடும்.

 முக்கிய கவர்ச்சி அம்சங்கள்

முக்கிய கவர்ச்சி அம்சங்கள்

மனம் மயங்க வைக்கும் இந்த சம்பானேர் வரலாற்று ஸ்தலத்தில் மசூதிகள், சிக்கந்தர் ஷா கல்லறை, ஹலோல், சகர் கான் தர்க்கா, மகாய் கொத்தார் அல்லது நவ்லக்கா கொத்தார், சிட்டாடல், ஹெலிகல் ஸ்டெப்வெல் எனும் படிக்கிணறு, செங்கல் கல்லறை, பவகாத் கோட்டை, கோட்டை வாயில் அமைப்புகள், கோயில்கள், ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயம், கெவ்தி ஈகோ கேம்ப்சைட், தன்பாரி ஈகோ கேம்ப்சைட் போன்ற ஏராளமான அம்சங்கள் இங்கு வரலாற்று ஆர்வமும், கலா ரசனையும் கொண்ட பார்வையாளர்களை வரவேற்கின்றன.

யுனெஸ்கோ

யுனெஸ்கோ

பவகாத் கோட்டையின் சிதிலமடைந்த கோட்டைச்சுவர்களின் மிச்சங்களையும் இங்கு காணலாம். வடோதரா நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த சம்பானேர் வரலாற்று ஸ்தலம் அமைந்திருக்கிறது. பேருந்து வசதிகள் மற்றும் இதர வாடகை சுற்றுலா வாகனங்கள் இந்த மூலமாக இந்த இடத்திற்கு வரலாம். யுனெஸ்கோ அமைப்பு 2004ம் ஆண்டில் இந்த வரலாற்று ஸ்தலத்தை உலகப்பாரம்பரிய வரலாற்று ஸ்தலமாக அங்கீகரித்துள்ளது மற்றொரு பெருமைக்குரிய விஷயமாகும்.

All above photos Taken from

PC: Wiki Commons

 சாஹர் கி மஸ்ஜித்

சாஹர் கி மஸ்ஜித்

சம்பானேர் ராஜ்ஜியத்தை ஆண்ட் சுல்தான்களின் தனிப்பட்ட மசூதியாக இந்த சாஹர் கி மஸ்ஜித் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூன்று நுழைவாயில்களிலும் மிகப்பெரிய குமிழ் வடிவ கூரை அமைப்புகள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

Karchetan

சிக்கந்தர் ஷா கல்லறை

சிக்கந்தர் ஷா கல்லறை

குஜராத் மாநிலத்திலுள்ள சம்பானேர் வரலாற்று ஸ்தலத்தில் சிக்கந்தர் ஷா கல்லறை அமைந்துள்ளது. சம்பனேர் பகுதியை கடைசியாக ஆண்ட மன்னரான சிக்கந்தர் ஷா இமாம் உல் முல்க் என்பவரால் கொல்லப்பட்டார். சிக்கந்தர் ஷா அவரது இரு சகோதரர்களோடு சேர்த்து இங்கு புதைக்கப்பட்டுள்ளார். சாதாரணமான கருங்கல் அமைப்பாக உருவாக்கப்பட்டிருந்தாலும் அற்புதமான கலையம்சத்தோடு இந்த கல்லறை அமைப்பு காட்சியளிக்கின்றது.

Pankaj.pkp

தன்பாரி எக்கோ கேம்ப்சைட்

தன்பாரி எக்கோ கேம்ப்சைட்

தன்பாரி எக்கோ கேம்ப்சைட் எனும் இந்த கூடார வசிப்பு ஸ்தலம் ஜம்புகோடா காட்டுயிர் சரணாலயத்தில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் பலவகையான தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் நிறைந்துள்ளன. இயற்கை ஆர்வலர்களும் சுற்றுலாப்பயணிகளும் காட்டுப்பகுதியில் சுற்றுலா மேற்கொண்டு இயற்கைச்சூழல் பற்றி தெரிந்து கொள்ள இந்த ஈகோ கேம்ப்சைட் உதவுகிறது.

gujarattourism.com

 மகாய் கொத்தார்

மகாய் கொத்தார்

வரலாற்றுக்காலத்தில் போர்வீரர்களுக்கு தேவையான தானியங்களை சேகரித்து வைக்கும் களஞ்சியங்களாக இந்த குமிழ் போன்ற கட்டுமானங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இவை சம்பானேர் வரலாற்றுத்தலத்தில் அமைந்துள்ளன

gujarattourism.com

நாகினா மஸ்ஜித்

நாகினா மஸ்ஜித்


நுணுக்கமான குடைவு வேலைப்பாடுகளை கொண்டுள்ள இந்த நாகினா மஸ்ஜித் சம்பானேர் வரலாற்று ஸ்தலத்திலுள்ள மற்றொரு முக்கியமான மசூதியாகும். மூன்று குமிழ் கோபுரங்களை கூரையாக கொண்ட பிரதான கூடம் ஒரு உயரமான பீட அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு அருகிலேயே ஒரு கல்லறை நினைவு மாடமும் தனித்தன்மையான வடிவமைப்புடன் அமைக்கப்பட்டிருக்கிறது.

gujarattourism.com

More News

Read more about: travel history
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+